அண்ணாதுரை
65
அஞ்சுவது யாதுமில்லை, அஞ்ச வருவதுமில்லை, அன்பரே! அரன் உம்மையும் காப்பாற்றுவார்! எம்மையும் வாழ வைப்பார்! அஞ்சேல்! அஞ்சேல்!" என்று கூறுவது போன்ற காட்சிகள் அவர் மனக்கண் முன் தோன்றித் தோன்றி அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்த போதிலும், இன்று நாட்டிலுள்ள பெரும்பாலோர் வறுமையால் வாடி வதங்கிக் கிடப்பதையும், அதேபோது, சமயத்தின்பேரால் பண்டாரச் சந்நிதிகள், நிழலிலேயே இருந்துகொண்டு—நிமிராமல்—குனியாமல்—வெட்டாமல் — கொத்தாமல் — பாடு படாமல்—பாலும் பழமும் சாப்பிட்டுக் கொண்டு—பல்லக்குச் சவாரி செய்து பவனி வருவதையும், இனி நாடு பொறுத்துக்கொண் டிராது என்பது மட்டும் உறுதி.
000
அம்மையின் மூக்குத்திருகு, மூன்றரை இலட்சம் ரூபாய் பெருமானம் உள்ளது.
ஜயனின் வைரமுடி, முப்பது இலட்சமாமே!
ரங்கனின் முத்து அங்கி, சாமான்யமான விலையா! திருடனிடம் கொடுத்தால் கூட, ஐம்பது இலட்சம் தருவானே!
பாண்டுரங்கனின் மார்பிலே உள்ள மாலையில் புதைத்திருக்கும் பச்சை—உள்ளங்கை அகலமிருக்கும் உலகிலேயே அதுபோன்ற பச்சை கிடையாது—விலை, இன்னமும் யாரும் மதிப்புப் போட்டதே இல்லை!
திருமலை திருப்பதியிலே உள்ள திவ்யாபரணங்கள் மட்டும், எத்தனையோ கோடி ரூபாய் விலை உள்ளனவாம்.
தில்லையில் மட்டுமென்ன குறைவா! திருவண்ணாமலையிலே, அண்ணாமலையாரிடம் உள்ளது கொஞ்சமா!
000