உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராண மதங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

31

"என்னமோ விவகாரம் இருக்காம், கருப்பையாவோடே அந்த விவகாரத்தைப் பைசல் செய்து சாமியைத் தொடு இல்லேன்னா விடமாட்டும்னு பேசறாங்க"

"சாமி, மண்டபத்திலேதான் இருக்கா?"

"ஆமாம் — பாவம் — மண்டபத்திலேயே தான் இருக்கு"

"இந்நேரம் கோயில் போய்ச் சேர்ந்திருக்குமே."

"ஆமாம், விட்டாத்தானே"

"இவர்களுக்குள்ளே சண்டைன்னா சாமி, என்ன பண்ணிச்சாம், பாவம், அதை மண்டபத்திலே காக்கப்போட்டு வைக்க வேணுமா!"

இப்படித் தாய்மார்கள் பேசுகிறார்கள்.

"சிறுவர்களோ, "டோய்! சாமி ஆப்பிட்டுக்கிச்சி, மண்டவத்திலே" என்று கூவித் தொலைகிறார்கள்.

தேவீ! கோயில் நிர்வாக சம்பந்தமாக, அந்த இரண்டு பிரிவுக்குள் ஏதோ தகறாராம்—அதற்காக என்னை இந்தக் கோலப்படுத்தினார்கள்.

கோயில் தகறாரு தீர்க்கப்பட்டாலொழிய, என்னை மண்டபத்தை விட்டு எடுத்துச் செல்லக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டதுடன், "கணக்கு வழக்கு முடிந்தாலொழிய கருப்பண்ணசாமியைக் கோயிலுக்குக் கொண்டு போகவிடப் போவதில்லை" என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, தேவீ! என்னை மண்டபத்துக்குள்ளே விட்டுவிட்டு, கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள், பிச்ச பக்தக்கூட்டம். நான் உள்ளே அடைபட்டுக் கிடந்தேன்—மண்டபத்தைப் பூட்டிவிட்டார்கள். உற்சவத்துக்கு ஆசைப்படாமலிருந்தால் நிம்மதியாகக் கோயிலிலே இருந்திருக்கலாம்—இப்போது, மண்டபத்திலே போட்டு பூட்டிவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/32&oldid=1697380" இலிருந்து மீள்விக்கப்பட்டது