பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பன்னிரண்டாம் அதிகாரம்



குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர்


னி, குலோத்துங்கன் காலத்துச் சிறந்து விளங்கிய புலவர் பெருமான் கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார் ஆவர். இவரது வரலாற்றை அடியிற் சுருக்கி வரைவாம்.

இப்புலவர் பெருந்தகையார் சோழமண்டலத்திலே கொரடாச்சேரி புகைவண்டி நிலையத்துக்கு அண்மையிலுள்ள தீபங்குடி என்னும் ஊரின்கண் பிறந்த நல்லிசைப் புலவராவர். இவரது குலமும் சமயமும் நன்கு புலப்படவில்லை. இவர் பெரும் புலமை படைத்தவராய் நம் குலோத்துங்க சோழனைக் காணவேண்டி அவனது அவைக்களத்தை அடைந்தபோது அவ்வரசன் 'நமது. ஊர் யாது?' என்று வினவ,

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமுந் தவிரப்
பொய்தீர் அற நூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதழும் விழியும்
காலும் நிறமும் போலுங் கமலம்
கொய்யும் மடவார் கனிவா யதரங்
கோபங் கமழும் தீபங் குடியே.

என்று தம்புலமைக்கேற்பப் பாடலால் விடைகூறினர். இச்செய்தி, தமிழ் நாவலர் சரிதையால் அறியப்படு-