உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

புராண-மதங்கள்

கங்கன், தக்கன், நாகன், கம்பளாச்சுவன், நீரன், ஜராவதன், ஏலாபத்திரன், கார்க்கோடகன், சங்கப்பாலன், தனஞ்சயன், பரமன், வாசுகி, எனும் நாகங்கள், ஒவ்வொன்று ஒவ்வொரு மாதம், முறை வைத்துக்கொண்டு, எழு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ஒற்றைச் சக்கரத் தேரை இழுப்பார்கள்!!

இவ்வளவு மட்டுமா! தேரின் முன், ஆடல் பாடலும் உண்டு. மாதத்துக் கொருவராக முறை வைத்துக்கொண்டு ஊருணாயு, தும்புரு, நாரதர், ஆஹா, ஊஹு, விசுவாவசு, திருதிராட்டிரன், சூரியன், வாச்சன், உக்கிரசேனன், வரருசி , சித்திரன், காந்தரு, என்பவர்கள் பாடுவர், கிருகத்தலை, சிகத்தலை, மேனகை, சகசந்நிசை, பிரமலோசத்தி, அநுமுலோசை, கிருதாசி, விசுவாசி, உருப்பசி, பூர்வசித்தி, திலோத்தமை, அரம்பை, எனும், அழகிகள் ஆடுவர்! நாள் தோறும், தேரேறி, மேருவை வலம் செய்யும், ஓயாத வேலை இருக்கிறதே என்பதற்காகச் சூரியதேவன் குடும்ப காரியத்தைக் கவனிக்காமலிருந்துவிட்டார், என்று எண்ணிவிடாதீர்கள். அவருக்குத் தேவிமார் இருவர்!—ஒருவரிலிருந்து மற்றொருவர் தோன்றினர். சஞ்ஞா தேவியாரைச் சூரியதேவன் தாரமாகக் கொண்டு, எவ்வளவோ வேலைகளுக் கிடையில், வைவச்சுதமது, யமன், யமுனை, ஆகிய குழந்தைகளுக்குத் தகப்பனானார். மூன்று குழந்தைகளை ஈன்றெடுக்குமட்டும். சஞ்சாதேவிக்குக் காதல் தென்றலாகி, சூரியனுடைய கனலைத் தாங்கும் நிலையைத் தந்தது போலும்! பிறகோ, தேவியார், சூரியனின் வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் தவித்து, தன் 'சாயலை' ஒரு பெண்ணாக்கிவைத்து விட்டுத் தாய்வீடு சென்றுவிட்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/91&oldid=1703736" இலிருந்து மீள்விக்கப்பட்டது