98 தேன்மொழி வரலாறு. பரவையாரைக் கண்டு மயங்கி அவர்பாற் சிவபிரானைத் தூதுபோக்கி அவரை இசைவித்து அவர் மெய்ந்நல நுகர்ந் தங்கிருந்தார். பின்னர்த் திருவொற்றியூரிற் சென்று அங்கு மூழ்கூட்டச் சங்கிலியாரையுங்கூடி அவ்வூழையும் புசித்தனர். அச்சங்கிலியார் பொருட்டுச் செய்த பொய்ச் சத்தியத்தின் பயனாகப் பார்வையிழந்து சிலநாள் வருந்திப் பதிகம் பாடிப் பார்வை பெற்றார். சிவபிரானுக்குத் தோழர் என்னும் பெயர் பெற்றவராயிருந்தும் செய்தபிழையை அக்கடவுள் பொறுத்தருளாது அதற்காகச் சுந்தரமூர்த் தியைத் தண்டித் தான் சிவபிரான் நடுநிலை தவறாத நீதியை யுடையரென்பதும், எவ்வினையும் அனுபவித்தன் றித் தீரா தென்பதும், க்ஷமித்துப்பாவங்களைத் தீர்க்கும் அதிகாரம் கடவுளுக்கில்லையென்பதும் பெறப்படும். சுந்தரமூர்த்தி நாயனாரது பெருமைகளை யெல்லாம் கேள்வியுற்ற சேரராசாவாகிய சேரமான் பெருமாணாயனார் அவரை யழைத்துப்போய்த் தமதரமனை யிலே விருந்திட் டுபசரித்து வைத்திருந்து அவரிடத்திலே போன்பும் பெரு நட்புமுடையராயிருந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் பதினெட்டாம் வயசிலே திரு வஞ்சைக்களத்திற் சுவாமி தரிசனஞ் செய்து மீண்டு கோ புரவாயிலை யடைந்தபோது கையிலாச கிரியினின்று சிவ கணங்களோடு மொரு வெள்ளையானையானது சிவாஞ்ஞை யினாலே அவர் முன்னே சென்று நின்று சிவானுக்கிரகத் தையுணர்த்த ஆனந்த பரவசராய் அதன் முதுகின் மேற் கொண்டு சென்றார். சேரமான் பெருமாளும் அதனை யுணர்ந்து தமது குதிரை மேற்கொண்டு அதன் செவியிலே ஸ்ரீ பஞ்சாட்சரத்தை யோத அஃது அந்தரத்தெழுந்து பாய்ந்து சென்று சுந்தரருடைய யானையை வலம் வந்து முன்னே சென்றது. இருவரும் கைலாசத்தை யடைந்து சிவகணபதப்பேறு பெற்றார்கள்.
பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/114
Appearance