உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/O

விக்கிமூலம் இலிருந்து

O

obesity - கொழுமை: இது ஒரு நோய் நிலைமை, தோலடியில் அளவுக்கு மீறிக் கொழுப்பு சேர்வதால், உடல் எடையிலும் பருமனிலும் பருக்கும். இந்நிலை நீரிழிவு நோயில் முடியும். (உயி)

object - 1. பொருள். 2. நோக்கம்.

objective - குறிக்கோள்: 1. அடையும் எல்லை. 2. பொருளருகு வில்லை நுண்ணோக்கி அல்லது தொலைநோக்கியில் பொருளுக்கு அருகிலுள்ள வில்லை. இது வில்லையாகவோ வில்லைத் தொகுப்பாகவோ இருக்கும். (ப.து.)

obligato parasite - கட்டாய ஒட்டுண்ணி: சார்ந்துள்ள உண்ணி. தனித்து வாழ இயலாதது. எ-டு. ஈரல் புழு, நாடாப்புழு. (உயி)

oblique - சாய்வடிவம்: பிகோனியா இலை. (உயி)

oblong - நீள்சதுர வடிவம்: (உயி)

obovate - தலைகீழ் முட்டை வடிவம்: வாழை இலை. (உயி)

obturator foraman - இடுப்பெலும்புத் துளை: இடுப்பு வளையத்தில் இடுப்பு முன் எலும்பு. இடுப்புப்பக்க எலும்பு ஆகியவற்றிற்கிடையே உள்ள துளை. (உயி)

occipital condyle - பிடரிமுண்டு: மண்டை ஒட்டுக்குப் பின்னுள்ள குமிழ்எலும்பு, முதல் முள் எலும்புடன் அசைவது. (உயி)

occipital lobes - பிடரிக்கதுப்புகள்: பெருமூளை அரைத்திரள்களின் பின்பகுதி. (உயி)

occipital vertebrae - பிடரிமுள் எலும்புகள்: மண்டைக்கூட்டு வளர்ச்சியின் பொழுது, முதுகு நானுக்குப் பின்னர் வளரும் குருத்தெலும்புகள். பின், இவை மண்டைக் கூட்டோடு ஒன்றாகும். கூடு, சட்டகம் என்பவை ஒரே பொருள் தருபவை. (உயி)

occlusion - 1. தாழ்தல்: முன்கூடும் நார்கள் பின் கூடும் நரம்பன்களோடு (நியூரான்ஸ்) சேர்வதால், எதிர்பார்த்த துலங்கலில் குறைவு ஏற்படுதல். 2. மூடல்: திறப்பை முடுதல், குறிப்பாகக் குருதிக் குழாய்கள் மூடல். இரு தாடைகளும் சேரும்போது பற்கள் படிதல். 3. அகப்படல்: ஒரு பொருளின் சிறு அளவுகள் மற்றொரு பொருளின் படிகங்களில் மாட்டிக் கொள்ளுதல். எ-டு. கரைசல் படிகமாகும் பொழுது அதில் நீர்மப் பொருட் கள் சிக்குதல். 4. உட்கவரல்: ஒரு திண்மம் வளியை உறிஞ்சுதல். எ-டு, பலாடியம் என்னும் உலோகம் நீர்வளியை உறிஞ்சுதல். (ப.து

occupation - தொழில்: உணவுத் தேவை தொழிலுக்கேற்றவாறு அமையும், கடின வேலை செய்பவருக்கு அதிகக் கலோரிகளை தரக்கூடிய உணவும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வோர்க்கு குறைவான கலோரி அளவும் தேவை. (உயி)

occupational disease - தொழிலிட நோய்: ஒருவர் செய்யுந் தொழிலினால் ஏற்படும் நோய், காட்டாகத் தூசி படர் தொழிலில் ஈடுபடுவோருக்குத் தூசி நோய் ஏற்படும். (உயி)

ocean - பெருங்கடல்: பேராழி, பரந்த நீர்ப்பரப்பு. உலகப்பரப்பின் 3/4 பங்கை நிரப்புவது. இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், அண்டார்க்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் என ஐம்பெருங்கடல்கள் உண்டு. ஒவ்வொரு பெருங்கடலுக்கும் துணைக்கடல்கள் உண்டு. கப்பல் போக்குவரத்துக்கு முதன்மையாகப் பயன்படுவது. அதன் மீன்வளம், கனிவளம் முதலியவை வரம்பற்றவை. (பு.அறி)

oceonography - கடலியல்: 3 கடல்களின் தோற்றம், அமைப்பு, வடிவம் முதலியவற்றை ஆராயுந்துறை. (பு.அறி)

octet - எண்மி: எட்டு மின்னணுக் கள் சேர்ந்தது. அணு அல்லது செயல்குறை வளிகளின் (ஈலியம் தவிர) புற மின்னணுக்கூட்டில் உள்ளது. (வேதி)

octogenarian - எண்பது அகவையர்: அகவை 80க்கு மேலும் 90க்குங் கீழ் உள்ளவர். (உயி)

octohedron - எண்முகி: எட்டு முகங்களைக் கொண்ட பன்முகி. (இய)

octoploid - எண்மம்: எண் தொகுதி நிறப்புரிகளைக் கொண்ட உயிரணு அல்லது உயிரி. நிறப்புரியின் அடிப்படை எண்ணைப்போல் 8 மடங்கு கொண்டது.

octopod - எண்காலி: எட்டுக் கால்களைக் கொண்ட மெல்லுடலி. கை நீட்சிகளின் உட்பரப்பில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. நீளம் 8 மீ. எ.டு. அக்டோபஸ் (உயி)

ocular muscles - விழிக்கோளத் தசைகள்: கண்கோளம் இயங்கப் பயன்படுபவை. (உயி)

oculist - கண்நோய் வல்லுநர்: கண்நோய்களைக் கண்டறிவதில் தேர்ந்தவர். (மரு)

oculomotor - கண்ணியக்க நரம்பு': மூன்றாம் மூளை நரம்பு. கண்தசைகளுக்கு நரம்பிழைகளைச் செலுத்துவது. விழிக் கோளம் சுழல உதவுவது. (உயி)

odd nucleus - ஒற்றை எண் கரு: அல்லணுக்களையும் முன்னணுக்களையும் ஒற்றை எண்களில் கொண்ட அணுக்கரு. (உயி)

odometer - தொலைஅளவுமானி: ஊர்திகள் கடக்குந் தொலைவைப் பதிவு செய்யுங்கருவி. (இய) odontology - பல்லியல்: பல் மருத்துவம. பல்தோற்றம், வளர்ச்சி, பிறழ்ச்சிகள் முதலியவற்றை ஆராயுந்துறை. (மரு)

oersted - ஊர்ஸ்டெட்; சிஜிஎஸ் முறையில் காந்தப்புல வலிமையின் அலகு (இய)

oesophagus - உணவுக்குழல்: உணவு வழியில் தொண்டைக்கும் இரைப்பைக்கும் இடையிலுள்ள பகுதி. (உயி)

off-position - இயங்காநிலை: (ன்சுற்று)போடாநிலை. ஒ. on-position

offset - மறுதோன்றி: 1. கிளை யோடி. குறுகிய ஒடுதண்டு. உறையில் விதையுள்ள தாவரங்களில் விதையிலா இனப்பெருக்கம் செய்ய உதவுவது. 2. அச்சு வகையில் ஒன்று. (ப.து)

offset printing - மறுதோன்றி அச்சு: மூலத்திலிருந்து மாற்றுரு செய்து அச்சியற்றல் (தொ.நு)

offset printers - மறுதோன்றி அச்சகத்தார்: (தொ.நு)

ohm - ஒம்: அலகுச்சொல். மின்தடையின் அலகு. கடத்தியின் இருமுனைகளுக்கிடையே ஒர் ஒல்ட் மின்னழுத்த வேறுபாடு உள்ளபோது, அதன் வழியே செல்லும் மின்னோட்டம் ஒர் ஆம்பியராக இருந்தால், அக்கடத்தியின் மின்தடை ஒர் ஒம். (இய)

Ohm' law - ஓம் விதி: மாறா வெப்பநிலையில், மின்னழுத்த வேறுபாட்டிற்கு மின்னோட்டம் நேர் வீதத்திலும் மின் தடைக்கு எதிர் வீதத்திலும் இருக்கும். I = E / R, R = E / I, E = I* R. I மின்னோட்டம், E மின்னழுத்த வேறுபாடு, R மின்தடை. (இய)

oil - எண்ணெய்: பாகுநிலை நீர்மங்களில் ஒன்று. டீசல், பெட்ரோல், கற்பூரத் தைலம் முதலியவை பயன்மிகு எண்ணெய்கள். இவற்றில் நல்லெண்ணெய். தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில் முதலியவை அடங்கும். (வேதி)

olfactory epithelium - முகர்மென் படலம்: முகர் உறுப்பிலுள்ள உணர்படலம். (உயி)

olfactory glands - முகர் சுரப்பிகள்: முகர் படலத்திலுள்ள சளிச் சுரப்பிகள், பெளமன் சுரப்பிகள். (உயி) olfactory nerve - முகர்நரம்பு: முதல் மூளை நரம்பு. முகர் படலத்தில் தொடங்கி மூளை யின் முகர்மடலில் முடிவடைதல். (உயி)

olfactory ventricles - முகர் அறைகள்: முகர்மடல்களாக மாறியுள்ள பெருமூளை அரைத்திரள்களின் இருகுழி நீட்சிகள். (உயி)

oligomer - சிறுபடி: ஒப்பிடத்தக்க வகையில், மூலக்கூறில், சிறிய ஒருபடி அலகுகளைக் கொண்ட பலபடி (வேதி)

ofigotrophic - ஊட்டக்குறை நீர்நிலை: ஏரி, ஊட்டம் குறையின் உற்பத்தியும் குறையும். ஒ. eutrophic. (உயி)

oliguria - சிறுநீர் வீழ்வு: சிறுநீர்ப் பிரித்திகள் பெருமளவில் அழிவதால், சிறுநீர் அளவில் வீழ்ச்சி ஏற்படுதல்,

Olympiadane - ஒலிம்பியாடேன்: ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரெனி வைலர் தொகுத்தது. இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். ஒரு சிக்கலான மூலக்கூறின் பகுதிகள் தாமாக எவ்வாறு ஒருங்கு சேர்கின்றன என்பதை விளக்க மிகவும் பயனுள்ளது. உடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளை அனுப்ப மருத்துவத்தில் உள்ளார்ந்த மதிப்புள்ளது. 1994)

omasum - மூன்றாம் இரைப்பை: அசைபோடும் விலங்குகளில் இரைப்பை நான்கு பிரிவுகளைக் கொண்டது. முதல் இரைப்பை (ருமன்) இதை அரைவைப்பை எனலாம். இரண்டாம் இரைப்பை (ரெட்டிகுலம்) இதை வலைப்டை எனலாம். மூன்றாம் இரைப்பை, அடுக்குப்பை நான்காம் இரைப்பை (அபோமேசம்). இதுவே உண்மை இரைப்பை பா, abomasum (உயி)

omentum - உட்சூழ்படல மடிப்பு; வயிற்று உள்ளுறுப்பு ஒன்றிலிருந்து மற்றொரு உள்ளுறுப்புக்குச் செல்வது. அடிநடு மடிப்பின் எச்சம். (உயி)

ommatidium - கோல்கண்: கரப்பான் முதலிய பூச்சிகளின் வட்டுக் கண்ணிலுள்ள கோல் வடிவப் பகுதி. தனிக்கண். (உயி)

omnivore - அனைத்துண்ணி: அனைத்துப் பொருள்களையும் உண்ணும் விலங்கு. எ-டு, காகம். இது தாவரப் பொருள் விலங்குப் பொருள் ஆகிய இரண்டையும் உண்பது. (உயி)

oncology - கட்டிஇயல்: கட்டிகளை ஆராயுந்துறை. (மரு)

oncotic pressure - கூழ்ம அழுத்தம்: கணியக் கூழ்மங்களால் (பிளாசம் கொலாய்ட்ஸ்) உருவாகும் கூழ்மப் படல பரவு அழுத்தம். (உயி)

on-position - இயங்ககுநிலை: (மின்சுற்று) போடுநிலை. ஒ. off-position. ontogeny - தனி (உயிர்) வளர்ச்சி: உயிரணு நிலையிலிருந்து முதிர்ச்சி நிலை வரையுள்ள ஒரு தனி உயிரின் வளர்ச்சி. ஒ. phylogeny (உயி)

ontology - தனி வளரியல்: ஒர் உயிரியின் வாழ்க்கை வரலாற்றில் நடைபெறும் பல மாற்றங்களையும் ஆராயுந்துறை. (உயி)

oocyst-கூடுடை முட்டை: கூடுள்ள முட்டை

oocyte-தாய்முட்டை: முதிர்ச்சிக்கு முன்னுள்ள அணு. (உயி)

oogamy - பாலணுக்கலப்பு: ஒத்த வடிவமில்லாப் பாலணுக்கள் இணைதல் (உயி)

oogenesis - கருமுட்டைத் தோற்றம்: சினையணுவாக்கம் மூலக்கரு முட்டையிலிருந்து முட்டை வளர்ச்சியடைதல். (உயி)

oogonium - பெண்ணியம்: பெண்ணணுக்களை உண்டாக்கும் உறுப்பு (உயி)

oology - முட்டைஇயல்: பறவை முட்டைகளை ஆராய்தல். (உயி)

oosphere - பெண்ணணு: பெண்ணியத்தில் தோன்றுவது. பெரியது. இயக்கமற்றது. உறையற்றது. (உயி)

oospore-சிதல்போலி: கருவணுவிலிருந்து வளரும் ஒய்வு நிலையிலுள்ள சிதல் போன்ற உறுப்பு. தடித்த சுவருடையது. சிதல் இனப்பெருக்க முறையினால் பாசிகளில் கருவணு உண்டாக்கப்படுதல். (உயி)

ootheca-முட்டையுறை: பூச்சியின் முட்டைகளை முடியுள்ள உறை. எ-டு கரப்பான். (உயி)

oozoid - வால்வேற்றிளரி: முதல் தண்டுடைய விலங்குகளின் தனிப் பாலுயிரியின் (செக்சுவல் சூயாய்டு) முட்டையிலிருந்து உண்டாகும் வாலுள்ள இளம் உயிர் (உயி)

opaque - ஒளிஊடுருவா: மரப் பொருளில் ஒளி ஊடுருவாது. (இய)

open hearth process- திறந்த உலைமுறை: எஃகு தயாரிக்கும் பழைய முறை. (வேதி)

operator gene - இயக்குமரபணு: தன்னுடன் அமைப்பு நெருக்கமுடைய மரபணுக்களின் தொகுப்புச் செயலைக் கட்டுப்படுத்தும் மரபணு (உயி)

opercular chamber - செவுள் மூடியறை: எலும்பு மீன்களில் செவுள் பிளவுகளுக்கும் செவுள் முடிக்கும் இடையிலுள்ள வெளி. (உயி)

operculum - செவுள்மூடி: மீன் அல்லது இருவாழ்வி முதிரியின் செவுள்களைப் போர்த்தியுள்ள பாதுகாப்பு முடி அல்லது தோல் மடிப்பு. (உயி)

operon - இயக்கியன்: நெருங்கி இணைந்த மரபணுத் தொகுதி. பா. operator gene. (மரு)

opthalmia - கண்ணழற்சி: கண்ணில் உண்டாகும் நோய் நிலைமை. (மரு)

opthalmology-கண்ணியல்: கண்ணின் அமைப்பு, வேலை, நோய், குறைகள் முதலியவற்றை ஆராயுந்துறை. (மரு.)

optical arithmetic - ஒளிஇயல் கணக்கு: ஒளிக் குறிகள் மூலம் கணக்கிடுதல், உள்ளார்ந்த நிலையில் ஒரு போக்காக இருப்பதால், அது கவர்ச்சியானது. மிக விரைவாக ஒளிச் செயலுக்குரிய கருவியமைப்புகள் பிட்டுகளைக் கையாள வேண்டும். இவை இயைபு. நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை.

optical solitons - ஒளிச் சொலிடன்கள். வேறுபெயர் தனி அலைகள். தனிச்சிறப்புள்ள ஒளித்துடிப்புகள். (இய)

opium - அபின்: போதைப் பொருள். திருட்டுத்தனமாக வளர்க்கப்படுவது, கடத்தப்படுவது. கசகசாச் செடியிலிருந்து கிடைப்பது. (உயி)

opposite - எதிரிலைமைவு: எருக்கு. (உயி)

optical activity - ஒளிஇயக்கம்: முனைப்படு ஒளியின் அதிர்வுத் தளத்தைச் சுழற்றும் பொருளின் பண்பு. (இய)

optical axis - ஒளியச்சு: தனிவில்லையின் வளைவு மையத்தின் வழியே செல்லும் கற்பனை நேர்க்கோடு. (இய)

optic capsule - பார்வைப் பொதிகை: தலைக்கூட்டு வளர்ச்சியின் உறுப்புகள் (உயி)

optic chiasma - பார்வை நரம்புக் குறுக்கு: பார்வை நரம்புகள் நடுமூளையில் குறுக்காகச் செல்வதால் உண்டாகும் அமைப்பு. (உயி)

optic lobe - பார்வை மடல்: பார்வைத் தொடர்பான நடுமூளையின் தடித்த பகுதி. (உயி)

optic nerve - பார்வை நரம்பு: மூளைக்குக் கண்ணிலிருந்து செல்லும் நரம்பு, (உயி)

optic stalk - பார்வைக்கோளக் காம்பு: பார்வைக் கோளத்தின் அண்மைப்பகுதி சுருங்குவதால் உண்டாகும் குறுகிய வழி. விழிக்கோளத்தை இணைக்கப் பயன்படுவது. (உயி)

optics-பார்வை இயல்: ஒளியியல், பார்வையின் இயல்பு, பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது.

opto electronics - ஓளிமின்னனுவியல்: ஒளியலை வழிகாட்டு நுட்பங்கள் உணர்விகளில் பயன்படுவது இதில் ஆராயப்படுகிறது. இதனால் நிலத்திலும் நீரிலும் பூச்சிக் கொல்லிகளும் தொற்றுக் கொல்லிகளும் உள்ளதை அளக்க இயலும். இங்கிலாந்தில் ஒளி மின்னணுவியல் ஆராய்ச்சி மையம் இந்த ஆய்வை மேற் கொண்டுள்ளது. (1995)

optometer - பார்வைமானி: பார் வையை அறியப் பயன்படும் கருவி. (உயி)

orbicular, rotund - வட்டவடிவம்: இலைப்பரப்பு வட்ட வடிவத்தில் இருத்தல். எ-டு. தாமரை. (உயி)

orbit - சுற்று(வல) வழி: கோள்கள் வானில் வலம் வரும் வழி. எ-டு. திங்கள் நிலவுலகை வலம் வருதல். 2. விழிக்குழி: விழிக்கோளமும் அதன் தசைகளும் குருதிக் குழாய்களும் நரம்புகளும் அடங்கிய எலும்புக்குழி, எண்ணிக்கையில் 2. வலக்குழி, இடக்குழி (ப.து.)

orbital - பரிதியம்: அணு உட்கருவைச் சுற்றி மின்னணு வலம் வருதல். இஃது ஆற்றல் மட்டம் ஆகும். (வேதி)

orchard - பழத்தோட்டம்: (உயி)

order - 1.கட்டுப்பாடு, 2.வரிசை, 3.ஒழுங்கு: பா. taxonomy (ப.து.)

ore - தாது: உலோகங்கள் அடங்கிய கனிமம். எ-டு. பாக்சைட்டு. அலுமினியத் தாது. (வேதி)

organ - உறுப்பு: பல திசுக்கள் கொண்ட பகுதி. ஒவ்வொரு உறுப்பிற்கும் திட்டமான வேலையுண்டு. எ-டு, காது கேட்டல். கண் பார்த்தல், (உயி)

organ culture - உறுப்பு வளர்ப்பு: நறுக்கப்பட்ட கருக்கள், இலைகள், வளர்திசு, வேர் முதலியவற்றைத் தகுந்த ஊடகத்தல் வளர்த்தல். (உயி)

organelle - உறுப்பி: கண்ணறைக் கணியத்தில் வளர்சிதைச் செயலாக்கங் கொண்ட துண்ணுறுப்புகள் எ-டு. உட்கரு, துண்குமிழி. (உயி)

organic acid - கரிமக்காடி: கரிமச் சேர்மம். உப்புமூலிக்கு மின்னணுவை ஈனுவது, எ-டு. பினால், (வேதி)

organic base - கரிம உப்புமூலி: ஒரு தனி இணை மின்னணுக்கள் பெற்றிருக்கும் அயனி அல்லது மூலக்கூறு, ஒரு முன்னணுவோடு இணையவல்லது. (வேதி)

organic chemistry - கரிம வேதியியல்: அய்டிரோகார்பன்கள் அவற்றின் வழிப்பொருள்கள் ஆகியவற்றை ஆராயும் வேதிஇயலின் பிரிவு. கரிவேதியியல் என்றுங்கூறலாம். ஒ. inorganic chemistry. (வேதி)

organism - உயிரி: தனித்து வாழும் உயிரி. விலங்கு அல்லது தாவரம் (உயி)

organiser - 1.அமைப்பி: தனக்கடுத்துள்ள திசுவைக் குறிப்பிட்ட வழியில் வளரச் செய்யும் கருவின் பகுதி, எ-டு. முதுகெலும்பிகளின் விழிக்கிண்ணம். இது விழி வில்லையையும் விழித்திரையையும் உண்டாகுமாறு செய்தல், 2. அமைப்பாளர்: ஒரு நிகழ்ச்சியை அமைப்பவர். (ப.து.)

organ of Corti - கார்ட்டி உறுப்பு: பாலூட்டிகளின் செவியின் நத்தை எலும்பிலுள்ள புலனுறுப்பு (உயி)

organoids - உறுப்பகங்கள்: புகழ் வாய்ந்த பிரான்ஸ் பாஸ்டர் நிறுவனம் உயிருள்ள உறுப்புகளை உருவாக்கியுள்ளது. இவையே உறுப்பகங்கள். உடலில் பதிய வைக்கப்படும்பொழுது, வேலை செய்யத் தவறும் உறுப்பின் வேலைகளைச் செய்பவை. சிறு நீரகம் முதலிய உறுப்புகள் பதியஞ் செய்யப்படுவதை மாற்றீடு செய்யவல்லவை. (1993)

organ pipe - காற்றுக்குழாய்: காற்றுக்கம்பம் நிரம்பிய குழாய். ஒரு முனை அல்லது இரு முனைகளுத்திறந்திருக்கும். (இய)

organ transplants - உறுப்பு பதியங்கள்: மனித உடலில் பொருத்தப்படுபவை. இயற்கை உறுப்புகளின் வேலையை செய்பவை.

origin - 1. தோற்றம்: பிறப்பு, தோன்றல், உண்டாதல், தார்வினின் சிறப்பினங்கள் தோற்றம் சிறந்த நூல். 2. தோற்றுவாய்: தசை இணையும் இடம். தசையின் ஒரு முனை நிலையான எலும்புடன் பிணைக்கப்பட்டிருக்கும் இடம். தசையின் மற்றொரு முனை அசையும் எலும்போடு இணைந்திருக்கும். இதற்கு இணைவாய் (இன்சர்ஷன்) என்று பெயர். (உயி)

ornithologist - பறவை வல்லுநர்: பறவைகளை நன்கு அறிந்தவர். இந்தியாவில் சலீம் அலி என்பவர் பறவை வல்லுநராக விளங்கியவர். (உயி)

ornithology - பறவைஇயல்: பறவைகளை ஆராயுந்துறை. (உயி)

ornithomancy - பறவை வழியறிதல்: பறவைகள் பறத்தலை உற்றுநோக்கி அவை செல்லும் வழியறிதல். (உயி)

orthinine cycle - யுரியா சுழற்சி: நொதிக்கட்டுப்பாட்டு வினைகளின் சீரொழுங்கு. அமினோ காடிகள் சிதைவதால், இதில் யூரியா உண்டாகிறது. பா. Nitrogen cycle (வேதி)

orthodiagonal - நேர்மூலை வட்டப்படிகம்: இதன் பக்க அச்சு, செங்குத்து அச்சுக்கு நேராக இருத்தல். (வேதி)

orthopaedics - எலும்பு நன்னியல்: எலும்பு நேரியல், எலும்பு மண்டலத்தின் வேலையை மீட்டலும் பாதுகாத்தலும் பற்றிய அறுனை இயலின் பிரிவு. தவிர, எலும்புப் புழக்கங்கள் அவற்றோடு அமைந்த உறுப்புகள் ஆகியவை பற்றியும் ஆராயுந்துறை. முடநீக்கியல் என்னுஞ் சொல்லும் உள்ளது. (உயி)

orthoptera - நேர்ச்சிறகிகள்: பூச்சி வரிசை, 25,000 வகைகள். வெட்டும் வாய்ப்பகுதிகள். மூடுறை பின்கால்கள் குதிப்பதற் கேற்றவை. செவியுறுப்புகளும் கீச்சுறுப்புகளும் வழக்கம்போல் உண்டு. எ-டு. பாச்சை, வெட்டுக் கிளி. (உயி)

orthotropous - நேர்ச்சூல் இலைச்சூல்பை: சூல்பையில் சூல் அரிதாக அமைந்திருக்கும் முறை. காம்புக்கும் சூலடிக்கும் (சேலசா) நேர்க்கோட்டில் நுண்துளை அமைந்திருக்கும். (உயி)

oscillation - அலைவு: ஒரு புள்ளியில் இங்குமங்கும் மீண்டும் மீண்டும் ஒழுங்காக ஏற்படும் இயக்கம். (இய)

oscillograph - அலைவரைவி: அலைவடிவ வளைவை வரையுங்கருவி. (இய)

osculum - வாய்த்திறப்பு: கடற்பஞ்சின் தொலைமுனையிலுள்ள அகன்றதுளை. இதன் வழியே உள்ளிருந்து நீர் வெளியேறும். (உயி)

osmium - ஆஸ்மியம்: Os மாறுநிலை உலோகம். பிளாட்டினத்தோடு சேர்ந்திருப்பது. எளிதில் உயிர்வளி ஏற்றம் அடைவது. மை எழுதி முட்கள், இணைப்புகள்ஆகியவற்றில் பயன்படுவது. (வேதி)

osmometer - ஊடுபரவுமானி: படலப்பரவு அழுத்தத்தை அளக்க உதவுங்கருவி. (இய)

osmosis - ஊடுபரவல்: படலம் மூலம் இரு கரைசல்கள் பரவல். அடர்குறை கரைசல் ஒருவழிச் செல்படலம் வழியாக அடர்மிகு கரைசலுக்குச் செல்லுதல். எ-டு. வேர்கள் ஊட்டநீரை உறிஞ்சுதல். பா. exosmosis (உயி)

osmotic pressure - ஊடுபரவழுத்தம்: ஒருவழிச்செல் படலத்திற்கு எதிர்ப்பக்கங்களிலுள்ள கரைசல்களின் செறிவு வேறுபாடுகளால் உண்டாகும் சமநிலை இல்லா அழுத்தம். (உயி)

ossicle - சிற்றெலும்பு: சிறிய எலும்பு போன்ற பட்டை. (உயி)

ossification - எலும்பு தோன்றல்: எலும்பு மூலக்கண்ணறைகளால் உரிய எலும்பு உண்டாகும் முறை. (உயி)

osteoblast - எலும்பு மூலக்கண்ணறை: எலும்பில் சுண்ண ஊட்டமுள்ள இடைவெளிப் பொருள் உண்டாகக் காரணமான அணுக்கள். (உயி)

osteopathology - எலும்பு நோய்இயல்: அறிவியல் முறையில் எலும்புகளை ஆராயுந்துறை. (உயி)

ostiole - சிதல்துளை: சில பாசிகளிலும் பூஞ்சைகளிலும் காணப்படும் சிறியதுளை. இதன் வழியாக ஏற்பகத்திலிருந்து (கான்செப்டகிள்) சிதல்கள் வெளியேறுதல். (உயி)

ostium - வாய்த்துறை: வழித்திறப்பு. இது திறப்பி அல்லது வட்டத் தசையால் காக்கப்பட்டிருக்கும். 1. கணுக்காலியின் இதயத்திலுள்ள பக்கத்திறப்புகளில் ஒன்று. 2. கடற்பஞ்சில் உள்ள துளை. (உயி)

ostrich - நெருப்புக்கோழி: பறவைகளில் மிகப்பெரியது. ஆப்பிரிக்காவில் வாழ்வது. உயர்வரை உயரம் 3 மீ. எடை 150 கி.கி. பறக்கும் திறனற்றது. ஆனால் விரைவாக ஓடுவது. இறகுகள் விலைமதிப்புள்ளவை. (உயி)

otic capsule - செவிப்பொதிகை:(உயி)

otitis - செவியழற்சி: செவி வீக்கம். (உயி)

otolith - செவிக்கல்: 1. பல விலங்குகள் செவியிலுள்ள கண்ணக்கட்டு 2. செவிஎலும்பு. (உயி)

otorrhoea - செவிஒழுக்கு: செவியிலிருந்து நீர் அல்லது சீழ்வடிதல். (உயி)

otoscope - செவிநோக்கி: செவியை ஆய்ந்தறியுங்கருவி. (உயி)

ottocycle - ஆட்டோசுழற்சி:நிறைவான நான்கு வீச்சு பெட்ரோல் எந்திரத்தில் நடைபெறும் நான்கு இயக்கங்களைக் கொண்ட மீள்மாறு சுழற்சி. அவையாவன. ஒரு வளியின் நிலையான பரும வெப்பநிலை உயர்வு, நிலையான அழுத்த விரிவு, நிலையான பரும வெப்பநிலை வீழ்ச்சி, நிலையான அழுத்த பருமக் குறைவு. இதில் உயர்வரை பயனுறுதிறனைப் பெறலாம். (இய)

outbreeding - வெளிப்பெருக்கம்: மரபணு வழியில் வேறுபட்டதும் சார்பு வழியில் தொடர்பில்லா ததுமான தனி உயிர்களுக்கிடையே கலப்பு நிகழ்தல். ஒ. inbreeding. (உயி)

outer ear - புறச்செவி: செவிப் பறைக்கு வெளியே உள்ளது. செவிமடல், செவிக்குழல் இரண் டையும் கொண்டது. (உயி)

output - வெளிப்பாடு: விடுவரல் 1. செய்திவழங்கும் முறை அல்லது செயல், 2. செய்தியைக் குறிக்கும் குறிபாடு 3. ஒரு கருவியமைப்பின் முனை. இதிலிருந்து செய்தி வெளிப்படுத்தப்படுகிறது. ஒ. input device (இய)

output device - வெளிப்பாடுக் கருவியமைப்பு: கணிப்பொறிப் புற ஒருங்கில் உள்ளது. எ-டு. அச்சியற்றி. கணிப்பொறியிலிருந்து தகவல்களைப் பெற்று வெளிப்பாட்டை அளிப்பது. ஒ. input device (இய)

ovarian follicle - சூல்பைச் சுரையம்: மெட்டாசோவாவின் வளர்தாய் முட்டையை (ஊசைட்) மூடுவது. முதுகெலும்பிகளில் ஆஸ்ட்டிரோஜனைச் சுரப்பது. (உயி)

ovary - சூல்பை: 1. பெண் பாலணு. இதில் முட்டையணுக்கள் பெருகி ஊட்டம் பெறுதல், 2. பூவின் பருத்த அடிப்பகுதி. இதில் சூல்கள் அமைந்திருத்தல் (உயி)

ovate - முட்டை வடிவம்: தேக்கு இலை (உயி)

overtone - மேற்சுரம்: மேல் சீரிசை, (இய)

oviduct - சூல்குழல்: சூல்பையிலிருந்து உடலுக்கு வெளியே செல்லுங் குழாய் முட்டை செல்லும் வழி. (உயி)

ovigerous cords - சூல்பை நாண்கள்: சூல்பை மூலத்தின்  கருப்படலத்தைப் பிரிக்கும் திசுவிழைகள். (உயி)

oviparous - முட்டையிடும்: (உயி)

oviparity - முட்டையிடுந்தன்மை:(உயி)

oviposition - முட்டையிடும் முறை:(உயி)

ovipositor - முட்டையிடும் அலகு: பெரும்பான்மையான பெண் பூச்சிகளில் வயிற்று முனையில் சிறிய கூர்மையான உறுப்பு இருக்கும். இதன் வழியே முட்டையிடப்படும். (உயி)

ovisac - முட்டைப்பை: முட்டைப்பொதிகை (உயி)

ovoviviparous - உள்பொரி முட்டை: உடலில் பொரியும் முட்டைகளைத் தாய் உண்டாக்கல் (உயி)

ovoviviparity - உள்பொரி முட்டை உண்டாதல்: (உயி)

ovulation - கருமுட்டை உதிர்தல்:(உயி)

ovule - சூல்: பூக்குந் தாவரங்களின் சூல்பையில் காணப்படும் சிறு உறுப்பு. கருவுற்றபின் விதையாக மாறுவது. (உயி)

ovule culture - சூல்வளர்கரைசல்: தகுந்த வளர் ஊடகத்தில் நறுக்கியசூல்களை வளர்த்துத் தாவரப் பெருக்கத்தை ஆராய்தல். (உயி)

ovum - கருமுட்டை: பெண் பாலணு. தாய்முட்டையிலிருந்து (ஊசைட்) குன்றல் பிரிவு மூலம் உண்டாவது (உயி)

owl - ஆந்தை: இரவில் இரை தேடும் பறவை. அகன்ற வட்டமான தலை, தட்டையான முகம். நிலைத்த கண்கள். குறுகிய வளைந்த அலகு. இறகுகள் உண்டு. அலறுவது. கூடு கட்டாதது. (உயி)

oxalic acid - ஆக்சாலிகக் காடி: C2H2O42H2O. நிறமற்ற படிகம். நச்சுள்ளது. நீரில் கரைவது. ஈத்தரில் கரையாதது. மை செய்ய வும் வைக்கோலை வெளுக்கவும் பயன்படுதல். (வேதி)

oxidant - ஆக்சிஜன் (உயிர்வளி) ஏற்றி: எரிதலை உண்டாக்க உயிர் வளியைத் தரும் பொருள். எ-டு. அய்டிரசன் பெராக்சைடு. நீர்ம உயிர்வளி. இவை ஏவுகணை எரிபொருள்கள். (வேதி)

oxidase - ஆக்சிடேஸ்: நொதித் தொகுதி. உயிர்வளி ஏற்றத்தை உயிரணுக்களில் உயர்த்துபவை. (உய)

oxidation - ஆக்சிஜன் (உயிர்வளி) ஏற்றம்: ஒரு மூலக்கூறிலிருந்து நேரயனிகள் நீங்கல் அல்லது எதிரயனிகள் சேர்தல். அல்லது நீர்வளி நீங்கல். உயிர்வாழத் தேவைப்படும் ஒர் அடிப்படைச் செயல். (வேதி)

oxidation - reductin - redox உயிர்வளி (ஆக்சிஜன்) ஏற்ற இறக்கம்: உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல். மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மின்வாயில் உயிர் வளி ஏற்றமும் எதிர்மின்வாயில் ஒடுக்கலும் நடைபெறும் (வேதி)

oxide - ஆக்சைடு: உயர்வளியுள்ள இரு தனிமச் சேர்மம். எ-டு. மாங்கனிஸ் இரு ஆக்சைடு (வேதி)

oximetry - உயிர்வளி அளவியல்: ஒடும் குருதியில் உயிர்வளிச் செறிவை அளத்தல். (வேதி)

oxygen - உயிர்வளி: உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தகக் காடி செய்யப்பயன்படுதல். (வேதி)

oxygenation - ஆக்சிஜன் (உயிர்வளி) செலுத்துதல்: மூச்சுப் பரப்பில் ஈமோகுளோபினுடன் தற்காலிகமாக உயிர்வளியை சேர்த்தல் (உயி)

oxygen carrier - ஆக்சிஜன் சுமப்பி: பெராக்சைடு அல்லது மீயாக்சைடு வழிப்பொருள் உண்டாக்க, மூலக்கூறு உயிர்வளியுடன் நேரிடையாகச் சேரும் மூலக்கூறு. உயிர்வளி ஏற்ற வினையில் உயிர்வளியைப் பின்பு பயன்படுத்த வல்லது. எ-டு. ஈமோகுளோபின் (உயி).

oxygen debt - ஆக்சிஜன் கடன்பாடு: கடும் பயிற்சியின் பொழுது உயிர்வளிக் குறைவதால் தசைகளில் பால் காடி குவிதல். (உயி)

oxygen quotient - ஆக்சிஜன் ஈவு: ஒரு திசு அல்லது உயிரி உயிர்வளி நுகரும் அளவு. ஒரு மில்லி கிராமுக்கு இத்தனை மைக்ரோ லிட்டர் என்று தெரிவிக்கப்படுவது. சிற்றுயிரிகளுக்கு அதிக ஈவும் பேருயிரிகளுக்குக் குறைந்த ஈவும் தேவை. (உயி)

oyster - ஆளி: இருதிறப்பு ஒட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது. உணவாகவும் பயன்படுவது. (உயி)

ozone - ஓசோன்: O3, மிகுவேதி வினையுள்ள நீலநிற வளி, ஒலியிலா மின்னிறக்கத்தின் வழியே உயிர்வளியைச் செலுத்திப் பெறலாம். வெளுக்கும் பொருள். புழுக்கொல்லி, காற்றையும் நீரையும் தூய்மையாக்கும். (வேதி)

Ozonide - ஓசோனைடு: நிறைவுறா ஒலிபீனிகச் சேர்மங்களில் ஓசோன் வினைமூலம் உண்டாகும் பொருள். (வேதி)

ozonisation - ஒசோனாக்கல்: ஒசோன் வளியோடு ஒரு பொருளைச் சேர்க்கும் முறை. (வேதி)

ozoniser - ஓசோனாக்கி: உயிர் வளியை ஓசோனாக மாற்றும் கருவி. மின்தூரிகை இறக்கத்திற்கு உயிர்வளியை உட்படுத்துதல்.

ozonolysis - ஓசோனாற்பகுப்பு: ஓசோனைடை உண்டாக்க, நிறைவுறா அய்டிரோ கார்பனோடு ஓசோனைச் சேர்த்தல், ஓசோனை டை நீராற்பகுக்க அய்டிரஜன் பெராக்சைடும் கார்போனைல் சேர்மக் கலவையும் கிடைக்கும். கரிமச் சேர்மங்களின் அமைப்பை உறுதி செய்யப் பயன்படுதல். (வேதி)

ozonosphere - ஓசோன் வெளி: காற்று மேல் வளியடுக்கு. நிலவுலகிலிருந்து 20-50 கி.மீ. வரை பரவியுள்ளது. இங்கு ஒசோன் செறிவு அதிகம். இந்த வளி கதிரவன் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சி, உயராற்றல் கதிர்வீச்சு நிலவுலகை அடையா வண்ணம் தடுக்கிறது. (இய)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/O&oldid=1040361" இலிருந்து மீள்விக்கப்பட்டது