உள்ளடக்கத்துக்குச் செல்

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/குரங்காட்டம் (இ)

விக்கிமூலம் இலிருந்து

17. குரங்காட்டம் (இ)

அமைப்பு:

முன் கூறிய இரண்டு ஆட்டங்களிலிருந்தும் இந்த ஆட்டம் அமைப்பிலேயே சிறிது வேறுபடுகின்றது.

எல்லோரும் வட்டமாக நிற்பதற்குப் பதிலாக, ஆடுவோரை சம எண்ணிக்கையுள்ள இரு குழுவினராகப் பிரித்து 8 அல்லது 9 அடி சந்து விழுவதுபோல (இடைவெளி) இரண்டு வரிசையாக எதிரெதிர் பார்த்து நிற்பது போல நிறுத்தி வைக்க வேண்டும்.

ஆடும் முறை:

அந்த இடைவெளி சந்துக்குள்ளேதான் ஒருவர் நின்றுகொண்டிருப்பார். ஆடலாம் என்று அனுமதி கிடைத்தவுடன், பந்தை வைத்திருப்பவர், பந்தை எதிர்ப் பக்கத்தில் உள்ள வரிசையில் நிற்போருக்கு எறியத் தொடங்குவார். பந்து போய் வரும் இடைவெளிக்குள் இருக்கும். அவர் பந்துக்காகப் பாயத் தொடங்குவார்.

பந்துக்காக ஓடி வருபவரின் சூழ்நிலையை அனுசரித்து, தான் நிற்கும் வரிசையில் உள்ளவர் களிடமோ அல்லது எதிர்ப்புறத்தில் நிற்பவர்களிடமோ பந்தை எறியலாம். அதன் மூலம், தான் பிடிபடுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பந்தை இடைவெளியில் பிடித்துவிட்டால், பந்தை எறிந்தவர் பிடிபட்டுவிடுவார் பந்தை வைத்திருக்கும் பொழுதே தொடப்படுபவரும் சிக்கிக்கொண்டு விடுவார்.

குறிப்பு:

இரண்டு வரிசைகளில் ஆட்டக்காரர்கள் நிற்பதால், பந்து எல்லோருக்கும் கிடைப்பது போலவும், போய் வருவது போலவும் கைமாற்றிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், நடுவில் நிற்பவர் அங்குமிங்கும் பல முறை அலையக்கூடும். ஒருவருக்கே எறிவதையும், மற்றவர்களுக்குப் போகின்ற பந்தை ஒருவரே ஓடிப்போய் பிடிப்பதையும் யாரும் செய்யவே கூடாது.

அதனால் மனக் கசப்பும், ஆட்டத்தில் வெறுப்பும் குழப்பமும் ஏற்பட ஏதுவாகும்.