கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கை! கை!!

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

55. கை! கை!!

மாணவர்களை நான்கு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்த பிறகு, வகுப்பின் ஒரு மூலையில், திரைச்சீலை ஒன்றைக் கட்டி வைக்க வேண்டும்.

ஒரு குழுவிலுள்ளவர்களை அழைத்து, அந்தத் திரைச் சீலைக்குட்புறம் சென்று மறைந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும்.

முதல் குழு மறைந்துகொண்டால், 2-வது குழு அங்கத்தினர்கள் அந்தப் போட்டி விளையாட்டில் பங்கு பெற வேண்டும்.

உள்ளே சென்றவர்களில் ஒருவர், தன்னுடைய இரு கைகளை மட்டும் திரைச்சீலைக்கு வெளியே நீட்ட வேண்டும்.

வெளியே நிற்பவர்களுள் ஒருவர், 5அடி தூரத்தில் நின்றவாறே அவை யாருடைய கைகள் என்று 10 வினாடிக்குள் கூறிவிட வேண்டும்.

சரியாக இருந்தால், சொன்னவரின் குழுவுக்கு ஒரு வெற்றி எண் உண்டு, இல்லையென்றால் கை காட்டிய குழுவுக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.

ஒவ்வொரு குழுவும் திரைச் சீலைக்குள் சென்று மறைந்து கொள்ளவும், வெளியேயிருந்து கைகளைக் காட்டவும், அதாவது ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் கைகளைக் காட்டவும், கைகளைப் பற்றிக் கூறவும் வாய்ப்பு உண்டு.

ஆட்ட இறுதியில், அதிக வெற்றி எண் பெற்ற குழுவே வெற்றி பெற்றதாகும்.