கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/எந்த இடம்?

விக்கிமூலம் இலிருந்து

56. எந்த இடம்?

வகுப்பறையில் உள்ள மாணவர்களை, விரும்பிய இடங்களில் அமர்ந்துகொள்ள முதலில் அனுமதிக்க வேண்டும்.

பிறகு, ஒருவரை அழைத்து, மாணவர்கள் யார் யார் எங்கெங்கே உட்கார்ந்திருக்கின்றார்கள் என்பதை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கூறவேண்டும்.

அவர் எல்லோரையும் ஒரு முறை ஊன்றிக் கவனித்துப் பார்த்துக்கொண்ட பிறகு, அவரை வகுப்பறையை விட்டு வெளியே சென்று சிறிது நேரம் மறைவாக நிற்கச் சொல்ல வேண்டும்.

அதற்குள், உட்கார்ந்திருப்பவர்களை ஆங்காங்கே இடங்களை மாற்றி உட்காரச் சொல்ல வேண்டும்.

அதற்குப் பிறகு, வெளியே சென்றவரை உள்ளே வரச் செய்து, இடம் மாறியவர்களை ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லுமாறு ஆணையிட வேண்டும்.

இடம் மாறி உட்கார்ந்தவர்களைக் கண்டுபிடித்து விட்டால், கண்டுபிடித்த ஒவ்வொருவரின் இடமாற்றத்திற்கும் ஒவ்வொரு வெற்றி எண் உண்டு.

எல்லோருக்கும் ஒவ்வொரு முறை இது போன்ற வாய்ப்பு உண்டு. இறுதியில் அதிக வெற்றி எண் பெறுகின்றவரே பெற்றி பெற்றவராவார்.