உள்ளடக்கத்துக்குச் செல்

மழலை அமுதம்/புது நாள்

விக்கிமூலம் இலிருந்து
புது நாள்

        புத்தம் புதுநாள் பிறந்தது பார்
        புதிய நற்பணிகள் செய்திடுவாய்
        இத்தனை நாள் வீணாய்க் கழித்தது போல்
        இதனையும் வீணாய்க் கழிப்பாயோ?
        சத்தமில்லாமல் ஒருநாள் தோன்றும்
        சத்தமிலாமல் அது மறைந்திடுமே
        எத்தனை வருந்தி அழைத்தாலும்
        இதுநாள் மீண்டும் வருமோ சொல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=மழலை_அமுதம்/புது_நாள்&oldid=1070130" இலிருந்து மீள்விக்கப்பட்டது