94
சேரன் - செங்குட்டுவன்
கண்ணகியின் கோயிற்படித்தரங்களுக்கு வேண்டிய பூமிகளனித்து நித்யோற்சவம் நிகழ்த்தி, ஆராதனை அத்தேவந்தியால் நடந்து வரும்படி நியமித்து, அப் பத்தினிக்கடவுளை மும்முறை பிரதக்ஷிணஞ்செய்து வணங்கி நின்றான். இங்ஙனம் இவனிற்க, கனக விசயரென்னும் ஆரியவேந்தரும், பண்டே வஞ்சியிற் சிறைப்பட்டு விடுபட்ட மன்னரும், குடகநாடாளும் கொங்கிளங்கோசரும், மாளுவவேந்தரும், கடல் சூழ்ந்த இலங்காதிபனான கயவாகு வேந்தனும் செங்குட்டுவன் முன்னர் அப்பத்தினியை வணங்கினவர்களாய் “தேவீ! எங்கள் நாட்டிற்கும் எழுந்தருளிவந்து, சேரர்பெருமான் செய்த பிரதிஷ்டையிற் போலப் பிரஸந்தையாகி எங்கட்கும் அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்தித்தனர். இங்ஙனம் அவர்கள் வேண்டி நின்ற போது, ‘தந்தேன், வரம்’ என்று ஒரு தெய்வவாக்கு ஆங்கு யாவருங்கேட்ப எழுந்தது. அது கேட்டுச் செங்குட்டுவனும் ஏனையரசர்களும் சேனைகளும் வியப்புற்று, வீட்டுலகத்தையே நேரிற்கண்டவர்போல ஆரவாரித் தானந்தித்தார்கள். பின்னர், அரசரெல்லாம் தன்னடி வணங்கியேத்த, தத்துவஞானியாகிய மாடலனுடன் சேர்ந்து, அப்பத்தினிக் கோட்டத்து யாகசாலையினுள்ளே சேரன் - செங்குட்டுவன் பிரவேசிப்பானாயினன். இங்ஙனம் அரசன் சென்றபின் யானும்[1] ஆங்குச் செல்லவெழுந்தேன்; அப் பத்தினிக்கடவுள் தேவந்தியென்னும் பார்ப்பனிமேல் ஆவேசித்தவளாகி என் முன்னர்த் தோன்றி “மூதூராகிய வஞ்சிமாநகரந்தே பேரோலக்க மண்டபத்தில் உந்தையாகிய சேரலாதனோடு நீ சேர்ந்திருந்த காலையில், நிமித்திகனொருவன் வந்து நின்னைப்-
- ↑ இளங்கோவடிகள் தம் வரலாறு பற்றிக் கூறுங் கூற்று.