26 | 6. இளங்கோவடிகள் குறித்துள்ள பழையசரிதங்கள் இளங்கோவடிகளென்பார் இன்றைக்கு 1800 ஆண்டுகட்கு முன்னர்ச் சேரநாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து ஆட்சிபுரிந்த சேரன்செங்குட்டுவனது தம்பியாவர். மிக்க இளம்பருவத்திலேயே துறவு பூண்டு, அவ்வாச்சிரமத்திற் கேற்பவொழுகிவந்த இவ்வடிகள், உலகத்திற்குப் பயன்படும்வண்ணம், தாமியற்றியருளிய சிலப்பதிகாரம் என்னும் நூலின்கண் நமது புராணேதிகாசங்களிற் சொல்லப்படுவனவும் பிறவுமாய சில அருமைவாய்ந்த பழையசரித்திரங்களைச் சமயம் வாய்த்த போதெல்லாம் ஆங்காங்குக் குறித்திருக்கின்றனர். பண்டைக்காலங்களி லியற்றப்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாயதும், யாவராலும் புகழ்ந்து போற்றப்பெற்றது மாய சிலப்பதிகாரத்திற் கூறப்படுஞ்சரித்திரங்கள் நமது புராதனசரித்திர ஆராய்ச்சியிற்புகுந்துள்ள அறிஞர்பலர்க்கும் பெரிதும் பயன்படுமென்று கருதி, அவற்றை முறையே ஈண்டுத் தொகுத்தெழுதுகின்றேன். 1. மனுநீதிகண்டசோழன், தனது அரும்பெறற் புதல்வனைத் தேர்க்காலிலிட்டது. வாயிற்கடைமணிநடுநாநடுங்க வாவின் கடைமணிபுகுநீர் நெஞ்சுசுடத்தான்ற னரும்பெறற் புதல்வனையாழியின் மடித்தோன்: (சிலப். வழக்குரைகாதை 53-55) . . . . . . . . . . . . . முன்வ ந்த கறவைமுறை செய்தகாவலன்காணம்மானை காவலன் பூம்புகார்பாடேலோரம்மானை: (வாழ்த்துக்காதை - அம்மானைவரி 2) 2. சிபிச்சக்கரவர்த்தி, தன்பாலடைக்கலம்புக்கதொரு புறாவின் நிமித்தம் தன்னுடம்பையரிந்துகொடுத்தது. எள்ளறு சிறப்பினிமையவர்வியப்பப் புள்ளுறு புன்கண்டீர்த்தோன்:- (வழக்குரைகாதை 51-52) புறவுநிலை புக்குப் பொன்னுலகமேத்தக் குறைவிலுடம்பரிந்த கொற்றவன் யாரம்மானை குறைவிலுடம்பரிந்தகொற்றவன் முன்வந்த கறவைமுறை செய்தகாவலன்காண்: (வாழ்த்துக்காதை-அம்மானைவரி 2) பா