உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

புராண-மதங்கள்

ஸ்ரீ கிருஷ்ண பகவான், இதர ஹிந்து கடவுள்களை நேரில் கண்டதாக இச்சிறுமி தாயாரிடம் கூறினாளாம். இதிலிருந்து கடவுள்களுடன் சேர்ந்து இருந்துவிட்டு வந்ததாக இவள் கருதுகிறாள். ஓரோர் முறை நாட்டியமாடி புல்லாங்குழலும் ஊதுகிறாள்."

"தினமணி" 6—10—48 இதழில் இச் செய்தி வந்திருக்கிறது. இப்போது கூறுங்கள், நமது படித்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களென்பதை!

டெலிபிரிண்ட், பல நிறங்களையும் ஏக காலத்தில் பல பக்கங்களில் அச்சடித்து, மணிக்கு ஆயிரக் கணக்கில் முடித்துத் தரும் இயந்திர சாதனம், பலநாடு சுற்றுப் பிரயாண அனுபவம், இவ்வளவும் எதற்குப் பயன்படுகிறது, பார்த்தீர்களா? இத்தகைய பிரசாரம், புரிந்து வரும் படித்தவர்களின் நிலையை எதற்கு ஒப்பிடுவது?

கட்டுரையின் முதலில் கூறப்பட்டிருப்பது போல் இது இயற்கை அற்புதமல்ல, பின்னால் குறிப்பிட்ட புராணகால அபத்தமாகும் இது.

சிறுமிக்குப் பெற்றோர்கள் போதித்த புராண அறிவு, முற்றிவிட்ட காரணத்தால், ஒருவேளை கோபிகைப் பெண்களின் ஒருத்தியாகத் தன்னையும் பாவிக்கும் அளவிற்கு, அச்சிறுமிக்குப் பித்தம் தலைக் கேறிப்போயிருக்கலாம்—சம்பவம் ஓரளவாவது உண்மையை வைத்து வெளியிடப்பட் டிருப்பின். ஆனால், படித்த பத்திரிகை ஆசிரியர்களுக்கே, இன்னும் தெளிவு ஏற்படாமல் இருக்கிறபொழுது, சிறுமியின் சிந்தனையில் கோளாறு இருப்பது ஆச்சரிய மன்று!

இத்தகைய 'அற்புதங்கள்' நடை பெறுகின்றன என்ற செய்திகள் பத்திரிகைக்காரர்களுக்குக் கிடைத்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/51&oldid=1700288" இலிருந்து மீள்விக்கப்பட்டது