52
முதற் குலோத்துங்க சோழன்
ஒருவருக்கொருவர் முன்னாக அரையிற் கட்டிய துகில் அவிழ ஓடித் தம் அரசனது அடிமிசை வீழ்ந்தனர். அங்ஙனங் குடிகள் தன்னடியில் வீழ்ந்து அலறி ஓலமிடுதலைக் கண்ட கலிங்கர் கோமானாகிய அனந்தவன் மன் வெகுளி யினால் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து, அன் னாரை நோக்கி ' யான் அபயனுக்கே யன்றி அவன் தண்டினுக்கு பொளியனோ?' என்றுரைத்துத் தடம்புயங் குலுங்குற நகைத்தனன். பின்னர், ' நமது நாடு கான ரண், மலையரண், கடலரண், இவற்றாற் சூழப்பெற்றுக் கிடத்தலை அறியாது, அவன் படை வருகின்றது: போலும் ; நல்லது, சென்று காண்போம்' என்று கூறினன்.
அம்மன்னன் கூறியவற்றைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சர் தலைவன், அரசர் சீறுவரேனும் அமைச்சனாகிய தான் உறுதியை யுரையாதொழியின் அது தன் கடமையினின்று தவறியதாகுமென்பதை நன்குணர்ந்தவனாய், அரசனை நோக்கி, ' மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை யிகழாது சிறிது செவிசாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர் களைப் புறங்கண்டு வெற்றி கோடற்குச் சயதரன் படை போதாதோ ! அவனே நேரில் வருதல் வேண்டுமோ ? அவனுடைய படையினாற் பஞ்சவர் ஐவருங் கெட்ட கேட்டினை நீ கேட்டிலை போலும் ; முன்னொருநாள் அவனது படையுடன் பொருவானெழுந்த சேரர் செய்தி நின் செவிப்பட்டதில்லையோ ? அவன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச்சாலை கொண்டதும் தன் படையினைக் கொண்டன்றோ? தண்டநாயகராற் காக்கப்பெற்ற நவிலையின் கண் ஆயிரம் யானைகளை அவன் கைப்பற்றிக்கொண்டதை நீ யறியாயோ ? அபயன் படையினால் ஆரஞருற்-