பாரதிய வேதாந்தச் சிமிழில் தள்ளிப் . - பஜனை செயும் பண்டாரப் பதகர் கூட்டம் வேரதிர, இடிமுழக்கம் செய்தே, அந்த வீரனை நீ இனங்காட்டி விளக்கி, செம்பொன் தேரெதிரே வந்தாற்போல் தமிழர் நாட்டில் திக்விஜயம் செய்தனையே! ஜீவா! உன்னைப் பூரதத்தில் காண்பதற்கோ கண்கள் பெற்றோம்? புகழ்பூத்த தாமரையே! எங்கே போனாய்? கானல்நறுஞ் சாறனைய தமிழில் நல்ல கவிப்பொருளை எடுத்தெடுத்து விளம்பும் எங்கள் மன்னவளே! தமிழ்ப்புலவ! வரம்போல் வந்த . மாணிக்கப் பெருங்குன்றே! கலைஞர் தங்கள் அன்னையென வாழ்ந்தவனே! அறப்போர் வீர? அறிவுலகின் தலக்கொழுந்தே! அருனம ஜீவா! உன்னருமைத் தோழாெமைப் பிரிந்தாய்! எம்மை உலையாத துயரத்தே ஆழ்த்திச் சென்றாய்! எம்மைவிட்டு நீ பிரிந்தாய்; எனினும் எங்கள் இதயம்விட்டு நீ பிரிந்தா இல்லை, இல்லை! வெம்மைதரும் சோதனைகள் மிகுந்த போதும், " வேதனைகள் எமைவருத்தும் போதும், உன்றன் செம்மைமிகும் பெருவாழ்வை, பணியை, எங்கள் " சிந்தையிலே உருவேற்றிச் சிரத்தைத் தூக்கி உம்மகுமை லட்சியத்தில் ஊன்றி நிற்போம்! உறுதிமீது, உலுதியிது, உறுதி யிஃதே!
பக்கம்:காவியப்பரிசு.pdf/83
Appearance