கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குதிரை ஆட்டம்

விக்கிமூலம் இலிருந்து

33. குதிரை ஆட்டம்

அமைப்பு:

ஆடுகள எல்லையும் அமைப்பும் முன் ஆட்டம் போலவேதான். ஆட வருபவர்கள் அனைவரையும் இருவர் இருவராகப் பிரித்து, ஒருவரைக் குதிரையாகவும், மற்றொருவரைக் குதிரை வீரராகவும் மாற்றி விளையாட ஏற்பாடு செய்து விடவேண்டும்.

ஒருவர் இன்னொருவரைத் தன் முதுகில் ஏற்றி வைத்துக் கொள்ளவும். அடுத்தவர் அவர் முதுகில் எறி கால்களை அவர் வயிற்றுப் பக்கமாகப் பின்னி பிணைத்துக் கொண்டு, ஆட்டத்திற்குத் தயாரான நிலையில் இருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஒரு மூலையிலே தனியாக நின்றுகொண்டிருக்கும் ஒரு இரட்டையர் (குதிரையும் குதிரை வீரரும்), ஆடுதற்கு சைகை கிடைத்தவுடன், மற்ற இரட்டையர் களை விரட்டித் தொட வேண்டும்.

யார் தொடப்படுகிறாரோ, அவர் விரட்டுபவராக மாற இவ்வாறு ஆட்டம் தொடரும்.

குறிப்பு:

ஒருவரே குதிரையாகவும், மற்றவர் குதிரை வீரராகவும் அதிக நேரம் ஆட முடியாது. ஆகவே, வீரர் குதிரையாகி சுமக்கவும், சுமந்தவர் சிறிது நேரம் அவர் முதுகில் அமர்ந்திருக்கவும் என்று மாறி மாறி ஆடினால் ஆட்டம் சுமுகமாக நடக்கும்.

இல்லையேல் ஒருவருக்கு சுமையாகவும் மற்றவருக்கு சுகமாகவும் இருக்கும். அப்பொழுது ஆட்டத்தை எப்படி இனிதே தொடர முடியும்? ஆகவே, இடம் மாற்றிக்கொண்டு ஆட வேண்டும்.