உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



50/ ஆட்சிபுரிந்தவர் யாவர் என்பது புலப்படவில்லை . கி.பி. 1426 முதல் 1443 வரையில் குலசேகர தொண்டைமானும், கி.பி. 1443 இல் சூரிய தேவர் சுந்தரபாண்டியத் தொண்டைமானும், கி.பி. 1444 முதல் 1453 வரையில் அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானும் அரசாண்டனர். இவர்களைப் பற்றிய வரலாறு தெரியவில்லை . இவர்கள் மூவரும் உடன்பிறந்தவர்களாக இருத்தல் கூடும் என்று கல்வெட்டுத்துறை (இலாக்கா) ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானுக்கு இலக்கணத் தண்ணாயகத் தொண்டைமான் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன்.1 இவனுக்குப் பின்னர்த் திருநெல்வேலிப் பெருமாள் தொண்டைமானும் 2 ஏகப்பெருமாள் தொண்டைமானும் ஆட்சிபுரிந்தனர். இவர்களுள் ஏகப்பெருமாள் தொண்டைமான் கி.பி. 1481 முதல் 1499 வரையில் அரசாண்டான். இவன் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டில் பழங்கரை, வாளவர் மாணிக்கம், கோவிலூர் முதலான ஊர்களில் காணப்படுகின்றன. இவ்வேந்தனுக்கு மூன்று புதல்வர் இருந்தனர். அன்னோர் தீராத வினை தீர்த்தான் தொண்டைமான் 3. ஆவுடைய நயினார் தொண்டைமான் 4. பொன்னம்பல நாத தொண்டைமான் என்போர். இவர்களுள், பொன்னம்பலநாத தொண்டைமான் கி.பி. 1514 முதல் 1569 வரை ஆட்சிபுரிந்தான். இவன் கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டிலும் இராமநாதபுரம் சில்லாவிலும் காணப்படுகின்றன. - எனவே, - இவனது நாடு மிகப்பெருகி இக்காலத்திலுள்ள புதுக்கோட்டை நாட்டின் ஒரு பகுதியையும், இராமநாதபுரம் சில்லாவின் ஒரு பகுதியையும், - தஞ்சாவூர் சில்லாவிலுள்ள அறந்தாங்கித் தாலூகாவையும் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று என்று கூறலாம். இவன் சிறந்த சிவபத்தியுடையவன். இவன் சிவாலயங்களில் தன் பெயரால் அலைவிலஞ்சாதான் சந்தி, பொன்னம்பலநாதன் சந்தி என்று கட்டளைகள் அமைத்து, அவற்றிற்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றான். இவன் தன்னை ஆவுடைய தம்பிரானார் சீபாத பக்தன் என்று கூறிக்கொண்டமை கல்வெட்டுக்களால் அறியப்படும். அறந்தாங்கியிலிருந்து அரசாண்ட குறுநில மன்னருள் இவனே மிகச்சிறந்தவன் எனலாம். இவனுக்கு அந்நாளில் வழங்கிவந்த, அச்சமறியாத பெருமாள், அலையில் அஞ்சாத பெருமாள் என்னும் பட்டங்கள் இவன் பெரிய வீரன் என்பதை நன்கு புலப்படுத்துகின்றன. ஏழுநாளையில் ஈழந்திறைகொண்ட பெருமாள் என்ற மற்றொரு பட்டமும் - The Inscriptions of the Pudukottah State-No. 794. 1469 A.D-Ins, No. 125 of 1916. கி.பி. 1497. The Inscriptions of the Pudukottah State-No 830. சி.பி. 1499. The Inscriptions of the Pudukottah State-No 832.