உள்ளடக்கத்துக்குச் செல்

கணிப்பொறி அகராதி/O

விக்கிமூலம் இலிருந்து

O

object language - பொருள் மொழி : இதில் மூலமொழி, தொகுப்பியால் மொழிபெயர்க்கப்படும். object programme - பொருள் நிகழ்நிரல் : ஒரு நிகழ்நிரல் தொகுப்பியால் எந்திர மொழியாக மாற்றப்படும் பொழுது, அதனால் உண்டாகும் எந்திர மொழிக் கட்டளைகள் பொருள் நிகழ்நிரல் எனப்படும்.


object-oriented data base - பொருள் நோக்கு தகவல் தளம் : இது ஒரு புதிய அமைப்பு. அண்மைக் காலத்தில் அதிக நாட்டம் செலுத்தப்படுவது. ஒரு புது அணுகுமுறை கொண்டது. இதில் பொருள்கள் என்பவை தொகுதித் தகவல்கள், இனங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புள்ள இயல்புகள், செயல் முறைகள், பண்பியல்புகள் ஆகும். எடுத்துக்காட்டு : படம், ஒலி, வரைகலை, நிறம், அளவு.


octal digit - எண்மத்தகவல் : எண்ம எனக் குறிமுறையில் உள்ள இலக்கம். எடுத்துக்காட்டு : 0, 1, 2, 3, 4, 5, 6, 7 என்னும் எண்களில் ஒன்று.


octal notation - எண்மக்குறிமானம் : 8 அடி எண்ணாகப் பயன்படும் எண்முறை.


odd parity check - ஒற்றைச் சமச்சரிபார்ப்பு : இரும இலக்கத் தொகுதியால் 1, 0 ஆகியவற்றில் உள்ள சமச் சரிபார்ப்பு.


Office 2000 - ஆபிஸ் (அலுவலகம்) 2000 : மைக்ரோசாப்டின் விளைபொருள். மேடைப் பயன்பாட்டின் இறுதி இடைய (வெப்) அமைப்பைக் குறிப்பது. இணையத்தோடும் தொடர்புள்ளது.


offline operation - மறைமுக இயக்கம் : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இயங்கும் வெளிப்புறக் கருவியமைப்பு. அச்சியற்றி. ஒ. online operation.


offline unit - மறைமுக வழியலகு : முதன்மைக் கணிப்பொறியுடன் இணையாது இயங்கும் கருவியமைப்பு.


offset - மறுதோன்றி : தேவைப்படும் கட்டுப்பாட்டு முனைக்கும் முறையாக்கு கட்டுப்பாட்டு முறையிலுள்ள முனைக்கும் இடையிலுள்ள நிலையான வேறுபாடு.


omission factor - விடுபடு காரணி : பொருத்தமான மீட்கப்படாத ஆவண எண்ணிக்கையைக் கோப்பிலுள்ள பொருத்தமான ஆவணங்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து வரும் எண்.


ones complement - ஒன்றின் நிரப்பு : இருமக் குறிமானத்தைப் பொறுத்தவரை ஒன்றின் நிரப்பை மூலத்திலிருந்து (radix) கழிக்க வேண்டும்.


online operation - நேர்முக இயக்கம் : இது கணிப்பொறி இயக்கமாகும். இதில் உட் பலன் தகவல்கள் கணிப்பொறியில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. ஒ. offline operation.


opening a file - கோப்பைத் திறத்தல் : இச்செயல் மென்பொருளால் நடைபெறுவது. இதில் அடிப்படையில் கோப்பு இனங் காணப்படுகிறது; பயன்படுத்தப்படுகிறது.


open loop - திறந்த வளையம் : இது ஒரு கட்டுப்பாட்டுமுறை. இதில் திருத்தம் புறப்புனைவைப் பொறுத்துள்ளது.


open system - திறந்தமுறை : இது ஒரு வலையமைவு. இதில் ஒரு கணிப்பொறி மற்றொரு கணிப்பொறியுடன் தொடர்பு கொள்வது.


open system inter connection, OSI- திறந்தமுறை இடை இணைப்பு, திமுஇ : அனைத்துலகத் தர அமைப்பு. ஒரு தொகுதி மரபுச்சீரிகளை (புரோட்டோகோல்கள்) உருவாக்கியுள்ளது. இதுவே திறந்த முறை இடை இணைப்பு எனப்படும். இதில் 7 அடுக்குகள் உள்ளன.

1) பயன்பாட்டு அடுக்கு.

2) அளிப்பு அடுக்கு.

3) அமர்வடுக்கு.

4) போக்குவரவு அடுக்கு.

5) வலையமைவு அடுக்கு.

6) தகவல் இணைப்பு அடுக்கு.

7) மெய்யடுக்கு.

இவ்வடுக்கு முறையில் அமைந்த எவ்வலையமைப்பும் இதே அமைப்புள்ள வேறு எந்த வலையமைவோடும் தொடர்பு கொள்ளலாம்.


operand - செயலிடம் : இது, ஓர் இனம் அல்லது நினைவக இடமாகும். இதில் கணிதச் செயல் நடைபெறும்.


operating ratio - இயங்குவீதம் : வன்பொருளும் மென்பொருளும் சேர்ந்த தொகுதி அளிக்கும் பணியின் கால அளவு. இந்த நேரம் கிடைக்கும் நேரத்தின் விழுக்காடாகக் கொள்ளப்படுகிறது. இங்கு மொத்த நேரத்திலிருந்து 2 இறக்க நேரம் கழிக்கப்படுகிறது.


operating system, OS - இயங்குமுறை, இமு : இது ஒரு கட்டுப்பாட்டுமுறை. இதில் எல்லா மென்பொருள் வேலைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.


operation - செயல் : 1) ஒரு கணிப்பொறிக் கட்டளையால் கட்டுப்படுத்தப்படும் செயல். 2) எண்கணிதம், முறைமை மற்றும் கையாளும் செயல்களைத் தகவல்கள் கொண்டு செய்தல்.


operation code - செயல் குறிமுறை : செயல்குறிமை. கணிப்பொறிக் கட்டளைப்பகுதி. நிறைவேற்றப்பட வேண்டிய செயல்களைக் குறிப்பது. எடுத்துக்காட்டு : கூட்டு, பெருக்கு.


operation cycle - இயக்கச் சுழற்சி : நினைவகச் சுழற்சியின் பகுதி. பெருக்கல், கழித்தல் முதலிய செயல்கள் நடைபெறுபவை.


operation register - இயக்கப் பதிவகம் : இப்பதிவகத்தில், இயக்கச் சுழற்சியின் பொழுது, இயக்கக் குறிமை பதிவு செய்யப்படும்.


operation time - இயக்க நேரம் : ஒரு குறிப்பிட்ட செயலுக்கு இயக்கச் சுழற்சியை நிறைவேற்றத் தேவைப்படும். நேரம்.


operator - செயலி : முறைமை அல்லது கணிதக்குறி அல்லது உரு ஆகும். இது ஒரு செயலிடத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய செயலைக் குறிக்கும். எடுத்துக்காட்டு : +, −, x, AND, OR.


operator, comma - காற்புள்ளிச் செயலி : செயலிகளில் ஒரு வகை.


operator, kinds of - செயலி வகைகள் : இவை பின்வருமாறு.

1) எண்கணிதச் செயலிகள் : இவை எண்முடிவுகளைத் தருபவை. எடுத்துக்காட்டு : + கூட்டல், 1 + 1.

2) ஒப்பீட்டுச் செயலிகள் : இவை மெய் அல்லது பொய் முடிவுகளைத் தெரிவிப்பவை. எடுத்துக்காட்டு : = சமம், A1 = B1.

3) பாடச் செயலிகள் : இவை முழுப் பாடத்திற்கும் பாடப் பகுதிகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : & (AND), பாடச்செயலி, ஸ்டார் மற்றும் ஆபீஸ், ஸ்டார் ஆபீசைக் கொடுக்கும்.

4) பார்வைச் செயலிகள் : கணிப்பொறியின் நுண்ணறைகளைச் சேர்ப்பவை. எடுத்துக்காட்டு : அரைப்புள்ளி எல்லை A1 : C 108.


optical character recognition, OCR - ஒளியுரு அறிதல், ஒஉஅ : கையால் எழுதிய அல்லது அச்சிட்ட தகவலைக் கணிப்பொறிக்குள் செலுத்தும் முறை. இதற்கு ஒளி இருமுனை வாய்கள் பயன்படுகின்றன. தாளில் மறிக்கப்படும் ஒளி மாறுபாட்டை இவை அறியபவை.


optical disk - ஒளிவட்டு : ஒளிச்சேமிப்பைப் பயன்படுத்தும் வட்டு.


optical mark reading and recognition - ஒளிக்குறி படித்தலும் அறிதலும் : இம்முறையில் பென்சிலால் 2 போன்ற குறிகளைக் குறிக்கப் போதுமான கட்டங்கள் கொண்டதும் முன்னரே அச்சிடப்பட்டதுமான படிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை ஆவணங்கள் ஆவணப்படிப்பி மூலம் படிக்கப்பட்டு, ஆவணத்திலுள்ள குறிகள் மின்துடிப்புகளாக மாற்றப் பட்டுக் கணிப்பொறிக்குள் செல்கின்றன.

optical mark reading and recognition, uses of - ஒலிக்குறி பார்த்தலும் அறிதலும் அவற்றின் பயன்களும் : 1) புறத்திண்மையுள்ள தேர்வு விடைத்தாள்கள் திருத்தல். 2) மக்கள் தொகை, அங்காடி அளவை எடுத்தல். 3) பன்மத் தெரிவுள்ள ஆவணங்கள் உருவாக்கல் 4) பணியாள்கள் வரும் நேரம் செல்லும் நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்தல், அட்டவணை தயாரித்தல்.

optical memory - ஒளி நினைவகம் : இது கணிப்பொறி நினைவகம், ஒளி நுணுக்கங்களைப் பயன்படுத்துவது. இதில் இனங்காண் லேசர் கற்றைப் பயன்படுகிறது.

optical reader - ஒளிப் படிப்பி : இது கணிப்பொறித் தகவல் பதிவு செய்யும் எந்திரம், அச்சிட்ட உருக்களையும், வரிக்குறிமைகளையும் கணிப்பொறி உட்பலன் குறிமைப் படிவமைப்பாக மாற்றுவது.

optical scanner - ஒளி அலகிடும் கருவி : அச்சிட்ட உருக்கள் உருவாக்கும் ஒளிக் கோலங்களைப் பகுத்துப் பார்ப்பது. பின் இக்கோலம் குறிகையாக மாற்றப்படுவது. இச்செயல் கணிப்பொறியால் முறையாக்கப்படுவது.

optical storage - ஒளிச் சேமிப்பு : ஒரு மையத் தடங்களில் நுண் குழிகளாக இலக்கத் தகவல்களைப் பதிவு செய்யும் கருவி.

optimization - நடுமமாக்கல் : ஒரு தொகுதி பெருமப் பயனுறு திறன் பெற வடிவமைக்கப்படுதல். இது நிகழ்நிரலாகவும் இருக்கலாம்.

optimum code - நடுமக் குறி முறை : ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பயனுறுவதாக அமையும் கணிப்பொறிக் குறிமை. எ-டு நிறைவேற்றத் தேவைப்படும் குறைந்த காலம்.

optimum programming - நடும நிகழ் நிரலாக்கல் : சில நெறிமுறைகளைப் பொறுத்தவரை பெரும் பயனுறுதிறன் நிகழ்நிரல்களை உருவாக்கல். எ-டு குறைந்த அடக்கச் செலவு, குறைந்த சேமிப்புப் பயன்.

option - choice - தெரிவு : விருப்பம்.

option button - தெரிவு பொத்தான்கள் : இவை எளிய ஆம், இல்லை என்னும் வினாக்கள் கேட்கப் பயன்படுபவை. ஒரு சமயத்தில் ஒரு தெரிவையே பெற இயலும்.
Opt

172

other


option explicit statement - தெரிவு வெளிப் படைக் கூற்று . இதை அறுதியிடும் பகுதியில் பயன்படுத்த வேண்டும்.

Oracle - ஆரகிள் : தொலைப் பாடத்திற்கு (teletext) எடுத்துக் காட்டு.

ordering - Arraying a set of data into a particular pattern according to some rule. வரிசையாக்கல் : விதிப்படி தகவல் தொகுதியைக் குறிப்பிட்ட கோலத்தில் ஒழுங்கு செய்தல்.

OR gate - A decision making building block in digital circuits. It produces an output of binary 1 when one or more of its inputs has a value of binary 1. It also produces an output of binary 0, when all its inputs have a value of binary of. These gates are generally used integrated circuit packages. - அல்லது வாயில் : இலக்கச் சுற்றுகளிலுள்ள முடிவு செய்கட்டுமானத்தொகுதி. இதன் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன்கள் இரும 1 என்னும் மதிப்பைக் கொண்டிருக்கும் பொழுது, இது இரும 1 என்னும் வெளிப்பலனை உண்டாக்குவது. அதன் எல்லா உட்பலன்களும் இரும 0 என் னும் மதிப்பைக் கொண்டிருக்கும் பொழுது, இது இரும 0 என்னும் வெளிப்பலனை உண்டாக்கும். பொதுவாக, இவ் வாயில்கள் ஒருங்கிணைசுற்றுச் சிப்பங்களில் பயன்படுவது.

Origin - தோற்றம் : ஒரு சேமிப்புப் பகுதியின் தொடக்கத்தைக் குறிக்கும் தனி முகவரி.

OROM - Optical Read Only Memory - படிப்பதற்குரிய ஒளி நினைவகம்.

OR operator - அல்லது செயலி: செயலியுடன் பயன்படும் சொற்களைக் கொண்டுள்ள இடைய (வெப்) பக்கங்களைப் பட்டியலிட இது பயன்படும்.

other events - பிற நிகழ்வுகள்:

இவை பின்வருமாறு.

1) வினையாற்று : படிவம் வினையாற்றும் சாளரமாக வரும்பொழுது உண்டாவது.

2) வினை குறை : படிவம் வினையாற்றாது இருக்கும் பொழுது உண்டாவது.

3) குவியம் பெறு: பொருள் குவியத்தைப் பெறும்பொழுது உண்டாவது.

4) குவிய இழப்பு: வேறு ஒரு கட்டுப்பாட்டுக்கு குவியம் மாறும்பொழுது உண்டாவது.

5) சுமை ஏற்று: முதல் தடவையாகப் படிவம் சுமையேறும் பொழுது உண்டாவது.

6) சுமை இறக்கு : படிவம் சுமை இறக்கும் பொழுது உண்டாவது. Outlook Express - பார்வை விரைவி : இது ஒரு நிகழ்நிரல் மின் அஞ்சலை அனுப்பப் பயன்படுவது. செய்திகளைக் கோத்து அனுப்பலாம். பெறும் செய்திகளைப் பார்வையும் இடலாம். இதன் பிற இயல்புகளாவன.

1) செய்திகளுடன் கோப்புகளை இணைப்பது.

2) அனுப்புவதற்கு முன் செய்திகள் பிழையில்லாமல் இருக்குமாறு செய்கிறது.

3) செய்தியை ஏனையவருக்கு அனுப்புகிறது.

4) மின்னஞ்சல் முகவரிகளைக் கொண்டது.

output - வெளிப்பலன் : கணிப்பொறி உண்டாக்கும் விடுவரல்.

output devices - வெளிப்பலன் கருவியமைப்புகள் : இவை கண்காணிப்பிகளும் அச்சியற்றிகளும் ஆகும். கண்காணிப்பிகள் தகவல்களைத் திரையில் காட்டுபவை. இக்காட்டுகை தொலைக்காட்சி போல் தெரியும். இவற்றின் உயர் பகுப்பு 1280 X 1024 குறும்படங்கள். இவை ஒற்றை நிறக் கண்காணிப்பி பல நிறக் கண்காணிப்பி என இருவகை. உட்பலனை வெளிப்பலனாக அச்சிடுபவை. இவை வரி அச்சியற்றிகள், தொடர் அச்சியற்றிகள், எழுத்துத்தர அச்சியற்றிகள், லேசர் அச்சியற்றிகள் என நான்கு வகை.

output functions - வெளிப்பலன் சார்புகள் : இவை கணக்கிடப்பட்ட விளை பயன்கள். இவற்றில் ஒன்று printf(). இது சரம், எண், உரு ஆகியவற்றை அச்சியற்றப் பயன்படுவது. இதன் பொதுப் படிவ அமைப்பு பின்வருமாறு. Printf ("format string", var 1, var 2.... varn); ஒ. input functions.

output programme - வெளிப்பலன் நிகழ்நிரல் : வெளிப்பலன் கருவியமைப்புக்குச் சிறப்பாக எழுதப்படும் நிகழ்நிரல்.

output record - வெளிப்பலன் ஆவணம் : வெளிப்புறக் கருவியமைப்புக்கு எழுதப்படும் ஆவணம்.

output unit - வெளிப்பலன் அலகு : நினைவக அலகில் சேமித்து வைக்கப்படும் ஒ. input unit

overflow - வழிந்தோடல் : இது எண்கணிதச் செயலால் ஏற்படுவது. இதில் ஓர் எண் இயற்றப்படும். இந்த எண் எந்திரத்தின் வன்பொருள் சொல் அல்லது மென்பொருள் சொல் அளவு வரம்புகளுக்குப் பெரிதாக அமையும்.

overlay - மேலமைத்தல் : முதன்மை நினைவகத்திற்கு நடைமுறைச் செயல்களைக் கொண்டு வரும் நுணுக்கம்.

overprint - மேல் அச்சிடல் : முன்னரே அச்சிட்ட உருக்கள் மீது அச்சிடல், அச்செழுத்தை மேம்படுத்த இது செய்யப் படுகிறது.

owner - உரிமையாளர் : பய னாளித் தகவல்களைக் கட்டுப் படுத்திப் பயன்படுத்துபவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/O&oldid=1047056" இலிருந்து மீள்விக்கப்பட்டது