பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

91

கஃசு என்னும் நிறைகல்லாலும் நிறுக்கப்பட்டுவந்தன. அரசாங்க முத்திரையிடப்பெற்ற நிறைகல் குடிஞைக்கல் எனப்படும். பொன்னின் மாற்றறிதற்குரிய ஆணியும் அப்போது இருந்தது என்பது ஈண்டு உணர்தற்குரியதாகும்.

இனி, செம்பு, பித்தளை முதலியவற்றால் செய்யப் பெற்றவை, இரண்டாயிரம் பலம், மூவாயிரம் பலம் என்று நிறுக்கப்பட்டுள்ள செய்தி, கல்வெட்டுக்களால் வெளியாகின்றது.[1]ஆகவே, அந்நாளில், சேர், வீசை, தூக்கு, மணங்கு ஆகியவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை நன்கு புலப்படுகின்றது.

நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர் முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன.[2]சர்க்கரை, மிளகு, கடுகு, புளி முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. அரசாங்கமுத்திரை இடப் பெற்ற மரக்காலும் இருந்தது. தோரை, விரல், சாண், முழம் என்பவற்றால் நீட்டல் அளவை நடைபெற்றது.

எடுத்தல் அளவை :–

2 குன்றி = 1 மஞ்சாடி

20 மஞ்சாடி = 1 கழஞ்சு


  1. S. I. I. Vol. II. Ins. Nos. 36, 41, 85.
  2. S. I. I. Vol. II. Ins. Nos. 35, 51, 84.