உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கொண்டார்கள். இளைஞனாயினும் கூரிய புத்தியுள்ள கரிகாலன், அன்னவர்வழக்கை நன்றாய் விசாரித்து நியாயமளித்தனன். இச்செய்கை, இம்மன்னனது நுண்ணறிவையும், நீதிபரிபாலன மாண்பையும் நன்குவிளக்குவதோடு, குடிகள்மனம் எவ்வாறோ அவ்வாறே தான் நடந்து கொள்ளவேண்டுமென்ற எண்ணமும் அவனிடத்திருந்த தென்பதையும் புலப்படுத்துகிறது. இவ்வாச்சரியமான விஷயத்தை, இளமைநாணிமுதுமையெய்தி யுரைமுடிவுகாட்டியவுரவோன் என்ற மணிமேகலையானும், “உரைமுடிவுகாணா விளமையோ னென்ற - நரைமுதுமக்களுவப்ப - நரைமுடித்துச் சொல்லான்முறை செய்தான் சோழன்குலவிச்சை கல்லாமற் பாகம்படும் என்ற பழமொழிச் செய்யுளானும் நன்குணரலாம். இவன்றன் ஆட்சிக்காலத்தில், காடுகளையழித்து நாடு உண்டு பண்ணி, பழைய ஊர்களைப் புதுப்பித்து, புதிதாக அநேகம் பட்டினங்களை ஸ்தாபித்து, அநேக குளங்களும் கால்வாய்களும் வெட்டி, அதனால் ஜலாதாரம் உண்டுபண்ணி, விவசாயிகளின் ஷேமத்தைப் பெருக்கி, கோயிலமைத்து, தன்னிராஜதானியைச் சுற்றி மதிலெழுப்பித் தேசத்தைச் சரியாகப் பாதுகாத்தானென்பது, காடுகொன்றுநாடாக்கிக் குளந்தொட்டுவளம் பெருக்கிப் பிறங்குநிலை மாடத்துறந்தை போக்கிக் கோயிலொடுகுடிநிறீஇ வாயிலொடு புழையமைத்து ஞாயிறொறும்பு தைநிறீஇ' என்ற பட்டினப்பாலைச் செய்யுளடிகளால் அறியப்படுகிறது. அன்றியும், முதற்கயவாகுவின் தகப்பன்காலத்தில், இவன் * இலங்கையின் மீது படையெடுத்துக் சென்று, 12000 சிங்களவர்களைச் சிறைபிடித்துச் சோழதேசத்திற்குக் கொண்டுவந்து, காவிரியினிரு மருங்குங் கரையெடுப்பித்தான். இதனை தொழுது மன்னரேகரை செய்பொன்னியில் என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளாலுணர்க. இதனால், இவன் பகைவரைவெல்லு மாண்மையிற்சிறந்தவனென்பதும், ஜலாதாரம் உண்டுபண்ணி விவசாயிகளின் ஷேமத்தை விருத்தி பண்ணியவனென்பதும் தெரியக்கிடக்கின்றன.