________________
வினையியல். முன், பின், கீழ், மீது அடியாய்ப்பிறந்த முந்து, பிந்து இழி, மீறு, என்னும் பகுதிகளின் முன் இடைநிலை மெய் இரட்டிக்காது. முந்துகின்றான் ; பிந்துகின் றான், இழிகின்றான், மீறுகின்றான். 59. ஈரசை மெய்யீற்றுப் பகுதிகளின் முன் இடைநிலை மெய்யிரட் டாது. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உச் சாரியை விகற்பமாய்வரும். கவலுகிறான் கவல்கிறான் உறழுகிறான் உறழ்கிறான் அருளுகிறான் அருள்கிறான் புகழுகிறான் புகழ்கிறான் இப்படிக்கு. நவில் நிகா திகழ் நுகா திரள் இகழ் பெயர் கவிழ் கனல் கமழ் அவிர் பகர் உருன் தவிர முரண் பகா தகா நகர் பொருந் அதிர உறிஞ் தொடர் 60. மெய்யீற்று ஓரசைப்பகுதிகளின் முன் இடைநிலை வல்லினம் பெரும்பான்மை இரட்டாது. சொல்லுகிறான்) இப்படிக்கு வெல்லுகிறான் ஒல் எள் தெள் கொல் கள் விள் கற்கிறான் புல் ஞெள் தொள் பொள் முள் நிற்கிறான் மெல் தள் நள் உன் பின் கேட்கிறான் )உள் துள் மொள் பன் பொன் பன் மண் செல் துன் வின் மின் இப்பகுதிகளில் சிலவற்றிற்கு இடைநிலைக்குப்பின் உக ரச்சாரியைவரும். அப்படி வந்த உகரம் பகுதிக்கே அசைநிறை விகுதியாய்விடும். நிற்கிறான் கற்கிறான் கேட்கிறான் என்பவற்றில் கின்று இடைநிலையின் ககரம் இரட்டிக்காவிட்டாலும் இரட்டித்தாற்போ ல வலிய ஒலியுள்ளது. மற்றவுதா ரணங்களில் கக ரம்மx கரத்தைப்போல் ஒலிக்கும். அப்படிக்கு உகரம் அசைநிறைவிகுதியாய் வந்தவை களை உகரவீற்றுப் பகுதிகள் எனவே கொள்ளவே ண்டும். இவ்வாறு சொல் என்பது பண்டு மெய்யீ ராய் வழங்கி சொற்றான், சொற்ற, சொற்று என