பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

99

13. கோயில்கள் :- அந்நாளில் நம் தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தன. செங்கற்கோயில்களாகவிருந்த இவற்றைக் கற்றளிகளாக அமைப்பித்தவர்கள் சோழமன்னர்களும் அன்னோரது அதிகாரிகளுமேயாவர். பல புதிய கோயில்களும் இவர்களால் கட்டுவிக்கப்பெற்றன. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள நீடூர், திருவைகாவூர்[1] முதலான தலங்களிலுள்ள கோயில்கள் நம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கற்றளிகளாக்கப்பட்டன. சூரியனார் கோவில் என்ற ஊரிலுள்ள சூரியனது ஆலயமும், மன்னார் குடியிலுள்ள குலோத்துங்க சோழவிண்ணகரமும் மேலப்பழுவூரிலுள்ள குலோத்துங்கசோழேச்சுரமும் இவ்வேந்தன் காலத்தில் கட்டப்பெற்றனவேயாம். கோயில்கள் எல்லாம் அரசர்களாலும் பிற அன்பர்களாலும் அளிக்கப்பெற்ற பெரும் பொருளும் நிலமும் உடையனவாய் அக்காலத்தில் விளங்கின. திங்கள் தோறும் பூரணையில் கோயில்களுக்கு விழா நடைபெற்றது. உச்சியம் போதில் கோயில்களில் மாகேச்சுரர்க்கு நாள் தோறும் அன்னம் இடுவது வழக்கம். தேவாரப் பதிகங்கள் நாள்தோறும் திருமுன்னர் விண்ணப்பஞ் செய்தற்கு நிபந்தங்கள்விடப்பட்டிருந்தன.[2] கோயிற் காரியங்களை எல்லாம் அவ்வூரிலுள்ள ஒரு சபையார் நன்கு நடத்தி


  1. 17. திருவைகாவூரிலிருந்து எடுக்கப்பெற்றதும் அவ்வூரிலுள்ள திருக்கோயில் முதற்குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் கற்றளியாக அமைக்கப் பெற்ற செய்தியை யுணர்த்துவதும் ஆகிய ஒரு கல்வெட்டு இப்புத்தகத்தின் இறுதியில் சேர்க்கப்பெற்றுளது.
  2. 18. {a) S. I. I. Vol. III. Ins. 139, 51-A (6) DO. Vol. II. Ins. No. 65.