பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாறு. 79 பாட்டின் பதப்பொருண் மிகத் தெளித்துப் பாட்டினுட் கோளினிது விளக்கிச் சிறப்புமிகவுறுகின்றது. பத்துப் பாட்டாசிரியர்கள், ஆண்டாண்டு மாட்டேற்றுறுப்பானி யாத்த தொடர்களை யுரையாசிரியர் யாற்றொழுக்காக்கிப் பொருள் புலப்படுத்தும் வித்தகங் கல்வித் துறை போய சொல்விற்பன்னர்கண் மிக வியந்தேத்தற்பாலது. (தி-பி-கை) எட்டுத் தொகை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநா னூறு என்பன எட்டுத்தொகையாம். நற்றிணை - இது கபிலர் முதல் ஆலங்குடி வங்கனாரிறுதி யானோரால் இயற்றப்பட்டது. இதன் கடவுள் வாழ்த் துச் செய்தார் பாரதம் பாடிய பெருந்தேவனார். கட வுள் வாழ்த்துளப்பட ஒன்று தலையிட்ட நானூறு செ ய்யுளுடையது இது அகப்பொருட்பகுதிகளை மிகத் தெளித்துரைப்பது. இது தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி. குறுந்தொகை- இது திப்புத்தோளார் முதல் அம்மூவ னாரிறுதியானோரா லியற்றப்பட்டது. இதன் கடவுள் வாழ்த்துச் செய்தார் பாரதம் பாடிய பெருந்தேவனார். கடவுள் வாழ்த்துளப்பட இரண்டு தலையிட்ட நானூறு செய்யுளுடையது. இது அகப்பொருட் பகுதிகளை மிகத்தெளித்துரைப்பது. இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகையின் முன்னூற்றெண்பத்திர ண்டு செய்யுட்களுக்குப் பேராசிரிய ருரைகண்டாரே ன்பதும், ஏனை இருபது செய்யுட்களுக்கு நச்சினார்க் கினியருரைகண்டாரென்பதும்,