உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் அகராதி/Q

விக்கிமூலம் இலிருந்து

Q

quadrat-நாற்சதுரத் தொகுதி: ஒரு சதுரமீட்டர் அளவுள்ள தாவரத் தொகுதி. இதன் இயைபை இங்கொன்றும் அங்கொன்று மாக ஆராய, அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படுவது. (உயி)

quadrate-சதுரத் தொங்கெலும்பு: இரு நிலை வாழ்விகள், பறவைகள், ஊர்வன ஆகியவற்றில் காணப்படுவது. கீழ்த்தாடை தொங்க உதவுவது. (உயி)

Quadratojugal-நாற்சதுர எலும்பு: சில முதுகெலும்பிகளில் மேல் தாடையின் முன்எலும்பு (உயி)

quadrivalent - நான்கு இணைதிறன்கொண்ட: (வேதி)

quadruped -நாற்கால் விலங்கு: நான்கு கால்களைக் கொண்ட விலங்கு: மான், மாடு, தவளை, ஓணான் (உயி)

quadruple point -நானிலை: வெப்பம், அழுத்தம் ஆகியவற்றின் தனித்தநிலை. இதில் இருபகுதி தொகுதியின் நான்கு நிலைகள் சமநிலையில் இருக்கும்.(இய)

qualitative analysis-பண் (இயல்)பறிபகுப்பு: செயல்முறை வேதியியலின் பிரிவு. இதன் நோக்கம் ஒரு மாதிரியின் ஆக்கப்பகுதிகளை இனங்கண்டறிதல் அல்லது அடையாளங் கண்டறிதல். (உயி)

qualitative characters - இயல்பறி பண்புகள்: அகவய நிலையில் ஒரு கூட்டத்தின் பண்புகளை ஆராய்வது. (க.உள)

quantitative -அளவறி பகுப்பு: தனிமங்களைக் கண்டறிந்தபின், ஒரு கரிமப்பொருளின் மூலக்கூறு அமைப்பை அறியும் அடுத்த நிலை. ஒரு சேர்மத்தில் இருக்கும் பல தனிமங்களின் அளவை மதிப்பிடுதல் இதில் நடைபெறுகிறது. அதாவது எடை மூலம் பொருளின் சதவீத இயைபு அறியப்படுகிறது. இதுவும் செயல்முறை வேதியியலின் பிரிவே. (வேதி)

quantitative characters - அளவறி பண்புகள்: ஒரு சூழ்நிலைத் தொகுதியிலுள்ள கூட்டத்தின் இயல்புகளைப் புறவய நிலையில் ஆராய்வது, தொகை, செறிவு, அதிர்வெண், மிகுமை, ஓங்கல் ஆகியவை இந்த ஆராய்ச்சியில் ஆய்பொருள்களாகும். (வேதி)

quantum -குவாண்டம்,சிப்பம்: அளவு,துளி,ஒரு வினை நிகழ் முறையில் உறிஞ்சப்படும் அல்லது விடுவிக்கப்படும் ஆற்ற லின் திட்டமான அளவு. ஒளியன் (போட்டான்) மின்காந்தக் கதிர்வீச்சின் சிப்பம் ஆகும். (இய)

quantum electro dynamics - சிப்ப மின் இயக்கவியல்: சிப்ப விசை இயல் நோக்கில் மின்னேற்றப் பொருளோடு மின் காந்தக் கதிர்வீச்சு எவ்வாறு வினைப்படுகிறது என்பதையும் மின்காந்தக் கதிர்வீச்சுப் பண்பு களையும் ஆராயுந்துறை. (இய)

quantum jump -சிப்பத்தாவல்: ஒரு சிப்பநிலையிலிருந்து மற்றொரு சிப்பநிலைக்கு ஒரு தொகுதியில் ஏற்படும் மாற்றம். எ-டு அணு அல்லது மூலக்கூறு. (இய)

quantum mechanics -சிப்ப விசை இயல்: சிப்பக் கொள்கையிலிருந்து உருவான விசை இயல். மூலக்கூறுகள், அணுக்கள் ஆகியவற்றின் பண்புகளை விளக்கப் பயன்படுவது. (இய)

quantum number -சிப்ப எண்: சிப்பநிலை அளவுக்குட்பட்ட ஆற்றல்.கோண உந்தம் முதலியவற்றின் மதிப்பைக் குறிக்கும் எண். (இய) quantum state-சிப்ப நிலை: எண்களால் விளக்கமுறும் சிப்பத் தொகுதியின் நிலை. (இய)

quantum statistics-சிப்பப் புள்ளி இயல்: மரபுவழி வரிசை இயலை விடச் சிறப்பு வரிசை இயலின் விதிகளுக்குட்படும் துகள் தொகுதியினைப் புள்ளி இயல் நிலையில் ஆராயுந்துறை. (இய)

quantum theory -சிப்பக் கொள்கை: 1900இல் மாக்ஸ்பிளாங் (1858-1947) என்பார் வகுத்த கொள்கை, வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை இது விளக்குகிறது. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப் படுகிறது. ஒவ்வொரு சிப்பமும் hvக்கு சமமான ஆற்றலைக் கொண்டுள்ளது. h- பிளாங் மாறிலி. v-கதிர்வீச்சு அதிர்வெண் பிளாங் மாறிலி. கதிர்வீச்சு அதிர்வெண் பிளாங் மாறிலி. (x-கதிர்வீச்சு அதிர்வெண்) இக்கொள்கை தற்காலக் கொள் கையான சிப்பவிசை இயல் தோன்ற வழிவகுத்தது. பொரு ளுக்கும் கதிர்வீச்சுக்குமிடையே நடைபெறும் வினையினை இது ஆராய்கிறது. மேலும், இது மாக்ஸ்வெல் மின்காந்தக் கொள்கை, வழிவழி விசைஇயல் ஆகியவற்றை விளக்குகிறது. (இய),

quantum well laser - சிப்ப இலேசர் கிணறு: வேறுபட்ட நெறிமுறையில் இயங்குவது. அரைக்கடத்தி வேற்றக அமைப் பில் சிப்பவரையறைக் கடத்தல், வரிசை நிலைகளுக்கிடையே இலேசர் வினை தோன்றுவது.

quarantine -தொற்றுத் தடுப்பு: ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவை இல்லாத உயிரிகள் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கை (உயி),

quarantine flag - தொற்றுத் தடுப்புக்கொடி: தொற்றுத்தடுப்புக் கப்பலில் பறக்குங் கொடி. கரும்புள்ளியுள்ள மஞ்சள் நிறங் கொண்டது. கப்பலில் எவருக் கேனும் தொற்றுநோய் இருக்கு மானால், இக்கொடி பறக்க விடப்படும். (உயி)

quark-கருதுகோள்துகள்: கற்பனைத்துகள். அடிப்படைத் துகளின் கட்டுப்பொருளாக முன் மொழியப்பட்டுள்ளது. (இய)

quartz - குவார்ட்ஸ், கல்மம்: சிலிகாவின் இயற்கைப்படிக வடிவம் அறுகோணப் படிகங்கள். (வேதி)

quartz clock -கல்மக் கடிகாரம்: கல்மப்படிகத்தின் அழுத்த அடிப்படையில் வேலை செய்வது. ஒவ்வொரு கல்மப் படிகத்திற்கும் இயல்பு அதிர்வெண் உண்டு. இது அளவையும் வடிவத்தையும் பொறுத்தது. இக்கடிகாரங்கள் தற்பொழுது அதிகம் பயன்படு பவை (இய).

quartz lamp -கல்ம விளக்கு: பாதரச ஆவிவிளக்குகள். இதன் ஒளி ஊடுருவும் உறை படிகக் கல்லாலானது. சாதாரணக் கண்ணாடி உறிஞ்சும் புற ஊதாக் கதிர்களையும் வெளிப்படுத்த வல்லது (இய), quasars - தோற்றமீன்கள்: _விண் மீன்கள் போன்று தோன்றுபவை. குவாசி ஸ்டெல்லார் ஆப்ஜக்ட் என்பதன் சுருக்கம். விண்மீன் மண்டலத்திற்கு அப்பால் உள்ளவை. கதிர்வீச்சுக்கு மூலமாக இருப்பவை. இதுவரை அறியப்பட்ட பொருள்களில் மிகு தொலைவிலுள்ளவை அதிகச் செம்பெயர்ச்சியும் மிக்க ஒளியும் கொண்டவை. பா.pulsars.

queen - அரசி: எறும்பு, தேனி, கறையான் முதலிய சமூகப்பூச்சி களின் தலைவி. இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெண். (உயி)

quenching -பற்றுத்தணிப்பு: கெய்கர் எண்ணியில் பற்றல் மீண்டும் ஏற்படாதவாறு தடுத்து மின்னேற்றத்தை நீக்குதல், (இய)

quenching of steel - எஃகு த்தனிப்பு: காய்ச்சிய எஃகை விரைவாகக் குளிரச் செய்ய, நீரில் அல்லது எண்ணெயில் தோய்த்தல். (வேதி)

quetzal -குயிட்சால்: அமெரிக்காவைச் சார்ந்த பறவை. பொன் பசு நிறமுள்ளது. நீண்ட வால் இறகுகள் உண்டு. (உயி)

queue - ஒழுங்குவரிசை: புகை வண்டி நிலையம் முதலிய இடங்களில் நேர்வரிசையில் ஒருவர் பின் ஒருவர் நின்று பயணச்சீட்டுகளைப் பெறுதல் 2. தங்கவரிசை கணிப்பொறி நினைவகத்திலுள்ள தகவல் பின் தங்குவரிசை. பிஃபோ நெறி முறையில் செயலாக்கப்படுவது. முதலில் வருவதே முதலில் போக வேண்டும் என்னும் நெறிமுறை இது. (ப.து)

quick lime - சுட்ட சுண்ணாம்பு: கால்சியம் ஆக்சைடு (வேதி)

quiescent - ஒடுக்க நிலை: ஓர் உயிரி இயக்கமற்று ஒய்ந்திருக்கும் உண்ணாநிலை, எ-டு கூட்டுப்புழு. (உயி)

quinine- குயினைன்: C20H24O2N23H2O. மிகக்கசப்பான படிகக் காரமம். நிறமற்றது. மணமற்றது. சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படுவது. மலேரியாவிற்குப் பலனளிக்கும் மருந்து (வேதி)

quinquivalent - ஐந்து இணை திறன் கொண்ட: (வேதி)

q-unit - குயூ அலகு: சேமிப்பு எரிபொருள்களின் வெப்ப ஆற்றலை அளக்கப் பயன்படும் அலகு (ஜூல்கள்) (இய)

q-value-குயூ மதிப்பு: அணு உலையில் வெளியாகும் ஆற்றலின் அளவு (இய)

q-wave - குயூ அலை: மேற்பரப்பலை. கிடைமட்ட அசைவுண்டு. அடர்த்தி அல்லது விறைப்பு எண்ணைப் பொறுத்து, அதன் நேர்விரைவு அமைதல் (இய)

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவியல்_அகராதி/Q&oldid=1040364" இலிருந்து மீள்விக்கப்பட்டது