கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வாலாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

39. வாலாட்டம்

அமைப்பு:

இருக்கின்ற மைதானம் முழுவதையுமே இந்த ஆட்டத்திற்கு ஆடுகளமாகப் பயன்படுத்தைக் கொள்ளாலாம்.

ஆட்டத்தில் பங்கு பெறுவோர்கள் அனைவரும், தனது கால் சட்டையின் பின்புறத்தில் கைக் குட்டையை இணைத்து, வால்போல் வைத்துக் கொண்டு, விளையாடத் தயாராக நிற்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆட்டத் தொடக்கத்திற்குப் பிறகு, ஒவ்வொருவரும் பிறருடைய வாலைப் பிடுங்கி எறிவதிலேயே குறியாக செயல்பட வேண்டும். வாலை இழந்தவர்கள் உடனே ஆட்டத்தைவிட்டு வெளியேறி விடவேண்டும்.

அதே சமயத்தில், தன் வாலை பிறர் பிடுங்கிவிடாமல் இருக்கவும் மிகவும் எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும்.

இறுதிவரை, தன் வாலை இழக்காமல் இருப்பவரே, இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவராகிறார்.