உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்.

145


திருவனந்தபுரம் கொச்சி முதலிய மலைநாட்டரசர்களுக்கு இன்றும் நடந்துவருவதொன்றாகும். அப்போது மலைநாட் டுக் கூத்தர்கள் வந்து தங்களாட்டத்தால் அரசனை மகிழ்விப் பதும் அவர்கட்கெல்லாம் ஆஸ்தானத் தலைமைகூத்தன் கூறிய முறையே அரசன் பரிசளிப்பதும் பூர்வ வழக்கம்.*[1]


அரசன் யுத்தயாத்திரையாகப் புறப்படுமுன்னர்த் தன் படைத்தலைவர்க்கும் சேனைகட்கும் பெருவிருந்து செய்து அவர்களை மகிழ்விப்பதும் வழக்கமாம் : இதனைப் 'பெருஞ் சோற்றுநிலை' என்பர் தொல்காப்பியர்.[2] வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று போர் குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல வந்து ஒரு முகமன் செய்தற்குத் தானே பிண்டித்துவைத்த உண்டியைக் கொடுத்தல்' என்பர் நச்சினார்க்கினியர்.


அரசன் யுத்தத்திற்காக யாத்திரை செய்ய நேரும்பொ ழுது, குறித்த நன்முகூர்த்தத்தில் தான் பிரயாணஞ்செய்ய இயலாதாயின், தன் வெற்றிவாளையும் கொற்றக்குடையையும் யானை மேலேற்றி மிக்க ஆடம்பரத்துடன் கோட்டைக்கு முதல் லிற் 'பரஸ்தானம்' செய்து வைப்பது தமிழ் வேந்தரது பண்டை மரபாகும்.[3] இதனை நாட்கோள் என்பர் தொல்காப்பியனார்.[4] இதன் பின்பே , அலங்கரிக்கப்பட்ட அரசுவாவின் மேல் அரசன் ஆரோகணித்துப் பிரயாணமாவன். இங்ங்னம் புறப்படும்போது, சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்க

ளின் பிரசாதங்களை வணங்கிப் பெற்றுக்கொண்டும், நான்


  1. * சிலப். 26. 125-6.
  2. தொல். பொருளதி.63; பக். 130.
  3. + ஷை. ஷை. 33-45.
  4. ஷ. ஷ . 68.