122
சேரன் செங்குட்டுவன்
புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை” எனப் பரணர் செங்குட்டுவனுக்கு உவமித்ததாம். இனிக் காஞ்சி என்னும் யாறும் செங்குட்டுவனாட்டிற் சிறப்புடைய நதிகளுளொன்றென்பது "காஞ்சியம் பெருந்துறை மணலினும் பலவே" என அப்புலவர் நம் சேரனை வாழ்த்துதலாற் றெரியலாம். இவ்ஆறு, நொய்யல், காஞ்சிமாநதி[1] என அப் பிரதேசத்தில் இன்றும் வழங்கிவருகின்றது; இந்நதிக்கரையிலுள்ள பேரூர் என்னுந் தலத்தைக் காஞ்சிவாய்ப்பேரூர் எனப் பழைய சாஸனமும்[2] - பெரிய புராணமும் குறிப்பிடுதலுங் காண்க. இவற்றால், சேரன் செங்குட்டுவனை அவன் தேசத்திலும் நகரத்திலும் ஓடும் நதிகளோடும் உவமித்து முற்கால வழக்குக்கிணங்கச் சிறப்பித்தனர் பாணர் என்பது நன்கறியப்படும்.
இக்கருவூர்க்குக் கிழக்கே ஆம்பிராவதிக் கரையிலுள்ள அரசவனம் என்னும் பிரதேசத்தில் திருமால் பள்ளிகொண்டருளும் ஆலயமொன்றுண்டு என்று கருவூர்ப் புராணங்கூறுகின்றது.[3] இஃது இப்போது கருவூரில் அரங்கநாதப்பெருமாள் கோயில் என்று வழங்கப்பட்டு, அப்பெருமாள் பள்ளி கொண்டருளுந் தலமாயுள்ளது. ஆடகமாடம் என்ற பெயருடன் திருமால் பள்ளிகொண்டருளுங் கோயிலொன்று, இளங்கோவடிகளாற் குறிக்கப்பட்டிருப்பது, மேற்கூறிய சந்நிதியே யாதல்வேண்டும். சிலப்பதிகார அரும்பதவுரையா
கலக்குமிடம் இப்போது மேற்கே வெகு தூரத்துள்ளது. முற்காலத்து
இந்நதி ஆன்பொருநையுடன் சேர்ந்து காவிரியிற்சங்கமித்தது போலும்.