உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி வரலாறு. 121 தூர்க் கலம்பகம் பாடிய பொழுது பம்பையாற்றுக்கு மேல் கரையில் "திருமால் துயர் தீர்த்தானுக்கு ஓரா லயமுள தென்று முதற் செய்யுளிற் கூறினர். அந் நூலை யரங் கேற்றக்கேட்ட சபையாரெல்லாரும் "இரட்டையர் இல் லதையும் பாடும் வல்லமையுடையர் என்று பரிகசித்து எழுந்து போயினர். அன்றிரவு பெருமழை பொழிந்து ஆறு பெருகி மேல்கரையை அழித்தது. மண்ணேறிட் டிருந்த அவ்வாலயம் மற்றைநாள் உதைப்பத்தில் நன்றாக வெளிப்பட்டது. அது கண்டு யாவரும் அதிசயித் து இரட் டையரைத் திவ்வியஞான முடையவரென வியந்து அவரைப் பாராட்டினர். இதனாலும் அவர்கள் சரசுவதியினுடையபேர ருள் பெரிதும் பெற்றவர்கள் என்பது நன்கு புலப்படுகின்றது. இரட்டையர் திருவாரூருக்குப் போன பொழுது அந்தச் சிவாலயத்து மதிற்சுவரிலே நானென்றால் நஞ் சிருக்கும் நற்சாபங்கற்சாபம்" என்ற முதலடியை யெழுதி இவ்வூரிலே செந்தமிழ்ப் புலமை நிரம்பிய புலவர்கள் பலர் இருத்தலால் இவ்வெண்பாவைப் பூர்த்தி செய்பவர்கள் யாவரென யாமிங்கு மீண்டு வரும்பொழுது அறிவோ மெனக் கூறிப்போயினர். அவர்கள் சில காலங்களித்து மீண்டபொழுது அவ்வெண்பாவை "பாணந்தான் மண் டின்ற பாணமே - தாணுவே, - சீராரூர் மேவுஞ் சிவனே நீ யெப்படியோ - தேரார் புரமெரித்த நேர்” என்று எழுதி யிருப்பக் கண்டு அது செய் தார் காளமேகமென அறிந்து, அப்பெருந்தகையாரைத் தரிசிக்க விரும்பி அவரிருக்கு மிடத்தை நாடிச்சென்றனர். அங்கே காளமேகம் இறந்து அவருடம்பு சுடுகாட்டிலே தகனிக்கப்படுதலைக் கண்டு, அவரைக்கண்டு பாராட்டும் பாக்கியம் பெற்றிலேமே, யென்றிரங்கிச் சொன்ன வெண்பா வருமாறு: - 16