உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/காலாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

40. காலாட்டம்

ஆட இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆடுகளத்தின் அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

அமைப்பு:

ஆட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும், வசதிக்கேற்ப, தன் ஒரு காலைப் பின்புறமாக மடக்கித் தூக்கி, இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு, ஒற்றைக் காலால் நிற்கவும்.

ஆடும் முறை:

ஆட்டம் தொடங்கியவுடனே, ஒவ்வொருவரும் இன்னொருவரின் மேல் மோதி, அவரது நிலையை இழக்கச் செய்து இரண்டு காலாலும் நிற்கும்படி செய்து விடவேண்டும்.

இடிபட்டுக் கீழே விழுந்து விட்டாலும், மடித்துள்ள ஒரு காலை நீட்டவோ, பிடித்திருக்கும் கைகளை நீக்கவோ கூடாது.

ஒரு காலாலேயே கடைசி வரை நின்று ஆடுகின்றவரே வெற்றி பெறுகிறார், இரண்டு கால்களையும் தரையில் ஊன்றிவிடுகின்றவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றார்.