கணினி களஞ்சிய அகராதி-2/Q

விக்கிமூலம் இலிருந்து

தனியொரு தடம் நெடுகிலும் மையச்செய்முறை அலகுடன் புறநிலைச்சாதனங்கள் இணைக் கப்பட்டுள்ள ஒர் இடைத் தடுப்பு பொறியமைவு.

daisy printer : டெய்சி அச்சுப் பொறி.

daisy wheel : டெய்சி சக்கரம் : தளமட்டச் சக்கரம் : டெய்சி சக்கர அச்சிடு கருவியில் உள்ள அச்சிடு சாதனம். நடுவில் குறுக்குக் கம்பியில் எழுத்துகள் புடைப்பு முறையில் அமைக்கப்பட்டிருக்கும். டெய்சி என்பது ஒரு மலர். அந்த மலரின் இதழ்களை ஒத்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

தளமட்டச் சக்கரம்

daisy wheel printer : டெய்சி சக்கர அச்சுப்பொறி; தளமட்டச் சக்கர அச்சுப் பொறி; தளமட்ட அச்சு எந்திரச் சக்கரம : அச்சிடு கருவி. இதில் ஒரத்தில் அச்சிடப் பட்ட எழுத்துகளைக் கொண்ட உலோக அல்லது பிளாஸ்டிக் தகடு பயன்படுத்தப்படுகிறது. அந்தத் தட்டு தேவையான எழுத்து சுத்தி ஒன்றின் முன்னே வரும் வரை சுழற்றப்படுகிறது. கத்தி அந்த எழுத்தினை மைநாடா ஒன்றின் மீதுதட்டுகிறது . பிரபலமான தரமான அச்சிடு கருவி தனிப்பட்ட கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது.

DAL (Data Access Language) : டிஏஎல் : தரவு அணுகு மொழி என்று பொருள்படும் "Data Access Language" என்பதன் குறும்பெயர். ஆப்பிள் (Apple) கணினியிலுள்ள தரவு தள இடைமுகப்பு. இது, ஆதாரத் தரவு Mac என்ற நுண் கணினிகளில் அல்லது 'ஆப்பிள்' அல்லாத கணினிகளில் அணுகுவதற்கு அனுமதிக்கிறது.

DAM (Direct Memory Access) : டிஏஎம் - நேரடி நினைவக அணுகல்.

damping : தளர்வூட்டுதல் : தேவைப்படாத அல்லது மிகையான ஊசலாட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு மின்னணு அல்லது எந்திரச் சாதனத்தை நிலைப்படுத்துவதற் கான உத்தி.

dark bulb : கருங்குமிழ் : ஒரு வகையான கத்தோட் கதிர்க் குழாய், நிறுத்தப்பட்டதும் ஏறத் தாழ கறுப்பு நிறத்தை அடைந்துவிடுகிறது. அது ஒளிக் காட்சிகளுக்கு சிறந்த பின்புலமாகி விடுகிறது.

darkest : மிகு இருள்மை.

dark fiber : கருப்பு ஒளியிழை : கரு ஒளியிழை : தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஒளியிழை வடங்களில் பயன்பாட்டில் இல்லாத இழைகளை கறுப்பு ஒளியிழை என்று அழைப்பர்.

darkness : இருட்டு.

darlington circuit : டார்லிங்டன் சுற்று வழி : இரண்டு மின்மப் பெருக்கிகளை (Transistor) ஒன்றாக இணைத்துப் பயன்படுத்துகிற மின்பெருக்கச் சுற்றுவழி.

DARPA net : டார்ப்பா நெட் : அமெரிக்காவின் பாதுகாப்பு உயர்நிலை ஆராய்ச்சித் திட்டப் பணி முகமை எனப் பொருள்படும் Defense Advanced Research Projects Agenc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

dart , டார்ட் : கணிப்பொறியமைவில் ஏற்படும் தவறுகளை வாடிக்கையாளரின் இடத்திலேயே கண்டுபிடிப்பதற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், பன்னாட்டு வணிக எந்திரக் கழகமும் (IBM) சேர்ந்து வகுத்துள்ள ஒரு கூட்டுத் திட்டம்.

DASD : டிஏஎஸ்டி : நேரடித்தொடர்பு சேமிப்புச் சாதனங்களுக்கனா 'Direct Access Storage Device' என்பதன் குறும்பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/Q&oldid=1085153" இலிருந்து மீள்விக்கப்பட்டது