இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சேறிவில் கண்டுணர்ந்து திருத்தமுறச் செய்யுமொரு நெறியில் நாம் கான்கின் நிலையேதான் ஆமன்றோ ?
- 'மானுடமாம் சாரத்தின்
வழிவழியாம் சாதனையைத் தானெதுக்கி வைத்துவிட்டுத் தாரணிவாழ் மானிடரை ஒற்றைத் தனியாளாய் ஒதுக்கி, அவருருவச் சிற்றெறும்பாய், சிறுபுழுவாய்ச் சித்திரிப்ப தில் நமது கற்ற சித்து வித்தைகளைக் காட்டுவதும் சரியாதோ? இன்றைத் தனிமனிதன் என்றோ உலகினிலே சூன்றில், சூகைப்புழையில் குன்றி உயிர்காத்து . முன்னேறி வந்ததொரு முன்னோர் தம்'. வழிவந்த . பின்னோனே; இவன் பின்னால் பின்னும் பலப்பல பேர் இன்னமுமே' உற்பவிப்பார் ! என்பதுவும் அறியோமோ? பண்டைச் சிறுமனிதன் பறக்கும் பறவைகளைக் கண்டே அவை போன்று ககனளத்தே சிறை விரித்துத்