20
புராண - மதங்கள்
8. வீரவாகு கந்த மாதன பர்வதத்தின் மேல் ஏறி நிற்க, அது அவரைத் தாங்காது பிளந்து பூமியில் ஆழ்ந்தது.
9. (அ) சூரபன்மனது தெற்குவாயில், வாயில் காப்போனாகிய கயமுகன் ஆயிரம் தலைகளையும், இரண்டாயிரம் கைகால்களையுமுடையவன். (ஆ) கயமுகன் தன் மூவாயிரம் கைகளால் வீரவாகுவை எடுத்து விழுங்க எத்தனிக்க அவைகளைத் துண்டித்தார் வீரவாகு.
10. கயமுகன் ஆயிரம் குன்றுகளை எறிய அவைகள் வீரவாகுவின் மேல் பட்டவுடன் கல்லின்மேல் பட்ட பாண்ட மாகுதல்.
11. கயமுகன் மலையைப் பெயர்த்து வீரவாகுவின் மேல் எறிய, அதை வீரவாகு தோளில் தாங்க அவை மண்கட்டிப் போல் உதிர்தல்.
12. தேவர்களும், அவுணர்களும் அமுதம் கடையும்போது மகாவிஷ்ணு மோகினியாக வர, ஈஸ்வரன் சுந்தர புருஷனாக வர, மோகினி அவர் பேரில் ஆசை கொள்ள அக்கணமே ஐயனார் தோன்றினார்.
13. அஷ்டகுல பர்வதங்களை ஓரிடத்தில், கூட்டுவது, அவைகளைத் தலைகீழாய் நட்டுவைத்தல், கடல்களை ஒன்றாக்குதல், மேருமலையைச் சமுத்திரத்தில் ஆழ்த்துதல், பெருகி வரும் கங்கையை அடைத்தல், நாகங்களை நேராக உருட்டல், சூரிய சந்திர நக்ஷத்திரங்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு மகிழ்தல், இவ்வளவும் பாலமுருகனது பால்ய லீலைகள்.
14. சூரபன்மன் தேவர்களையும், வருஷம், மாதம், நாழிகை, நக்ஷத்திரம், நாள், சூரிய சந்திரன் முதலியவர்களையும் சிறை செய்தான்.