16
சேரன் செங்குட்டுவன்
கிள்ளி என்ற சோழனுக்குப் பகைவன்.[1] இச் சேரன் மகனான செல்வக்கடுங்கோ, பெருங்கொடையாலும் அருங்குணங்களாலும் பெயர் பெற்றவன் ; திருமால் பத்தியிற் சிறந்து விளங்கியோன்.[2] கபிலர் என்னும் புலவர் பெருமான் தம் உயிர்த்துணைவனாக விளங்கிய வேள் - பாரி உயிர்நீத்ததும், அப்பாரியின் உத்தமகுணங்கள் பலவும் இச் செல்வக்கடுங்கோவிடம் உள்ளனவாகக் கேள்வியுற்று இவனைக் காணச்சென்று ஏழாம்பத்தை இச்சேரன்முன் பாடினர்.[3] அவர் பாடலைக் கேட்ட செல்வக்கடுங்கோ அவ்வந்தணப் பெரியார்க்குச் சிறுபுறமாக[4] நூறாயிரங் காணம் அளித்ததோடு, நன்றா என்னுங்குன்றில் தானும் அவரும் ஏறிநின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாங்காட்டி அப்புலவர்க்களித்தான்[5] இவ்வருங்கொடையை “நனவிற்பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்ற ஊரினும் பலவே” எனப் பிற்காலத்தவரும் புகழ்தல் காண்க.[6] இவன் மனைவி (நெடுஞ்சேரலாதற்கு மகட்கொடுத்த) வேளாவிக் கோமானுடைய மற்றொரு மகளாவாள்.[7] ஆகவே, நெடுஞ்சேரலாதனும் செல்வக்கடுங்கோவும் சகல முறையினரென்பது விளங்கும். இவ் வேந்தர்பிரான் இரு பத்தைந்தாண்டு வீற்றிருந்தவன்.<ref?7-ம் பதிகவிறுதி</ref> இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்திற் காலஞ்சென்றவனென்று தெரிகின்றது.[8]