கணிப்பொறி அகராதி/S
S
sampling - மாதிரி எடுத்தல் : நேர இடை வேளைகளில் ஒரு மாறியின் மதிப்பைப் பதிவு செய்யும் முறை.
save - சேமி : நெகிழ்வட்டு முதலியவற்றில் சேமிப்புக் கருவியமைப்பில் நிகழ்நிரல் அல்லது தகவலைப் பதிவு செய்து நிலையாகத் தேக்கி வைத்தல்.
scalar type data - அளவுசார் வகைத் தகவல் : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலில் ஒரு தனித்தகவல் இனத்தைக் குறிக்கும் பிட்டுகளின் வரிசை முறை.
scanning - அலகிடல் : வரி வரைவு செய்தல். மின்னணுத் துப்பாக்கியிலிருந்து வரும் மின்னணுக்கள் இடமாகவும் வலமாகவும் மேலுங்கீழும் படத்தின் மீது விழும். இந்நிகழ்ச்சியே அலகிடுதல் ஆகும்.
scanner - அலகிடும் கருவி : அலகு இயற்றி மாதிரி எடுக்கும் கருவியமைப்பு பெறும் மதிப்புகளைக் கொண்டு தேவைப்படும் தகவல்களைத் தானாகத் தொடங்கி வைப்பது
scheduling - அட்டவணையிடல் : வரிசைநிலை, முன்னுரிமை ஆகியவற்றைச் செயற்படுத்தல். இதில் வேலைகள் செய்யப்படும். வேலைகளுக்குரிய தலைவாய்கள் ஒதுக்கப்படும். இதைக் கையால் இயக்கிச் செய்யலாம்.
schema - விளக்கம் : ஒரு தகவல் தளத்தை முழுமையாக விளக்குதல்.
schematic symbols - விளக்கப்படக் குறிகள் : இவை வரிப் படங்கள். வேறுபட்ட கூறுகளைக் குறிப்பவை. அனைவரும் பயன்படுத்துபவை.
scientific language - அறிவியல் மொழி : கணக்கு அல்லது அறிவியல் நிகழ்நிரல்களை எழுதுவதற்கு வடிவமைக்கப்பட்ட மொழி.
scientific notation - அறிவியல் குறிமானம் : 10 இன் வர்க்கமாகத் தெரிவிக்கப்படும் அளவுகளைக் குறிக்கும் நுணுக்கம். எ-டு. 12300 = 1.23 x 104.
scope - எல்லை : வரையறை. இது மூவகை
1) உள்ளிட எல்லை
2) அலகு எல்லை
3) அனைத்து எல்லை. விரிவு அவ்வப்பதிவில் காண்க.
scrolling - உருளல் : செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக நகரும் பாடத்தைக் குறிப்பது.
SCSl, Small Computer System Interface - சசி : சிறிய கணிப்பொறித் தொகுதி இடைமுகம். அதாவது ஒரு தொடர்வாயில் கணிப்பொறியுடன் இணைந்துள்ள ஏனைய கருவியமைப்புகளைக் கவனிப்பது.
search and replace - தேடு மாற்றீடு செய் : இது சொல் முறையாக்கு நிகழ்நிரலின் திறனைக் குறிப்பது. சிறப்புரு முறையாக்கு நிகழ்நிரலின் திறனைக் குறிப்பது. சிறப்புரு அல்லது சொல்லைக் காண இது பயன்படுவது.
search set - தேடுதொகுதி : படிவமைப்புச் சரத்தில் ஒரு தொகுதி உருக்கள் அமைந்திருக்க வல்லவை. இவ்வுருக்கள் சரத்தில் உட்பலனாக ஏற்றுக் கொள்ளப் படுபவை.
search time - தேடுநேரம் : குறிப்பிட்ட நிலைமையைச் சரிசெய்யுமளவுக்கு ஒரு தகவல் இனத்தை இனங்காண உதவும் சராசரி நேரம்.
secondary storage - துணைச் சேமிப்பு : முதன்மைக் கணிப்பொறிக்குப் புறத்தே தகவலைச் சேமித்தலும் மீட்பு செய்தலும்; நிகழ்நிரலுக்கு அணுக்கமுள்ளது.
secondary storage devices - துணைச் சேமிப்புக் கருவியமைப்புகள் :பா. auxiliary storage devices.
section, header - தலைப்பகுதி பா.. header section.
sections in C programme - சி நிகழ்நிரல் பகுதிகள் :
1) தலைப்பகுதிகள்
2) வகை அறுதியிடு பகுதி
3) கட்டளைப் பகுதி. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க
section, instruction - கட்டளைப் பகுதி : பா. instruction section.
sector - துறை : காந்த வட்டில் தகவல் சேமிப்பை அமைத்தல்.
security - பாதுகாப்பு : தகவலை அணுகுவதற்குரிய துணுக்கங்களை வரையறைப்படுத்தலும் செயற்படுத்தலும்.
seek - தேடு.
seek area - தேடு பகுதி : சேமிப்புப் பகுதி, ஆவணங்களைக் கொண்டது.
seek time - தேடு நேரம் : தேடுநிலைக்கு ஏற்றவாறு எழுதும், தலைப்பகுதியை நகர்த்துவதற்குத் தேவையான நேரம்.
segment - பகுதி : நிகழ்நிரலின் பிரிவு; நினைவகத்திலுள்ள கோப்பு.
segment mark - பகுதிக்குறி : ஒரு நாடாக் கோப்பில் தனிப் பகுதியிலுள்ள உரு.
select - தேர்வு செய் : ஆய்வு செய்து உரிய செயலைத் தெரிவு செய்தல்.
selector - தேர்வி : குறிப்பிட்ட நிலைமைகள் இருப்பதை ஆய்ந்தறியும் கருவியமைப்பு.
semantic error - சொற்பொருள் பிழை : ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல். Séክ
196
Sef
semantics - சொற்பொருளியல்,
குறிகளுக்கும் அவற்றின்
பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை.
sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் காட்டும் உரு. எ-டு காந்த நாடாவின் முனை. -
separator - பிரிப்பி : தகவல் முறைமை அலகுகளைப் பிரிக் கப்பயன்படும் உரு
sequence - திட்ட வரிசை : தகவல் இனங்களைக் குறிப் பிட்ட வரிசையில் வைத்தல் எ.டு. பெயர்களை அகரவரிசை யில் அமைத்தல்.
sequence error - திட்ட வரிசைப் பிழை திட்ட வரிசைச் சரிபார்ப்புச் செயலி னால் கண்டறியப்படும் பிழை.
sequencing - வரிசையாக்கல் : அடிப்படைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஒன்று. கணக் கீடுகளை ஒன்றின் பின் ஒன் றாகச் செய்யும் முறை.
sequential access storage - வரிசை அணுக்கச் சேமிப்பு : இது ஒரு சேமிப்புக் கருவி யமைப்பு. இதில் தகவல்கள் அவை சேமிக்கப்பட்ட வரிசை யிலேயே அணுகப்படும். serial - தொடர் : வரிசையில் கட்டளைகள் அல்லது தகவல் இனங்களைக் கையாளல்.
serial access - தொடர் அணுக்கம் : தொடர் முறையில் தகவல் இனங்களைப் பெறும் முறை.
serial memory - தொடர் நினைவகம் : கணிப்பொறி நினை வகம். இதில் தகவல்கள் முதலில் சேமித்தவாறே கிடைக்கும்.
serial programming - தொடர் நிகழ்நிரலாக்கல் : கணிப்பொறி களில் ஒரு சமயம் ஒரு செயலை நிறைவேற்றும் நிகழ்நிரல்.
server - பணிப்பி : இது இணையப் பக்கத்தை (web. page) அமைத்தலில் வருவது. எச்டிஎம்எல் குறிமையைக் கொண்டது. அதற்குரிய இடம் இதில் இருக்கும்.
serviceability - பணித்திறன் : புறத்திண்மையுள்ள முறையின் அடிப்படையில் அமைந்த நம்பு மையுள்ள கருவித் தொகுதி.
service provider - பணியளிப்பி : இணையம், தொலை பேசி. .
service routines,- பணி நடைமுறைகள் நடைமுறைச் செயல்கள். இவற்றின் நோக்கம் இதுவே. கணிப்பொறிச் செயல் மற்றும் பேணுகை தொடர் பான எல்லா வேலைகளையும் நிறைவேற்றல்; நிகழ்நிரல் களைத் திருத்தலும் தயாரித்தலும். இச்செயல் முறைகள் பின் வருமாறு. பொதுநோக்க நிகழ்நிரல்களில் Self 197 - sig அமைபவை. சேமிப்பிலுள்ள ஒன்றிற்கு
1) நிறைவேற்று நடைமுறைகள் | மேற்பட்ட பிட்டுகளை இடம்
2) தொகுப்பிகள் 3) இயற்றிகள் 4) கோவையாக்கிகள் 5) பிழைநீக்கு நடைமுறைகள் 6) குறைநீக்கு நடைமுறைகள் 7) உட்பலன்/ வெளிப்பலன் நடைமுறைகள்
servo-mechanism - முடுகக்கு பொறிநுட்பம் : மின்னாற்றல்
இயங்கும் கருவியமைப்பு. இது
கணிப்பொறிச் செயல்களைக் கட்டுப்படுத்துவது.
set - அமை : சேமிப்பு அமைப் பிடத்தில் விரும்பிய மதிப்பை வைத்தல்.
set pulse - அமைதுடிப்பு : ஒரு பிட்டை அமைக்கும் பண் புள்ள துடிப்பு
set up time - அமைவு நேரம்: கணிப்பொறி இயங்குவதற்கு முன்பும் பின்பும் இடையிலும் உள்ள நேரம். இதில் கையால் செய்யும் வேலைகள், நிறை வேற்றப்படும் நாடாச் சுருள் களை மாற்றல்.
shared data base - பகிர்வு தகவல் தளம் : பயனாளிகள் பலரும் தகவல்களை ஒரு வருக்கு மற்றொருவர் பகிர்ந்து கொள்ளும் தகவல்தளம்.
shift-இடப்பெயர்வு : பதிவகத் தில் பெருக்க அல்லது வகுக்கச்
வலமாக மாற்றும் செயல்.
shift register- இடப் பெயர்வு பதிவகம் : இதில் சேமித்த தகவல்கள் இடம் வலமாக மாறும்.
shortcuts - குறுக்கு வழிகள்
இவை பயன்பாடுகளுக்கு உதவு பவை. இருவகை.
1) விசைப்பலகைக் குறுக்கு வழிகள். 2) மேடைக் குறுக்கு வழிகள்.
SIG - special interest group. எஸ்ஐஜி : தனி நாட்டக் குழு.
SIGGRPH - Special Interest Group for Graphics. சிக்கர்ப் : வரைகலை தனி நாட்டக் குழு. கணிப்பொறி வரைகலை மேம்பாட்டுக்காகப்
பாடுபடும் பொதுநல அமைப்பு. signal - குறிகை : ஒரு வலை யமைவில் செல்லும் மின் துடிப்பு. இது பிட்டுகளைக் குறிக்கப் பயன்படுவது. இப் பிட்டுகள் தகவல்களைக் குறிப்
signal distance - குறிகை தொலைவு : ஒரே நீளமுள்ள இரண்டு இருமச் சொற்கள் ஒத்த பிட் நிலைகள் எண் ணிைக்கையில் வேறுபடுதல் எடு ஒன்றை மற்றொன்று தொட sig
198
sim
ரும். இரண்டு இரு 6 பிட் சொற்களுக்கிடையே உள்ள குறிகைத் தொலைவு3.
signalling rate- குறிகை வீதம்: ஒரு தகவல் தொடர்புத் தொகுதியில் குறிகைகள் செலுத்தப்படும் அளவு. ஒரு வினாடிக்கு இத்தனை பிட்டு கள் அளக்கப்படுவது.
sign bit - குறிப் பிட் : ஒரு தனி பிட்டைக் கொண்டது.
sign bit extension - தனிபிட் விரிவு : இது கணிப்பொறியில் எண்களின் குறியை +/- ஐக் குறிக்கப்பயன்படுவது. குறி யீட்டின் மதிப்பு 1 என்றால் அது எதிர்க்குறி (-) எண்ணை யும் 0 என்றால் நேர்க்குறி (+) எண்ணையும் குறிக்கும்.
sign digit-குறி இலக்கம் : இது ஒரு மதிப்புப் புலம் அல்லது சொல்லின் இறுதியில் இயல் பாக இருக்கும் உரு. மதிப்பின் இயற்கணிதக் குறியைக் குறிக் கப்பயன்படுவது.
significant digits - சிறப்பு இலக்கங்கள் : ஓர் எண்ணின் இலக்க நிலைகள். இவற்றின் மதிப்புகள் தெரிந்தவை. எண் னின் துல்லியத்திற்குப் பொருத் தமானவை.
significant figures - சிறப்பு எண்கள் : ஓர் எண்ணிலுள்ள இலக்கங்களின் எண்ணிக்கை. மேலும் பயன்படுத்துவதற் கேற்ற பொருள் உள்ளவை.
பொதுவாகக் கணிப்பொறிக் கணக்கீடுகளில் எண்கள் முழு மை ஆக்கப்படும் எ-டு 12345 6789, இது நான்கு சிறப்பெண் களைக் கொண்டதாக இருக் கும். 1234.
silicon chip - சிலிகன் நறுவல், : இது ஒரு கருவியமைப்பு. அலோக அரைகுறை கடத்தி சிலிகன் கூறைக் கொண்டது. ஒருங்கிணை சுற்றிணைக் கொண்டது. அளவு மிக மிகக் குறைந்திருக்கும். குறைந்த விலை உயர் விரைவுச் செயல் திறன்.
simple combo box - எளிய கூடுகைப் பெட்டி : இது தன் பட்டியல் பெட்டியை வெளிப் படுத்தாது. இதற்கு இதன் உயரப் பண்பை உயர்த்த வேண்டும்.
simplex - தனிப் பகுதி : இது ஒரு தகவல் தொடர்பு வழி. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஒரே திசையில் மட்டும் தகவலை எடுத்துக் செல்வது.
simple list box - எளிய பட்டியல் பெட்டி : இது பட்டியலைக் காட்டப் பயன் படுவது. இதிலிருந்து பயனாளி ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் இனங்களைத் தேர்ந்தெடுக் கலாம். இதற்கு விஷ வல் பேசிக் உதவும்.
simulator - பகர்ப்பி : இது ஒரு மென்பொருள் அல்லது வன் பொருள் தொகுதி. ஒரு உண் sim
199
sa
மைச் செயலைப் பகர்ப்பு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.
simulation routine - பகர்ப்பு நடைமுறை வேறுபட்ட கணிப்பொறிகளை இயக்க ஒரு கணிப்பொறியில் நிகழ்நிரல் களை உதவுமாறு வடிவமைக் கப்பட்ட விளக்கும் நடைமுறை. -
simultaneity - ஒழுங்கு நிகழ் திறன் : இதில் ஒரு நிகழ்நிரலி லுள்ள செயல்கள் ஏனைய செயல்களோடு ஒரு சேர நடைபெறுமாறு செய்ய இயலும்.
simultaneous access - ஒருங்கு நிகழ் அணுக்கம் : இதில் தகவல் சேமிக்கப்படு கிறது அல்லது மீட்கப்படு கிறது. தகவல் தொகுதியின் அனைத்துக் கூறுகளையும் ஒரு போக்காக மாற்றி இதைச் செய்யலாம்.
single address instruction - ஒற்றை முகவரிக் கட்டளை : ஒரு செயலிட முகவரி கொண்ட கட்டளைப் படி வமைப்பு கொண்டது.
single biterror - தனிபிட்டு பிழை : இது ஒரு தகவல் செலுத்துபிழை. இதில் ஒரு வரிசையிலுள்ள ஒரு தனிப் பிட் தலைகீழாகும்: 0 ஒன் றாகும்; 1 சுழியாகும்.
single board computer - ஒற்றைப் பலகைக் கணிப் பொறி : இது ஒரு முழுமை யான கணிப்பொறி. இதில் ஆர்ஓஎம், ஆர்ஏஎம், சிபியூ ஐ/ஓ இடைமுகம் ஆகியவை இருக்கும். ஒரு தனி அச்சுச் சுற் றுப் பலகை பொருத்தப்பட்டுத் தொழிற்சாலைக் கட்டுப் பாட்டுப் பயன்களுக்குப் பயன் படுவது.
size attribute - அளவு இயல்பு : எச்டிஎம்எல் வேறுபட்ட ஏழு எழுத்து அளவுகளில் பாடத் தைக் காட்ட உதவுவது. மிகச் சிறிய அளவு 1,பெரிய அளவு 7.
sizing - அளவிடல் : ஒரு தகவல் முறையாக்கும் செயலைச் செய்யத் தேவைப்படும் மூலங் களையும் வசதிகளையும் மதிப் பிடல். பயனாளியின் தேவை களுக்கு ஏற்ற செலவில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய லாம்.
skeletal code - தட்டிக் குறி மை : முழுமையற்ற கட்ட ளைத் தொகுதி. ஒரு பொது நடை முறையின் பகுதியாக அமைவது. சுட்டளவுகளால் நிறைவு பெறுவது.
skip - தாவல் : இது ஒரு கணிப் பொறிக் கட்டளை. இதில் தாவலைத் தவிர வேறு ஒரு கட்டளையும் நடைபெறு வதில்லை. வரிசையிலுள்ள அடுத்த கட்டளையைத் தொடங்க நடைபெறுவது.
slave - அடிமை : மற்றொரு கருவியமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் கருவியமைப்பு.
slider - நழுவி : உரையாடல் பெட்டியில் உள்ளது. ஒரு முள்ளை நகர்த்தி, அதன் மூலம் ஓர் அளவினைக் குறிப்பது.
slot - காடி : நுண்கணிப்பொறியின் விரிதிறன். குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக இதில் சுற்றுப்பலகைகள் சேர்க்கப்படும். இந்தப் பலகைகளைக் கையாளும் கொள்கலமே இக் காடி.
slow storage - மெதுச் சேமிப்பு : நீண்ட அணுக்க நேரமுள்ள சேமிப்பு வேறு பெயர் மெது நினைவகம்.
slow time scale - மெது நேர அளவுகோல் : நடைமுறை இயல்பு முறையிலுள்ள அலகு நேரத்தைக் காட்டிலும் கூடுதலாக உள்ள நேர அளவு கோல்.
small scale integrated units - சிறு அளவு ஒருங்கிணை அலகுகள்.
small tag - சிறிய ஒட்டு : <SMALL> tag. இது பெரிய ஒட்டைப் போன்றது. சிறிய அளவு எழுத்தில் பாடத்தைக் காட்டுவது. இது எப்பொழுதும் முடிவு ஒட்டு <SMALL> உடன் இணைந்தே வரும்.
smash - தகர் : ஒரு நிகழ்நிரலின் மீது மற்றொரு நிகழ்நிரலை எழுதி அழித்தல்.
SNOBOL, single oriented symbolic language - ஸ்னோபால் : ஒற்றை நோக்கக் குறிமொழி ஒநோகுமொ. உயர் நிலை நிகழ்நிரல் மொழி. உருச்சரங்களைக் கையாளப் பயன்படுவது.
soft copy - மென்படி : இது ஒரு கணிப்பொறியின் வெளிப் பலன்; காட்சித் திரையில் தோன்றுவது.
soft error - மென்பிழை ; நிலையற்றதும் முன்கூட்டியே கூற இயலாததுமான பிழை. மென் பொருளோடு தொடர்புள்ளது.
software - மென்பொருள் : இது கட்டளைகளையும் நிகழ்நிரல் களையும் குறிக்கும். இவை கணிப்பொறி செய்ய வேண்டியதைச் சுட்டுபவை. ஒ. hardWare
software engineer - மென் பொருள் பொறியர் : மென் பொருள் வல்லுநர்.
software interface - மெனபொருள் இடைமுகம் : இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம். soft
201
SOWI
software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை மதிப்பிடும் தொகுதி.
software multiplexing - மென் பொருள் பன்மமாக்கல் : இது ஒரு செய்முறை. பன்ம நிகழ் நிரல் முறையில் அல்லது நேரப் பகிர்வில் பயன்படுவது.
software packages - மென் பொருள் அடைப்பங்கள் : இவை பல. இவற்றை எச்டிஎம் எ ல் உருவாக்க உதவுவது. இவை தாமாகவே நம்மிட முள்ள பாடத்தை எச்டிஎம்எல் குறி முறையாக மாற்றும். எ-டு
மைக்ரோசாஃப்ட் 97, பிரண்ட் |
பேஜ், நைட்ஸ்கேப் கம்போசர். காட்டாக, மைக்ரோசாஃப்ட் 97 ஐப் பயன்படுத்தி நாம் பாடத் தை வடிவமைத்து அச்சியற்ற லாம். அந்த ஆவணத்தைப் பின் எச்டிஎம்எல் ஆவண மாகச் சேமிக்கலாம்.
solid state computer - திண்ம நிலைக் கணிப்பொறி : அரை குறைக் கடத்திகளைக் கொண் டுள்ள பகுதிகளையும் சுற்று களையும் கொண்டு அமைக் கப்பட்ட கணிப்பொறி.
solid state memory - திண்ம நிலை நினைவகம் : இதன் கூறுகள் ஒருங்கிணை சுற்று கொண்ட இருநிலை பன்ம அதிர்விகளுடன் கூடியவை. இந்தினைவகத்தில் தகவல்கள் இருநிலைகளில் ஏதாவது ஒன்றில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.
sophisticated vocabulary - நேர்த்தியான சொல்வளம் : மேம்பட்டதும் விரிவானது மான சொல்தொகுதி. சிக்க லான செயல்களையும் செய்ய உதவும்; கணிப்பொறியில் அமைந்துள்ளது.
sorting - பிரிப்பு : இனங் காணும் முறைப்படி தகவல் இனங்களை ஒழுங்கு செய்தல். இனங்காண் எண், அகரவரிசை எண், தகவல் தளத்தைக் கை யாளும் முறைகளில் ஒன்று. மேலும், பணிக் குழுவினர் பட்டியல், வெற்றி பெற்ற மற்றும் தோல்வியுற்ற மாண வர்களின் எண்ணிக்கை முதலி யவற்றையும் பிரித்து அறிய லாம்.
sound files - ஒலிக் கோப்புகள்
- பல படிவமைப்புகளில் கணிப்
பொறியில் இக்கோப்புகள் சேமித்து வைக்கப்பட்டிருக் கும். இவற்றில் மிகப் பரவலாக உள்ளது அலைப்படிவமைப்பு, அடிப்படை ஒலிப்படிவ மைப்பு, மிடி படிவமைப்பு.
source address - மூல முகவரி : இரு முகவரிக் கட்டளையில் முதல் முகவரி. இரண்டாவது முகவரி இறுதியிட முகவரி. SOU
202
spe
source computer - மூலக் கணிப்பொறி : மூல நிகழ் நிரலைத் தொகுக்கும் கணிப் பொறி. இது பொருளறி கணிப் பொறியுடன் சேர்ந்து நடை பெறும். பிந்திய கணிப்பொறி பொருளறி நிகழ்நிரலைக் கொண்டது.
source data entry - மூலத் தகவல் பதிவு : மூலத்திலிருந்து நேரடியாகத் தகவல்களைக் கணிப்பொறியில் சேர்த்தல்.
source document - மூல
ஆவணம் : முதல் ஆவணம்.
இதிலிருந்து தகவல்கள் கணிப் பொறி ஏற்றுக் கொள்ளக் கூடிய வடிவில் உருவாக்கப் படும்.
source language - மூல மொழி: இது ஒரு நிகழ்நிரல் மொழி. கணிப்பொறியின் வன்பொருள் இதை நேரடியாக முறையாக்க இயலாது. பொருள் நிகழ்நிரல் தொகுப்பு இதற்குத் தேவை. இந்நிகழ்நிரல் எந்திர மொழி யில் கட்டளைகளைக் கொண்' டிருக்கும். இதைக் கணிப் பொறி நேரடியாக அறியவல் லது. எ.டு கோபல் ஆல்கால், போர்ட்ரான், பிஎல்/.
source library - மூல திரட்டகம்: தொகுப்பு மொழியில் உள்ள கணிப்பொறி நிகழ்நிரல் களின் திரட்டு.
source programme -மூல நிகழ் நிரல் : முதல் மொழியில் எழுதப்பட்ட நிகழ்நிரல்.
space - இடம் : இருமி 0 அல் லது மின்னழுத்தம் இல்லை
spacing - இடைவெளி விடுதல் : இது இருவரிகள் அல்லது பத்திகளுக்கிடையே இடம் விடுதல். இதை வேண்டிய அளவுக்கு மாற்றலாம்.
special characters- சிறப்புருக்கள் : உருத் தொகுதியிலுள்ள உருக்கள். இவை எழுத்துகளோ எண்களோ அல்ல, எ-டு. !.,@
Special Interest Group, SIG - தனி நாட்டக்குழு, தநாகு : கணிப்பொறி வரைகலை, தொலை இயக்குவியல், கல்வி, தொழில் முதலியவை பற்றி மக்கள் கூடிக் கலந்துரையாடிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுதல்.
special purpose computer - சிறப்பு நோக்கக் கணிப்பொறி
- குறிப்பிட்ட வகைச் சிக்கல்
களுக்கு மட்டுமே தீர்வு காண வடிவ ைமக்கப் பட்டுள்ள கணிப்பொறி,
special purpose language - சிறப்பு நோக்க மொழி : குறிப் பிட்ட வகைச் சிக்கலுக்கு மட்டுமே தீர்வுகாண வடிவ மைக்கப்பட்ட மொழி.
specific routine - சிறப்பு நடை முறை : கணிப்பொறி நடை முறை; குறிப்பிட்ட தகவல் spe
203
sta
கையாளும் முறைச் சிக்கலைத் தீர்க்க உதவுவது. இதில் ஒவ்வொரு முகவரியும் கூறப்பெற்ற பதிவகங்களையும் இடங்களையும் குறிக்கும்.
Speech Synthesis - பேச்சுத்தொகுப்பு: ஒலிக்கோலத்தை நுண்முறையாக்கிக் கட்டுப் பாட்டில் வைத்து இதை உருவாக்கலாம். இதனால் மனிதக் குரல் உண்டாகும்.
Spelling Checker - பிழைச் சரிபார்ப்பி: இது மென்பொருள் பாடக்கோப்பில் ஒவ்வொரு சொல்லின் எழுத்து சரியாக உள்ளதா என்று பார்க்கும். இக்கோப்பு அகராதியுடன் இணைந்திருக்கும்.
Spelling Mistakes - எழுத்து பிழைகள்: இவற்றைத் தட்டச்சு செய்யும் பொழுதும் அல்லது முழு ஆவணமும் தட்டச்சு செய்யப்பட்ட பின்பும் திருத்தலாம்.
Spool - வட்டு: தாள்நாடாக்களுள் உருளும் அமைப்பு.
Spread Sheet: விரிதான் எண்களைக் கையாளும் ஆற்றல் வாய்ந்த கருவி, நேரத்தை மிச்சப்படுத்துவது. கணிதப் பிழைகளைத் தவிர்ப்பது. தனி யாள் கணிப்பொறிப் பயன்பாட்டில் புரட்சி உண்டாக்கியது.
Spread Sheet Applications -விரிதாள் பயன்பாடுகள்: 1) சம்பளப்பட்டி தயாரித்தல் 2) வருமானவரி கணக்கீடுகள் செய்தல் 3) பட்டியல்கள் தயாரித்தல் 4) கணக்கு அறிக்கைகள் உருவாக்கல் 5) பொருள் பட்டியல் கட்டுப்பாடு 6) ஆக்கச் செலவுப் பகுப்பு 7) ஒப்பந்தப்புள்ளி மதிப்பீடு 8) மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளைப் பகுத்துப்பார்த்தல் Spread Sheet, Structure Of - விரிதாளின் அமைப்பு: பா. electronic spread sheet.
Squeezed Files, SQ - பிழிவு கோப்புகள், பிகோ: இயல்பான கோப்புகளைக் குறிப்பது. பிழிவைப் பயன்படுத்தி நன்கு அமைக்கப்படுவது. இதைப் பிழியாமலும் செய்யலாம். இடத்தைக் குறைக்கும், மாற்று வகை நேரத்தைக் குறைக்கும்.
SQL - எஸ்குயுஎல்: இது ஒரு தனிவினவுமொழி. தகவல்களை வண்ணனை செய்து தகவல் தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளுவது. சில சமயங் களில் தகவல் தள மேலாண் தொகுதியைத் தகவலுடன் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு அறிவுறுத்துவது. stack - அடுக்கு : நினைவிடங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ள தொகுதி. இதில் இறுதியில் வந்தது இறுதியில் செல்ல வேண்டும் என்னும் அடிப்படை கொண்டது. இதில் வரிசைமுறையில் சேமிக்கப்படும் தகவல்கள் சில சார்புகளுக்குத் தேவை. பா. Last in first out.
stacker - அடுக்கு : துளையிட்ட அட்டைகளைக் கொண்ட கொள்கலம்.
stack operation - அடுக்குச் செயல் : கணிப்பொறித் தொகுதியைக் குறிப்பது. இதில் கொடிகள், திரும்பு முகவரி மற்றும் தற்காலிக முகவரிகள் உள்ளகத்தில் வரிசை முறையில் சேமித்து வைக்கப்படும்.
staging - அசைத்தல் : ஒரு சேமிப்புக் கருவியமைப்பிலிருந்து மற்றொரு சேமிப்புக் கருவியமைப்புக்குத் தகவல் தொகுதியை நகர்த்தல்.
standard bus - திட்டப் போக்கு வாய்.
standard code sets - திட்டக் குறிமைத் தொகுதிகள் : தேசிய மற்றும் அனைத்துலக அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட குறிமைத் தொகுதிகள் எடுத்துக்காட்டு : அன்சை, சிசிஐடிடி.
standard interface - திட்ட இடைமுகம் : இது ஒரு வன்பொருள் தொகுதி. வெளிப்புற அலகுகளை மைய முறையாக்கியுடன் இணைப்பதற்குரிய உட்பலன் / வெளிப்பலன் வழிகளையும் திட்ட முறைமைச் சுற்றுகளையும் அளிப்பது.
standardization - தரப்படுத்தல் : அளவைசெய்தல். ஓர் எண்ணின் மிதப்புப்புள்ளிக் குறியிடலை மாற்றீடு செய்யும் முறை. அதன் இயல்பான வடிவத்தினால் இதைச் செய்யலாம்.
standard modules - திட்ட அலகுகள் : இவை மாறிலிகள், மாறிகள், செய்முறைகள் ஆகிய எல்லாவற்றின் அலகு மட்ட அறுதியீடுகளைக் கொண்டவை.
Star Office - ஸ்டார் ஆபீஸ் : இது பல பயன்பாடுகளைக் கொண்டது. இவை எல்லாம் ஒருங்கிணைந்த சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நாம் பலகாரியங்களைச் செய்யலாம். இவற்றின் வேலைகளில் சில பின்வருமாறு.
1) ஸ்டார் ரைட்டரைப் பயன்படுத்திப் பாட ஆவணங்களை உருவாக்கும்.
2) ஸ்டார்சால்கைப் பயன்படுத்தி விரிதாள்களை உருவாக்கும்.
3) ஸ்டார்பிரசைப் பயன்படுத்தி அளிப்புகளை உண்டாக்கும்.
4) ஸ்டார் டிராவைப் பயன்படுத்தி வரையவல்லது.
5) ஸ்டார்பேசைப் பயன்படுத்தித் தகவல் தளத்தை உருவாக்குவது.
இதன் பயன்பாடு வேறுபட்ட இயங்கு தொகுதிகளில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்டது. இதைத் தொடங்கல்
click Start → Programs → Star office
start bit - தொடங்கு பிட் : இதன் வேலை ஓர் உரு (ஒரு பைட்) தொடங்குவதைக் காட்டுவது. இத்தொடக்கம் ஒத்திசையாத் தகவல் செலுத்துகையில் இருக்கும்.
STAT - status - நிலை.
statement - கூற்று : மூல மொழிக் கட்டளை, ஒரு தொகுப்பியில் உட்பலனாகச் செல்லும் எந்த வெளிப்பாட்டையும் குறிப்பது, இதில் விளக்கக் கூற்றுகள், தொகுப்பின் செயலைக் கட்டுப்படுத்தும் கட்டளைகள் ஆகியவை அடங்கும்.
statement, kinds of - கூற்று வகைகள் : இவை பின்வருமாறு.
1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை.
2) விளக்கக் கூற்றுகள்.
3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (முழுஎண், மிதப்பு...), பின் கோவை மதிப்பிடப்படும், ஒதுக்கீடு செய்யப்படும்.
4) கலப்பு முறைக் கூற்றுகள் : மேற்கூறிய இரண்டும் வகையில் வேறுபடும் பொழுது, அது கலப்புமுறை கூற்று எனப்படும். இந்நிலையில் வலப்பக்கக் கோவை தன் சொந்த முறையிலேயே மதிப்பீடு செய்யப்படும். முடிவு இடப்பக்க மாறியாக மாற்றியமைக்கப் பட்டு, ஒதுக்கீடு செய்யப்படும்.
statement number - கூற்று எண் : ஒவ்வொரு கூற்றுக்கும் ஒதுக்கப்படும் தொடர் எண். மூல மொழியில் எழுதப்படும் நிகழ் நிரலில் உள்ளது இது.
staticiser - முறைமையாக்கி : ஒன்றன் பின் ஒன்றாக வரும் குறிகைகளை மாற்றும் முறைமைக் கூறு.
static memory - நிலை நினைவகம் : இது வரம்பிலா அணுக்க நினைவகம் மின்னாற்றல் இருக்கும் வரை இங்குத் தகவல் இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிது. ஆனால், செலவு அதிகம், நெருக்கம் குறைவு, அதிக ஆற்றல் தேவை. இது இயக்க நினைவகத்திற்குக் குறைவு.
static turtle - நிலை ஆமை : லோகோ மொழியில் கூற, இதற்கு நிலைத்த இடநிலை உண்டு. இது ஒரு குறிப்பியே. முள், இடது என்னும் கட்டளைகளுக்குத் துலங்கும்.
stationery - எழுதுபொருள் : அச்சிடப்படவேண்டிய தாள். இதன் மீது அச்சியற்றி அச்சுப் பதிவை ஏற்றும்.
statistical multiplexor - புள்ளி இயல் பன்மமாக்கி : நேரப் பிரிவுப் பன்மமாக்கியின் பதிப்பைக் குறிப்பது.
status word - நிலையுள்ள சொல் : வெளிப்புற அலகின் நிலைமை குறித்த செய்தியைக் கொண்ட சொல். எடுத்துக்காட்டு : எச்சரிக்கைச் செய்தி.
step change - படிநிலை மாற்றம் : ஒரு தனி உயர்வு புறக்கணிக்கும் நேரத்தில் நடைபெறும் பொழுது ஒரு மதிப்பிலிருந்து மற்றொரு மதிப்புக்கு ஏற்படும் மாற்றம்.
step counter - படிநிலை எண்ணி : கட்டளைகளில் படி நிலைகளை எண்ணும் கருவி. எடுத்துக்காட்டு : வகுத்தல், பெருக்கல், இவற்றிற்குத் தனித் தொடர் செயல்கள் தேவை.
steps in C programme - சி நிகழ்நிரலில் படிநிலைகள் : இவை பின்வருமாறு.
1) தலைப்புப் பகுதி.
2) வகை அறுதியிடும் பகுதி.
3) ஆணைப் பகுதி.
step statement - படிநிலைக் கூற்று : ஓர் அடுக்கில் உள்ள சில எண்கள் அல்லது கூறுகள் தாவச் செல்ல உதவுவது.
stop bit - நிறுத்து பிட் : ஒத்திசையாத் தொடர் செலுத்துகையில், ஒவ்வொரு உருவின் முடிவில் வரும் பிட்.
storage - சேமிப்பு : கருவியமைப்புகள் தகவல்களைத் தேக்கி வைத்தல்.
storage allocation - சேமிப்பு ஒதுக்கீடு : குறிப்பிட்ட வகைத் தகவல்களுக்குக் குறிப்பிட்ட பகுதிகளை ஒதுக்கும் முறை. ஒரு நிகழ்நிரலை உருவாக்கும் பொழுது நிறைவேற்றப்பட வேண்டிய வேலைகளில் ஒன்று இச்சேமிப்பு ஒதுக்கீடு. தொகுப்பியின் செயல்களில் ஒன்று பலவகைத் தகவல்களுக்கும் ஒதுக்கப்பட்ட பகுதிகளைச் சுட்டிக்காட்டுவது ஆகும்.
storage capacity - சேமிப்புத் திறன் : ஒர் ஊடகத்தின் ஓர் அலகில் சேமித்து வைக்கப்படும் தகவல்களின் மொத்த அளவு. ஊடகங்களை மாற்றாமல் தொகுதியை மதிப்பீடு செய்யலாம்.
storage cell - சேமிப்புக் கலம் : சேமிக்கலம். ஒரு சேமகத்தின் மிகச்சிறிய இயல்கூறு. எடுத்துக்காட்டு : உள்ளகச் சேமிப்பில் ஒரு தனி உள்ளகம்.
storage cycle - சேமிப்புச் சுழற்சி : ஒரு சுழற்சிச் சேமகத்தில் கொடுக்கப்பட்ட இடம் மதிப்பிடப்படும் பொழுது நேரங்களுக்கு இடையே உள்ள அளவு.
storage media - சேமிப்பு ஊடகங்கள் : தகவல்களைத் தேக்கும் கருவிகள். எடுத்துக்காட்டு : வட்டு, பேழை, நாடா.
storage networking - சேமிப்பு வலையமைவுப் பணி : இது ஒரு புது நுணுக்கம். இங்குத் தகவல் நன்மை தரும் தொழில் ஆதாயமாகும். இதைச் சேமித்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
store - சேமகம் : கிடங்கு தகவலைப் பெற்றுத் தேக்கி வைக்கும் ஊடகம் அல்லது கருவியமைப்பு.
stored programme - சேமித்த நிகழ்நிரல் : உருவாக்கப்படும் நிகழ்நிரல் அழியாமல் இருப்பது. இன்று இது எல்லாக் கணிப்பொறிகளிலும் உள்ளது.
STPI, Software Technology Park of India - எஸ்டிபிஐ, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, இமெதொபூ : இது 1990 இல் நிறுவப்பட்டது. தகவல் தொழில் நுட்ப இயல் அமைச்சகக் கட்டுப்பாட்டில் உள்ளது. முழுதும் தன்னாட்சியுள்ள அமைப்பு.100 விழுக்காடு ஏற்றுமதி வழியமைந்த திட்டத்தைக் கொண்டது இது; இதில் மென்பொருள்கள் அடங்கும். இவை ஏற்றுமதி செய்யப்படுபவை.
streaming - ஓடவிடல் : காந்த நாடாவில் விரைவாகப் பதிவு செய்யும் நுணுக்கம்.
stream - oriented data bus - உயர்நிலை வழித்தகவல் கோப்புகள் : தகவல் கோப்புகளில் ஒருவகை. இவை மேலும் இரு வகைப்படும்.
1) பாடக் கோப்புகள் : இவற்றில் உருக்கள் அடுத்தடுத்து இருக்கும். வேறுபெயர் உயர்நிலைக் கோப்புகள்.
2) தாழ்நிலைக் கோப்புகள் : இவை பாடக் கோப்புகளை விட விரைவானவை. பா. data files.
string - சரம் : உருக்கள் ஒழுங்காகவும் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தும் இருக்கும் சரடு, எடுத்துக்காட்டு : தகவல் என்னும் சொல் 4 உருச்சரம் கொண்டது. String. h என்பது அடிக்கடிப் பயன்படும் இன்றியமையாச்சார்பு.
structured language - கட்டமைப்பு மொழி : இது ஒரு கணிப்பொறி மொழி. கட்டமைப்புள்ள நிகழ்நிரல் நுணுக்கங்களை வளர்ப்பது. இதற்குச் செயற்கைச் சொல்வளமும் இலக்கணமும் பயன்படும்.
structured programming - கட்டமைப்பு நிகழ்நிரல் : நிகழ்நிரலுக்குப் பயன்படும் முறை இயல். தொடர்நிலைகளில் நிகழ்நிரல் பணிகளை விளக்க முறையான செய்முறை பயன்படும்.
structures - அமைப்புகள் : வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது சி மாறி போன்று நடப்பது. கட்டமைப்புக்குள் ஏனைய சி மாறிபோலக் குறிப்பிடப்படும். ஒவ்வொரு உறுப்பும் படிக்கப்பட்டுத் தனி தகவல் இனமாக அச்சிடப்படும். பொதுவாக, அமைப்புகள் பெரும் நிகழ்நிரல்களில் சிக்கலான தகவல்களை ஒழுங்கு செய்யப் பயன்படுபவை. பா. control structures.
STRUDL, Structural Design Language - ஸ்ட்ரடல் கட்டமைப்பு வடிவமைப்பு மொழி : அமைப்புகளைப் பகுக்கவும் வடிவமைக்கவும் பயன்படுவது.
stylus - எழுதுகூர் : தூவல் போன்ற கருவியமைப்பு. வரைகலைக் கல்லோடு பயன்படுவது.
stylus printer - எழுதுகூர் அச்சியற்றி : இதில் ஒவ்வொரு உருவும் புள்ளிக் கோல வடிவத்தைப் பெறும். இப்புள்ளிகள் எழுதுகூரினால் உண்டாக்கப்படும். வேறுபெயர் கம்பி அச்சியற்றி.
subscript - கீழ்க்குறி : இயல்பான எழுத்து வரிக்குக் கீழ் அச்சிடப்படும் உருக்கள். எடுத்துக்காட்டு : A1 + B2. ஒ. super script.
subscripted variables, rules for - கீழ்க்குறி மாறிகளுக்குரிய விதிகள் : இவை பின்வருமாறு.
1) கீழ்க்குறி எப்பொழுதும் ஒரு முழு எண்.
2) கீழ்க்குறி மதிப்பு எதிர்மறையாக இருக்க இயலாது.
3) மாறியின் பெயருக்குப் பின் சதுர அடைப்புகளில் கீழ்க்குறி குறிப்பிடப்பட வேண்டும்.
4) ஒன்றுக்கு மேற்பட்ட கீழ்க்குறிகள் இருக்குமானால், அவை தனிப்பட்ட சதுர அடைப்புகளில் குறிப்பிடப்பட வேண்டும்.
subset - உட்கணம் : இனங்காணக்கூடிய தகவல் இனத் தொகுதி. இவை பெருந்தொகுதி சார்ந்திருக்கும்.
subtracter - கழிப்பி : இலக்கக் குறிகைகளைப் பயன்படுத்திக் கழித்தலைச் செய்யுங் கருவி.
Sujatha - சுஜாதா : இயற்பெயர் ரங்கராஜன், புனைபெயர் சுஜாதா. புகழ்வாய்ந்த எழுத்தாளர், பொறியர், அறிவியல் கதைகள் எழுதுபவர், தமிழ் இணைய-99 மாநாட்டின் வரவேற்புத் தலைவர். தம்முடைய எழுத்துகளை மின்னம்பலம் மூலம் வெளியிடுபவர். இணைய வளர்ச்சியில் ஆர்வத் துடன் பாடுபடுபவர்.
suite - நிரல்தொகுதி : ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புள்ள நிகழ்நிரல்களின் எண்ணிக்கை. இயக்கு வேலையாக இவை ஒன்றன்பின் ஒன்று செல்லும்.
summary - கருத்துச் சுருக்கம் : இது ஓர் அறிக்கை, அளிக்கப்பட்ட தகவல்களிலிருந்து குறிப்புகளைப் பெறுவது.
superscript - மேற்குறி : இயல்பான எழுத்து வரிக்குமேல் அச்சிடப்படும் உரு. எடுத்துக்காட்டு : X2 + Y4.
supervisory programme - மேற்பார்வை நிகழ்நிரல் : இது ஒரு முதன்மை நிகழ்நிரல் கணிப்பொறியின் நினைவகத்தில் நிலையாக இருப்பது. நேரப்பகிர்வு, உட்பலன் / வெளிப்பலன் / பன்ம நிகழ் நிரல் சார்புகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது. கணிப்பொறியின் இன்றியமையாத பகுதியாக இருந்தாலும், வன்பொருள் பகுதியாகவே கருதப் படுவது.
support - ஆதரவு : வாடிக்கையாளரின் உறுதிமொழி. இதில் உதவியும் வழிகாட்டலும் அடங்கும். கணிப்பொறிப் பயிற்சியில் வாங்கிய மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்தது.
surge - மின் எழுச்சி : மின் சுற்றில் ஏற்படும் மின்னோட்ட மாற்றம். இதனால் நுண்கணிப் பொறியும் அதன் வெளிப்புறப் பகுதிகளும் தவறான முடிவுகளைக் கொடுக்கும். அல்லது வேலை செய்வதை நிறுத்தும்.
surge protector - அலை எழுச்சிப் பாதுகாப்பி : சுவர்க் கூட்டில் பொருத்தி இருக்கும் கருவியமைப்பு. மாறுதிசை மின்னோட்ட வரி எழுச்சிகளிலிருந்து நுண் கணிப்பொறிகளைப் பாதுகாப்பது.
surveillance - கண்காணிப்பு : ஒரு மூலத்தை மென்பொருள் மூலம் கண்காணிக்கும் முறை.
switch - சொடுக்கி : 1) ஒரு பிட்டின் நிலையை 1-0, 0.13 க்கு மாற்றும் பொத்தான். 2) நிகழ்நிரல்களைக் கட்டளை. இது பல மாற்றுவழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது.
symbolic address - குறியீட்டு முகவரி : ஒரு முகவரி கொள்ளும் மூலமொழி வடிவம். இதில் நிகழ்நிரலர் தேர்ந்தெடுக்கும் ஒரு தலைக்குறியம், இதைக் குறிக்கும். முகவரி தனி. முகவரியாக மொழிபெயர்க்கப்படும். இப்பொழுது நிகழ்நிரல் தொகுக்கப்படும்.
symbolic language - குறியீட்டு மொழி : கணிப்பொறிக்குரிய கட்டளைத் தொகுதி. இதன் ஆங்கில மொழி இயல்பினால், இதை நாம் நன்கறிய இயலும். நிறைவேற்றப்பட இம்மொழி எந்திர மொழியாக மாற்றப்பட வேண்டும்.
symbolic name - குறியீட்டுப் பெயர் : இது ஒரு குறிப்பு. நிகழ் நிரல்களில் பயன்படுவது. மூலமொழியில் எழுதப்படுவது. இம்மொழி தகவல்கூறுகள், கட்டளைகள், வெளிப்புற அலகுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. பொதுவாகக் குறியீட்டுப் பெயர்கள் நினைவுக்குறிப்புக் குறிமைகளைப் பயன்படுத்துவது.
symbolic programming - குறியீட்டு நிகழ்நிரல் : மூல மொழியில் நிகழ்நிரலை எழுதுதல்.
synchronization - ஒத்திசையச் செய்தல் : செலுத்தியும் பெறுவியும் கட்ட நிலையில் ஒன்றுடன் மற்றொன்று ஒத்திசைந்து இயங்குமாறு செய்வதற்குரிய குறிகைகள்.
synchronizer - ஒத்திசைவி : இது சேமிப்புக் கருவியமைப்பு: தாங்கியாகச் செயல்படுவது. கருவியமைப்புகளுக்கிடையே செலுத்தும் தகவல்களின் விளைவுகளை ஈடு செய்வது. இக்கருவியமைப்புகள் வேறுபட்ட அளவுகள் இயங்கும்.
synchronous computer - ஒத்திசை கணிப்பொறி : இதில் எல்லாச் செயல்களின் நேரமும் ஒரு கடிகையிலிருந்து வரும் சம விரைவுக் குறிகைகளால் கட்டுப்படுத்தப்படும்.
synchronous data communication - ஒத்திசை தகவல் தொடர்பு : இதில் ஒரு பொதுக் கடிகாரக் குறிகையுடன் செலுத்தும் மற்றும் பெறும் கருவியமைப்புகள் ஒத்திசையுமாறு செய்யப்படும்.
syntax - சொற்றொடரியல் : இது இலக்கண விதிகள் அடங்கிய தொகுதி. நிகழ்நிரல் மொழியின் அமைப்பை வரையறை செய்வது.
SYSGEN, System Generation - சிஸ்ஜென், அமைப்பு இயற்றல், அஇ : ஒரு கணிப்பொறியில் ஓர் இயங்கு தொகுதியை இயற்றலும் தொடங்கி வைத்தலுமாகிய முறை.
system - அமைப்பு : ஓர் அலகைத் தோற்றுவிக்கும் பொருள்களின் தொகுதி. இவை ஒன்றுடன் மற்றொன்று தொடர்புள்ளவை.
systems analyst - அமைப்புப் பகுப்பாளர் : கணிப்பொறித் தொடர்பான தேவைகளை இனங்கண்டறிந்து அவற்றைச் செயற்படுத்த நிரல் வகுப்பவர். இது அலுவலகத் தொடர்பான எல்லாச் செயல்களையும் குறிக்கும்.
systems definition - அமைப்பு வரையறை : அமைப்புப் பகுப் பாளர் உருவாக்கும் ஆவணம்.
systems design - அமைப்பு வடிவமைப்பு : நடப்பிலுள்ள முறைகளை ஆராய்தலும் பதிவு செய்தலும் புதியமுறைகளை வடிவமைத்தலும்.
systems events - அமைப்பு நிகழ்வுகள் : இவற்றில் காலக்குறிப்பிச் செயல்கள், தகவல் அணுக்கப் பிழைகள், படிவ நிலை மாற்றங்கள், கட்டுப் பாட்டு நிலை மாற்றங்கள் முதலியவை அடங்கும்.
systems flowchart - அமைப்பு விதி முறைப்படம் : இதில் விதிமுறைக் குறியீடுகள் குறிப்பிட்ட எழுத்துத் தகவல் ஆயத் தத்தைக் குறிக்கும்; அமைப்பு வடிவமைப்பில் இணைந்த கணிப்பொறிச் செய்முறைகளும் இதில் சேரும்.
systems network architecture - அமைப்புவலையமைவுக் கட்டமைப்பு : இது தகவல் வலையமைவு மரபுச் சீரைக் குறிக்கும்; ஐபிஎம்மால் உருவாக்கப்பட்டது. ஓம்பு முறையாக்கி களுடன் முனையங்களை இணைக்கும் திட்டமுறையாகும். ஒம்பு முறையாக்கியில் தனிப் பயன்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளப்பயன்படுவது.
systems recovery time - அமைப்பு மீட்பு நேரம்: மீட்புக்குரிய காலம், வேறு பெயர் மீள் ஒட்ட நேரம்.
system software - அமைப்பு மென்பொருள் : ஓர் அமைப்பிற்காக எழுதப்படும் பொதுவான நிகழ்நிரல்கள். இவை பயன்பாட்டு மென்பொருள்களைஎழுதுவதற்குரிய சூழலை ஏற்படுத்தும். அமைப்பு நிகழ் நிரல்களில் சில: 1)தொகுப்பி, 2)கோவையாக்கி, 3)மொழி பெயர்ப்பி, 4)நிரல் ஏற்றி.