உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக் கனிகள்/நிரீச்வர வாதம்

விக்கிமூலம் இலிருந்து

6. நிரீச்வர வாதம்
162. தத்துவ ஞானம் சிறிதே பெற்றால் நிரீச்வரவாதியாக்கும்; ஆழ்ந்ததாகப்பெற்றால் ஈச்வரவாதியாக்கும்.

பேக்கன்

163. கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும் அற்புதங்கள் காட்டுவதில்லை. அவருடைய சாதாரண சிருஷ்டிகளே போதும்.

பேக்கன்

164. நிரீச்வர வாதம் தத்துவ சாஸ்திரியின் தவறேயன்றி மனித இயல்பின் தவறன்று.

பான்கிராப்ட்

165. நல்லோர் வருந்தல் - தீயோர் வாழ்தல் இவையே நிரீச்வர வாதத்துக்குக் காரணம்.

ட்ரைடன்

166. நிரீச்வர வாதம் எந்தப் பெரிய உண்மைகளை மறுக்கிறதோ அவற்றையெல்லாம் பெறுவதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பார்க்கிலும் மிக அதிகமான நம்பிக்கை வேண்டும் ஒருவன் நிரீச்வரவாதியா யிருப்பதற்கு.

அடிஸன்