18
சேரன் செங்குட்டுவன்
மாகப் புலமையைக் கௌரவித்த அரசர் முற்காலத்தே வேறெவருங் காணப்பட்டிலர்.[1] இவ்விளஞ்சேரல் பதினாறாண்டு வீற்றிருந்தவன்.
இனி, இவ்விளஞ் சோலின் முன்னோருள், மாந்தரன்[2] என்பவனும், கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை என்பவனும் பிரசித்தர்களாகக் காணப்படுகின்றனர். இவருள் முன்னவனே 'மாந்தரம் பொறையன் கடுங்கோ' எனப் பரணராலும் பாடப்பட்டவனாதல் வேண்டும்.[3] மற்றொருவனாகிய கோப் பெருஞ்சேரலிரும்பொறையை நரி வெரூஉத்தலையார் என்ற புலவர் கண்டதும் அவர் தம் பழைய நல்லுடம்பு பெற்றனர் எனப்படுகின்றது.[4] மேற்குறித்த மாந்தரனின் வேறாக, யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்பவனொருவன் புலவனும் வள்ளலும் போர்வீர னுமாக நூல்களால் அறியப்படுகின்றான். இவன் கபிலர்காலத் திற்குச் சிறிது பிற்பட்டிருந்தவன்.[5] ஐங்குறுநூறு இவனால் தொகுப்பிக்கப்பெற்ற தென்பர். இவன் மேற்குறித்த இளஞ்சேரலிரும்பொறைக்குத் தம்பி அல்லது மகன் போன்ற
- ↑ பெருங்குன்றூர்கிழார் இவ்வேந்தனைப் பாடியனவாகப் புறநானூற்றிற் காணப்படும் உ50, உகக-ம் பாடல்களால், அப்புலவரை நெடுங்காலங் காக்கும்படிவைத்துப் பின் ஒன்றுங்கொடாமலே இவ்வேந்தன் அனுப்ப , அதுபற்றி மனமுடைந்து சென்றனர் புலவர் என்பது தெரிகின்றது. இதனால், பெருங்குன்றூர் கிழாரது நல்வாழ்வுக்கு வேண்டியவனைத்தையும் அவரூரில் அவரறியாமலே அமைத்து வைத்துப் பின்னர் வெறுங்கையோடு அவரைவிடுத்தனன் இப்பெருஞ் சேரல் என்பது உய்த்துணரப்படுகின்றது. இச்சரிதம் போலப் பிற்காலத்து வழங்குவது சத்திழற்றப் புலவர் என்பவர் வரலாறொன்றேயாம்.
- ↑ ‘அறன்வாழ்த்த நற்காண்ட, விறன் மாந்தான் விறன்மருக’ எனக் காண்க. (பதிற். 90.)
- ↑ அகம். 142.
- ↑ புறம். 5.
- ↑ ௸ 53.