இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
170 - வலத்திற்றுடித்தால் தீமையு முண்டாகுமென்பதும் நன்குவிளங்கும். அன்றியும், காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா நடந்த நாளில் கோவலன் மனைவியாகிய கண்ணகிக்கு இடதுகண்ணும் அவன் காதற்பரத்தையாகிய மாதவிக்கு வலதுகண்ணும் துடித்தன வென்பதை, சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்தகாதை 236-240, - கண்ணகிகருங்கணுமாதவி செங்கணு முண்ணிறைகரந்தகத் தொளித்துநீ ருகுத்தன வெண்ணுமுறையிடத் தினும்வலத் தினுந்துடித்தன விண்ணவர்கோமான்விழவு நாளகத்தென என்னும் செய்யுளடிகளில் ஆசிரியர் இளங்கோவடிகளும் கூறிப் போந்தனர். அங்ஙனந் துடித்ததனாற் கண்ணகிக்குண்டாகிய நன்மையாவது தனது ஆருயிர் நாயகன் காதற்பரத்தையாகிய மாதவியை விட்டகன்று தன்பாலடைந்தமையே; மாதவிக்குண்டாகிய தீமையாவது கோவலன் தன்னட்பையொழித்து அகன்றமையே.