அறிவியல் அகராதி/P

விக்கிமூலம் இலிருந்து

P

pace maker -இதயமுடுக்கி: 1. முதுகெலும்பி இதயத்திலுள்ள முதன்மையான பரப்பு. இங்கு ஏற்படும் மின்னிறக்கம் முளைச்செயலை நீக்குவதால், இதயம் சுருங்குதல். பாலூட்டிகளில் குழிவு மேலறைக்கணு (சைனு ஆரிகுலர் நோட்) முதன்மையான அளவாக்கியாகும். 2. இதயத் துடிப்பின் அளவைச் சீராக்க மனித உடலில் பொருத்தப்படும் சிறிய மின்னணுக் கருவி. (உயி)

pachyderm - தடிமத்தோலி: தடித்த தோலுள்ள விலங்கு எ-டு.யானை, நீர்யானை, (உயி)

paedogenesis - இளமைப் பெருக்கம்: இளமுயிரியில் ஏற்படும் இனப்பெருக்கம். இளமுயிரி என்பது முட்டையிலிருந்து வெளி வந்த உயிர் வளர்ச்சி நிலையிலுள்ளது. சலமாந்தரின் இளமுயிர் இத்திறங் கொண்டது. நிலையான இளமுயிரி நிலை கொண்ட விலங்குகள் இத்திறன் பெற்றிருக்கும். (உயி)

page - பக்கம்: 1. ஒரு கணிப்பொறியில் அடுத்தடுத்துள்ள நினைவக இடங்களின் தொகுதி. பெரும்பான்மையான நுண் கணிப்பொறிகளில் ஒரு பக்கம் 256 இடங்களைக் கொண்டது. சில கணிப்பொறிகள் 512 அல்லது 1024 இடங்களைக் கொண்டிருக்கும். 2. காட்சி வெளிப்பாட்டகத்திற்கு அளிக்கப்படும் முழுச்செய்தித் தொகுப்பு (இய)

pager - தொலையழைப்பி: இடுப்பில் செருகிக் கொள்வதற்கு ஏற்றவாறு உள்ள மின்னணுக் கருவியமைப்பு. குறிப்பிட்ட ஒலி மூலமாகவோ காட்சி மூலமாகவோ ஒருவரை அழைப்பது. அண்மைக் காலத்திலிருந்து நடைமுறையில் இருப்பது. (தொ.து)

pain - வலி: திறந்த நரம்பு முனைகளில், உள்துண்டல், புறத்தூண்டல் மூலம் பெறப்படும் குறைவு உணர்வு, பா. ache (உயி)

paints - வண்ணப்பூச்சுகள்: உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை. இதிலுள்ள நிறமிகள் தவிர்த்த ஏனைய பொருள்களாவன. ஏற்றி (வெகிகிள்), உலர்த்தி, நீர்ப்பி, (தின்னர்), உரித்தல் தடுப்பி, இளக்கி, நிரப்பி, இவை உலோகத் தின் மீதும் மரத்தின் மீதும் சூழ் நிலைப் பாதிப்பைத் தடுக்கப் பூசப்படுகின்றன. அரிமானத்தையும் தடுப்பவை. (வேதி)

pair production-இணை உருவாக்கம்:காமா கதிர் ஒளியனிலிருந்து (போட்டான்) மின்னணு, பாசிட்ரான் (நேரியன்) ஆகியவற்றை ஒரே சமயம் உண்டாக்கல். (இய)

palaethnology - தொல்கால மாந்தவியல்: பழங்கால மாந்தனை அறிவியல் முறையில் ஆராயுந்துறை. இதை மாந்த எச்சவியல் என்றுங் கூறலாம். (பு:அறி)

palaeo botany - தொல் தாவரவியல்: அழிந்தொழிந்த தாவர எச்சங்களை அல்லது புதைபடிவங்களை ஆராயுந்துறை. (உயி)

palaeo ecology - தொல் சூழ்நிலை இயல்: உயிர் அறிவியல்களில் ஒன்று. எச்சங்களை ஆராய்வதன் மூலம் வெளிப்படும் சூழ்நிலை உண்மைகளை ஆராயுந்துறை. (உயி)

palaeogaea - தொல்லுலகம்: உயிரியல் வட்டாரமாகக் கருதப்படும் பழைய உலகம். (உயி)

palaeontology -தொல்லுயிரியல்: புவி வளரியலின் (ஜியாலஜி) ஒரு பிரிவு அழிந்தொழித்த உயிரிகள் அவற்றின் புதைபடிவங்கள் (ஃபாசில்ஸ்) ஆகியவை பற்றி ஆராயுந்துறை. இதை எச்சவியல் என்றும் கூறலாம். (பு:அறி)

palaeozoic - தொல்லூழி: நில வளரியல் காலங்களில் மிகப் பழமையானது. பல காலங்களைத் தன்னுள் அடக்கியது. (பு:அறி)

palate - அண்ணம்: 1.பாலூட்டிகளின் வாய்க்கூரை. 2.மூச்சறைக்கும் வாய்க்குழிக்கும் இடையிலுள்ள தடுப்பு. இது அண்ண எலும்பு, மேல்தாடை எலும்பு, முன்மேல் தாடை எலும்பு ஆகியவற்றின் கிடைமட்ட நீட்சிகளாலானது. (உயி)

palatine bone - அண்ண எலும்பு: தவளை தலை எலும்புக் கூட்டில் மேல் தாடையில் முன்னுள்ள எலும்பு (உயி)

palea, pale, valvule - உமிச் செதில்: புல் பூக்கொத்தின் ஒவ்வொரு பூவின் அடியில் இரு பூக்காம்புச் செதில்கள் உண்டு. இவற்றில் மேலுள்ளதற்கு உமிச் செதில் என்று பெயர். மற்றொன்றிற்கு பூஉமி (லெம்மா) என்று பெயர்.

palisade-வேலிக்கால்திசு: இலை நடுத்திசுவின் மேல்பகுதி. இதில் ஒளிச்சேர்க்கை நடத்துவதற்கு வேண்டிய பச்சையம் அதிகமிருக்கும். (உயி)

palladium - பல்லாடியம்: Pd. மாறுநிலை வெண்ணிற உலோகம். தகடாக்கலாம், கம்பியாக்கலாம். நீர்வளி செலுத்தும் வினைகளில் வினையூக்கி அணி கலன்கள் செய்யவும் பயன்படுவது. (வேதி)

palmate - அங்கை வடிவம்: எலுமிச்சை. (உயி)

palmella - பால்மெல்லா நிலை: கிளமிடோமோனசின் சேயனுக்கள் மீண்டும் மீண்டும் பிரிந்து வடிவமற்ற ஒரு வாழ்தொகுதியை உண்டாக்கும். இதில் ஆயிரக்கணக்கான கண்ணறைகள் எல்லாம் ஒரு பொதுவான இழுது போன்ற வார்மத்தில் பதிந்திருக்கும். இவ்வாறு கண்ணறைகள் திரள்வதற்குப் பால்மெல்லா நிலை என்று பெயர். பால்மெல்லா என்பது ஒர் பாசிச் சிறப்பினம். இதனை இத்திரட்சி ஒத்திருப்பதால் இப்பெயர் பெறலாயிற்று. (உயி)

palmitic acid-பால்மிட்டிகக்காடி: C12H22COOH . மெழுகு போன்ற கொழுப்புக்காடி பனை எண்ணெயிலும் மற்றக் கொழுப்புகளிலும் முப்பால்மிடினாக உள்ளது. இதன் உப்புகள் சவர்க்காரம் உண்டாகக் காரணமாகவுள்ளது. (வேதி)

palmitin, tripalmitin - பால்மிட்டின், முப்பால்மிடின்: C15H31(COO)3., C3H5. பால்மிட்டிகக் காடியின் கிளிசரைடு. கொழுப்பு போன்ற பொருள். பனை எண்ணெய் முதலியவற்றில் உள்ளது. (வேதி)

pancreas - கணையம்: பெரிய செரித்தல் சுரப்பி. இதன் சுரப்பு கணைய நீர். இந்நீர் மாப்பொருள், புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் செரிக்க வைக்கிறது. இந்நீரிலுள்ள நொதிகள் அமிலேஸ், டிரிப்சின், லிபேளப். கணைய நீர் முன்சிறுகுடலுக்குச் செல்கிறது. இச்சுரப்பி இன்சுலினையும் சுரக்கிறது. ஆகவே, இது நாளமுள்ள சுரப்பி, நாளமில்லாச் சுரப்பி ஆகிய இரண்டிற்கும் எடுத்துக்காட்டு, பா. (உயி)

pangenesis - ஊக்கணுவாக்கம்: சார்லஸ் தார்வின் முன்மொழிந்த கொள்கை, ஊக்குவிக்கும் அணுக்கள் எல்லா உடல் உறுப்புகளிலிருந்தும் உடல் நீர்மங்களில் கலந்து, இனப்பெருக்க அணுக்களுக்குச் செல்கின்றன. இவை பாலணுக்களை ஊக்குவிக்க, அவை மீண்டும் அடுத்த தலைமுறைக்குரிய பண்புகளை ஊக்குவிக்கின்றன. (உயி)

panicle - கிளையகம்: நெடும் பூக்கொத்தின் ஒருவகை. மா. (உயி)

panmixis -வரம்பில் கலப்பு: வரம்பில்லாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சேர்க்கும் கலப்பு. இது அரிதாக நடைபெறுவது. (உயி)

panther - பெருவேங்கை: பூனைக் குடும்பத்தைச் சார்ந்தது. பெரும் புள்ளிகள் இருக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் காணப்படுவது. (உயி)

panting - பெருமூச்சு விடுதல்: மூச்சுவிடும் நிலை அதிகமாதல். அதிக அளவில் மூச்சுவிடுதல் நடைபெறுவதால், நீராவி இழப்பு அதிகமாகி, அதிக வெப்பம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. (உயி)

pantoscope - விரிகாட்சி நோக்கி: பரந்த அளவு காட்சியைப் பிடிக்கும் புகைப்படப்பெட்டி அகன்ற கோணமுள்ள புகைப்படவில்லை உண்டு. (இய)

paper chromatography - தாள் நிறவரைவியல்: கரிமச் சேர்மக் கலவைகளைப் பகுத்துப் பார்க்கப் பயன்படும் நுணுக்கம். இதில் பிரிப்புவிதி பயன்படுகிறது. பா.chromotography (வேதி)

paper-making - தாள் செய்தல்: மூங்கில், வைக்கோல், புல் முதலியவற்றிலிருந்து தாள் கிடைக்கிறது. இவற்றிலிருந்து கிடைக்கும் கூழிலிருந்து தாள் செய்யப்படுகிறது. இக்கூழ் சல்பைட்டுமுறை, சல்பேட்டு முறை என்னும் இருமுறைகளில் செய்யப்படுகிறது. இவ்விரு முறைகளில் செய்யப்பட்ட கூழ் மெல்லிய கம்பி வலையின் மீது சமமாகப் பரப்பப்படுகிறது. பின், அது சூடாக்கப்பட்ட இரும்பு உருளைகளுக்கிடையே செலுத்தப்படுகிறது. இதனால் கூழ் உலர்ந்து தாளாகிறது. பா. sizing (வேதி)

papilla - அரும்புகள்: தோலில், சிறப்பாக விரல்முனையில் காணப்படும் காம்பு போன்ற நீட்சிகள். மொட்டுகள் என்றுங் கூறலாம். (உயி)

pappus - மயிர்க்குஞ்சம்: இது உருவில் மாற்றமடைந்த புல்லி விட்டம். நேர்த்தியான மயிரிழைகள் விதைக்கு மேல் வளர்ந்து குதிகுடைபோல் இருக்கும். காற்றினால் பரவும் விதைகளில் இவ்வமைப்பு காணப்படும். எ-டு.எருக்கு (உயி)

parabiosis - பக்கப் புணர்ச்சி, மருங்கிணைவு: உட்கருக்கள் பக்கத்தில் இணைதல் இரு தனி உயிர்களுக்கிடையே இணைப்பு ஏற்பட்டு, உடல் நீர்மங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் கலத்தல். இது இயற்கையாகவும் ஆய்வு நிலையிலும் நடைபெறுவது ஆய்வு நிலையில் பூச்சிகளில் செய்யப்பெறுவது. இயற்கை நிலை சியாமிய இரட்டையர்களில் நடைபெறுவது. இதனை மருங்குப் புணர்ச்சி என்றுங் கூறலாம். (உயி)

parachute - குதிகுடை: 1. குடை போன்ற அமைப்பு, வானவூர்திகளிலிருந்து பாதுகாப்பாகத் தரையில் இறங்கப் பயன்படுவது. பயிற்சியாளர்கள் அல்லது போர் வீரர்கள் பயன்படுத்துவது. 2. வாணவெளிக்கலம் காற்றுவெளி வழியாக மீளும்பொழுது தரையை அடையவும் செவ்வாய் முதலிய கோள்களில் கருவிகள் இறங்கவும் பயன்படுவது. (இய)

para compound - பதிலீட்டு சேர்மம்: பென்சின் வளையத்தில் இரு கார்பன் அணுக்களோடு இணைந்த பதிலீட்டு அணுக்கள் அல்லது தொகுதிகள் கொண்ட சேர்மம். (வேதி)

paracusis - கேட்டல் குழைவு: கேட்பதில் கோளாறு. (உயி)

paradoxical -முரண்துயில்: முழு ஒய்வு நிலை அல்லது தூக்க நிலை. இதில் விரைந்த கண் அசைவுகளால் விலங்கு விழித்திருப்பது போன்று தெரியும். (உயி)

paraffin-பாரபின்: பெட்ரோலியத் திலிருந்து கிடைக்கும் பகுவை. எரிபொருள். (வேதி)

paraffin wax - பாரபின் (வெண்) மெழுகு: பெட்ரோலியத்திலிருந்து கிடைப்பது, அய்டிரோ கார்பன் சேர்ந்த திண்மக் கலவை. மெழுகுவர்த்தி செய்ய (வேதி)

paraflagellar body - பக்க நீளிழை: ஒலியுணர் உறுப்பு. சில பாசிகளின் கசை இழையின் அதைப்பு போல் காணப்படுவது. (உயி)

parallax error - இடமாறு தோற்றப்பிழை: அளவுகளைக் குறிக்கும் பொழுது, அளவுகோலில் உள்ள அளக்கும் புள்ளிக்குச் செங்குத்தாகக் கண்ணை வைத்து அளக்க வேண்டும். அளக்கும் புள்ளிக்கு இடப்பக்கம் அல்லது வலப்பக்கம் சாய்வாகப் பார்த்துக் குறித்தால், அளவு குறைவாகவோ அதிகமாகவோ தெரியும். இப்பிழைக்கு இடமாறு தோற்றப்பிழை என்று பெயர். இப்பிழை நீளங்களை அளவுகோல் கொண்டு அளக்கும் பொழுது ஏற்படும் பிழை. ஒ. memiscus (இய)

parallel evolution, parallelism -ஒருபோக்கு உயிர்மலர்ச்சி: ஒரே திசையில் நடைபெறும் வலுவான இயற்கைத் தேர்வினால் நெருங்கிய உறவுடைய உயிரிகளுக்கிடையே ஒத்த இயல்புகள் உருவாதல். எ.டு. நீர் காக்கைக் கால், ஆற்றுக்காக்கைக் கால் ஆகிய இரு தாவரத்திலும் பிரிந்ததும் நீரில் முழ்கியதுமான இலைகள் உண்டாதல். ஒ. (உயி)

parallelogram (law) of forces - விசைகளின் இணைகரவிதி: ஒரு புள்ளியில் செயற்படும் விசைகளை ஒரு இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்களால் குறிக்க இயலுமானால், அப்புள்ளியிலிருந்து அவ்விணைகரத் திற்கு வரையப்பட்ட மூலை விட்டம், அவ்விணை விசைகளின் தொகுபயனை குறிக்கும். (இய)

paralysis - பக்கவாதம்: உடலின் ஒரு பகுதியில் முழுதுமாகவோ பாதியாகவோ நரம்புவேலை செய்யாதிருக்கும் நிலை. இது உணர்விலும் இயக்கத்திலும் அல்லது இரண்டிலும் இருக்கலாம். (உயி)

paramagnetism- ஒருமுனைக் காந்தம்: இணைகளல்லாத மின்னணுக்களால் உண்டாகும் காந்தப்பண்புகள். (இய)

paramecium - பரமேசியம்: முன் தோன்றி இனத்தைச் சார்ந்த ஓரணு விலங்கு காலணி வடிவ உயிரி (காலணி வடிவி, நன்னீரில் வாழ்வது. சுருட்டு வடிவ உடல். உடல் முழுவதும் வெளிப்புற முள்ள குற்றிழைகள் இடப் பெயர்ச்சிக்கு உதவுகின்றன. (உயி)

paramylum-மாப்போலி: சேமிப்பு உணவுப் பொருள். ஒளிச்சேர்க்கையால் ஸ்டார்ச்சு போன்ற பொருள் உண்டாக்கப்படுதல். இது பசும்பாசியிலும் பசுமையற்ற பாசியிலும் காணப்படுவது. (உயி)

paraphysis - மலட்டிழை: பாசி, மாசி ஆகியவற்றின் இனப்பெருக்க உறுப்புகளில் காணப்படும் குற்றிழை. கிளைக்காதது. பல அணுக்கள் உள்ளது. (உயி)

parapodium - பக்கக்கால்: பல் கூரிப் புழுக்களின் பக்க ஒட்டு உறுப்புகளில் ஒன்று. தசையாலானது. இணைப்பு இல்லாதது. எ-டு. நீரிஸ் (உயி)

parasite - ஒட்டுண்ணி: புற ஒட்டுண்ணி அல்லது அக ஒட்டுண்ணி, அல்லது ஒம்புயிரில் உறையும் வேற்றக வாழ்வி. இரு உயிர்களுக்கிடையே உள்ள தொடர்பில், ஒன்று நன்மை பெற்று மற்றொன்று தீமை பெறும் வாழ்வு ஒட்டுண்ணி வாழ்வு (பாராசிட்டிசம்) ஆகும். நன்மை பெறுவது ஒட்டுண்ணி. தீமையடைவது ஒம்புயிர். ஒட்டுண்ணிகள், அவற்றின் விளைவுகள் ஆகியவற்றை ஆராயுந்துறை ஒட்டுண்ணி இயல் (பாராசிட்டாலஜி) ஆகும். பா. saprophyte. (உயி)

parasitism - ஒட்டுண்ணி வாழ்வு: பா. parasite. (உயி)

parasympathetic nervous system - துணைப்பரிவு நரம்பு மண்டலம்: தானியங்கு நரம்பு மண்டலத்தின் ஒரு பிரிவு. மற்றொன்று பரிவு நரம்பு மண்டலம். இவை இரண்டும் மைய நரம்பு மண்டலத்தைப் போல் நரம்பணுக்கள், நரம்பிழைகள், நரம்பு முடிச்சுகள் ஆகியவற்றாலானவை.

parathyroid glands - துணை தொண்டைச் சுரப்பிகள்: நான்கு சிறிய முட்டைவடிவச் சுரப்பிகள். தொண்டைச் சுரப்பியில் உள்ளவை. குழாய் இல்லாதவை. (உயி)

paratype - துணைவகை: புதிய வகையை வருணிக்கும்போது, வருணிப்பவரிடமுள்ள வகை. இது முழுவகையோ (ஹோலோ டைப்) ஓரகச் சீர்வகையோ (ஐசோடைப்) அன்று. (உயி)

parazoa - துணைத்தோன்றிகள்: அமைப்பில் அணுப்படி நிலையுள்ள விலங்கு. எ-டு. துளையுடலிகள் (பொரிபெரா), முன் தோன்றிகளுடனும் (புரோட்டா சோவா) நடுத்தோன்றிகளுடனும் (மெட்டோசோவா ஒருமுக நிலை கொண்டது. (உயி)

parenchyma - பஞ்சியம் பஞ்சுத் திசு: பா. tissue, kinds of (உயி)

parental care - பெற்றோர் பாதுகாப்பு: இளம் உயிர்கள் நன்கு வளர்ந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலையை அடையும்வரை, அவை தங்கள் பெற்றோர்களால் பேணப்படுகின்றன. இப்பேணும் நிலையே பெற்றோர் பாதுகாப்பு ஆகும். இது பாலூட்டிகளில் அதிகமுள்ளது. தவிர, மீன்களிடமும் பறவைகளிடமும் காணப்படுகிறது. இதனைச் சேய்ப் பேணல் என்றும் கூறலாம். (உயி)

parent - தாய்: ஒரு நியூகிளைடு, கதிரியக்கச் சிதைவடைந்து மற்றொரு நியூகிளைடாக மாறுதல். (உயி)

paresis அரைவாதம்: கூம்பு வழிகளில் பிளவுகள் ஏற்பட்டு நலிவு உண்டாதல். (உயி:

parietal -பக்கச் சுவர்: உடற் குழியின் வெளிப்புறச் சுவர். (உயி)

parietal eye - பக்கக் கண்: மூன்றாங்கண். (உயி)

parietal placentation - சுவர்ச் சுலமைவு: பா. placentation. (உயி)

parity - இருமை: P ஒரு தொகுதியின் அடிப்படைப் பண்பு. ஒர் ஆடியில் மறிக்கப்படும் நிறம். இது ஒரு குவாண்டம் (சிப்ப) எண். (இய)

parotid gland - செவியருகுச் சுரப்பி: செவிமடலுக்கு அருகேயுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளின் தொகுதி (உயி)

paroxonicfoot-விரல் முனைப்புக் கால்: 3,4ஆம் விரல்கள் முனைப் பாகவும் 2,5ஆம் விரல்கள் குறைந்தும் இருக்கும் கால். எ-டு பன்றி. (உயி)

parrot - கிளி: அலகு வளைந்தது. நிறம் பசுமை. காலில் முன் 2 விரல்களும் பின் 2 விரல்களும் உள்ளன. (உயி)

parthenocarpy - கருவுறாக் கனி: கருவுறாமல் உண்டாகுங்கனி, இதை விதையிலாக் கனி என்றும் கூறலாம். எ-டு வாழை, அன்னாசி,

parthenogenesis -கருவுறா (கன்னி இனப்பெருக்கம்): கருவுறா முட்டை ஒர் உயிராக வளர்தல். (உயி)

parthenospore - கருவுறாச்சிதல்: ஒய்வு கொள்ளும் தடித்த கருவுடைய சிதல். கருவுறாப் பெண் பாலணுவிலிருந்து உண்டாதல், எ-டு. பாசி, (உயி)

particle - துகள்: சிறிய பகுதி ஒரு சிறிய பொருளில் அதன் அண்டைப்பகுதிகளின் இடைத் தொலைவு புறக்கணிக்குமளவுக்குச் சிறியதாக இருந்தால், அது துகள் எனப்படும். ஒரு பொருளில் பல துகள்கள் உள்ளன. பா.elementary partides. (இய)

particle physics - துகள் இயற்பியல்: ஒரு பொருளிலுள்ள துகள்களை ஆராயுந்துறை. மின்னணு அல்லணு, முன்னணு முதலிய 17 துகள்கள் பொருளில் உள்ளன. பா. elementary particles. (இய) parturition -குட்டிபோடல்: கருவுறுங்காலம் முடிந்தபின், பாலூட்டிகள் குட்டிபோடுதல். (உயி)

pascal - பாஸ்கல்: எஸ்ஐ வழியலகு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு நியூட்டன் அழுத்தத்திற்குச் சமம் (இய)

Pascal's law - பாஸ்கல் விதி: அசைவற்றிருக்கும் ஒரு நீர்மத்தில் ஒரு புள்ளியில் ஏற்படும் அழுத்தம் அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும். இதனடிப் படையில் நீரியல் தடுப்பான், நீரியல்தூக்கி, அழுத்தி ஆகியவை அமைந்துள்ளன. (இய)

passage cell-கடத்துகண்ணறை: வேரின் உட்தோலிலுள்ள மெல்லிய சுவருடைய அணு. இதன் வழியே சுற்றுவட்டத்திற்கு நீர் செல்கிறது. (உயி)

passive absorption - வீறுருறை உட்கவரல்: பரவல் விதிப்படி ஒரு பொருளை உயிரணு உறிஞ்சுதல். (இய)

Pasteurisation - பாஸ்டர் முறை: லூயி பாஸ்டர் (1822-95), பாலை இளஞ்சூடாக்கி அதிலுள்ள நுண்ணங்களை அழிக்கும் முறை. (உயி)

patella-முழங்காற்சில்: முழங்கால் முட்டின் முன் தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின்காலை நீட்ட உதவுவது. பெரும்பான்மையான பாலூட்டிகளில் உண்டு. சில பறவைகள், ஊர்வன ஆகியவற்றிலும் காணப்படுகிறது. (உயி)

patellar reflex - முழங்கால்மறி வினை: முழங்கால் உதறல் முழங்கால் பந்தகம் தட்டப்படுவதால் கால் முன்தள்ளப்படுதல். இது மருத்துவர் செய்யும் ஆய்வு (உயி)

pathogen - நோயூக்கி: நோயை உண்டாக்கும் உயிரி. (உயி)

pathogenesis - நோய் தோற்றம்: நோய் வளரும் முறை. (உயி)

pathologist -நோய் இயலார்: குறிப்பிட்ட நோயை அறிவதில் தேர்ந்தவர். (உயி)

pathology - நோய்(க்குறி) இயல்: நோய்களை நுணுகி ஆராயுந்துறை. (மரு)

peak current - மீமின்னோட்டம்: பயனுறு மின்னோட்டம் (எபக்டிவ் கரண்ட்) என்று குறிப்பிடப்படுகிறது. மின்சுற்றில் பயனுறு மின்னழுத்தமும் (பீக் ஓல்ட்டேஜ் பயனுறு மின்னோட்டமுமே கணக்கிடுவதற்குப் பயன்படுகின்றன. (இய)

pearl-முத்து: முத்துச்சிப்பியினால் உண்டாக்கப்படுவது. முதன்மையாகக் கால்சியம் கார்பனேட்டிலானது. விலை உயர்ந்த பொருள். சிப்பியின் கூட்டிற்குள் முடகத்திற்கும் ஓட்டிற்குமிடையில் மணல், துகள் முதலிய நுண் பொருள்களில் எவையேனும் ஒன்று சேரும்போது, அதைச் சுற்றி மூடகம் (மேண்டில்) ஓர் உறையை உண்டாக்கும். இதுவே முத்தாக வளர்வது. முத்துக் குளித்தல் (பேர்ல் பிஷிங்) மன்னார் வளைகுடாவிலும், கச்சு வளைகுடாவிலும் நடைபெறுவது (உயி).

peat-1. சிதைகுவியல் அரைகுறையாகச் சிதையும் தாவரப் பொருளின் குவியல். 2. இளம் நிலக்கரி தாவரப் பொருளிலிருந்து நிலக்கரி தோன்றுவதின் தொடக்க நிலை. எரிபொருள். (ப.து)

pectoral fins-மார்புத் துடுப்புகள்: மீனின் முன்புறத்துடுப்புகள். ஒ. pelvic fins. (உயி)

pectoral girdle - தோள் வளையம்: முதுகெலும்பி உடலின் முன் பகுதியிலுள்ள எலும்பு அமைப்பு. இதில் கைகள் இணைந்துள்ளன. இதில் இருகாறை எலும்புகளும் இரு தோள் எலும்புகளும் உண்டு. காறை எலும்புகள் மார்பெலும்போடும் தோள்பட்டை எலும்புகள் முதுகெலும்போடும் பொருந்தி இருக்கும். ஒ. pelvic girdle. (உயி).

pectose - பெக்டோஸ்: பெக்டின் தரும் பொருள். காய்களின் சதையில் உள்ளது. (உயி)

pedicel-பூக்காம்பு: கனி அல்லது பூவைத் தாங்குவது. மெல்லியதும் நீண்டதும் உருண்டதுமான பசுமையான நீட்சி. (உயி)

pedicle - அரை: 1. சிலந்திகளில் தலை-மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலுள்ள பகுதி, 2. சிறுகாம்பு. (உயி).

pedipalps-பேரிடுக்கிகள்: சிலந்தி உயிரிகளின் தலையில் நான்காம் துண்டத்திலுள்ள ஓரிணை ஒட்டுறுப்புகள் உணர்தல் இவற்றின் வேலை. அதாவது உணரிகளின் வேலையைச் செய்கின்றன. தேள்களில் பற்றப் பயன்படுதல். (உயி).

pedology - மண்ணியல்: மண் தோற்றம், இயல்பு, பயன் முதலியவற்றை ஆராயுந்துறை. வேளாணியல் சார்ந்தது. (உயி).

peduncle - பூக்கொத்துக்கொம்பு: பூக்கொத்தின் முதல்காம்பு. இதில் தனிப்பூக்கள் பூவடிச் செதில் கோளங்களில் உண்டாகின்றன. இதன் வடிவம், அளவு ஆகியவை பூக்கொத்து வகைக்குத் தகுந்தவாறு வேறுபடும். (உயி).

pelagic organisms- கடல்மிதவை வாழ்விகள்: மேற்பரப்பு நீர்கள் அல்லது கடலின் நடு ஆழப் பகுதியில் வாழ்பவை. இவை மிதப்பிகள் (பிளாங்டான்) நீந்திகள் (நெக்டான்) என இரு வகைப்படும்.(உயி).

pelvic fins - இடுப்புத்துடுப்புகள்: மீனின் பின்புறத்துடுப்புகள். (உயி).

pelvic girdle-இடுப்பு வளையம் : முதுகெலும்பி உடலின் பின் பகுதியிலுள்ள விறைப்பான எலும்பமைப்பு. இதில் கால்கள் இணைந்துள்ளன. இதில் இடுப்பு முன் எலும்பு, இடுப்பு மேல் எலும்பு ஆகியவை உள்ளன. ஒ. pectoral girdle. (உயி)

pelvis-1. இடுப்பு வளையம். 2. தட்டம். : இடுப்பு வளையத்தின் எலும்புகளால் உண்டாக்கப்படும் தாழ்வான குழி, சிறுநீரகத்தட்டம் சிறுநீரகத்தின் மையக்குழி.(உயி).

pencil - கற்றை: ஒளிக்கற்றை பா. band.(இய).

pendulum, compensated - ஈடு செய் ஊசல்: சூழ்நிலையில் வெப்பம் ஏறினாலும் இறங்கினாலும் அதன் நீளம் மாறா ஊசல் ஈடுசெய்த ஊசலாகும். தற்கால ஊசல்கள் பொதுவான வெப்ப நிலையில் நீள்பெருக்கம் அடையாத இன்வார் என்னும் உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்ளன. கிரகாமின் பாதரச ஊசல், கேரிசன் ஊசல் எல்லாம் புழக்கத்தில் இல்லாதவை. (இய).

pendulum, simple - தனி ஊசல்: மெல்லிய முறுக்கற்ற நூலில் தொங்கவிடப்படும் குண்டு. ஊசல் ஒரு திரும்புபுள்ளியிலிருந்து எதிர் திரும்புபுள்ளிக்குச் சென்று மீண்டும் அதே திரும்பு புள்ளிக்கு வரும்வரை ஏற்படுகின்ற அசைவு அலைவு. ஊசல் ஓர் அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அலைவு நேரம், அலைவில் பாதி அதிர்வு. அதிர்வில் பாதி வீச்சு. வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இந்த அலைவு நேர மாறாப் பண்பே ஊசலின் சம அலைவு நேரம். இந்த அடிப்படை, ஊசல் கடிகாரங்களில் உள்ளது. பா. pendulum .(இய).

penetrance - மரபுத்தகவு : ஒரு மரபணுவின் புறமுத்திரை வெளிப்பாட்டின் அளவு. பல மரபணுக்கள் 100% தகவுடையவை. சிலவற்றில் இத்தகவு குறைவாக இருக்கும். இம்மதிப்பு சூழ்நிலை அல்லது மரபு முத்திரையால் பாதிக்கப்படும்.

penguin - பென்குயின்: தென் கடல் பகுதிவாழ் பறவை. பறக்கும் திறனற்றது. கூடுகட்டத் தெரியாது. முன்புறத்துறுப்புகள் துடுப்புகளாகியுள்ளதால், அவற்றைக் கொண்டு நீரில் நீந்தும். விரல் இடைத்தோல் உண்டு. முட்டையிடவே கரைக்கு வரும். (உயி)

penicillin - பெனிசிலின்: சிறந்த முதல் உயிர் எதிர்ப்பு மருந்து. தொற்று நுண்ணங்களை அழிப்பது. அலெக்சாண்டர் பிளமிங் (1881-1955) இதனைக் கண்டுபிடித்தார். பெனிசிலியம் நொட்டேட்டம் என்னும் பூஞ்சணத்திலிருந்து தயாரிக்கப்படுவது. இதற்குப் பின் வந்தது ஸ்டெரப்டோமைசின். இதனை 1944இல் செல்மன் வாக்ஸ்மன் என்பார் கண்டறிந்தார். (உயி)

pentadactyl limb - ஐவிரல் உறுப்பு: ஐந்துவிரல்களைக் கொண்டது. கை, கால். (உயி)

pentamerous - ஐந்து அல்லது ஐம்மடங்கு: பூவின் ஒவ்வொரு வட்டத்திலும் பகுதிகள் ஐந்து அல்லது ஐந்தின் மடங்காக இருக்கும். (உயி)

pentode - ஐம்முனைவாய்: நால் முனைவாயை விடக் கூடுதலாக ஒரு வாயைக் கொண்ட வெப்பத் திறப்பி, (இய)

pepo - பூசுனை வகைக்கனி: கீழ்ச்சூல் பையிலிருந்து உண்டாவது. பறங்கி, கக்கரி (உயி)

perception, extrasensory, ESP - புறப்புலனறிவு: புலன்கள் உதவியின்றித் தொலைவில் நடக்கும் கடந்தகால நிகழ்ச்சிகளையும் அறிதல். ஆகவே, புலன்படா அறிவாகும். (க.உள)

perching - பற்றி அமர்தல்: கொம்பில் கால் விரல்களை இறுகப் பற்றி உட்கார்ந்திருத்தல். எ-டு, பறவை. (உயி)

perennials - பல பருவப்பயிர்கள்: பல ஆண்டுகள் வாழும் தாவரங்கள். எ-டு: மா. (உயி)

perianth-இதழ்வட்டம்: மகரந்தத்தாள்கள், சூல் இலைகள் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் பூப்பகுதி வழக்கமாக, இது இரு வட்டங்களைக் கொண்டது. (உயி)

periblast - சூழ்படை: சுற்றுப் படை மீன்களில் படையணுவில் உள்ள அணுவடுக்கு 9உயி)

periblem - சூழடுக்கு: சுற்றடுக்கு. புறணியை உண்டாக்குவது. (உயி)

pericardium - சூழுறை; சுற்றுறை. இதயத்தைச் சூழ்ந்துள்ள உறை. இதயப் புறவுறை. (உயி)

pericardial cavity -இதய உறைக்குழி: சூழ்குழி இதய உறையினால் சூழப்பட்டிருக்கும் இடம். இதில் இதயம் உள்ளது. (உயி)

pericarp - கனியுறை: சூழ்உறை. கனியின் சுவர் கனியுறை ஆகிறது. பழுத்த கனிகளில் அது மூன்று பகுதிகளாக வேறுபடுகிறது. 1. கணிப்புறவுறை எபிகார்ப் இது ஒருவரிசைப் புறத்தோல் கண்ணறைகளாலானது. 2. கனிநடுவுறை. இது நடுவடுக்கு 3. கனி உள்ளுறை. இது உட்புற அடுக்கு (உயி)

periclinal - சுற்றுப்போக்கு: கண்ணறைப் பிரிவு உறுப்பின் மேற்பரப்புக்கு ஒருபோக்காக இருத்தல். சுற்றுப்போக்குப் பிரிவு. ஒ. anticlinal. (உயி)

pericycle - சூழ்வட்டம்: சுற்று வட்டம் உட்தோலினுள் அமைந்துள்ள பஞ்சுத்திசு அடுக்கு (உயி)

periderm-சூழ்தோல்: சுற்றுதோல் தக்கை வளரியத்திலிருந்து உண்டாகும் இரண்டாம் நிலைத்திசு (உயி)

perigynous flower - அரைகீழ்ச் சூல்பைப்பூ. (உயி)

perinaeum - சூழியம்: கழிவாய்க்கும் பெண்குறிக்கும் அல்லது விரைப்பைக்கும் இடையிலுள்ள சிறுபகுதி. (உயி)

perineurium - சூழ்முடிச்சுறை: நரம்புமுடிச்சைச் சூழ்ந்துள்ள இணைப்புத்திசு உறை. (உயி)

period - 1. வரிசை: ஆவர்த்தன அட்டவணையிலுள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று. 2. அலைவுநேரம்: ஓர் அலைவின் முழுச்சுற்றுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், 3. காலம்: (இய)

periodic motion - காலநிகழ் இயக்கம்: தொடர்ச்சியாகவும் ஒத்த முறையிலும் நிகழும் ஒரு தொகுதியின் இயக்கம், ஊசல் அசைவு (இய)

periodic law- தனிம வரிசை விதி: ஆவர்த்தன விதி. இதனை உருசிய நாட்டு வேதியியல் அறிஞர் மெண்டலீஃப்பு என்பார் 1869இல் வெளியிட்டார். தனிமங்களின் இயற்பண்புகளும் வேதிப்பண்புகளும் அவற்றின் அணு எடைகளுக்கேற்ப வரிசை முறையில் மாற்றமடைகின்றன என்பது விதி. (வேதி)

periodic table - தனிம வரிசை அட்டவணை: தனிம வரிசை விதிப்படி அமைக்கப்பட்ட அட்டவணை. இதில் 9 தொகுதிகள் உள்ளன. தனிமப் பண்புகளை இவ்வட்டவணை நன்கு விளக்குகிறது. கனிம வேதியியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிறது. இதன் நீள்வடிவத் தனிம வரிசை அட்டவணை வேதியியலில் ஒரு விவிலிய நூல் ஆகும். (வேதி)

peripods - நடகால்கள்: நண்டு முதலிய விலங்குகளில் பயன்படும் நடக்குங் கால்கள். (உயி)

periosteum- எலும்பியம் : எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள விறைப்பான நார்ப்படலம் (உயி)

periostracum- எலும்போட்டியம்: மெல்லுடலியின் ஓட்டை மூடி யுள்ள கடினவெளியடுக்கு (உயி)

peripheral nervous system - ஒருங்கு நரம்பு மண்டலம்: நரம்பும் நரம்பு முடிச்சுகளும் சேர்ந்த தொகுதி மைய நரம்பு மண்டலத்திலிருந்து உறுப்பு களுக்கும் உடலின் புறப்பகுதிக்கும் செல்வது. புறநோக்கு நரம்பு மண்டலம் என்றுங் கூறலாம். (உயி)

periscope - சூழ்நோக்கி: ஒளிக் கருவி. ஒரு குழாயில் 45° அளவில் மறிக்கும் பரப்பு ஒன்று மற்றொன்றை நோக்குமாறு அமைக்கப்பட்ட இரு சமதள ஆடி களைக் கொண்ட கருவி, அகழியிலுள்ள போர் வீரர்கள் எதிரியின் நடமாட்டத்தை வேவு பார்க்கவும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து எதிரியின் கப்பல் நடமாட்டத்தை அறியவும் பயன்படுகிறது. (இய)

perisperm - சுற்றுத்தசை: சூழ் வழித்தசை. உட்கருவிலிருந்து உண்டாகும் ஊட்டத்திசு, விதை யில் உள்ளது. கேரியோ பைலே சிக் குடும்பத் தாவர விதைகளில் உள்ளது. ஒ. (உயி)

perissodactyla- ஒற்றைவிரலிகள்: பின்காலில் ஒற்றை எண்ணிக்கை விரல்களைக் கொண்ட விலங்குகள். எ-டு, குதிரை. (உயி)

peristalsis - அலைஇயக்கம்: உணவுவழிச் சுவரிலுள்ள தசைகள் உண்டாக்கும் நெளிவியக்கத்திற்கு அலை இயக்கம் என்று பெயர். இதனால் உணவு அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக்குச் செல்லமுடிகிறது. (உயி)

Peristome-சூழ்வளையம்: சூழகம், 1. மாசிகளில் பொதிகைத் துளையைச் சுற்றியுள்ள பல் வளையம். சிதல் பரவப் பயன்படுவது. ஈரநிலை மாற்றங்களுக்கேற்ப இப்பற்கள் திருகி வளைந்து சிதல்களைச் சிதறச்செய்யும் (தாவ) 2. பரமேசியம் முதலிய குற்றிழையுள்ள முன்தோன்றிகளின் வாயைச் சூழ்ந்துள்ள புனல் போன்ற பகுதி, 3. வயிற்றுக் காலி ஒட்டிலுள்ள துளையின் முனை. (உயி)

Perithecium -சூழுறை:பூஞ்சையின் குடுவை வடிவக் கனியுறுப்பு. (உயி)

Peritoneum -சூழ்தெளிபடலம்,சூழிலம்: வயிற்றுக்குழி, இடுப்புக்குழி ஆகியவற்றிலுள்ள உள்ளுறுப்புகளைச் சூழ்ந்துள்ள படலம். (உயி) Permanent hardness -நிலைத்த கடினத்தன்மை: பா. hardwater. (வேதி)

Permanent magnet -நிலைக்காந்தம்: பா. magnet (இய)

Permanent teeth-நிலைப்பற்கள்: பால்பற்கள் விழுந்தபின் முளைக்கும் பற்கள். (உயி)

Permeability -ஊடுதிறன்:கசிவுத்திறன். ஒரு படலத்தின் வழியே ஒரு பொருள் எளிதாகப் பரவும் ஆற்றல் (உயி)

Permutit - பெர்முடிட்டு: நீரில் கரைந்துள்ள தேவை இல்லாத பொருள்களை அகற்றும் பொருள். இது சீயோலைட் ஆகும். அரிய வேதிப்பொருளான சோடியம் அலுமினியம் சிலிகேட்டாலானது. கடின நீரை மென்னீராக்குவது. பா. zeolite. (வேதி)

Peroneus muscle -ஊசித்தசை: பல ஊசித்தசைகளில் ஒன்று. (உயி)

Peroneus iongus -ஊசிநீள்தசை: அமரும் பறவைகளின் கால்களிலுள்ள மேலெழு விரிதசை (உயி)

Peroxidase -பெராக்சிடெஸ்: துணுக்குவெள்ளணு முதலிய வெள்ளணுக்களில் உள்ள பெராக்சைடைச் சிதைக்கும் நொதி (உயி)

Peroxide - பெராக்சைடு: ஒரு கனிமக் கூட்டப்பொருள்.

Perpetual motion -நிலை இயக்கம்: நீடித்த முதல் வகை இயக்கம். இதில் ஒரு விசையம் தொடங்கப்பட்டவுடன், வெளி மூலத்திலிருந்து ஆற்றல் பெறாமல் பயனுள்ள வினையை முடிவில்லாமல் செய்து கொண்டிருக்கும். (இய)

Perturbation-குலைவு:ஓரு விண் பொருள் அல்லது செயற்கை நிலா தன் வழியிலிருந்து ஈர்ப்பு விசையினால் விலகுதல். (இய)

Pessary-உடற்செருகி: அறுவைச் செருகி, அல்லது மருந்துள்ள கருவி. கருவுறுதலைத் தடுக்கப் பிறப்பு வழியில் பயன்படுத்துங்கருவி. (மரு).

Pests - தொற்றிகள்:கட்டுப்படுத்தப்பட வேண்டிய அளவுக்கு மனிதனுக்குத் தொல்லைதரும் தாவரங்கள் அல்லது விலங்குகள். இவை தீங்குயிரிகளே. (உயி)

Pesticide - தொற்றுக் கொல்வி: தொற்றிகளைக் கொல்லும் மருந்துகள். இவை பூஞ்சைக் கொல்லி, பூச்சிக்கொல்லி, எனப் பல வகைப்படும். (உயி)

Pestilence -கொள்ளைநோய்: அதிக அளவில் பரவிக் கேட்டை விளைவிக்கும் நோய். எ.டு.காலரா ரா, (உயி)

Pestology -தொற்றி இயல்: வேளாண் தொற்றிகளையும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் ஆராயுந்துறை. (உயி)

Petal- அல்லி:பூவின் அல்லி விட்டத்திலுள்ள ஒரு தனி இதழ். அல்லிகள் சேர்ந்தது அல்லி விட்டம். ஒ. sepal. (உயி )

Petalody -அல்லிவயமதல்:இனப்பெருக்க உறுப்புகளான மகரந்தமும் சூல் இலைகளும் அல்லிகளாதல். எ.டு. இரட்டைப்பூ (உயி)

Petiole-காம்பு: இலைப்பரப்பைத் தாங்கும் பகுதி. (உயி)

Petri dish -பெட்ரி கிண்ணம்:பெட்ரி (1852-1921) என்பவர் பெயரால் அமைந்த தட்டை அடியுடைய வட்டக் கண்னாடிக் கிண்ணம். (வேதி)

Petrification -கற்படிவாதல்: கரிமஉறுப்பு. கல் அல்லது கனிம உறுப்பாதல். (உயி)

Petro chemicals -பாறை எண்ணெய்ப் பொருள்கள்: பெட்ரோ லியம் அல்லது இயற்கை வளியிலிருந்து உண்டாகும் பொருள்கள். (வேதி)

Petrol - பெட்ரோல்: கேசோலின்.ஆவியாகக் கூடிய அரிய கலவை. முதன்மையாக அய்டிரோ கார்பன்களாலானது. (கெப்டேன், கெக்சேன், அக்டேன்). பெட்ரோலியத்தை வடித்துப் பகுக்கக் கிடைக்கும் ஊர்தி எரிபொருள். ஒரு நாட்டின் மிகுபொருள் வளம் இதைச் சார்ந்தே உள்ளது. (வேதி)

Petrolatum - பெட்ரோலேட்டம்: பெட்ரோலிய இழுது. தூய்மை செய்யப்பட்ட அய்டிரோ கார்பன் கலவை. அரைக்கெட்டி நிலையிலுள்ள மஞ்சள் நிறப் பாரபின். மென்மையானது. வாசலின் என்று தவறாகக் கூறப்படுவது, (வேதி)

Petroleum -பெட்ரோலியம்: பாறை எண்ணெய். கல்லெண் னெய், கடல் விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றிய அய்டிரோகார்பன் கலவை, நிலத்திற்கடியில் பாறை யடுக்குகளுக்கிடையே காணப்படுவது. இது பண்படா எண்ணெய் ஆகும். வடித்துப் பகுத்தல் மூலம் இதிலிருந்து கிடைக்கும் பொருள்களாவன. டீசல் எண்ணெய், மண்ணெண்ணெய், கேசோலின், துய்மையாக்கிய வளி. தவிர, உயவிடு எண்ணெய்களும் வெண் மெழுகும் எஞ்சு பொருளிலிருந்து கிடைக்கின்றன. இதிலிருந்து கிடைக்கும் கரும்பொருள் நீலக்கீல் தார் ஆகும். (வேதி,

Petrology - பாறைஇயல்: பாறைகளை ஆராயும் புவி அறிவியல் துறையின் ஒரு பிரிவு. (பு:அறி).

Pewter - பியூட்டர்: வெள்ளீயம், காரீயம், ஆண்டிமனி சேர்ந்த உலோகக் கலவை. ஆண்டிமனியைச் சேர்க்க கடினமாகும். செம்பைச் சேர்க்க மென்மையாகும். அழகுபடுத்தும் வேலைகளில் பயன்படுதல். (வேதி)

Pfizerlaw - பிபிட்சர் விதி: அடுத்தடுத்த தலைமுறைகளில் உயிரணுக்கள் படிப்படியாகச் சிறியவையாகின்றன என்பது விதி. (உயி)

PH-பிஎச்: PH=log10H+.ஒரு கரைசலிலுள்ள அய்டிரஜன் அயனிச் செறிவின் பத்தடிமானுள்ள எதிர் மடக்கையே பிஎச் எனப்படும். ஊடகத்தின் காரத்தன்மையையோ காடித்தன்மையையோ காட்டுவது. பி.எச்7க்குக் கீழிருந்தால் காடித்தன்மை 7க்கு மேலிருந்தால் காரத்தன்மை. பிஎச் மதிப்புகளைத் தோராயமாக நிலைக்காட்டிகளைக் கொண்டு பெறலாம். மின்வாய்த் தொகுதி களைப் பயன்படுத்தித் துல்லிய மாகக் காணலாம். பா. buffer solution (வேதி)

pH meter -பிஎச் (மீட்டர்) மானி: ஒரு கரைசல் அல்லது ஊடகத்தின் பிஎச்சைக் கண்டறியப் பயன்படுங் கருவி. (வேதி)

Phage, bactiniophage -குச்சிய விழுங்கி: குச்சியங்களைத் தொற்றும் நச்சியம். (உயி)

Phagocytes -விழுங்கணுக்கள்: ஒருவகைக் குருதி வெள்ளணுக்கள். தீங்கு தரும் வெளிப்பொருள்களையும் குச்சியங்களையும் விழுங்கிச் செரிக்க வைப்பவை (வேதி)

Phagocytosis -விழுங்கணு வளைப்பு: உணவுத்துகள்களை விழுங்கணுக்கள் சூழ்ந்து வளைத்துக் கொள்ளுதல் (உயி)

Phalanges -விரல் எலும்புகள்: கோல்வடிவ எலும்புகள். கை விரல்களிலும் கால் விரல்களிலும் உள்ளவை.(உயி)

Phanerogams -பூக்குந்தாவரங்கள்: தாவர உலகின் பெரும்பிரிவு. இதில் உறையில் விதையுள்ள தாவரங்களும் உறையில் விதையில்லாத தாவரங்களும அடங்கும். பூவரசு முன்னவைக்கும் சைக்கஸ் பின்னவைக்கும் எடுத்துக்காட்டுகள். (உயி)

Phanerozoic-பூக்குந்தாவர ஊழி: முன் கேம்பிரியன் ஊழி முடிந்த பின் உள்ள காலம் அறிந்தறியக் கூடிய தொல்படிவுகளைப் பாறைகள் கொண்டுள்ள காலம் (உயி)

Pharmacist -மருந்தாளர்: மருந்தைச் செய்து அதைப் பயன் படுத்த உரிமம் பெற்றவர். ஒ. compounder. (மரு)

Pharmacology -மருந்தியல்: மருந்துகளை ஆராயுந்துறை. அதாவது மனிதனிடத்து மருந்துகள் உண்டாக்கும் விளைவுகளை ஆராய்வது. (மரு)

Pharmacy -மருந்தாளுமியல்: 1.மருந்துகள் செய்தல், அவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றை ஆராயுந்துறை. உடல் நலவியலின் ஒரு பிரிவு. 2. மருத்தகம் மருந்துகள் விற்குமிடம் (மரு)

Pharyngitis -தொண்டையழற்சி: தொண்டைச் சளிப்படலம் வீங்குதல். (உயி)

Pharyngology -தொண்டை இயல்: தொண்டை தொண்டை நோய்கள் ஆகியவற்றை ஆராயுத் துறை. (உயி)

Pharyngoscope -தொண்டை நோக்கி: தொண்டையை ஆராயப் பயன்படுங்கருவி. (உயி)

Pharyngotomy -தொண்டை நறுக்கம்: தொண்டை அறுவை. (உயி)

Pharynx - தொண்டை: உணவு வழியில் வாய்க்கடுத்த பகுதி (உயி)

Phase - நிலை: 1. ஒரு வேதித் தொகுதியின் இயற்பியல் முறையில் பிரிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று. எ-டு பனிக்கட்டியும் நீரும் சேர்ந்த கலவை. இருநிலைகளைக் கொண்டது. பனிக்கட்டி திண்மநிலை. நீர் நீர்மநிலை. ஒரு நிலை உடைய தொகுதி. ஒரு படித்தானது. ஒரு நிலைக்கு மேலுள்ள தொகுதி பல படித்தானது. 2. தாவரத்தைப் பொறுத்தவரை இருநிலைகள் உண்டு. 1. உடல் நிலை (வெஜடேட்டிவ்பேஸ்): தாவரம் இலைகளையும் கிளைகளையும் கொண்டிருத்தல். 2. இனப்பெருக்க நிலை (ரீபுரடக்வ் பேஸ்): பூக்களையும் கனிகளையும் உண்டாக்குவது. 3. கட்டம் ஒரு சுற்றிலுள்ள நிலை 4. பிறை (ப.து)

Phase diagram -கட்டப்படம்: கொடுக்கப்பட்ட அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் ஒரு பொருள் இருக்கும் நிலையைக் குறிக்கும் வரைபடம். (இய)

Phase of the moon -திங்கள் பிறைகள்: திங்களின் வளர்பிறையும் (நிறைநிலா)தேய்பிறையும் (இருள்நிலா) (இய)

Pheasant - வான்கோழி: சேவல் போன்ற பறவை. நீளம் 95 செ.மீ. நீண்டவால். ஒளிர்வான இறகுகள். விளையாட்டுப்பறவை. கறி உணவாகப் பயன்படுவது.(உயி)

Phenol -பினாயில்: C6H6OH. கார்பாலிக் காடி கார்பாலிக மணமுள்ள வெண்ணிறப் படிகம். நீரில் கரையாது. அரிக்கக் கூடியது. நஞ்சு தொற்றுநீக்கி. சாயங்களும் பிளாஸ்டிக்குகளும் செய்யப் பயன்படுவது. (வேதி)

Phenology - பருவ இயல்:பருவ நிலைகளால் தாவரங்கள் தாக்குறுவதை ஆராயுந்துறை. குறிப்பாகப் பூக்கள் பூத்தல், பறவை முதலிய இடம் பெயரிகள் வருதல் ஆகியவை பற்றி ஆராய்வது. (உயி)

Phenolphthalein - பினால்ஃப்தலின்: நீரில் கரையா வெண்ணிறப் படிகம். ஆல்ககாலில் கரையும். காரங்களுடன் சேர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுப்பது. காடியுடன் சேர்க்க இந்நிறம் நீங்கும். நிலைக்காட்டியாகப் பயன்படுவது. (வேதி)

Phenomenon - இயர்பாடு: இயற்கை நிகழ்ச்சி உற்றுநோக்கக் கூடிய நிகழ்ச்சி, அறிவியற் சிறப்புடையது. எ-டு விதை முளைத்தல், மின்னல் மின்னுதல். பா. scientific method.

Phenotype - புறமுத்திரை: சூழ் நிலையில் குறிப்பிட்ட மரபு முத்திரையின் வினையால் உண்டாகும் உயிரி. ஏனைய உயிரிகள் போல் ஒத்த அமைப்புடையவை. அவற்றின் காரணி அமைப்பை கருதத்தேவை இல்லை. (உயி)

Philosophy -மெய்யறிவியல்: தத்துவம். மெய்யறிவை ஆராயுந்துறை. எல்லா அறிவியல்களுக்கும் தலையாயது. எனவே, தந்தை அறிவியல் எனலாம். தாய் அறிவியல் கணக்கு மெய்யறிவியலின் நோக்கம் உண்மையை முழுமையாக அறிதலே. இதன் தாக்கம் எல்லா அறிவியல் துறைகளிலும் பரவியுள்ளது.

Philosophy of nuclear democracy - அனுவாட்சி மெய்யறிவு: 200 அடிப்படைத் துகள்களும் ஒன்று மற்றொன்றாலானவை. ஒன்றைவிட மற்றொன்று அடிப்படையானது அன்று. எல்லாம் சம அடிப்படை உள்ளவை. இது எஸ் கோவைக் கொள்கையால் செயல்படுத்தப்பட்டது.

Pholem - பட்டையம்: பட்டைத்திசு. பா. (உயி)

Phobias-அச்சங்கள்: குறிப்பிட்ட பொருள்களைக் கண்டால் ஏற்படும் அச்ச உணர்வு. வியர்த்தல் முதலிய உடற்பாடுகளும் ஏற்படும். நரம்புநோய் உள்ளவர் களிடமும் மூளைநோய் உள்ள வர்களிடமும் ஏற்படுவது. இது நோயச்சம் (நோசோபோபியா), சமூக அச்சம் (சோசியோ போபியா), இடவச்சம் (கிளாஸ்ட்ரோபோபியா) எனப் பலவகைப்படும். இதனை உள நோய்ப் பண்டுவத்தின் மூலம் நீக்கலாம். (உயி)

Phon - போன்: அலகுச்சொல் உரப்பின் அலகு ஒலியின் செறிவை அளக்கப் பயன்படுவது. (இய)

Phosphate - பாஸ்பேட்டு: பாக வரிகக் காடியின் உப்பு. வேதி)

Phosphide -பாஸ்பைடு: கூட்டுப்பொருள் கால்சியம் பாஸ்பைடு.Ca3P2 (வேதி)

Phosphine -பாஸ்பைன்: PH3 அதிக நச்சுத் தன்மை வாய்ந்த வளி, நிறமற்றது. நீருடன் பாஸ் பைடுக்ளைச் சேர்த்துப் பெறலாம். புகைத்திரை செய்யவும் கப்பல்களுக்குக் கோல்ம் குறி காட்டவும் பயன்படுதல். (வேதி)

Phosphite - பாஸ்பைட்டு:பாசுவரிசக் காடி உப்பு. (வேதி)

phosphor - பாசுவர்:ஒளிரும் பொருள். (வேதி)

Phosphor-bronze - பாசுவர் வெண்கலம்: செம்பு, வெள்ளியம், பாசுவரம் சேர்ந்த உலோகக் கலவை. கடினத்தன்மையும் விறைப்பும் நீட்சியும் கொண்டது. பல்லிணைச் சக்கரங்களில் பயன்படுவது. (வேதி)

Phosphorescence -நின்றொளிர்தல்: கால்சியம் பேரியம் சல்பைடுகளின் மீது சிறிது நேரம் ஒளியூட்டிப் பின் அவற்றை இருட்டில் வைத்தால், அவை சிறிது நேரம் ஒளிரும். இந்நிகழ்ச்சி நின்றொளிர்தலாகும். இது சில வினாடிகளிலிருந்து சில மணி நேரம் வரை இருக்கும். ஒளிபடும் வரை ஒளிர்தல் நிகழும். படும் ஒளி நீக்கப்பட்ட பின்னரும் நின்றொளிர்தல் நிகழும். பெக்கரல் என்னும் அறிவியலறிஞர் காரவகை உலோக உப்புகளும் அலுமினியச் சேர்மங்களும் நின்றொளிர்கின்றன. யுரேனியம், பிளாட்டினம் தவிர ஏனைய கனலோக உப்புகள் நின்றொளிர்வதில்லை என்பதைக் கண்டறிந்தார். பொருள் சிறியதாக இருந்தால் அதில் முழுதும் நின்றொளிர்தல் நிகழும். ஒளிச்செறிவையும் அலைநீளத்தையும் பொறுத்து நின்றொளிர்தல் அமையும் புறச்சிவப்பு நிற ஒளி இதை அழிக்கும். இப்பண்பு புறச்சிவப்புநிற ஒளியை அறியப் பயன்படுகிறது.

பால்மெயின் ஒளிருங்குழம்பு : ஒளிர்வான கதிரவன் ஒளியினால் இருட்டில் பலமணி நேரம் இது நின்றொளிரும். இதில் கால்சியம், பேரியம், ஸ்டிரான்சியம், சல்பைடுகள் கலந்துள்ளன. (வேதி)

Phosphoric acid - பாசுவரிகக் காடி: H3PO4 வெண்ணிறத் திண்மம். பாசுவர ஐந்தாக்சை டை நீரில் கரைத்துப் பெறலாம். அல்லது நீர்த்த நைட்டிரகக் காடியுடன் மஞ்சள் பாசுவரத்தை வெப்பப்படுத்திப் பெறலாம். பாஸ்பேட்டு உப்புகள் நீரை மென்மையாக்கவும் உரங்களாகவும் பயன்படுகின்றன. (வேதி)

Phosphorus - பாசுவரம்: P. அலோகத் தனிமம். இருபுற வேற்றுருக்களில் இருப்பது. வெண் பாசுவரம், சிவப்புப் பாசுவரம். முன்னது மெழுகு போன்ற வெண்ணிறப் பொருள். நச்சு, காற்றில் நன்கு எரியக் கூடியது. பின்னது நச்சற்றது. கரிய சிவப்பு நிறத்தூள். காற்றில் எரியாது. வெண்பாசுவரம் இருட்டில் ஒளிரும், சிவப்புப் பாசுவரம் ஒளிராது. பாசுவர வெண்கலம். வெடிகுண்டுகள், புகைத்திரைகள்

முதலியவை செய்யப் பயன்படுகிறது. சிவப்புப் பாசுவரம் தீப்பெட்டிகள் செய்யவும் வெண் பாசுவரம் எலி நச்சாகவும் பயன்படுகிறது. (வேதி)

Photics - பார்வைஇயல்: பா.optics(உயி)

Photic zone -ஒளிப்பகுதி:ஓளி மண்டலம். ஏரி அல்லது கடலின் மேற்பரப்பு. ஒளியுள்ளது. தாவர மிதவைகள் வாழும் பகுதி (உயி)

photobiology -ஒளி உயிரியல்: உயிரியலின் பிரிவு. உயிர்களில் ஒளியின் விளைவுகளை ஆராய்வது (உயி)

photocathode -ஒளி எதிர்மின்வாய்: ஒளியூட்டும்பொழுது மின்னணுக்களை உமிழும் எதிர்மின் வாய்.

photocathode -ஒளி வேதியியல்: ஒளி அல்லது மின்காந்தக்கதிர் வீச்சினால் உண்டாக்கப்படும் வேதி முறையை ஆராயுத்துறை. (வேதி)

photoconductivity -ஒளி கடத்தும் திறன்:ஒளிச்செல்வாக்கில் மாறுபடும் திறனுடைய பண்பு. (இய)

photocopier-ஒளி நகலி:ஒளிபட நகல்களை எடுக்குங்கருவி. (இய)

photocopy-ஒளிப்படி: அச்சேறிய பொருளின் ஒளிப்படி ஒளி நகல். (இய)

photodiode -ஒளி இருமுனை வாய்: அரைகுறைக் கடத்திகளின் இருமுனைவாய். ஒளியூட்டலுக்கேற்ப மீள்மாற்ற மின்னோட்டம் ரிவர்ஸ் கரண்ட் வேறுபடுவது. (இய)

photoelectricity -ஒளி மின்சாரம்: மின்காந்தக் கதிர்வீச்சு அல்லது ஒளியினால் உண்டாக்கப்படும் மின்சாரம், இய:

photo (electric) cell -ஒளிமின் கலம்: ஒளியின் விளைவினால் ஏற்படும் மின்காந்தக் கதிர் வீச்சினால், மின்னோட்டத்தை உண்டாக்குங் கருவி. இதில் ஒளியாற்றல் மின்னாற்றலாகிறது. வெற்றிடக் கண்ணாடி உறையில் நேர்மின்வாயும் எதிர்மின்வாயும் மிருக்கும். ஒளிப்பரப்பு, பொட்டா சியம் அல்லது சீசியத்திலான பொருளைக் கொண்டிருக்கும். அதில் ஒளிவரும்பொழுது அது மின்னணுக்களை உமிழும். நேர்மின் வாயிலுள்ள நேர்மின்ன ழுத்த வேறுபாடு, வெளிச் சுற்றிலும் மின்வாய்களுக்கிடையேயும் மின்னோட்டம் செல்லுமாறு செய்கிறது. இந்தக் கலம் ஒளியின் கலமாகும். இதன் இடத்தைத் தற்பொழுது ஒளிக்கடத்தல் மின் கலம் பிடித்துள்ளது. தொலைக்காட்சியில் பயன்படுவது. (இய)

photoelectron -ஒளி மின்னணு: ஒரு பொருள் ஒளி அயனிவயமாதலாலோ புறஊதாக்கதிர்கள் அல்லது எக்ஸ் கதிர்கள் படுவதாலோ அதிலிருந்து வெளிப்படும் மின்னணு, ஒளிமின்னணு ஆகும். (இய)

photo electronics -ஒளி மின்: னணுவியல்: மின்சாரம், ஒளி ஆகிய இரண்டிற்குமிடையே ஏற்படும் வினைகளை ஆராயும் துறை. (இய)

photoemissive cell -ஓளி உமிழ் கலம்: ஒளி எதிர்மின்வாயிலிருந்து உமிழப்படும் மின்னணுக்களை அளிப்பதன் மூலம், கதிர்வீச்சாற்றலைக் கண்டறியுங் கருவி (இய)

photo emissivity -ஒளி உமிழ் திறன்: ஒளியூட்டப்படும் பொழுது மின்னணுக்களை உமிழும் பொருளின் பண்பு (இய)

photofinish -ஒளிமுடிப்பு:ஒரு போட்டி முடிவினை ஒளிப்படம் எடுத்து உறுதி செய்தல். (இய)

photographic camera -ஒளி படம்: புகைப்படம், புகைப்படப் பெட்டி எடுக்கும் படம். (இய)

photometer -ஒளி மானி: ஒளி மூலகங்கள் இரண்டின் ஒளிவீசு திறனை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுங் கருவி. (இய)

photometry-ஒளி அளவைஇயல்: ஒரு பொருள் உறிஞ்சும் அல்லது உமிழும் ஒளியாற்றலை அளக்கும் அறிவியல் பிரிவு. (இய)

photon - ஒளியன்: மின்காந்தக் கதிர்வீச்சின் துகள். இத்துகளே இக்கதிர்வீச்சின் சிப்பம் குவாண்டம் ஆகும். (இய)

photonasty -ஒளித்தூண்டல் இயக்கம்: திசையைப் பொறுத்து அமையாமல், மாறிய ஒளிச்செறிவுத் தூண்டல்களால் சில தாவரங்கள் வெளிப்படுத்தும் துலங்கல். எ-டு. பசலைக்கீரை. பா. nastic movements (உயி)

photonics -ஒளியனியல்:ஒளித்துகள்களை ஆராயும் இயற்பியல் துறை. (இய)

photoperiod -ஒளிக்காலம்:ஒரு நாளின் சீரான நீட்சி, தாவரம் பெறும் ஒளியின் அளவைப் பாதிப்பது. தாவரத்தின் இயல் பான வளர்ச்சிக்கும் பெருக்கத் திற்கும் இது தேவை. (உயி)

photoperiodism -ஒளிக்காலவியம்: பகற்பொழுதில் ஒளிக் கிடைக்கும் கால அளவு. தாவரங்கள் பூத்தலைப் பாதிப்பது. இவை பகலில் ஒளிக்கும் இரவில் இருளுக்கும் உட்படுகின்றன. பகலில் உட்படும் ஒளியின் நேர அளவு ஒளிக்காலம் ஆகும். இக்கால அளவில் தாவரங்களில் ஏற்படும் துலங்கலே ஒளிக்கால வியமாகும். தாவர வளர்ச்சிக்கு மாறும் ஒளிக் காலம் தேவை. ஒ. isochromism.

photosensitive -ஒளியுணர்வு கொண்ட:கதிர்வீச்சு ஆற்றல் உணர்வுடைய பார்க்கும் ஒளியாலும் பார்க்க ஒளியாலும் பாதிக்கக்கூடிய (இய)

photostat-ஒளிநகலி: அச்சியற்றிய அல்லது எழுதிய பகுதியின் படி எடுக்குங் கருவி. (இய)

photosynthesis -ஒளிச்சேர்க்கை: தாவரங்கள் மட்டுமே மாப் பொருளை உருவாக்க வல்லவை. இலைத்துளைகளின் வாயிலாகப் பெறுங் கரி ஈராக்சைடு, வேர் மூலம் மண்ணிலிருந்து பெறும் ஊட்டநீர் ஆகியவற்றைக் கொண்டு அவற்றின் பசும் இலைகளும் தண்டுகளும் கதிரவன் ஒளியில் பச்சையத்தின் உதவியால் மாப்பொருள் உண்டாக்குவதற்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். ஒளி, நீர், கரி ஈராக்சைடு, பச்சையம் ஆகிய நான்கும் ஒளிச் சேர்க்கை நடைபெற இன்றியமையாதவை. இவற்றில் ஒன்று இல்லை என்றாலும் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. இச்செயல் வேதிமுறையில் நன்கு ஆராயப் பெற்றுள்ளது. (உயி)

photosynthetic bacteria - ஒளிச்சேர்க்கை குச்சியங்கள்: சில குச்சியங்கள் பச்சையத்தைப் பெற்றுள்ளன. இதற்குக் குச்சியப் பச்சையம் (பாக்டீரிய குளோரோபில்) என்று பெயர். இதைப் பெற்றிருப்பதால், அவை ஒளிச் சேர்க்கை நடத்த வல்லவை. (உயி)

photosynthetic pigments - ஒளிச்சேர்க்கை நிறமிகள்: ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான ஒளியாற்றலை உறிஞ்சும் நிறப்பொருள்கள். பச்சையம், பசுங்கணிகங்கள் எடுத்துக்காட்டுகள். (உயி)

phototaxis - ஒளியமைவு இயக்க்ம: ஒளித்தூண்டலால் இடம் மாறுதல். (இய)

phototherapy - ஒளிப்பண்டுவம்: ஒளிமூலம் நோய்நீக்கல். (உயி)

phototroph - ஒளிவாழ்வி: கரிமச்சேர்மங்களைத் தொகுக்க நேரிடையாகக் கதிரவனிடமிருந்து ஆற்றலைப் பெறும் உயிரி. எ.டு. பசுந்தாவரம். (உயி)

phototropism - ஒளிநாட்டம்: ஒளியினால் ஏற்ப்படும் வளைவியக்கம், ஒளிநோக்கி தண்டு வளர்வது. இருள்நோக்கி வேர் வளர்வது. (உயி)

phycology - பாசிஇயல்: பாசிகளை அறிவியல் முறையில் ஆராய்தல். (உயி)

phylloclade - இலைத்தண்டு : ஒருவகை இலைத்தொழில் தண்டு. இதில் தட்டையான தண்டு இலையின் ஒளிச்சேர்க்கை வேலையைச் செய்வது. இங்கு இலைகள் முட்களாகவோ செதில்களாகவோ மாற்றுரு பெற்றிருக்கும். சப்பாத்தி. ஒ. cadode,phylode. (உயி)

phylode - இலைத்தொழில் காம்பு: தட்டையான இலைக்காம்பு. இலைபோன்று அமைந்து அதன் வேலையைச் செய்தல். எ.டு. அக்கேசியா சிறப்பினங்கள். ஒ. (உயிர்) dadode.

phylody - இலைமாறுநிலை: இது ஒரு தாவரநோய். பூவின் பகுதிகள் நோயினால் இலைபோன்ற உறுப்புகளாதல், (உயி);

phyllopodium - இலைக்கால்:(உயி)

phyllotaxy - இலையமைவு: தண்டில் இலைகள் அமைந்துள்ள முறை. (உயிர்) இது பல வகை.

phylogeny - இனவளர்ச்சி: உயிர்த் தொகுதியின் உயிர்மலர்ச்சி வரலாறு. ஒ. ontogeny. (உயி)

phylum - பெரும்பிரிவு: விலங்குலகம் வகைப்படுத்தப்பட்டிருக்கும் பெருந்தொகுதிகளில் ஒன்று. துணை விலங்குலகங்களான முதல் தோன்றிகளும் (புரோட்டோசோவா) துணைத் தோன்றிகளும் (பாரசோவா) தத்தமக்கென்று முறையே ஒரு பெரும் பிரிவைக் கொண்டவை. அவை முதல் தோன்றிகளும் துளையுடலிகளும் (பொரிபெரா) ஆகும். இவ்விரண்டு உள்ளுலகங்களைத் தவிர மூன்றாம் உள் உலகமும் உண்டு. அது பின் தோன்றிகள் (மெட்டசோவா) பிரிவைச் சார்ந்தது. எஞ்சியுள்ள 11 பெரும் பிரிவுகளும் இதில் அடங்கும். பெரும் பிரிவுகள் உட்பெரும் பிரிவுகளைக் கொண்டது. முதுகுத்தண்டு உடையன (கார்டேட்டா), மண்டை ஓட்டின. மண்டை ஓடு இல்லாதன என்னும் இரு உட்பெரும் பிரிவுகளைக் கொண்டவை. (உயி)

physical change - இயற்பியல் மாற்றம்: பா. change, physical (வேதி)

physical chemistry - இயற்பியல் வேதியியல்: வேதிப்பண்புகளைத் தொடரும் இயல்புமாற்றங்களை ஆராயுந்துறை. அதாவது, இயற்பண்புகள் வேதிப்பண்புகளைச் சார்ந்தவை. வேதியியலின் ஒரு பிரிவு. (வேதி)

physics - இயற்பியல்: பருப்பொருளின் பண்புகள், ஆற்றல் முதலியவற்றை ஆராயுந்துறை. ஓர் அடிப்படை அறிவியல், அளவியல், ஒளியியல், இயக்கவியல் எனப் பல பிரிவுகளைக் கொண்டது.

physiology - உடல்: உடலிலுள்ள உறுப்புகள் அவை செய்யும் வேலைகள் ஆகியவற்றை ஆராயுந்துறை. இது மனித, உடலியல், விலங்கு உடலியல், தாவர உடலியல் என மூன்று வகைப்படும். உயிரியலின் ஒரு பிரிவு. உடல் செயலியல் என்றுங் கூறலாம்.

physiotherapy - உடற்பண்டுவம்: மருந்துகள் தவிரப் பயிற்சி, நீவுதல் முதலியவற்றினால் நோய் நீக்கும் முறை. மருத்துவஞ் சார்ந்தது.

physique - உடற்கட்டு: உடலின் அமைப்பு, வலு, தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பது. (உயி)

pi-பை: π. வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் குறுக்களவுக்குமுள்ள தகவிற்குரிய குறி. (3.14159 அல்லது 22/7 (இய)

pia - இளஞ்சிலந்திப்படலம்: உள்ளச்சின் (எண்டோரேகிஸ்) உட்குழாய்ப் படலம். பறவைகள், ஊர்வன, இருநிலை வாழ்விகள் ஆகியவற்றில் காணப்படுவது. (உயி)

piamater - குழாய்ப்படலம்: தண்டு வடத்தையும் மூளையையும் மூடியுள்ள மெல்லிய உட்படலம். (உயி)

pickles - ஊறுகாய்: மாங்காய், தக்காளி, நாரத்தை முதலிய காய்களைக் கொண்டு உரிய பாதுகாப்புப் பொருள்களுடன் செய்யப்படுவது. ஆதாயமுள்ள சிறுதொழில் (உயி)
pickup -1. எடுப்பு: (i) வானொலியில் ஏற்படும தேவையிலாக் குறுக்கீடு, (ii) ஆற்றல் அதிக மாதல், 2. எடுப்பி நாடாப்பதிவி லுள்ள கூர் எழுதியும் அதனோடு தொடர்புடைய தாங்கு கருவியும் கூர் எழுதியின் அசைவை மின் குறிபாடுகளாக மாற்றுவது. (இய)
piezo-electricity - அழுத்த மின்சாரம்: சில கல்படிகங்கள் இறுக்கப்படும்பொழுது, அவை உண்டாக்கும் மின்சாரம் உயர் நிலைப்பு மின்னணு அலைவிகள். உயர் நம்பக ஈர்ப்பிகள், வளி ஏற்றிகள் ஆகியவற்றில் பயன்படுவது (இய)
pig iron - வார்ப்பிரும்பு: ஊதுலை யில் உண்டாக்கப்படும் தூய்மை யற்ற இரும்பு, வார்ப்புகளாக மாற்றப்படுவது. (வேதி)
pigments - நிறமிகள்: வண்ணக் கூட்டுப்பொருள்கள். இரு வகைப் படும். 1. உயிரிய நிறமிகள்: பச்சையம், பகங்கணிகம், நிறக் கணிகம். இம்மூன்றும் ஒளிச் சேர்க்கையோடு தொடர்புடையவை. 2. வேதி நிறமிகள் கருங்கரி, குரோமியம் ஆக்சைடு, பெரிக ஆக்சைடு, ரப்பருக்கு நிறந்தரும் பொருட்டும் அதன் பண்பை உயர்த்தும் பொருட்டும் சேர்க்கப் படுபவை. (ப.து.)
pileferous layer - வேர்த்தூளியடுக்கு: வேரின் புறத்தோல் பகுதி வேர்த்துவிகளை தாங்குவது (உயி)
pileum தலையுச்சி. பறவையின் தலையுச்சி. (உயி)
pileus-நாய்க்குடை: காளானுள்ள வட்டக் குவிகை (உயி)
Pinaca - பினாகா: இந்தியா புதிதாக உருவாக்கியுள்ள போர்ப் படை ஏவுகணை. (1994)
pine needle - பைன் மர ஊசி இலை(உயி)
pinna-1. செவிமடல். 2 இறகிலையின் சிற்றிலை. 3. துடுப்பு அல்லது சிறகு ஒ. meatus. (உயி)
pipette - குமிழ்கூள்குழாய்: நடுவில் குமிழும் இரு பக்கங்களில் திறந்த மெல்லிய குழாய்களும் உள்ள கருவி. ஒரு முனை கூர்மையாக இருக்கும். குறிப்பிட்ட பரும அளவு நீர் அல்லது கரைசலை ஒரு கலத்திலிருந்து மற்றொரு கலத்திற்கு மாற்றப் பயன்படுவது. (ஒ) burette.
pisces - மீன்கள்: முதுகெலும்பு வகுப்பு. நன்னீரிலும் கடல் நீரிலும் வாழ்பவை. உடல்வெப்ப நிலை மாறக்கூடியது. உடல் முழுவதும் செதில்கள் உண்டு. மூச்சுறுப்புகள் செவுள்கள். நீந்தத் துடுப்புகள் உண்டு. (உயி)
pistil-சூலகம்: சூல்பை. சூல்தண்டு. சூல்முடி ஆகியவற்றைக் கொண் டது. பூவின் பெண்பகுதி (உயி)

pit-குழி: இரண்டாம் நிலைக்கண்ணறையிலுள்ள இடைவெளி. தடிப்புற்ற கண்ணறைகளுக் கிடையே தொடர்பை உண்டாக்குவது கடத்திகள். (உயி)

pitch - 1. குரல் எடுப்பு: ஸ்தாயி: ஒலியின் உணர்வு தாழ்வு. 2. புரி: திருகிலுள்ள மரை, 3. கீல் : நிலக் கரித்தாரைக் காய்ச்சி வடிக்கக் கிடைக்கும் எஞ்சுபொருள். (பது)

pitch blende - பிட்சி பினண்டு: யுரேனினைட்டு. யுரேனியம் ஆக்சைடை முதன்மையாகக் கொண்டது. ரேடியத்தின் முதன்மையான மூலம் (வேதி)

pitcher plant - குடப்பைத் தாவரம்: பூச்சி உண்ணுந்தாவரம். இந்தியாவில் ஒரே ஒரு வகை மட்டும் உண்டு. இலைப்பரப்பு குடப்பையாக மாறியுள்ளது. இலைக்காம்பு பையைத் தாங்குவது. இதன் நீளம் 10 - 15 செ.மீ. பைச்சுரப்பிகள் சுரக்கும் டிரிப்சின் பிடிக்கும் இரையைக் கரையச் செய்கிறது. கரைந்த பகுதிகள் உட்கொள்ளப்படுகின்றன. கரையாதவை பையில் கழிவாகத் தங்குகின்றன. எ-டு. நெபன்தஸ் (உயி)

pith - சோறு: தாவரத் தண்டின் மையத்திலுள்ள பஞ்சுத்திசுப் பகுதி, பூண்டுத் தாவர வேர்ப் பகுதியிலும் உண்டு. (உயி)

pitottube - பைடட் குழாய்: பாய்ம விரைவை அளக்க உதவுங் கருவியமைப்பு. (இய)

pituitary body, gland - மூளையடிச் சுரப்பி: முளைக்கு அடியுள்ள நாளமிலா உட்சுரப்பி. துண்டிகளையும் புரதங்களையும் சுரத்தல். எலும்பு வளர்ச்சியையும் கட்டப்படுத்தல். இதன் பிட்யூட்டரின் என்னும சுரப்பு குருதி அழுத்தத்தை உயர்த்துகிறது. இச்சுரப்பி நாளமிலாச் சுரப்பி மண்டலத்தின் தலைமைச் சுரப்பி. (உயி)

pK - பிகே: (log10,(1/K) பத்தின் அடி மானமுள்ள காடியின் பிரிகை மாறியின் எதிர் மடக்கையே என்பது. (வேதி. ஒ.pH

pKvalue-பிகே மதிப்பு: மடக்கை அளவில் ஒரு காடி வலுவின் அளவு. வேறுபட்ட காடிகளின் வலுக்களை ஒப்பிடப் பயன்படுவது. (வேதி)

placenta - 1. சூல்கொடி: நஞ்சுக் கொடி வளரும் கருவைக் கருப்பையோடு இணைத்து ஊட்டம் வழங்குங்கொடி, 2. சூலொட்டு: சூல்கள் உள்ள ஒட்டுப்பகுதி. பா. umbilical cord. (உயி)

placentation - சூலமைவு: சூல்பையின் தடித்த பகுதிகளுக்குச் சூலொட்டுகள் என்று பெயர். இவற்றில் சூல்கள் அமைந்துள்ள முறைக்குச் சூலமைவு என்று பெயர். இது பலவகை. (உயி)

placoid scale, denticle - தட்டைச் செதில்: பல் போன்ற சிறிய உறுப்பு. குருத்தெலும்பு மீன்களின் தோலில் உள்ளது. சுறா. (உயி)

plague - பிளேக்: எலிபரவு கொள்ளை நோய். இந்நோயை உண்டாக்குவது எர்சினியா சூடோ டியூபர்குளொசிஸ் சின்பெஸ்டிஸ் என்னும் நுண்ணுயிரி. குச்சியத் தைச் சுமந்து சென்று நோயைப் பரப்புவது எலி. இந்நோய் இப்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (உயி)

plagiotropism - குறுக்குவாட்டு நாட்டம்: தூண்டல் வினைநோக்கி அமையும் தாவர வளர்ச்சி. காட்டாகப் பக்கக் கிளைகளும் வேர்களும் ஈர்ப்புத் தூண்டலின் சாய் கோணம் நோக்கி அமைதல். ஒ . Orthotropism. (உயி)

Planck constant - பினாங்கு மாறிலி: h. ஒர் அடிப்படை மாறிலி. தன் அதிர்வெண்ணுக்கு ஒளியன் (போட்டான்) கொண்டு செல்லும் ஆற்றல் தகவு. கதிர் வீச்சுச் சிப்பக் கொள்கையில் அடிப்படைத் தொடர்பு W= hw. (இய)

planet-கோள்: பொதுவாகக் கதிரவனைச் சுற்றிவரும் விண்பொருள். அறியப்பட்டுள்ள கோள்கள் 9, எ-டு. புவி, செவ்வாய், வெள்ளி (வானி),

plankton - மிதப்பிகள்: பெரும் பாலும் நுண்ணுயிரிகள். ஒளி மிதப்பிகள், விலங்கு மதிப்பிகள் என இருவகைப்படும். இவை மீன்களுக்கு உணவு. (உயி)

plant - தாவரம்: ஓரிடத்திலேயே இடம் பெயராமல் நிலைத்திருக்கும் உயிரி. எளிய கனிமப் பொருள்களிலிருந்து தன் உணவைத் தானே தயாரித்துக் கொள்வது. இது பலவகைப்படும். ஒ. animal. (உயி)

plant breeding, techniques of - தாவரக்கலப்பு நுணுக்கங்கள்: முதன்மையான நுணுக்கங்கள் பின்வருமாறு. 1. தேர்ந்தெடுத்தல் 2. உட்பெருக்கம். 3. கலப்பின மாக்கல் 4. தாவர அறிமுகம். 5. பெற்றோர் கலப்புப் பெருக்கம் 6. பன்மயம், 7. சடுதி மாற்றம் (உயி)

plant societies - தாவரக்கூட்டங்கள்: வேறுபட்ட சூழல்களில் வாழும் தாவரத் தொகுதிகள். இவை மூன்று வகைப்படும். 1. நீர்வாழ்விகள், 2. வளநில வாழ்விகள். 3. வறண்ட நில வாழ்விகள். (உயி)

plant tissue - தாவரத்திசு: ஒத்த அமைப்பு, தோற்றம், வேலை ஆகியவற்றைக் கொண்ட உயிரணுக்களின் தொகுதியே திசு. (உயி)

planula - தட்டைஇளரி: குழிக் குடலிகளின் வேற்றிளரி. சிறியது. குற்றிழை உள்ளது. தடையின்றி நீந்துவது. தகுந்த இடத்தை அடைவது. குழாய் உடலியாக வளர்வது. பா. larva (உயி)

plasma - கனிமம்: 1. அணுக்கள் இல்லாத குருதியின் பாய்மப் பகுதி 2. தடையிலா மின் அணுக்களும் அயனிகளும் சேர்ந்த கலவை. வெப்ப அணுக்கருவினைகளில் உண்டாவது, பொருளின் நான்காம் நிலை, 3. சில முன் தோன்றிகளில் காணப்படும் விறைப்பான அணுக்கணியம் (சைட்டோபிளாசம்).

plasma arc cutting - கணிம வில் வெட்டல்: 35000o செஇல் வளி ஒட்டத்தினால் உலோகங்களை வெட்டுதல். இதற்கு டங்ஸ்டன் வில் பயன்படுவது. (தொ.நு)

plasma cells - கணிம அணுக்கள்: வெள்ளணுக்கள் (உயி)

plasmalemma, plasma (cell) membrane - கணிம அடுக்கு, கணிம (கண்ணறைப்)படலம்: எல்லா உயிரணுக்களையும் சூழ்ந்துள்ள படலம். கண்ணறைச் சுவருக்குக் கீழுள்ள முன் கணியத்தின் வெளிப்புற அடுக்கு (உயி)

plasma state - கணிம நிலை: பொருளின் நான்காம் நிலை. அதிவெப்பநிலை. (இய)

plasmodium - பிளாஸ்மோடியம்: 1. சேற்றுப் பூஞ்சையில் காணப்படும் உறையற்ற முன்கணியத் தொகுதி. பல் உட்கருவுள்ள அமீபா போன்றது. 2. நுண்ணிய ஒட்டுண்ணி, மலேரியாவை உண்டாக்குவது. அனோபிலஸ் கொசுவினால் கொண்டு செல்லப்படுவது. (உயி)

plasmogamy - கணிகக்கலப்பு: பொதுவாகப் பாலினப் பெருக்கத்தின்போது இரு உயிரணுக்களின் முதல் கணிகங்கள் சேர்தல். (உயி)

plasmolysis - கணிகச்சுருக்கம்: ஊடுபரவல் மூலம் நீர் நீங்கிக் கணிகம் (உயிரணு) கருங்குதல் (உயி)

plaster of Paris - பாரிஸ் சாந்து: CaSO4, 1/2H20. தூள்நிலைக் கால்சியம் சல்பேட்டு 130o செஇல் ஜிப்சத்தைச் சூடாக்கிப் பெறலாம். நீருடன் சேர்க்க இறுகிக் கடினமாகும். வார்ப்பு எடுக்க வேண்டிய பொருள்களுக்கு அச்சு செய்யவும் முறிந்த எலும்புகளுக்குக் கட்டுப்போடவும் பயன்படுவது. (வேதி)

plastics - பிளாஸ்டிக்குகள், வார்ப்பியங்கள்: இவை பலபடியாக்கல் வினைகளால் உருவாகும் கரிமப் பிசின்கள். நெகிழ்வற்ற உறுதிப் பொருள்கள், வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அச்சுக்குள் வடித்து எடுக்கலாம். வெப்ப விளைவு அடிப்படையில் இரு வகைப்படும். 1. வெப்ப இளகு பிளாஸ்டிக்குகள்: பாலீதின், நைலான். 2. வெப்ப இறுகு பிளாஸ் டிக்குகள்: பேக்கலைட்டுகள், பாலியஸ்டர். இது பொருளாதாரச் சிறப்புடைய பெருந்தொழில் (வேதி)

plasticisers - வார்ப்பிக்கள்: வேறு பெயர் மென்மையூட்டிகள். இவற்றைச் சேர்ப்பதால் ரப்பருக்கு நிலைப்புடைய அதிக வளைதலும் மீட்சியும் கிடைக்கும். (வேதி)

plasticity - வார்ப்பியத்திறன்: அழுத்தத்தினால் தன் அளவு அல்லது வடிவத்தில் நிலையாக மாறும் பொருள்களின் பண்பு. இது வார்ப்பியங்களுக்கு உண்டு. (வேதி)

plastids - கணிகங்கள்: தாவரக் கண்ணறைக் கணியத்தில் காணப்படும் உறுப்பிகள். திட்டமான இரட்டைப் படலத்தால் மூடப்பட்டுள்ளவை. இவை மூவகைப் படும்.

1. பசுங்கணிகங்கள்: (குளோ ரோபிளாஸ்ட்ஸ்) இலையில் உள்ளவை. 2. நிறக்கணிகங்கள்: (குரோமோ பிளாஸ்ட்ஸ்) பூ அல்லிகள், 3. வெளிற் கணிகங்கள்: (லூக்கோபிளாஸ்ட்ஸ்) தரைகீழ்த்தண்டுகள் வேர்கள். இவை மூன்றும் ஒத்த அமைப் புடையவை. ஒன்று மற்றொன் றாக மாறவல்லது.ஒளி இல்லை எனில் பசுங்கணிகங்கள் வெளிற் கணிகங்களாகும். கதிரவன் ஒளி யில் வெளிற் கணிகங்களும் பசுங் கணிகங்ளாகும். கனிகளில் பசுங் கணிகங்கள் நிறக்கணிகங்களாகும். (உயி)

plateau-1. தேக்க நிலை: கற்றலில் முன்னேற்றம் தற்காலிகமாகத் தடைப்பட்டு நிற்றல், 2 மேட்டுச் சமவெளி: மேட்டுநிலம். (பது)

platelets - நுண்தட்டனுக்கள்: சிறிய துணுக்குகள், குருதியில் இலட்சக்கணக்கில் உள்ளவை. சிவப்பு எலும்புச் சோற்றில் உண்டாகிக் குருதி உறைய உதவுபவை. (உயி)

plate tectunics - தட்டு கட்டமைப்பியல்: கற்கோளத் தட்டுக்களால் புவி மேற்பரப்பு ஆனது என்னுங் கொள்கை (பு:அறி)

platinum -பிளாட்டினம்: Pt அரச உலோகம். மாறுநிலை உலோகம், வெண்ணிறம், விலை மதிப்புடையது. தகடாக்கலாம், கம்பியாக் கலாம். மிகக் கடினமானது. வேதி வினை குறைந்தது. தொகுமுறையிலும் ஆஸ்வால்டு முறையிலும் வினையூக்கி. விலை உயர்ந்த அணிகலன்களில் உலோகக் கலவையாகப் பயன்படுவது.(வேதி)

platinum black - பிளாட்டினக் கரியம்: பிளாட்டினம் கருந் தூளாக்கப்பட்ட நிலை. உறிஞ்சி களாகவும் வினையூக்கியாகவும் பயன்படுதல். (வேதி)

platyhelminthes - தட்டைப் புழுக்கள்: மென்மையான உடல், உடல் மூன்று படைகளைக் கொண்டது. இருபக்கச் சமச்சீருடையது. மேலும் கீழும் தட்டையானது. 11,000 வகைகள். (உயி)

playback - ஒலிமீட்பு: நாடாப்பதிவியில் பதிவு செய்த ஒலியை மீண்டும் கேட்குமாறு செய்தல். ஒலி மீட்பு ஆகும்.

pleura - நுரையீரல் உறை: மருங்குறை. ஓர் இரட்டைப்படலம். துரையீரலைச் சூழ்ந்துள்ளது. (உயி)

pleurodont teeth - பக்கவாட்டு பற்கள்: தாடை எலும்புகளின் உட்பகுதிப் பற்கள் அதனோடு இணைந்திருக்கும். எ-டு. தவளை, மீன். (உயி)

pleuron - மருங்குதகடு: மருங்குறையன், கைட்டினால் கடின மாகிய தகடு, பூச்சியின் உடற் கண்டத்தின் ஒவ்வொரு பக்கமுள்ள பாதுகாப்புறை, பா. (உயி)

plexus - வலைப்பின்னல்: நரம்பு வலைப்பின்னல், குழாய் வலைப் பின்னல். (உயி)

plicate - விசிறிமடிப்பு: பா. vernation. (உயி)

Plimsoll lines-பிலிம்சால் (லயன்) கோடுகள்: வாணிபப் பொருள்களை ஏற்றிவரும் பெருங்கப்பல்களின் பக்கங்களில் வரையப்பட்டிருக்கும் கோடுகள். கடல்நீர் அடர்த்தி, இடத்திற்கிடமும் தட்பவெப்பநிலைக்கு ஏற்பவும் மாறும் என்பதை இவை குறிப்பவை. (இய)

pliomorphic orgnisam - இரு வேறு தோற்ற உயிரி: இரண்டிற்கு மேற்பட்ட வடிவங்களில் தன் வாழ்க்கைச் சுற்றை நடத்தும் உயிரி, எ-டு. பையனுப்பூஞ்சை (ஆஸ்கோமைசிட்டி பங்கஸ்).இதில் இரு தூசிச்சிதல் நிலைகள் (கொனிடியல் ஸ்டேட்டஸ்) உள்ளன. (உயி)

plumage - இறகுத்தொகுதி: பறவைகளில் காணப்படும் இயற்கை இறகுகள் (உயி)

plumule - 1. சிற்றிறகு, தூவி 2. முளைக்குருத்து.

pluteus - மருங்கிளரி: கடல் சாமந்திகளுக்குரிய இளரி. குற்றிழையுள்ள பட்டை தொடர்ச்சியாக இருக்கும். சிறிய முன்வாய் மடல் உண்டு. பின் கழிவு மடல்கள் நன்கு வளர்ந்திருக்கும். பா. dipleurula, larva. (உயி)

Pluto - புளுட்டோ: கதிரவன் குடும்ப வெளிப்புறக் கோள். 1930இல் கண்டுபிடிக்கப்பட்டது.கண்டுபிடித்தவர் கிளைடி. டாம்பக். இதற்கு நிலாக்கள் உண்டு. (வானி)

plutonium -புளுட்டோனியம்: Pu. அதிக நச்சுள்ள கதிரியக்கத் தனிமம். யுரேனியத்தாதுக்களில் சிறிதளவுள்ளது. இயற்கை யுரேனியத்தை அல்லணுவினால் பிளக்க புளுட்டோனியம் 239 கிடைக்கும். எளிதில் பிளவுபடக் கூடிய 239 பு பெருமளவு பயன்படும். அணுக்கரு எரி பொருள். அணுக்கரு வெடி பொருள். (வேதி)

pneumatic bones - காற்றெலும்புகள்: உட்குழியுள்ள காற்று இடைவெளி கொண்ட எலும்புகள். பறவைகளில் உள்ளவை. (உயி)

pneumatic duct - காற்றுக்குழல்: காற்றுப் பையிலிருந்து வருங் குழல், சில மீன்களில் உணவுக்குழலுடன் இணைக்கப்பட்டிருக்கும். (உயி)

pneumatophores - காற்று வேர்கள்: கரளை வடிவமுள்ள நேரான வேர்கள். எதிர் நில நாட்டங் கொண்டவை. அடியத்திற்கு மேல் நீண்டு காணப்படும். (உயி)

pneumonia - நுரையீரல் அழற்சி: நுரையீரல் வீக்கம். தொற்று நோய். (உயி)

pod, legume - பருப்புக்கனி: இரு புற வெடிகனிஉளுந்து, துவரை. (உயி)

point - 1.புள்ளி: ஒரு புள்ளியில் அழுத்தம் 2.நிலை: உருகுநிலை. 3. வரை : வெப்பநிலைமானியில் கீழ்த்திட்ட வரை, மேல் திட்ட வரை. 4. முனை: ஒரு முனையி லிருந்து மற்றொரு முனைக்குச் செல்லுதல். 5. இடம்: தராசில் திரும்புமிடம், நிலையிடம். (ப.து)

point, resting - நிலையிடம்: சீராக்கப்பட்டபின் அளவு கோலின் முன்பாகக் குறிமுள் இங்குமங்கும் அசைந்து இறுதியாக நிலைபெறுமிடம் (இய)

point, turning - திரும்புமிடம்: குறிமுள் அளவுகோலில் நகர்ந்து, ஒவ்வொரு பக்கமும் சிறிது தொலைவு சென்று திரும்பும். இவ்வாறு திரும்புமிடங்கள் திரும்பு புள்ளிகள். (இய)

point (true), zero resting - உண்மை நிலையிடம், சுழி நிலையிடம்: தட்டுகள் இரண்டும் வெறுமையாக இருக்கும் பொழுது காணப்படும் நிலையிடம். (இய)

poison - நஞ்சு: வினையூக்கிச் செயலை அழிக்கும் பொருள். (உயி)

poisoning-நச்சுககலப்பு: உணவுப் பொருள்களில் நஞ்சு சேர்தல், வேதிப்பொருள்கள் மூலமோ விழுந்து இறக்கும் உயிரிகள் மூலமோ உண்டாவது. இவ்வுணவை உட்கொள்ளும் பொழுது உயிருக்கு ஊறு ஏற்படும். உணவில் நச்சுக்கலப்பு பற்றிய செய்திகள் அடிக்கடிச் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன. (உயி)

posture - நேர்நிலை: இஃது உடலின் இருக்கை நிலையைக் குறிக்கும். இதனைக் காப்பது இயக்குத்தசைகளான எலும்புத் தசைகள். நிற்றல், நடத்தல், உட்காருதல், ஓடுதல் முதலிய எல்லா நிலைகளையும் கட்டுப்படுத்துவது இயக்குத்தசைகளே. எடுப்பான தோற்றத்திற்கு இது இன்றியமையாதது. (உயி)

polar bond - முனைப்பிணைப்பு: இது ஒர் இணைப்பிணைப்பு. இதில் பிணையும் மின்னணுக்கள் இரு அணுக்களுக்கிடையே சம மாகப் பகிர்ந்து கொள்ளப்படு வதில்லை. (வேதி)

polarizability - முனைப்படுதிறன்: எளிதாக மின்னணு முகில் முனைப்படுதல். அயனிகளில் எதிர் மின்னேற்றத்திலோ அளவிலோ உயர்வு இருக்குமானால், முனைப்படுதிறனிலும் உயர்வு இருக்கும். (இய)

polarization - முனைப்படுதல்: குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே 2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாகத்திலிருந்து வெளியாகும் நீர்வளிக் குமிழிகள் செப்புத்தகட்டில் குவிகின்றன. இதனால் கம்பிவழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படுதல். இதைப்போக்க உயிர்வளி அளிக்கக்கூடிய முனைப்படு நீக்கியைப் பயன்படுத்த வேண்டும். உயிர்வளி, நீர்வளியோடு சேரும்பொழுது நீர் உண்டாகும். எ-டு. மாங்கனீஸ் ஆக்சைடு. (இய)

polarized light - முனைப்படு ஒளி: புலவரை ஒளி. இதில் மின் புலமும் காந்தப்புலமும் ஒற்றைத் தளங்களுக்கு வரையறை செய்யப்படுகின்றன. புல ஒளியாக்கி (போலராய்டு) மூலம் இந்த ஒளியை உண்டாக்கலாம். (இய)

polonium - பொலோனியம்: கதிரியக்கத் தனிமம். யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ளது. இதற்கு 30க்கு மேற்பட்ட ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) உண்டு. எல்லாம் ஆல்பா துகள்களை உமிழ்பவை. செயற்கை நிலாக்களில் மின்வெப்ப ஆற்றல் ஊற்றாகப் பொ-210 பயன்படுகிறது. (வேதி)

pollen - மகரந்தத்துாள்: பூக்குந் தாவரங்களின் நுண் சிதலகத்திலிருந்து விடுபடும் சிதல் போன்ற பகுதி. 2 அல்லது 3 உயிரணுக்கள் கொண்டது. இதை மகரந்தமணி என்றும் கூறலாம். மகரந்தச் சேர்க்கை முறைக்கேற்றவாறு, மகரந்தமணிகள் தகைவு பெற்றுள்ளன. பூச்சிகளால் கொண்டு செல்லப்படுபவை. ஒட்டுத்தன்மை கொண்டவை. காற்றினால் மகரந்தச் சேர்க்கை அடைபவை. இலேசான மகரந்தத்தூளை உண்டாக்குபவை. ஒவ்வொரு மணியிலும் ஆண் பாலணுக்கள் உண்டு. இவை ஆண்பாலணுத் தாவரத் தலை முறையினைக் குறிப்பவை. (உயி)

pollen sac - மகரந்தத்தூள்பை: மகரந்தத்தூள் பூக்குந்தாவரங்களில் காணப்படுவது. இப்பைகள் மகரந்தப்பையை உண்டாக்குகின்றன. (உயி)

pollen tube - மகரந்தக்குழல்: மகரந்தச் சுவரின் குழாய்ப்புற வளர்ச்சி. இதன் வழியே பாலணுக்கள் சூலுக்குள் செல்கின்றன. (உயி)

pollex - முதல்விரல்: நான்குகால் விலங்குகளின் முன் புறத்துறுப்புகளின் முன்விரல். மனிதனிடம் இது கட்டைவிரல். (உயி)

pollination - மகரந்தச்சேர்க்கை: மகரந்தப்பையிலுள்ள மகரந்தத்தூள், சூல்முடியை அடைதலுக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். இந்நிகழ்ச்சி கருவுறுதலுக்கு முந்தியது. (உயி)

pollution - மாசாதல்: மனிதச் செயல்களால் இயற்கைச் சூழலின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம். (உயி)

pollution control - மாசு கட்டுப்பாடு: மாசாதலை முயன்று குறைத்தல். தொழிற்சாலைக் கழிவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் உள்ளன. தவிரப் புகையிலா எரிபொருள்கன்ள உண்டாக்கலாம். சில தொற்றுநோய்க் கொல்லிகளைத் தடை செய்யலாம். (உயி)

polycarpellary pistil - பல சூழ் இலைச்சூலகம்: பல சூல்இலைகளைக் கொண்ட சூலகம். இவை பூத்தளத்தில் இணைந்தும் இணையாமலும் இருக்கலாம். (உயி)

polydipsia - மிகுநீர்வேட்கை: அதிக அளவு நீர் உட்கொள்ளல். (உயி)

polyembryony - பலக்கரு தோற்றம்: ஒரு சூலில் ஒன்றிற்கு மேற்பட்ட கருதோன்றுதல். (உயி)

polyester - பாலியெஸ்டர்: ஒரு தொகுப்பிழை, டெரிலின், டெக்ரான். (வேதி)

polymer - பல்படி: எளிய மூலக்கூறுகளின் நீள்வரிசை கொண்ட சேர்மம், ஒரே செயல்நிலை வாய்பாடு. ஆனால் அதிக மூலக்கூறு எடை கொண்டது. (வேதி)

polymerase chain reaction - பாலிமரேஸ் தொடர்வினை: இஃது ஓர் உயரிய வேதிநுட்பம். இதனைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர் வேதி இயலார் கேரி முல்லிஸ். இதற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதி இவருக்குக் கிடைத்தது. மரபு வழி நோய்களிலுள்ள குறைபாடு கொண்ட மரபணுக்களை இனங்காண இந்நுட்பம் பெரிதும் பயன்படும். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது. தவிர, மருத்துவ ஆய்விலும் நோய் கண்டறிதலிலும் தடய அறிவியலிலும் பெரிதும் பயன்படக் கூடியது. (மரு)

polymerisation - பல்படியாக்கல்: ஒரு சேர்மத்தின் பலமூலக் கூறுகள் இணைந்து உருவாகும் ஒர பெரிய மூலக்கூறு பல்படி இவ்வாறு இணையும் வினை பல்படியாக்கலாகும். எ-டு பாலி எத்திலீன். இதில் ஏறத்தாழ 1200 கார்பன் அணுக்கள் சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. (வேதி)

polymorphism - பல்லுருத்தோற்றம்: ஒரேவகை உயிரில் வேறுபட்ட வடிவங்கள் இருத்தல், இந்திலை மரபுக்காரணிகளாலோ சூழ்நிலைக் காரணிகளாலோ ஏற்படலாம். (உயி)

polyp - குழாய் உடலி: குழாவி. வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. இதில் குழாய் வடிவத்தில் உடல் இருக்கும். ஒரு முனையில் உணர்விரல்களால் வாய் சூழப்பட்டிருக்கும். மற்றொரு முனை நிலையான பரப்பில் இணைந்திருக்கும் உறுப்பு முலம் இனப்பெருக்கம். பா.

polypetalous - அல்லி இணை யாத :ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்திருக்கும். பல அல்லிகளைக் கொண்ட அல்லிவட்டம். ஒ. gamopetalous. (உயி)

polyphyodont - பன்மப்பல்லமைவு : இதில் வாழ்நாள் முழுதும் பற்கள் மாற்றீடு செய்யப்படும். சிதையும் பொழுது அதற்குப் பதில் வேறு ஒன்று உண்டாகும் தவளை, பல்லி (உயி)

polysaccharides - பன்மைச் சர்க்கரைடு: ஒற்றைச் சர்க்கரை யின் பல மூலக்கூறுகளை ஒடுக்கப் பெறப்படும் இயற்கை மாப்பொருள்கள். (உயி)

pome-பூத்திரள்கனி: குல் இணை கீழ்ச் சூல்பையிலிருந்து உண்டா வது. எ.டு. ஆப்பிள். பா. fruit. (உயி)

pomiculture - கனிவளர்ப்பு: பழங்களைகளை வளர்க்குங் கலை. (உயி)

pomology- கனி வளர்ப்பியல்: கனி வளர்ப்பதை ஆராயுந்துறை. (உயி)

pons varolii -மூளைப்பாலம்: அடிப்பக்கமாக அமைந்துள்ள மூளையின் பகுதி. பெருமூளை சிறுமூளையையும இணைப்பது. பா. படம் (உயி)

population - 1. மக்கள்தொகை : ஒரு நாட்டிலுள்ள மக்கள் எண்ணிக்கை 2. உயிரித்தொகை: உயிர்களின் தொகுதி. (உயி)

population dynamics - மக்கள் தொகை இயக்கவியல்: விலங்கு மற்றும் தாவரத் தொகைகள் பற்றித் தனி உயிரிகள் எண்ணிக்கையில் தோன்றும் ஏற்ற இறக்கங்கள், அவற்றைக் கட்டுப்படுத்துங் காரணிகள் ஆகியவை பற்றி ஆராயுந்துறை (உயி)

population explosion - மக்கள்தொகை மீப்பெருக்கம்: மக்கள் தொகை வரம்பு மீறிப் பெருகு வதாகும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தினால்தான் இந்தியா முன்னேற முடியும். மருத்துவ நிலையில் குடும்பநலத்திட்டம் தீவிரமாகச் செயற்படுத்தப்படுகிறது. கல்வி நிலையில் மக்கள் தொகைக் கல்வி பரவுவதற்கு வழிவகை செய்யப்பட்டு அது மறைமுகமாகக் கல்வித்திட்டத்திலும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. (உயி)

population genetics - மக்கள் தொகை மரபியல்: ஒரே சிறப்பினத்தைச் சார்ந்த உயிரிகள் தொகுதியில் ஏற்படும் மரபுரிமை மாறுபட்டின் பரவலை ஆராயுத் துறை. உயிரியலார் ஆல்டேன் இதில் வல்லுநர். (உயி)

porcelain - பீங்கான்: கடின வெண்ணிறப் பொருள். சீனக் களிமண், பெல்ஸ்பார், சிலிகா ஆகியவை சேர்ந்த கலவை சுடப்படுவதால் கிடைப்பது பீங்கான். மண் பாண்டம் செய் வதிலும் வெப்பத்தடைப் பொருள் செய்வதிலும் பயன்படுவது. வேதி)

pore - துளை: வியர்வைச் சுரப்பி யின் மிக நுண்ணிய துளை (உயி) por poripera - துளை (புழை, புரை) உடலிகள்: இடம்பெயரா நீர் வாழ்விகள், 5,000 வகைகள். ஒற்றை உடற்குழிகள் துளைகள் உண்டு. உப்புநீரிலேயே காணப்படும். கடற்பஞ்சுகள். (உயி)

porpoise - பார்பாய்ஸ்: டால்பின் குடும்பத்தைச் சேர்ந்தது. நீளம் 122.4 மீ உடல் வரித்தடை உள்ளது. குறுகிய மூஞ்சி. ஊன் உண்பது. கூட்டமாக வாழ்வது. எண்ணெயும் தோலும் அளிப்பது. (உயி)

portal vein - வாயில் சிரை: குறிப்பிட்ட இரு பகுதிகளின் தந்துகி வலைப்பின்னலை இணைக்கும் சிரை. பா. hepatic portal system. (உயி)

positive lens - நேர்க்குறி வில்லை: நேர்க்குறி குவியத்தொலைவு உள்ள வில்லை அல்லது எதிர்க் குறித்திறனுள்ள குவிவில்லை. (இய)

positive rays - நேர்க்குறிக்கதிர்கள்: நேர்மின்னோட்டமுள்ள அயனி ஒட்டம். அரிய வளியில் மின்னிறக்கத்தினால் பெறப்படுவது. (இய)

positron - நேர்மின்னேற்றி: (e+). மின்னணுவின் எதிர்த்துகள். அதைப் போன்ற் பொருண்மையும் சுழற்சியுங் கொண்டது. ஆனால் நேர்மின்னேற்றம் கொண்டது. நேர்மின்னனுக்கள் விண்கதிர் பொழிவுகளில் காணப்படுகின்றன. ஒருவகைப் பீட்டா சிதைவினாலும் இவை உண்டாக்கப்படுகின்றன. ஒரு மின்னணுவை எதிர்நோக்கும் பொழுது இவை அழிக்கப்படுகின்றன. நேரியன் என்றுங் கூறலாம். (வேதி)

postcaval vein, inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் கீழ்ப் பகுதியிலிருந்து குருதியைத் திரட்டி இதயத்தின் வலது அறையில் திறக்கும் பெரிய சிரை. (உயி)

postoffice box - அஞ்சல்நிலையப் பெட்டி: மின்தடைகளைக் கொண்டிருக்கும் பெட்டி. இவற்றை மின்சுற்றொடு இணைக் கலாம். மின்னழுத்தமானியாக அல்லது வீட்ஸ்டோன் மின் சுற்றியாகப் பயன்படுதல். (இய)

posterior - முன்: 1. விலங்கின் கடைப்பகுதி. மனிதனின் முதுகுப் புறம். 2. தண்டுப்பூ நோக்கிய. (உயி)

potash - பொட்டாஷ்: பொட்டாசியம் கூட்டுப் பொருள்களில் ஒன்று. எ-டு பொட்டாசியம் அய்டிராக்சைடு, கார்பனேட். (வேதி)

potassium - பொட்டாசியம்: K. கார உலோகம், வெண்ணிறம், மென்மையானது. பொட்டாசியம் அய்டிராக்சைடை நீராற் பகுக்கக் கிடைக்கும். உயிர்வாழ இன்றியமையாதது. எல்லா உயிர்ப் பொருள்களிலும் உள்ளது. உலோகக் கலவை செய்யவும் ஒளி மின்கலங்கள் செய்யவும் பயன் படுவது. இதன் உப்புகள் உரங்கள். (வேதி)

potassium bromide - பொட்டாசியம் புரோமைடு: KBr. புரோமின் சேர்ந்த சூடான எரி சோடாக் கரைசலை நிறைவுற்ற தாக்கிப் பெறும் வெண்ணிறப் படிகம். கரைசலை உலர்த்தி மீண்டும் வீட்டுக்கரியுடன் சூடாக்கப் புரோமேட்டு புரோமைடாக ஒடுங்கும். வலித்தணிப்பி. புகைப்படக்கலையில் பயன்படுவது. (வேதி)

potassium chlorate - பொட்டாசியம் குளோரேட்டு: KCIO3. நேர்த்தியான வெண்ணிறக்குச்சிகள். சூடான அடர் பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசல் வழியே குளோரின் வளியைச் செலுத்தக் கிடைக்கும். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுவது. (வேதி)

potassium cyanide - பொட்டாசியம் சயனைடு: KCN. வெண்ணிறப் படிகம். கொடியநஞ்சு. அதிகம் நீர் கொள்ளக்கூடியது. நீரில் கரைவது. மின்முலாம் பூசவும் பொன்னையும் வெள்ளி யையும் பிரிக்கவும் பயன்படுவது. (வேதி)

potassium di (bi) chromate - இரு குரோமேட்: K2Cr2O7. கிச்சிலிச் சிவப்புப் படிகம். ஆக்சிஜன் ஏற்றி. தவிரச் சாயத் தொழில் உற்பத்தியிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

potassium hydroxide - பொட்டாசியம் அய்டிராக்சைடு:KOH எரிபொட்டாஷ், நீர், கரி ஈராக்சைடு ஈர்க்கும். வெண்ணிறப் பொருள். பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற் பகுக்கக் கிடைக்கும். மென் குளியல் சவர்க்காரங்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

potassium iodide - பொட்டாசியம் அயோடைடு: Kl. நீரிலும் ஆல்ககாலிலும் கரையக் கூடிய வெண்ணிறப் படிகம். சூடானதும் செறிவு மிக்கதுமான எரி பொட்டாஷ் கரைசலுடன் அயோடினைச் சேர்க்கப் பொட்டாசியம் அயோடேட்டு கிடைக்கும். இதை உலர்த்தி வீட்டுக் கரியுடன் சூடாக்க அயோடேட்டு அயோடைடாகக் குறையும். புகைப்படக்கலையில் பயன்படுவது. (வேதி)

potassium permanganate - பொட்டாசியம் பர்மாங்கனேட்டு: KMNO4. கரிய ஊதாநிற ஊசி வடிவப் படிகம். நீரற்றது. உலோகப் பளபளப்புள்ளது. மாக்னேட்டை மின்பகுளி உயிர் வளி ஏற்றம் செய்யக் கிடைக்கும் தொற்று நீக்கி, உயிர்வளி ஏற்றி. கரிம வேதிஇயலில் பேயர் வினையாக்கி, வேதி)

potassium nitrate - பொட்டாசியம் நைட்ரேட்டு: KNO3. வெடியுப்பு. ஊசி போன்ற படிகம். வெண்ணிறம். நீர் கொள்ளாதது. சூடானதும் நிறைவுள்ளதுமான பொட்டாசியக் குளோரைடு கரைசலுடன் சோடியம் நைட்ரேட்டைச் சேர்க்கக் கிடைக்கும். வெடிகுழல்துள், நைட்ரிகக் காடி, வாணவேடிக்கைப் பொருள்கள் ஆகியவை செய்யப் பயன்படுவது. (உயி)

potassium sulphate - பொட்டாசியம் சல்பேட்: K2SO4 நிறமற்ற சாய்சதுரப் படிகங்கள். பொட்டாசியம் குளோரைடில் கந்தகக்காடியைச் சேர்க்கக் கிடைக்கம். படிகாரம், கடினக் கண்ணாடி, உரம் ஆகியவை உண்டாக்கப் பயன்படுவது. (வேதி)

potential energy - நிலையாற்றல்: தன்நிலை, வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு பொருளில் தேங்கி இருக்கம் ஆற்றல், எ-டு தொட்டிநீர் (இய)

potentiometer - மின்னழுத்தமானி: மின்னழுத்த வேறுபாட்டை அளக்குங் கருவி. (இய)

potometer - நீர் அளவுமானி: வெட்டிய தண்டு நீரில் வைக்கப்படும் பொழுது, அது ஏற்கும் நீரை அளக்குங்கருவி (உயி)

pouitry-கோழிவளர்த்தல்: கோழி முட்டைகளில் புரத ஊட்டம் அதிகம் உள்ளதால், இதைப் பெறக் கோழிகளை வளர்ப்பது நல்லது. ஆதாயமுள்ள தொழில். இத்தொழிலில் தனியார் பலர் ஈடுபட்டுப் பெரும் அளவில் ஆதாயத்துடன் நடத்தி வருகின்றனர். அனைவரும் உட்கொள்வது முட்டை (உயி)

powder metallurgy - தூள் உலோகவியல்: உயர்வெப்ப நிலைகளில் பல வடிவங்களில் தூள் உலோகங்கள் அல்லது கலவைகள் அமைக்கப்படுதல். (வேதி)

power - திறன்: 1. ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை. அதாவது, வேலை செய்யப்படும் விரைவு.

P = W/T

P. திறன் W. வேலை T. காலம். சார்பிலா அலகு எர்க்கு/வினாடி நில ஈர்ப்பு சார்ந்த அலகு செமீ கிராம், வினாடி. நடைமுறை அலகு வாட் (2) ஆற்றல். (இய)

power alcohol - ஆற்றல் ஆல்ககால்: ஆல்ககாலுடன் பெட்ரோலைச் சேர்த்துச் செய்யப்படும் கலவை. உந்துவண்டி எந்திரங்கள், ஏவுகணை எந்திரங்கள் ஆகியவற்றின் எரிபொருள். (இய)

power electronics - ஆற்றல் மின்னணுவியல்: திண்நிலைத் தொழில்நுட்ப இயல். தொகுதியாற்றல் வழங்குகையைத் திறமையாகக் கையாளப் பயன்படுவது. இதற்குப் பயன்படும் அரைகுறைக் கடத்திக் கருவியமைப்புகள் இரண்டாம் மின்னணுப் புரட்சியை உண்டாக்குபவை. power resources - ஆற்றல் வளங்கள்: நீர், நிலக்கரி, மின்சாரம் முதலியவை. இவை பெருந்தொழில் வளங்களாகும். (இய)

prawn - இறால்: சிறிய நண்டு வகை விலங்கு கடலில் வாழ்வது. நீளம் 5-2 செ.மீ. உண்ணக் கூடியது. ஈரினை உணரிகளும் ஐந்தினை கால்களும் உண்டு. இணையான வயிற்று ஒட்டுறுப்பு களும் உண்டு. இதன் வளர்ப்பை அரசு ஊக்குவிக்கிறது. (உயி)

prawn fishery - இறால் வளர்ப்பு: இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெறுவது. குறிப்பாகக் கேரளத்தில் அறுவடைக்குப் பின் நெல்வயல்களில் இறால் வளர்க்கும் முறை நவம்பர் முதல் ஏப்ரல் முடிய நன்கு நடைபெறுவது. ஏறத்தாழ 4,400 ஹெக்டேர் பரப்புள்ள வயல்கள் இதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் ஏறத்தாழ 500-2,000 கி.கி. இறால் கிடைக்கிறது. இறாலின் இளம் உயிர்கள் வளர்க்கப்பட்டுப் பிடிக்கப்படுகின்றன. ஜப்பானில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6,000 கி.கி. இறால் கிடைக்கிறது. இந்தியாவில் இவ்வளர்ப்பு வளர வேண்டிய ஒரு துறை. (உயி)

precaval vein, superior venacava மேற்பெருஞ்சிரை: இரட்டைச் சிரை. உடலிலிருந்து இதயத்திற்குக் குருதியைக்கொண்டு வருவது. பா.

precipitate - வீழ்படிவு: தயிர் போன்ற கரையாப்பொருள். வேதி வினையினால் ஒரு கரைசலில் உண்டாவது, எ-டு. நீர்த்த அய்டிரோகுளோரிகக் காடியில் உரிய வெள்ளி நைட்ரேட்டுக் கரைசலைச் சேர்க்க வெள்ளிக் குளோரைடு வீழ்படியும். வீழ்படிவு உண்டாகுஞ்செயல் வீழ்படிதல் ஆகும். (இய)

precipitation - வீழல்: இது சூழ்நிலைக் காரணிகளில் ஒன்று. எல்லா வாழிடங்களிலும் உயிரினங்களுக்கு நீர் தேவை. நிலையான ஊற்றுகள், ஓடைகள், குளங்கள் முதலிய நீர் நிலையுள்ள வாழிடங்களில் நீர் எப்பொழுதும் கிடைக்கும். மலை, பாலை முதலிய பகுதிகளில் வீழலால் மட்டுமே நீர் கிடைக்கும். இதில் மழை, பனி, உறைபனி முதலியவை இடம் பெறுகின்றன. இம்மூன்றில் பனி மட்டுமே அதிகம் பயன்படுவதாகும். அடுத்து மழையைக் கூறலாம். (இய)

predation - இரைகொல்லல்: சிங்கம் மானைக் கொன்று தின்னல். (உயி)

predators - இரைக்கொல்லிகள்: ஒரு விலங்கு மற்றொரு விலங்கை இரையாகக் கொள்ளுதல். புலி மானைக் கொல்லுதல் (உயி)

pregnancy - கருப்பேறு: விந்து முட்டையோடு சேர்வதால் ஏற்படும் கருவளர்நிலை. (உயி) prepubis - இடுப்பு முன்எலும்பு நீட்சி: ஊர்வனவற்றில் இடுப்பு முன் எலும்பிலுள்ள சிறிய குழாய் போன்ற உறுப்பு. (உயி)

preservatives - பாதுகாப்புப் பொருள்கள்: பொதுவாகச் சில பொருள்களைக் கெடாமல் பார்த்துக் கொள்ளச் சேர்க்கப்படும் பொருள்கள். இறந்த தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாக்கப் பார்மலின் பயன்படுவது. ஊறுகாயில் உப்பு, கடுகு, எண்ணெய் முதலியவையும் பாதுகாப்புப் பொருள்களே.

pressure - அழுத்தம்: அலகுப் பரப்பின் (1 செமீ x 1 செமீ) மீது ஏற்படும் இறுக்கம். P= hd. p-அழுத்தம் h-உயரம் d-அடர்த்தி. ஒ. thrust.

pressure cooker - அழுத்த சமைப்பி: காற்று வெளியழுத்த அடிப்படையில் உணவுப் பொருள்களை வேகவைக்கும் சமையல் கருவி. (உயி)

pressure gauge - அழுத்த அளவி: அழுத்தத்தை அளக்குங் கருவி. (இய)

prickle - கூர்முள்: ஒரு தாவரத்தின் மேற்பகுதியிலிருந்து உண்டாகும் பாதுகாப்புப் புற வளர்ச்சி. புறத்தோல் தோற்றமுடையது. சப்பாத்திமுள். (உயி)

primary cell - முதல்மின்கலம்: ஒல்டா மின்கலம். எ-டு தானியல் மின்கலம் முதலியவை. ஒ. secondary cell. (இய)

primary colours - முதல் நிறங்கள்: மூன்று நிறத்தொகுதி. உரிய வீதத்தில் கலக்க வெள்ளை உணர்ச்சியை அளிக்கும். சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை அம்மூன்று நிறங்கள். ஒ. secondary colours. (இய)

primary growth - முதல்நிலை வளர்ச்சி: முனை ஆக்குத்திசுவிலிருந்து உண்டாகும் வளர்ச்சி. இது தாவர உறுப்புகளை நீளவாட்டில் வளர்ப்பது. ஓ. (உயி)

primary tissue - முதல்நிலை திசு: ஆக்கு திசுவிலிருந்து உண்டாவது. (உயி)

primary winding - முதல்நிலைச் சுருள்சுற்று: ஒரு மின்மாற்றி அல்லது துண்டு சுருளிலுள்ள உட்பாட்டுப்பக்கச் சுற்று. (இய)

primates - முதல்நிலை உயிரிகள்: பாலூட்டிகள் வரிசையைச் சார்ந்தவை. மனிதன் உட்படக் குரங்குகள். மனிதக் குரங்குகள் ஆகியவை அடங்கிய வரிசை. (உயி)

priming - மீயெழுச்சி: கொதி கலவையிலிருந்து விரைவாகவும் வீறுடனும் நீர் கலந்து ஆவி வெளிவருதல், நீராவியுடன் நீர் கலந்து செல்வதால், நீராவியின் வெப்ப அளவு குறையும். நீரில் அதிக அளவு கரிமச் சேர்மங்கள், காரம், தொங்கல் மாசுகள் முதலியவை இருத்தல் இதற்குக் காரணமாகும். நீரைச் சீராகச் சூடாக்கியும் செதில் தோன்றுவதைத் தடுத்தும் இதைத் தவிர்க்கலாம். (இய) primordial - முதலில் தோன்றிய: (உயி)

primordium - முதல் தோன்றி: முதிராத் தாவரம். இது உயிரணு, திசு அல்லது உறுப்பாக வளர்வது. எ-டு இலை முன்தோன்றி, பின் இலையாக வளர்தல். (உயி)

principal axis - முதன்மை அச்சு: பா. concave lens.

principal focus - முதன்மை குவியம்: பா. concave lens. (இய)

principa! point - முதன்மைப் புள்ளி: ஒரு தடித்த வில்லையின் முதன்மை அச்சில் இருபுள்ளிகளில் ஒன்று. (இய)

principle of complementarity - நிரப்புதிறன் நெறிமுறை: டேனிஷ் இயற்பியலார் நீல்ஸ் போர் கருத்து. ஒளியன் ஒளியனே. அலை அலையே என்பது இதன் சாறு. இது ஐயப்பாட்டு நெறி முறையின் ஒருவகையே.

printed circuit - அச்சுப்பதிவு சுற்று: இது ஒரு கம்பி மின்சுற்று. மெல்லிய ஒரு செப்புத்தகட்டில் இச்சுற்றின் வடிவம் பதிவு செய்யப்பெற்று ஒரு பலகையில் பொருத்தப்பட்டிருக்கும். பா. integrated circuit. (இய)

printout - அச்சுப்பாடு: இது அச்சியற்றியினால் தாளில அச்சிடப்படுவது. நிகழ்நிரல் பட்டியல்கள், படம் முதலியவை. (இய)

prism - முப்பட்டகம்: முப்பட்டைக் கண்ணாடி முக்கோண ஆடிகளைக் கொண்டது. ஒளிக்க திரை விலகலடையச் செய்யவும் வெள்ளொளியை பார்வை நிற மாலையாகச் சிதறலடையச் செய்யவும் தலைகீழ் உருவத்தை நேராக்கவும் பயன்படுவது. (இய)

probability - நிகழ்தகவு: ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு. (இய)

problem - சிக்கல்: எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது சிறப்பிடம் பெறுவது. பா. scientific method. (இய)

proboscis - 1. குழல்வாய்: புறத்தே உள்ள வாயுறுப்பு. நீண்ட சுருண் டுள்ளது. எ-டு வண்ணத்துப் பூச்சியில் தேனை உறிஞ்சும் உறுப்பு. 2. யானையின் துதிக்கை. (உயி)

procambium - முன் அடுக்கியம்: வளர்திசு. வேர், தண்டு ஆகிய வற்றின் முனை வளர்திசுக்களால் தோற்றுவிக்கப்படுவது. (உயி)

procedure - செய்முறை: 1. ஒரு நிகழ்நிரலில் வழக்கமாக நடைபெறுஞ் செயல். இது கணிப்பொறிக்குக் குறிப்பிட்ட வேலை செய்யுமாறு கட்டளைகளைப் பிறப்பிக்க வல்லது. 2. ஆய்வு செய்வதற்குரிய வழிமுறை (இய) process - செயல்முறை: கணிப்பொறியைப் பயன்படுத்திக் கட்டளைத் தொகுதி வழியாகத் தகவல்களைப் பகுத்தல். 2. ஒரு பொருளைத் தயாரிக்கும் முறை: ஈயஅறைமுறை. 2. எலும்பு முள்: எலும்புநீட்சி. ஒ. eminence. (ப.து)

processor - செயல்முறையாக்கி: செயல்முறைப்படுத்தி. மைய முறையாக்கு அலகு. எ-டு நுண் செயல் முறையாக்கி. (இய)

procumbent stem - நிலம்படர் தண்டு: வெட்டுக்காயப்பூண்டு. (உயி)

proctodaеum - பிற்குடல்: பின் புறத்தேயுள்ள குடல்.

product - விளைபொருள்: வேதி வினையில் உண்டாகும் புதிய கூட்டுப்பொருள். மக்னீசியத்தைக் காற்றில் எரிக்க மக்னீசியம் ஆக்சைடு உண்டாகும். (வேதி)

profundal - நீரடி: ஆழ்நீர்ப்பகுதி. ஓர் ஏரியில் 10 மீட்டர் ஆழத்திற்குக் கீழுள்ள பகுதி. இங்கு ஒளி இல்லை. இங்குள்ள உயிரிகள் வேற்றுாட்ட வாழ்விகளே. எ-டு, பூஞ்சை, மெல்லுடலிகள், பூச்சிகளின் வேற்றிளரிகள். இவை குறைந்த உயிர்வளியைக் கொண்டே வாழ்க்கை நடத்துபவை. தவிர, வெப்பநிலையும் பிஎச் மதிப்பும் குறைவாகவே இருக்கும். ஒ. littoral. (இய)

programme - l. நிகழ்ச்சிநிரல்: அழைப்பிதழில் உள்ளது. 2. நிகழ்நிரல்: குறிப்பிட்ட மொழியில் எழுதப்பெறுங் தொகுதி. கணிப்பொறி புரிந்து கொள்ளும் அளவுக்கு அதனைப் பெயர்ப்பு செய்யலாம். கணிப்பொறியின் மென்னியம். (ப.து)

programmer-நிகழ்நிரலர்: கணிப் பொறிக்கு வேண்டிய நிகழ்நிரல்களை உருவாக்குபவர். 2 நிகழ்ச்சி அமைப்பாளர்: வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் பரப்புவதற்குரிய நிகழ்ச்சிகளை நிரல்படுத்துபவர். (இய)

progressive waves - முன்னேறு அலைகள்: இவை பரவும் பொழுது துகளில் உண்டாகும் அதிர்வியக்கம் இதர துகள்களுக்கு ஊடகத்தின் வழியே பரவுகிறது. அலை இயக்கம் அதிர்வு மூலத்திற்கு எந்நிலையிலும் திரும்புவதில்லை. அது தொடர்ந்து ஒரே திசையில் ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்குப் பரவுகிறது. அடுத்தடுத்த துகள்கள் தொடர்ந்து அதிர்வதால், அது பரவ முடிகிறது. எ-டு. நீரலைகள் (இய)

projectile - வீழ்பொருள்: எறியப்படும் அல்லது வீழ்த்தப்படும் பொருள். வீழி. பா. balistics. (இய)

projection - 1. வெளிப்பாடு: நம் விருப்பங்களும் உளவெழுச்சிச் சிக்கல்களும் பிறரிடம் இருப்பனவாக எண்ணிச் செயற்படல். தகைக்கேட்டின் ஒரு வகை விளைவு. 2. வீழல். (ப.து) prokaryotes - முன்நல்லுயிரிகள்: படலஞ்சூழா உயிரிகள். குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்). நீலப்பசும் பாசி முதலிய ஓரணு உயிரிகள் ஒற்றை நிறப்புரி உள்ளவை, இவற்றின் உறுப்பிகளில் (ஆர்கனேல்ஸ்) உட்கருப்படலம் (நியூக்ளியர் மெம்பரின்) இல்லை. இதுவே இவற்றிற்குப் பெயரக்காரணமாய் அமைந்தது. ஒ. eukaryote. (உயி)

promoter - உயர்த்தி: தானே வலுக்குறை ஊக்கியாக உள்ள பொருள். ஆனால் ஏனைய வினையூக்கியின் ஊக்கத்தைப் பெருமளவுக்கு உயர்த்துவது. பா. catalyst. accelerator. (வேதி)

proof-1 மெய்ப்பு: மெய்ப்பித்தல், ஆய்வினால் அல்லது சான்றினால் உறுதிசெய்தல், 2. மயக்கந்தரும் குடியங்களில் எத்தனால் அடக்கத்தின் அளவு. 3. அச்சுப்படி அச்சுப்பிழை திருத்துவதிலுள்ள படி (ப.து.)

prophase - முதனிலை: இழைப் பிரிவின் முதல் நிலை. கதிர் நடுக்கோட்டில் நிறப்புரிகள் அமையும் வரை உள்ள நிலை. பா. mitosis. (உயி)

prop (pillar) root - தூண்வேர்: ஒரு வேற்றிடவேர். மண்ணும் தண்டும் சேருமிடத்தில் உள்ளது. தண்டுக்குக் கூடுதல் தாங்குதல் அளிப்பது. எ-டு ஆலவிழுது. (உயி)

propellants - முன் இயக்கு பொருள்கள்: இயக்கிகள், ஏவுகணை எந்திரம் இயங்கத் தேவையான வேதிப்பொருள்கள். இவை எரிபொருள், எரிய வைக்கும் பொருள் என இருபொருள்களானவை. இவை கெட்டி நிலையிலோ நீர்மநிலையிலோ இருக்கும். அப்டிரசின், அனிலின், பெட்ரோல் முதலியவை உயர் வகை எரிபொருள்கள். உயர் வகை எரிய வைக்கும் பொருள்கள் உயிர்வளி, நைட்ரிகக்காடி முதலியவை ஆகும். இயக்கி = எரிபொருள் + எரிய வைக்கும் பொருள் (உயிர்வளி அல்லது உயிர்வளியுள்ள கூட்டுப்பொருள். (வேதி)

protective coatings - காப்புப் பூச்சுகள்: அரிமானத்தைத் தடுப்பவை. வகை: 1. கனிமப் புறப்பரப்புப் பூச்சு 2. கரிமப் புறப்பரப்புப் பூச்சு. உலோகத்திற்கு அழகூட்டவும் மெருகேற்றவும் பயன்படுதல். (வேதி)

protective resemblance - பாதுகாப்பு ஒற்றுமை: சில விலங்குகள் தங்கள் பகைவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சூழ்நிலையை ஒத்த நிறத்தைப் பெற்றிருத்தல். எ-டு இடையன் பூச்சி, குச்சிப்பூச்சி. (உயி)

protein - புரதம்: கரி, நீர்வளி, வெடிவளி, உயிர்வளி முதலிய தனிமங்களைக் கொண்ட கரிமச் சேர்மம். அமினோ காடிகளாலானது. முன்கணியத்தின் இன்றியமையாப் பகுதி உயிரை வளர்ப்பது. இறைச்சி, பருப்பு முதலிய உணவுப்பொருள்களில் உள்ளது. (உயி)

protein synthesis - புரதத் தொகுப்பு: பகுதி உறுப்பான அமினோகாடியிலிருந்து உயிரணுக்கள் புரதம் உருவாக்கும் முறை. இதனைக் கட்டுப்படுத்துவது டி.என்.ஏ (உயி)

prothallus - முதல் தண்டகம்: கருப்பயிர். பெரணியில் இது சிதலினால் உண்டாக்கப்படுவது. இதயவடிவத்திலும் பசுமையாகவும் மெலிந்தும் தட்டையாகவும் இருக்கும். நிலைப்பளிக்க வேரிகள் உண்டு. ஆணியம், பெண்ணியம் என்னும் இரு வகைப் பால் இனப்பெருக்க உறுப்புகள் உண்டு. கருப்பயிர்த் தலைமுறையை உண்டாக்குவது. பா. gametophyte. (உயி)

protochordates - முதுகுத் முன்னோடி தண்டுடையன: கீழின முதுகுத்தண்டு உயிரிகளின் தொகுதிப்பெயர். இவற்றில் அடங்குவன தலைமுதுகுத்தண்டு உயிரிகள், தொடக்க நிலை முதுகுத்தண்டு உயிரிகள், வால் முதுகுத்தண்டு உயிரிகள். (உயி)

proton - முன்னணு: நேர்மின்னேற்ற நிலைத்த அடிப்படைத்துகள். எல்லா அணுக்களின் உட்கருவின் ஆக்கப்பகுதி. இதன் பொரு i ûU 1.67 x 10:-27 கி.கி. மின்னேற்றம் 16 x 10-19 கூலும், நேர்ஏற்ற அணு என்றுங்கூறலாம். (வேதி)

proton number - முன்னணு எண்: அணு எண். உட்கருவிலுள்ள முன்னணுக்களின் எண்ணிக்கை. (வேதி)

protonema - முன்னிழை: கிளைத்த இழை. மாசிச்சிதல் முளைத்து உண்டாக்குவது. இந்த அரும்புகளிலிருந்து மாசித் தாவரம் தோன்றுவது. ஒ. protalus. (உயி)

protoplasm - முன்கணியம்: உயிரணுவின் இழுதுபோன்ற பொருள். உயிரியின் இயற்பியல் அடிப்படை கண்ணறைக்கணியம் (சைட்டோ பிளாசம்), உட்கரு, கண்ணறைச் சவர், கண்ணறைப் படலம் முதலிய பகுதிகளைக் கொண்டது. பா. cell. (உயி)

protoplast - முன்கணிகம்: கண்ணறைச்சுவர் நீங்கிய தாவரக் கண்ணறையின் முதல் கணியம். (உயி)

protozoa - முதல்தோன்றிகள்: ஓரணு கொண்ட நுண்ணிய கண்ணறையே (செல்லே) எல்லா வேலைகளையும் செய்கிறது. முன்தோன்றிகள் என்றுங்கூறலாம். எ-டு அமீபா, பரமேசியம், பிளாஸ்மோடியம். (உயி)

peseudopodium - போலிக்கால்: அமீபா முதலிய ஒரணு உயிரிகள் தங்கள் உணவைப் பற்ற அல்லது நகரத் தற்காலிகமாக உண்டாக்கும் முதல்கணிய (புரோட்டோ பிளாச) நீட்சிகள். (உயி) PSLV, polar satellite launch vehicle - பிஎஸ்எல்வி: போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெகிகிள். முனை வெளி நிலா ஏவுகலம், முநிஏக: இந்தியா மூன்று கலங் களை ஏவியது. 1993இல் பிஎஸ் எல்வி டி ஏவப்பட்டது. தோல்வி 1994 அக்டோபர் 1இல் பிஎஸ் எல்வி டி2 ஐஆர்எஸ்2யைச் சுற்று வழியில் விட்டது. 1996 மார்ச் 21இல் பிஎஸ்எல்வி ஐ ஆர்எஸ்3 ஐ சுற்று வழியில் விட்டது. இந்த ஏவுகணை அமைக்கச் செலவு 55 கோடி எரிபொருள் எடை 175 டன். ஏவுகணையின் எடை 253 டன். உயரம் 44.மீ. இது இந்தியா வின் 1ஆவது ஏவுகலம் (இய)

psychology - உளவியல்: மனித நடத்தையை ஆராயுந்துறை. பல வகைப்படும்.

psychotherapy - உளப்பண்டுவம்: உளநோய்களைப் போக்கும் முறை. இந்நோய்கள் உளக் கோளாறுகளால் ஏற்படுபவை. அறிதுயில், கருத்தேற்றம், மருந்து முதலியவை உளநோய்களைப் போக்கப் பயன்படுபவை. (மரு)

pteridology - பெரணிஇயல்: பெரணிகளை ஆராயுந்துறை. (உயி)

pteridophyta - பெரணி: இவற்றிற்குக் குறிப்பிடக்கூடிய இலை, தண்டு, வேர் என்னும் உறுப்பு வேறுபாடு உண்டு. இவ்வுறுப்புகளில் மரத்திசுவும் பட்டைத் திசுவும் இருக்கும். இலைகள் ஒளிச்சேர்க்தை நடத்துபவை. இலைகளின் அடியில் சிதல்கள் இருக்கும். இவற்றின் வாழ்க்கைச் சுற்றில் தலைமுறை மாற்றம் உண்டு. (உயி)

Ptolemaic astronomy - தாலமி வானவியல்: கிமு மூன்றாம் நூற்றாண்டில் பெர்காவைச் சார்ந்த அப்போலினியஸ் முதன் முதலாக முன்மொழிந்து, அலெக்சாண்டிரியாவைச் சார்ந்த கிளாடியஸ் தாலமியால் (100-178 கிபி) நிறைவு செய்யப்பெற்ற வானதுல்துறை. விண்ணகத்தின் மையம் புவி என்பது இதன் மையக் கருத்து. இது தவறு. கதிரவன் மையம் என்பதே உண்மையான கருத்து. (வாணி)

ptyxis - இளநிலை மடிவு: பா.vernation (உயி)

puberty - பருவமுதிர்ச்சி: பால் முதிர்ச்சியடைதல்.

pubes - முதிர்ச்சி மயிர்கள்: முதிர்ச்சியின் பொழுது பிறப்புறுப்புகளைச் சுற்றி மயிர்கள் முளைத்தல். (உயி)

pubis - இடுப்பு முன்னெலும்பு: மனிதனிடத்து இடுப்பெலும்பின் பகுதி. இடுப்பெலும்பின் முன் வளைவை உண்டாக்குவது. (உயி)

pulley - கப்பி: ஒர் அச்சில் தங்கு தடையின்றிச் சுழலக்கூடிய ஒர் உருளை கப்பியாகும். இது நிலைக்கப்பி, இயங்கு கப்பி என இருவகைப்படும். முன்னதில் எந்திர இலாபம் - 1. பின்னதில், எந்திர இலாபம் - 2. கப்பிகள் சேர்ந்தது கப்பித்தொகுதி ஆகும். இதுவும் நிலைக்கப்பித் தொகுதி, இயங்குகப்பித் தொகுதி என இருவகைப்படும். பொதுவாக, இவை நீர் இறைக்கவும் பளு தூக்கவும் பயன்படுபவை. (இய)

pulley and belt-கப்பியும் பட்டையும்: ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்குத் திருப்பு விசையினைச் செலுத்தும் எந்திர ஏற்பாடு. (இய)

pulmonary artery-நுரையீரல் தமனி: உயிர்வளியற்ற குருதியை இதய வலது கீழறையிலிருந்து நுரையீரலுக்கு எடுத்துச் செல்லுங் குழாய். (உயி)

pulmonary vein-நுரையீரல் சிரை: இரட்டைச்சிரை, உயிர் வளிக்குருதியை நுரையீரலிலிருந்து இடது மேலறைக்கு எடுத்துச் செல்வது. (உயி)

pulp cavity-பற்கூழ்க்குழி: பல்லின் மைய உள்ளகம். தந்தினியால் சூழப்பட்டது. இதில் இழுதுபோன்ற இணைப்புத்திசு உண்டு. இத்திசுவில் குருதிக் குழாய்கள், கொழுநீர்க்குழாய்கள், நரம்புகள் ஆகியவை அமைந்திருக்கும். உயி)

pulsars-துடிமீன்கள்: துடிக்கும் விண்மீன்கள். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்வை. 1967இலிருந்து ஆராயப்படுபவை. பல்சேட்டிங் ஸ்டார் என்பதன் சுருக்கம். (வாணி)

pulse-1 நாடித்துடிப்பு: இதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு. இதை மணிக்கட்டிலும் கணைக்காலிலும் உணரலாம். நோய் நிலைமை அறிய மருத்து வருக்கு முலமாக உள்ளது. இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 தடவைகள் துடிக்கிறது. எனவே, நாடித்துடிப்பும் ஒரு நிமிடத்து க்கு 72. 2. துடிப்பு: ஒரு மின் சுற்றிலுள்ள மின்னழுத்த அல் லது மினனோட்ட மாறுபாடு: குறுகிய நேரமே இருப்பது. இது மின்காந்த அலையிலும் இருக்கலாம். எ-டு. இலேசர் ஒளி. இத்துடிப்புக்குத் துல்லியமாக வரையறுக்கப்பட்ட வீச்சு உண்டு. (பது)

pulses-பருப்பு வகைகள்: உணவாகப் பயன்படுபவை. புரதச் சத்து மிக்கவை. பருப்பு விதைத் தாவரங்களிலிருந்து கிடைப்பவை. (உயி)

pulvinus-அதைப்பு: இலைக் காம்பிற்குக் கீழுள்ள மெத்தை போன்ற உப்பல். (உயி)

pumice-நுரைக்கல் பாறை: துளையுள்ள எரிமலைப்பாறை. (பு:அறி)

pump-எக்கி: ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீர்மம் செல்ல ஆற்றல் அளிக்கும கருவியமைப்பு. எ-டு மையவிலகு இறைக்கும் குழாய். (இய)

pupa-கூட்டுப்புழு: பூச்சிகளின் வாழ்க்கைச்சுற்றில் மூன்றாம் நிலை. இது ஓய்வு நிலைப் பருவம். உணவு உண்பதை நிறுத்தித் தகுந்த இடத்தைத் தேடிக் கிளையில் ஒட்டிக்கொண்டு கம்பளிப்புழு தன்னைச்சுற்றி ஒரு கூடுகட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்ட பின் ஐந்தாவது தடவையாகத் தோலுரிக்கும். உருமாற்றம் கொண்டபின் ஐந்தாவது தடவையாகத் தோலுரித்து உருமாற்றம் நடைபெறுவதால், இப்பருவம் சிறந்தது. எ-டு வண்ணத்துப்பூச்சி, பா. caterpliar (உயி)

pupil - கண்மணி, பாவை: கண்ணின் கருவிழிப்படலத்திலுள்ள துளை, ஒளி உட்செல்வதைக் கட்டப்படுத்துவது. (உயி)

pure line - தூயகால்வழி: ஒன்றுக்கு மற்றொன்று ஒத்தமையும் ஓரகப் பாலணுத் தனி உயிர்கள் தோன்றுதல். இதனால் தூயகால்வழியே தொடர்ந்து உண்டாகும். (உயி)

purification - தூய்மையாக்கல்: தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மைப்படுத் தும் முறை.

purine -பியூரைன். C5H4N4 வெண்ணிறப்படிகம். கரிம நைட்ரஜன் காரம். உயிர்வளியுடன் சேர்ந்து சிறுநீரக்காடியை உண்டாக்கும். அடினைன், குவானைன் முதலிய வேதிப்பொருள்கள் உண்டாகக் கருவாக இருப்பது. (உயி)

pus - சீழ்: மடிந்த வெள்ளணுக்களே சீழ் உடலில் ஏற்படும் புண் அல்லது வெட்டுக்காயத்தில் தீங்குதரும் குச்சியங்கள் நுழையும் பொழுது அவற்றுடன் எதிர்த்துப் போராடி வெள்ளணுக்கள் மடிகின்றன.(உயி)

putrefaction -அழுகல்:புரதப்பொருள் குச்சியங்களினால் சிதைதல், அம்மோனியாவை விடத் தீயமணமுள்ள அமைன்கள் உண்டாகின்றன. (உயி)

PVC, polyvinyl chloride - பிவிசி, பாலி வினைல் குளோரைடு: பிளாஸ்டிக்கு வகைகளில் இது மிகப்பயனுள்ளது. ஆல்ககால், குளோரின் ஆகியவற்றிலிருந்து இது செய்யப்படுகிறது. குழாய்கள், கைப்பைகள், விளையாட்டுப் பொருள்கள். காலணிகள் முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

pygostyle-வால் எலும்பு: பறவை வாலின் எலும்பு (உயி)

pykmometer -அடர்த்திமானி: நீர்மத்தின் பெருக்கெண்ணையும் அடர்த்தியையும் கண்டறியுங் கருவி.(இய)

pylorus-குடல்வாய்: இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது. (உயி)

pyorrhoea பற்சீழ்வடிவு: பல்லீறுகளும் குழிகளும் நோய்க்குள்ளாதல். இதனால் பல்லில் சீழ்வடிந்து பல் தளர்ச்சியுறும். சீழ்நாற்றம் அடித்தல் அருவருக்கத்தக்கதாக இருக்கும். (உயி)

pyramid - கூம்பகம்: பல பக்கங்களைக் கொண்ட அடியுடன் கூடிய திண்மம். (இய)

pyrenocarp - சிதலுறை: பூஞ்சையின் குடுவை வடிவக் கனியுறுப்பு (புருட் பாடி). (உயி)

pyrenoids - கல்லிகள்: சில பாசிகளின் பசுங்கணிகங்களில் காணப்படும் அதிக மறிப்பாற்றல் கொண்ட சிறிய கோளவடிவப் பொருள்கள். ஸ்டார்ச் சேமிப்பு. (உயி)

pyridine-பைரிடின்: C5H8N,அருவருக்கத்தக்க மணமுள்ள நிறமற்ற நீர்மம். நிலக்கரித்தார், எலும் பெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது. கரைப்பான், வினையூக்கி, உப்பீனி ஏற்றி (ஹேலஜன் கேரியர்ஸ்) (வேதி)

pyridoxine -பைரிடாக்சின்: வைட்டமின் பி. பி தொகுதி வைட்டமின்களில் ஒன்று. (உயி)

pyrimidine - பைரிடிமிடின்: நைட்ரஜன் ஊட்டமுள்ள எளிய கரிம மூலக்கூறு. இது வளைய அமைப்புடையது. இவ்வமைப்பு இதன் மூலங்களால் சைட்டோசின், தைமின், யூராசில் ஆகியவற்றிலும் தயமினிலும் அடங்கி யுள்ளது. இம்மூலங்கள் உட்கருக்காடிகளின் இயைபுறுப்புகள். (வேதி)

pyrite - பைரைட்: இரும்புத்தாது.இரும்புச்சல்பைடு (வேதி)

pyro electric effect - தழல்மின் விளைவு: சில படிகங்களைச் சமமற்ற நிலையில் சூடாக்கும் பொழுது அல்லது குளிர்விக்கும் பொழுது மின்னேற்றங்களை உண்டாக்குதல் (இய)

pyrognostic test - செந்தழல் ஆய்வு: கனிமங்களைத் தீச்சுடர் மூலம் ஆய்ந்து பார்த்தல். (வேதி)

pyrolysis - செந்தழல் பகுப்பு: மீ உயர்வெப்ப நிலைகளுக்கு உட்படுத்தி, வேதிப்பொருள்களைச் சிதைத்தல். (வேதி)

pyrometer - செந்தழல்மானி: கதிர்வீச்சின் விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்து மீ வெப்ப நிலைகளைப் பதிவு செய்யுங்கருவி. இக்கருவி கொண்டு அளத்தலுக்குச் செந்தழல் அளவியல் (பைரோமெட்ரி) என்று பெயர். (இய)

pyrometry = செந்தழல் அளவை: செந்தழல் மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர்வெப்ப நிலைகளை அளப்பது. (வேதி)

pyrophoric alloys -தீப்பொறி உலோகக் கலவைகள்: தேய்க்கும் பொழுது தீப்பொறிகளை உமிழ்பவை. (வேதி)

pyroscope - செந்தழல்நோக்கி: கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங்கருவி. (இய)

python - மலைப்பாம்பு: மிகப் பெரிய நச்சற்ற பாம்பு. தன் இரையைச் சுற்றி வளைத்து நெருக்கிக் கொன்று விழுங்கும்.விலங்கு காட்சியகங்களில் பார்வைப் பொருள். (உயி) pyxidium - மூடிபிரிகனி: குறுக்கு வட்டப்பிரிவினால் பொதிகை பிளந்து, அதன் சுற்றுறையின் மேல் பகுதி முடியாகும். இம்முடி பிரிந்து விழுகின்றபொழுது, விதைகள் வெளியேறும். எ-டு போர்டுலகா. (உயி).

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/P&oldid=1040363" இலிருந்து மீள்விக்கப்பட்டது