கணிப்பொறி அகராதி/Q

விக்கிமூலம் இலிருந்து

Q

quad - நாற்கூறு : நான்கு பகுதிகளைக் கொண்டது.

quad capacity - நாற்கூறுத் திறன் : நெகிழ்வட்டின் இரட்டை அடர்த்தி.

quantity - அளவு : கணிப்பொறியில் நேர்க்குறி அல்லது எதிர்க்குறி மெய்யெண்.

quantizer அளவாக்கி : ஒப்பு மை அளவை இலக்க அளவாக மாற்றுங் கருவியமைப்பு.

quasi instruction - An item of data present in a programme in instructive format only.
போலிக் கட்டளை : கட்டளைப் படிவமைப்பில் ஒரு நிகழ்நிரலிலுள்ள தகவல் இனம்.

query - வினா : கொக்கி, குறிப்பிட்ட செய்திக்குரிய வேண்டுகோள். தகவல் மீட்பில் பயன்படுவது. இது பயனாளி அமைக்கும் கூற்று. தகவலைத் தேர்ந்தெடுத்து அதை அட்டவணையில் கையாள உதவுவது.

query language - வினா மொழி : பயனாளியின் நட்புறவுள்ள கட்டளைத் தொகுதி. ஒரு தகவல் தளத்திலிருந்து தகவலைப் பெற உதவுவது.

query programme - வினா நிகழ்நிரல் : இது ஒரு கணிப்பொறி நிகழ்நிரல். இது பயனாளியைத் தகவலை மீட்க அனுமதிப்பது.

queue - நேர்வரிசை : பணிக்காகவுள்ள தகவல் இன வரிசை. எ-டு மையச் செயலக முறையாக்க வேண்டிய தகவல்.

queuing theory - நேர்வரிசைக் கொள்கை : இது ஒரு நிகழ்தகவுக் கொள்கை, பணிமுனைகளில் தாமதங்களை ஆராயப் பயன்படுவது.

Quicktran - குயிக்ட்ரான் : பார்ட்டானின் உட்பிரிவு மொழி. பன்ம அணுக்கத் தொகுதியில் பயன்படுவது.

quit - வெளியேறு : ஒரு நிகழ்நிரலின் வேலை. நடைமுறையிலுள்ள செயலை முடிக்கப் பயனாளிக்கு உதவுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/Q&oldid=1047061" இலிருந்து மீள்விக்கப்பட்டது