சேரவமிசத்தோர்
15
வைத்து, இடையிற் செங்குட்டுவனைப் பற்றியதை அமைத்திருக்கின்றார். இதனால், நார்முடிச்சேரல் செங்குட்டுவனுக்கு முற்பட்டவனாகவும், அவன் தம்பி சிறிது பிற்பட்டவனாகவுங்கருத இடமுண்டாகின்றது. காலமுறையில் வைத்தே, பதிற்றுப்பத்துத் தொகுக்கப்பட்டிருத்தலை அதனுட்கண்ட பதிகங்களாலும் வாக்கியங்களாலும் உய்த்துணரலாகும்.
சேரன் செங்குட்டுவனது 5-ம் பதிகத்தால் அவன் தாய்ப்பாட்டனாகத் தெரியும் மணக்கிள்ளி, உறையூரிலிருந்தாட்சிபுரிந்த சோழனாவன். செங்குட்டுவன் மாற்றாந்தாயைப் பெற்றவனாக 4, 6-ம் பதிகங்கள் கூறும் வேளாவிக்கோமான் பதுமன் என்பவன் பொதினிமலைக்குரிய[1] ஆவியர்குலத்தோன்றல். இவ்வேளாவியின் பெயரால் வஞ்சியின் புறத்தே ஒரு மாளிகை அமைக்கப்பட்டிருந்ததென்று தெரிகின்றது.[2]
சேரரின் மற்றொரு கிளையினர்.
இனி, பதிற்றுப்பத்தின் இறுதி மூன்று பத்துக்களாற் புகழப்பட்ட அரசர், சோமரபின் மற்றொரு கிளையினராகத் தோற்றுகின்றனர். அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன் இம்மரபின் தலைவன் என்பதும், இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதனென்பதும் 6-ம்பத்துப்பதிகத்தால் அறியப்படும். இவ்வந்துவஞ்சேரல், முடித்தலைக்கோப் பெருநற்-