61 தென்மொழி வரலாறு. அநேக அற்புதங்கள் தம்மிடத்திலே விளங்கப்பெற்றவர். பெரிய புராணத்தி லெடுத்துக் கூறப்பட்டுள்ள அவரு டைய சரித்திரம் முற்றும் உண்மையென்பது “கல்லினோடெனைப்பூட்டியமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடியரன் நல்லநாமநவிற்றியுய்ந்தேனன்றே” என்னுந் தேவாரத் திலே சமணர் செய்த துன்பத் தைத் தமது திருவாயாற் கூறியதால் வியவஸ்தாபனமாம் அவர் சாயுச்சியப்பேறு பெற்றபோது அவர்க்கு வயசு எண்பத்தொன்றென்பது, "அப்பருக்கெண்பத்தொன்றருள் வாதவூரருக்குச் செப்பியநா லெட்டினிற்றெய்வீகம்- இப்புவியிற் சுந்தரர்க்குமூவா றுதொல்ஞானசம்பந்தர்க் கந்தம் பதினாறறி", என்னும் வெண்பாவால் நிச்சயிக்கப்படும். அவர் காலம் சம்பந்தர் காலமென்பது சம்பந்தர் தேவாரம் என்பதனுட் கூறினார். ஆண்டுக் காண்க. அஃதாவது அவர் இற்றைக்கு நாலாயிரம் வருஷங் களுக்கு முன்னர் விளங்கினவர் என்பது ஆண்டுக் கூறிய நியாயங்களான் மாத்திரமன்று இடைச்சங்கத்திறுதிக்கா லத்திலே நிகழ்ந்த பிரளயத்தைக் குறித்துக் கேள்வியுற்ற போது அவர் திருவாய் மலர்ந்தருளிய, வானந்துளங்கிலென் மண் கம்பமா கிலென் பால்வரை யுந் தானந் துளங்கித்தலை தடுமாறிலென் தண்கடலும் மீனம்படிலென் விரிசுடர்வீழிலென்வேலைநஞ்சுண் னேமொன் றில்லா வொருவனுக்காட்பட்டவுத்த மார்க்கே"
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/77
Appearance