உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F கற்றரின் மன மெல்லாம் கவராடிக் கொள்ளை கொணும் , ', குற்றாலக் குறவஞ்சி கொடுத்ததுவும் நெல்லையன்றே? . நாட்டு மக்கள் - வாழ்க்கையினை நல்லபல கதைகளிலே . தீட்டுவித்துத் தமிழ்நாட்டுச் - சிறுகதைக்கோர் மன்னனெனம் புகழோங்கிப் போய் மறைந்த புதுமைப் பித்தனையும் திகழ்ந்தோங்கச் செய்ததுவும் திருநெல்லைப் பதியன்றோ? ஐசிகமணி டிகேசி - . நம் மவர்க்குத் தமிழ்க்கவிமேல் பசியெடுக்கச் செய்ததுவும் நெல்வேலிப் பதியிலன்றோ? இத்தனையேன்? வெள்ளையர்தம் இரும்புப் பிடிக்குள்ளே" செத்துவந்த பாரதத்தைச் - சிங்கமெனச் சீற்றமுற்று " வீறுகொளச் செய்த கவி பாரதியைப் பெற்றெடுத்த பேறென்றே நெல்வேலிப் பெருமைசொல்லப் போதாதோ? அன்னியரைப் பேய்க்கனவாய் ஆட்டிவைத்து கட்டபொம்மு : மன்னனவன் வாழ்ந்ததெங்கள் , நெல்வேலி மண்ணிலன்றோ? நாடாண்ட வெள்ளையர்க்கு நமனாகி, அவர்க்கெல்லாம் கோடாலி போல் விளங்கிக் கொடியெடுத்த சிவாவோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/64&oldid=989560" இலிருந்து மீள்விக்கப்பட்டது