கணினி களஞ்சியப் பேரகராதி/Y

விக்கிமூலம் இலிருந்து

Y

Y2K - Çompliant : ஒய்2கே- தகவு.

yahoo : யாகூ : இணையத்தில் புகழ்வாய்ந்த தேடுபொறி. உலகின் முதல், வலைப்பக்க அடிப்படையிலான இணையத் தரவுகளின் திரட்டு. http : //www. yahoo. com என்ற முகவரியில் காண்க. யாகூ இந்தியாவுக்கென கிளை நிறுவனத்தையும் தொடங்கியுள்ளது. இந்தியா தொடர்பான பல்வேறு இணையச் சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன. முகவரி www. yahoo. co. in

yanoff list : யானோஃப் பட்டியல் : ஸ்காட் யானோஃப் உரு வாக்கிப் பராமரித்து வரும் இணையச் சேவைகளின் பட் டியல் பேச்சுவழக்கில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இணையச் சேவைகள், வளங்களின் மிகத் தொடக்ககாலத் திரட்டுகளில் யானோஃப் பட் டியலும் ஒன்று. முகவரி www. spectracom. com/islists

Y axis . ஒய்-அச்சு : ஒர் ஆயத் தொலைவுத் தளத்தில், செங்குத்து அச்சு. இது எக்ஸ்-அச்சு, இசட்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது.

. ye : . ஒய்இ : ஒர் இணைய தள முகவரி யேமன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Y-edge leading : ஒய்-முனை முன்னணி : அதன் நீண்ட விளிம்பை முதலிலும் மேல் வரிசையை படிக்கும் நுட்பத்திலும் கொண்டுள்ள துளையிட்ட அட்டையைச் செலுத்தும் முறை. துளையிட்ட அட்டை யின் மேல் வரிசை ஒய் (y) வரிசை ஆகும்.

yellow pages : மஞ்சள் பக்கங்கள் : 1. சன்சாஃப்ட் (சன் மைக் ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு) வழங்கிய யூனிக்ஸ் பயன்கூறின் பழைய பெயர். ஒரு பிணையத் திலுள்ள வளங்களின் பெயர்களையும் இருப்பிடங்களையும் கொண்ட ஒரு மையத் தரவு தளத்தைப் பராமரிக்கும் மென்பொருள். எந்தக் கணுக் கணினியில் இருப்பினும், பெயரைக் கொண்டு வளத்தைக் கண் டறிந்து இயக்கும் ஆற்றல் பெற்றது. இப்போது இப்பயன்கூறு நிஸ் (NIS-Network Information Service- பிணையத் 

தகவல் சேவை) என்று அழைக்கப்படுகிறது. 2. அனைத்து களப்பெயர்கள் அவற்றின் ஐபி முகவரிகளையும் கொண்ட இன்டர் நிக் பதிவுச் சேவையின் தரவு தளம் காண்க : IP Address, Domain Names 3. இணைய வணிகமுறை அடைவுச் சேவைகளையும் இது குறிக்கும். சில அச்சிலும், சில மின்னணு வடிவிலும் உள்ளன. சில இரு வடிவங்களிலும் நிலவுகின்றன.

Yes/No/Cancel : ஆம்/இல்லை/ விடு.

YHBT : ஒய்ஹெச்பிடி : நீங்கள் தூண்டிலில் மாட்டிக் கொண்டீர்கள் என்று பொருள்படும் You Have Been Trolled என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுக்களில், செய்தியைப் பெற்றவர் அறிந்தே விரிக்கப்பட்ட வலையில் அறியாமல் மாட்டிக் கொண்டார் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ΥΗL : ஒய்ஹெச்எல் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று பொருள்படும் You Have Lost என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் மின்அஞ்சலில், செய்திக்குழுக்களில் ஒய்ஹெச்பிடீ-க்கு அடுத்து வழங்கப்படும் சொல்.

. yk. ca : . ஒய்கே. சி. ஏ : ஒர் இணைய தள முகவரி கனடாவிலுள்ள யூக்கான் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Y modem : ஒய் மோடம் : எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறிமுறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோ பைட் (1024 பைட்) தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை அனுப்பும் திறன் பெற்றது. சுழற்சி மிகைச் சரிபார்ப்பு கொண்டது. கேன் என்னும் குறியீட்டை இரு முறை தொடர்ச்சியாய் அனுப்பிய பின் கோப்புப் பரிமாற்றத்தை நிறுத்தி வைக்கும்.

Y-network : ஒய் பிணையம் : மூன்று கிளைகளைக் கொண்ட நட்சத்திரப் பிணையம்.

yocto : யாக்டோ : அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செப்டில்லியனில் ஒரு பகுதியைக் குறிக்கும் முன்னொட்டுச் சொல். இது 1024 அளவுடையதாகும். 

yoke : நுகம் : ஓர் ஒளிப் பேழைக் காட்சிக்கு முகவரியிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மின்னணு (எலெக்ட்ரான்) கற்றைக் கோட்டப் பொறியமைவின் பகுதி.

Y orientation : y திசை அமைவு.

yotta : யோட்டா : அமெரிக்க அளவீட்டுமுறையில் ஒரு செப் டில்லியனைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டுச் சொல். இதன் அளவு 1024 ஆகும்.

yourdan loop : யூர்தான் லூப் : வெற்றுத் தரவு லூப்புகள் அல்லது முடிவற்ற லூப்புகளை உருவாக்குவதைத் தடுக்கும் யூர்தான் லூப். எட் யூர்தான் இதை முதலில் அறிமுகப் படுத்தினார்.

y position : ஒய் நிலை.

Y-punch ; ஒய்-துளை : ஒரு ஹொலரித் அட்டையில், 12வது துளையிடும் நிலை. இதனை உயர் துளை, 12ஆம் துளை என்றும் கூறுவர்.

. yt : ஒய்டீ : ஓர் இணைய தள முகவரி மயோட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. yu : . ஒய்யு : ஓர் இணைய தள முகவரி முன்னாள் யூகோஸ்லோவிய நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.