உள்ளடக்கத்துக்குச் செல்

கணிப்பொறி அகராதி/G

விக்கிமூலம் இலிருந்து

G

Galilieo - கலீலியோ (1564-1642): நழுவுகோல் என்பது ஒரு கணிப்பீட்டுக் கருவி. இதை இவர் புனைந்தார். மின்னணுக் கணிப்பான் வரும்வரை இது பயன்பட்டது.

game chip - விளையாட்டு நறுவல் : நுண்மின்னணுப் பகுதி. இது இல்லக் கணிப்பொறியில் பயன்படுவது. விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் முறைமைச் சார்பலன்களைக் கொண்டது. games - விளையாட்டுகள் : கணிப்பொறிப் பயன்பாடுகள். கேளிக்கை அதிகம்; கல்வி குறைவு. காட்சித்திரையில் நிகழ்ச்சிகள் தோன்றும். இவற்றைத் திறத்தோடு இயக்க வேண்டும். இல்லக் கணிப்பொறிகளில் இவை இயக்கப்படுபவை. இவை மூன்று வகை: 1. திற விளையாட்டுகள்; சதுரங்க ஆட்டம். 2. வீர விளையாட்டுகள்; தேடுதல் 3. கேளிக்கை விளையாட்டுகள்; பல விளையாட்டுகள்.

gap digit - A digit present in a word. It is not a part of the information conveyed by the word, eg. a parity bit. இடைவெளி இலக்கம் : ஒரு சொல்லிலுள்ள இலக்கம். சொல் கொண்டு செல்லும் தகவலின் பகுதியன்று. எ-டு சம இலக்கம்.

garbage - குப்பை : கூளம். கணிப்பொறியிலுள்ள தேவையில்லாத பொருளற்ற தகவல்களின் தொகுதி.

garbage collection - குப்பைத் திரட்டு : தேவையில்லாத தகவல் தொகுதி.

gate - An electronic switch acting as a decision marker in digital systems by giving a binary output either 1 or 0 depending on the combination of binary input; otherwise known as logic circuit. வாயில் : ஒரு மின்னணுச் சொடுக்கி, இலக்கத் தொகுதிகளில் முடிவு செய்பவையாகச் செயற்பட்டு 1 அல்லது 0 என்னும் இரும வெளிப்பலனைக் கொடுக்கும். இச்செயல் இரும உட்பலனைக் கூடுகையைப் பொறுத்தது. வேறுபெயர் முறைமைச்சுற்று.

gate, kinds of - வாயில் வகைகள் : 1. உம் வாயில் (AND gate) 2. அல்லது வாயில் (OR gate) 3. இல்வாயில் (NOR gate) 4. இராவாயில் (NAND gate),

geek - மடமை, மடையன்(இழிவழக்கு)

geek speak - மடையர் பேசுகிறார் : கசப்பைத் தரும் பயனாளி உலகம். இதில் மக்களும் மனிதரும் ஒன்றே.

general programme - A Computer programme designed to solve a specific type of problem. For this purpose values of appropriate parameters are supplied. பொதுநிகழ்நிரல் : இது ஒரு கணிப்பொறி நிகழ்நிரல். குறிப்பிட்ட வகைச் சிக்கலை மட்டுமே தீர்க்க வடிவமைக்கப்பட்டது. இதற்குத் தோராய சுட்டளவுகளின் மதிப்புகள் வழங்கப்படும்.

general purpose computer - A computer capable of operating on different programmes used for the solution of a wide variety of problems.
பொதுநோக்கு கணிப்பொறி : விரிவான பல வகைச் சிக்கல்களைத் தீர்க்க உதவும் வேறுபட்ட நிகழ்நிரல்களை இயக்கவல்ல கணிப்பொறி.

general purpose programme - A programme designed to do some standard operation. Eg. sorting file processing functions.
பொதுநோக்கு நிகழ்நிரல் : ஒரு திட்டமான செயலைச் செய்ய வடிவமைக்கப்பட்ட நிகழ்நிரல். எ-டு கோப்பு முறையாக்கு சார்பலன்களைப் பிரித்தல்.

generate - இயற்று : பொது நோக்கு நிகழ்நிரலின் குறிப்பிட்ட பதிப்பை உண்டாக்க இயற்றியைப் பயன்படுத்தல்.

generation - தலைமுறை : கணிப்பொறித் தலைமுறைகளைக் குறிப்பது. நான்கு தலைமுறைகள் உள்ளன.

generation number - தலைமுறை எண் : காந்த நாடாச் சுருளில் கோப்புச் சீட்டின் ஒரு பகுதியைக் குறிப்பது. இது கோப்பின் வயதைக் குறிப்பது.

generative grammar - ஆக்க இலக்கணம் : ஒரு விதித் தொகுப்பு; முறைசார் மொழியில் செல்லுபடியாகக்கூடிய வெளிப்பாட்டைத் தெரிவிப்பது. இது சொல் பகுதிகள் தொகுப்பு அடிப்படையில் நடைபெறுவது. இதில் நெடுங்கணக்கும் அடங்கும்.

generator - இயற்றி : ஒரு நடைமுறைச் செயல். பொதுச் செயலுக்குரிய குறிப்பிட்ட பதிப்பைச் செய்வது.

GIGO, garbage in, garbage out - கைகோ : குப்பைஉள், குப்பை வெளியே; இதன் பொருள், உட்பலன் தவறாக இருக்குமானால், எவ்விடையும் செல்லத்தக்கதன்று.

GIMPS, Great Internet Mersene Prime Search - ஜிம்ப்ஸ் : மெர்சினி முதன்மைத் தேடல் பேரீணையம்; இது ஒரு கணிதத் திட்டம். பொருளும் புகழும் தருவது. பிரெஞ்சு துறவி மெர்சினி பெயரால் அமைந்தது. மெர்சினி முதன்மை எண்களைக் கண்டறிவது.

global scope - முழு எல்லை : எல்லைகளில் ஒரு வகை. மிக ஆற்றல் வாய்ந்தது. ஒரு மாறியை முழுமையுள்ளதாக்கப் பொது அறுதியிடு கூற்று பயன்படுகிறது.

global search and replace - A text editing function of a word processing system. In this system a text is scanned for a given combination of characters. Such a combination is replaced by another set of characters.
முழுமையாகத் தேடலும் மாற் றீடு செய்தலும் : சொல் முறையாக்கு முறையின் பாடப் பதிப்புப் பணி. இதில்,கொடுக்கப்பட்ட உருக்களின் கூடுகைக்குரிய பாடம் தேடப்படும். இத்தகைய கூடுகை மற்றொரு உருக்கள் தொகுதியால் மாற்றீடு செய்யப்படும்.

global variable - A variable referred to throughout a main program. முழுமாறி : முதன்மை நிகழ்நிரல் முழுவதும் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மாறிலி.

Gnutella - நூட்டில்லா : வலையமைவுப் பணியகங்களில் ஒன்று. ஒரு பயனுள்ள தகவல் தொடர்பு மாதிரி. நல்ல எதிர்கால வாய்ப்புள்ளது.

Gopher - காப்பர் : ஆவணங்களை இணைக்கும் பழைய முறை. எச்டிஎம்எல் இதை மாற்றீடு செய்துள்ளது.

GO TO, GO TO - A branching instruction used in high level programming languages. கோட்டு : செல்க. கிளைக்கட்டளை. உயர்நிலை நிகழ்நிரல் மொழிகளில் பயன்படுவது.

Govindsamy N. Prof. - பேரா. நா. கோவிந்தசாமி : இவர் மறைந்த மாணிக்கம். சிங்கப்பூரைச் சார்ந்தவர். தமிழ் இணைய முன்னோடி. இவர் தொடங்கிய கணியன் தமிழ்ச் செய்தி (1977) நிற்கும் வரை வெற்றியுடன் நடைபெற்றது. நாள்தோறும் 600 பேர் பயன்படுத்தினர். தமிழ் இணைய 99 திறவு பலகைக்குரிய (தமிழக அரசு) உட்பலன் இவர் அமைத்த கணியன் திறவு பலகையிலிருந்து பெறப்பட்டது. தமிழ் இணைய உலகம் இவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. இவர்தம் அரிய பணி கணியன் குடும்ப மின் இதழ்கள் தோன்ற வழி வகுத்தது.

graceful degradation - சீரானபடி இறக்கம் : கணிப்பொறி எந்திரம் பழுதுபடல். பழுது ஒரு சில பகுதிகளில் மட்டும் இருப்பதால், முழுப்பழுது ஏற்படுவதற்கில்லை.

graphical visual display device - A computer input-output device. It enables the user to manipulate graphic material in a visible two-way real time communication. It has a light pen, keyboard and a visual display unit monitored by a controller; otherwise known as graphoscope. வரைகலை காட்சி வெளிப்பாட்டுக் கருவியமைப்பு : கணிப்பொறி உட்பலன் வெளிப்பலன் கருவியமைப்பு. இருவழி மெய்ந்நேரப் பார்வைச் செய்தித் தொடர்புக்குரிய வரைகலை பொருள்களைக் கையாளப் பயனாளிக்கு உதவுவது. இதில், ஒளிஎழுதி, விசைப் பலகை,

காட்சியலகு ஆகியவை இருக் கும். இவ்வலகு கட்டுப்பாட்டுப் பகுதியால் கண்காணிக்கப்படும். வேறு பெயர் வரைகலை நோக்கி.

graphics -Pictorial information displayed on a VDU. It can be usually be manipulated using a light pen or keyboard. வரைகலை: காட்சித் திரையில் காட்ட்ப்படும் படத்தகவல். வழக்கமாக ஓர் ஒளி எழுதியை அல்லது விசைப்பலகையைப் பயன்படுத்தி இதைக் கையாளலாம்.

graphics business -வணிக வரைகலை : பலவகைப்படங்களும் கட்டப்படங்களும் இதில் அடங்கும். இவை விற்பனை, ஆதாயம், இழப்பு, பொருள்பட்டியல் முதலியவற்றைக் குறிப்பவை. எ-டு பட்டை வரைபடம்.

graphics characters - Small shapes occupying the same space as a letter or number on a VDU. It is used to improve games, program and graph. வரைகலை உருக்கள் : எழுத்து அல்லது திரையில் தோன்றுபவை. நிகழ்நிரல், விளையாட்டு, வரைபடம் முதலியவற்றை மேம்படுத்தப் பயன்படுபவை.

graphics display unit - The unit presenting graphical information to the user. வரைகலை காட்சி அலகு : இவ்வலகு வரைகலைத் தகவல் களைப் பயனாளிக்கு அளிப்பது.

graphics for applications - பயன்பாடுகளுக்குரிய வரை கலை : பயன்பாட்டிற்கு வரை கலையை உருவாக்கிப் பயன்படுத்தப் பல வழிகளில் விஷூவல் பேசிக் உதவுகிறது. ஓர் பயன்பாட்டின் இடைமுகத்திற்குப் பாணி, காட்சியமைப்பு ஆகிய இரண்டையும் வரை கலை சேர்க்கிறது. கோடுகள், வட்டங்கள், சிறு படங்கள் ஆகியவை வரை கலைப்பொருள்கள் ஆகும். இவற்றை எளிதாகவும் விரைவாகவும் விஷூவல் பேசிக்கில் பின்வருமாறு காட்ட இயலும். 1) படிவத்தின் பின்னணியாகப் படத்தைச் சேர்த்தல். 2) உருக் கட்டுப்பாடு, 3) கோட்டுக் கட்டுப்பாடு, 4) வடிவக்கட்டுப்பாடு, 5) எழுச்சி யூட்டும் கட்டுப்பாடு, 6) படப் பெட்டிக் கட்டுப்பாடு. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க.

graphics mode-Operating the computer in such a way it displays graphics to the best effect. - வரைகலை முறை : சிறந்த பயனளிக்கும் வகையில் வரை கலை திரையில் உண்டாகுமாறு கணிப்பொறியை இயக்குதல்.

graphics set - The group of graphics symbols provided by the manufacturer of a microcomputer. It is usually marked on a group of keys. வரைகலைத்தொகுதி: வரை கலைக் குறியீடுகள் தொகுதி. நுண்கணிப்பொறி உற்பத்தியாளரால் வழங்கப்படுவது. இது வழக்கமாகத் திறவுத் தொகுதியில் குறிக்கப்படுவது.

graphics tablet - The popular type of digitizing device using a flat tablet and a stylus for graphic input. This device offers an efficient method of converting object shapes into computer storable information.

graphics terminal - A terminal with a screen adapted for displaying high resolution graphics. வரைகலை முனையம் : உயர் பகுப்பு வரைகலையைக் காட்டுமாறு அமைந்துள்ள திரையுடன் கூடிய முனையம்.

Grosh's law - This law states that the processing power of a computer is proportional to the square of its cost. கிராஷ் விதி : ஒரு கணிப் பொறியின் முறையாக்கு திறன் அதன் ஆக்க விலை இரு படிக்கு நேர்வீதத்தில் உள்ளது என்பது இவ்விதி.

group code - A systematic error checking code. Used to check the validity of a group of characters transferred between two terminals. குழுக்குறியீடு : முறையான பிழை சரிபார்க்கும் குறியீடு. இரு முனையங்களுக்கிடையே மாற்றப்படும் உருக்கள் தொகுதியின் செல்லுபடி திறனைச் சரிபார்க்கப் பயன்படுவது.

grouping of records - Placing of records together in a group to either conserve storage space or reduce access time. ஆவணங்களைத் தொகுதி யாக்கல் : ஒரு தொகுதியில் ஆவணங்களை ஒருங்குசேர வைத்தல், சேமிப்பு இடத்தைப் பாதுகாக்கவும் அல்லது அணுக்க நேரத்தைக் குறைக் கவும் இது நடைபெறுவது.

groupings, standard set of - திட்டத் தொகுதிகள்: இவை பின்வருமாறு 1) கோப்பு, 2) பதிப்பி, 3) காட்சி, 4) படிவமைப்பு, 5) கருவி, 6) சாளரம், 7) உதவி,

group mark - A special character used to indicate the end of a group of characters in store. தொகுதிக் குறி : சேமிப்பி லுள்ள உருக்கள் தொகுதியின் முடிவைக் குறிக்கப் பயன்படும் தனிஉரு. Grove, Andrew S. -எஸ்.ஆண்ட்ரூவ் குரோவ் (1936 -) : இவர் நுண்முறையாக்கிகளை உற்பத்தி செய்யும் இண்டல் நிறுவனத்தின் முளை, நறுவல் தொழில்நுட்ப வித்தகர் பிறப்பால் அங்கேரியர்/பொறி இயலார். இவர் தன்னை எந்த ஒரு துறையின் தந்தை என்றும் கூறிக்கொள்ள விரும்பவில்லை. இன்று இந்த அளவுக்குக் கணிப்பொறிகள் வளர்ந்துள் ளதற்கு நறுவல் தொழில் நுட்பமே காரணம்.

gulp - A series of bytes considered as a unit. விழுமி : எண்மிகளின் (பைட்டு கள்) வரிசை. ஒர் அலகு பா.bit, byte.

Gurunet - குருஇணையம்: குரு வலையம். இது ஒரு பயன் பாட்டகம். திரு.முரளி என்பவரால் அமைக்கப்பட்டது. இவர் இந்து நாளிதழில் வலை யம் பேசுகிறது என்னும் தொடர் கட்டுரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் எழுதுபவர். எந்த ஒரு சொல், சொற்றொடர் பற்றியும் தகவல் தருவது. இதன் தகவல் தளம் அதற்கேற்ப அகராதி அமைப்பைப் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/G&oldid=1047046" இலிருந்து மீள்விக்கப்பட்டது