கணினி களஞ்சிய அகராதி-2/U

விக்கிமூலம் இலிருந்து

செயல் முறை. இது, சிதறலைக் குறைக்கும் வகையில் கோப்புகளைப் படியெடுக்கிறது. வட்டுப் பரப்புகளை மறு ஒதுக்கீடு செய்கிறது.

disk pack : வட்டு அடுக்கு : ஒரே அலகாகக் கருதப்பட்டு ஒரு கம்பியில் ஏற்றப்படும் நிலை வட்டுகளின் வெளியே எடுக்கக்கூடிய தொகுதி.

disk partition : வட்டுப் பிரிவினை : வட்டில் உள்ள தரவுகளை சிறு பகுதிகளாகப் பிரித்து எளிதாகக் கையாள உதவும் அளவைப் பகுதி.

disk sector : வட்டுப் பிரிவு : வட்டின் மேல் தொடர்ச்சியான இரண்டு ஆரங்களுக்கு இடையிலுள்ள தரவுச் சேமிப்பு இடப் பகுதியைக் குறிப்பிடுகிறது. ஒரு பட்டாணியைத் துண்டு போடுவது போன்ற முறையிலேயே வட்டின் பிரிவுகளை அமைக்க முடியும்.

disk server : வட்டு வழங்கன்;வட்டு வழங்கன் கணினி : ஒரு குறும் பரப்புப் பிணையத்தில், பயனாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கான வட்டினைக் கொண்ட ஒரு கணுக் கணினி. இது கோப்புப் வழங்கனிலிருந்து (Fie Server) மாறுபட்டது. கோப்பு வழங்கன் பயனாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கோப்புகளை வழங்கும். மிகவும் நுட்பமான மேலாண்மைப் பணிகளையும் மேற்கொள்ளும். ஆனால் வட்டு வழங்கன் மேலாண்மைப் பணி எதுவும் செய்வதில்லை. வெறுமனே ஒரு தரவு சேமிப்பகமாகச் செயல்படும். பயனாளர்கள் வட்டு வழங்கனிலுள்ள கோப்பு களைப் படிக்கலாம்/எழுதலாம். வட்டு வழங்கனிலுள்ள வட்டினைப் பல்வேறு தொகுதி (Volume) களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு தொகுதியும் ஒரு தனிவட்டுப் போலவே செயல்படும்.

disk space : வட்டுப் பரப்பு : ஒரு வட்டில் காலியான இடப்பரப்பினைத் தெரிவிக்கின்ற ஒரு செய்திக் குறிப்பு ஆதாரச் செயற்பணி.

disk storage : வட்டுச் சேமிப்பகம்.

disk striping : வட்டுச்செய்தி இடையிணைப்பு : பன்முகவட்டு இயக்கிகளுக்கு தரவுகளைப் பரவச்செய்தல். இயக்கிகளின் ஊடே எண்மிகள் அல்லது வட்டக்கூறுகள் மூலம் தரவுகள் இடையிணைப்பு செய்யப்படுகின்றன.

disk/track info : வட்டு/தடத்தரவு. disk unit enclosure : வட்டு அலகு அடைப்பி : ஒன்று அல்லது மேற்பட்ட வட்டு இயக்கிகளையும் மின்சக்திச் சாதனத்தையும் வைப்பதற்கு வடிவமைக்கப்பட்ட பெட்டி.

dispatch : அனுப்பு : அடுத்த வேலை என்ன என்று தேர்ந்தெடுத்து அதை செயலாக்கம் செய்ய தயாராக இருத்தல்.

dispatcher : விரைவுச் செயல்முறை : ஒர் இடையீடு ஏற்பட்ட பிறகு, நடப்பு இயக்கப்பணித் தொகுதியிலிருந்து நிறைவேற்றுவதற்காக அடுத்த பணியைத் தேர்ந்தெடுக்கிற கட்டுப்பாட்டுச் செயல்முறை.

dispatching : விரைவுச் செயலாக்கம் : உருத்தெளிவு, வண்ணம், வரைகலைத் திறம் பாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கு, கண்காட்சி அலகினை மின்னணுவியல் முறையில் கட்டுப்பாட்டுடன் இணைக்கிற ஒரு பலகை.

dispatching priority : அனுப்பும் முன்னுரிமை : பல பணிகளின் சூழ்நிலையில் மைய செயலக அலகில் பயன்படுத்துவதற்காக முன்னால் அனுப்பப்படுவனவற்றை முடிவு செய்யும், பணிகளுக்கு ஒதுக்கப்படும் எண்கள்.

dispatch table : அனுப்புகை அட்டவணை : குறுக்கீடு (interrupt) களைக் கையாளும் செயல்கூறுகள் (functions) அல்லது துணை நிரல்களின் முகவரிகளைக் கொண்ட அட்டவணை. ஒரு குறிப்பிட்ட சமிக்கை கிடைத்தவுடனோ, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலோ நுண்செயலி, அட்டவணையில் குறிக்கப்பட்ட குறிப்பிட்ட துணை நிரலைச் செயல்படுத்தும்.

disperse : கலைத்தல்;பிரித்தல் : ஒரு குறிப்பிட்ட தரவுத் தொகுதியைப் பிரித்து வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்படி செய்தல். எடுத்துக்காட்டாக அட்டவணைக் கோப்பிலுள்ள ஏடுகளில் (records) உள்ள புலங்களைப் (fields) பிரித்து, வெளியீட்டின் போது வெவ்வேறு இடங்களில் கிடைக்கச் செய்தல்.

dispersed data processing : பரவலான தரவு செயலாக்கம்.

dispersed intelligence : பரவலாக்கப்பட்ட அறிவுத்திறன் : கணினி ஆற்றலை கட்டமைப்பு முழுவதும் பரவலாக்கப்பட்ட கடடமைபபு.

dispersion : பரப்பீடு : முரண்பாட்டு அளவை. பல்வேறு பரப் பீட்டு வடிவங்களைக் கண்டறிவதற்கு மாற்றுவழிகள் உள்ளன.

displacement : இடமாற்றல் : அடிப்படை முகவரிக்கும் உண்மையான எந்திர மொழி முகவரிக்கும் இடையில் உள்ள வேறுபாடு.

display : காட்சி;காட்சியகம்;ஒளி எழுத்து கண்காட்சி : 1. திரையிலோ அல்லது காட்சியிலோ தரவுகளைக் குறிப்பிடல், 2. கணினி முகப்பில் உள்ள ஒளி அல்லது குறிப்பிகள். 3. வரைகலை தரவுகளை வெளியீட்டுச் சாதனத்தில் காட்சியாக உருவாக்கும் செயல்.

display adapter : காட்சி ஏற்பி;காட்சி அமைப்பு அட்டை : கணினியை ஒரு காட்சித் திரையுடன் மின்னணு முறையில் இணைக்கும் ஏற்பி அட்டை. கணினித் திரையின் அளவு, நிறம் மற்றும் வரைகலை உண்டா இல்லையா என்பது போன்ற திறன்களை இது முடிவு செய்யும்.

display background : காட்சிப் பின்னணி;காட்சிப் பின்புலம் : செயலாக்கம் செய்வதன் பகுதியாக இல்லாத, பயன்படுத்து வோரால் மாற்ற முடியாத வரைகலை தரவுகளில் திரையில் காட்டப்படும் பகுதி. காட்சி முன்னணி எனப்படும் காட்சியில் தோன்றும் தோற்றத்தை மேம்படுத்தப் பயன்படுகிறது.

display card : காட்சியட்டை.

display composition : காட்சியக இணைப்பாக்கம் : மேசை மோட்டு வெளியீட்டில், திண்மையாகவும், அலங்காரமாகவும் மாறுபட்ட எழுத்து முகப்புகளாகவும் உள்ள எழுத்துருக்களைக்கொண்ட வரிகள். இது கவனத்தை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

display console : காட்சி முகப்பு;காட்சி முனையம் : காட்சித் திரை மற்றும் உள்ளிட்டு விசைப் பலகையைக் கொண்ட உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனம். பணிநிலையம் என்றும் சிலசமயம் அழைக்கப்படுகிறது.

display control : காட்கிக் கட்டுப்பாடு.

display cycle : காட்சி சுழற்சி;காட்சிச் சுழல் : புலனாகும் காட்சித்திரை மீண்டும் புதிதாக மாற எடுக்கும் நேரம்.

display device : காட்சிச் சாதனம் : வரைகலை அச்சுப்பொறி, இலக்க முறை பலகை, ஒளிக்காட்சி முகப்பு போன்ற பார்க்கக்கூடிய வகையில் தரவுகளை உருவாக்கும் திறனுடைய சாதனம. display element : காட்சியகக் கூறு : வரைகலையில், பின்புலம், முன்புலம், வாசகம், வரைகலை உருக்காட்சி போன்ற அடிப்படை வரை கலை அமைப்பிகள். கணினி வரைகலையில் ஒர் உருக்காட்சியின் ஒர் அமைப்பி.

display entity : காட்சி அலகு : கணினி வரைகலையில் ஒளிக்காட்சிக் கூறுகளின் ஒரு தொகுதி. இதனை ஒர் அலகாகக் கொள்ளலாம்.

display face : காட்சி முகப்பு : ஓர் ஆவணத்தில் தலைப்புகள், பெயர்கள் ஆகியவற்றுக்குப் பொருத்தமான எழுத்து முகப்பு. பக்கத்திலுள்ள மற்ற வாசக எழுத்துகளிலிருந்து இது தனித்து முனைப்பாகத் தோன்றுகிறது.

display foreground : காட்சி முன்புலம் : பயனாளரால் மாற்றக்கூடிய காட்சிச் சாதனத்தில் காட்டப்படும் வரைகலை தரவுகளின் பகுதி.

display frame : காட்சிச் சட்டகம் : கணினி வரைகலையில் ஒரு தொடர்ச்சியான துண்டுதல் சட்டகங்களிலுள்ள ஒரு தனிச்சட்டகம்.

display highlighting : காட்சி அதிகரித்தல்;காட்சி சிறப்புறல் : மினுக்குதல், பெரிய எழுத்து, அதிகக் கருமை, தலைகீழ் ஒளி, அடிக்கோடிடல் மாறுபட்ட நிறங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி காட்சித்திரையில் தரவுவை முக்கியப்படுத்தும் வழி.

display image : காட்சி உருவம்;காட்சிப் படிமம் : 'காட்சிச் சாதனத்தில் அப்போது தெரியும் வரைகலை கோப்பின் காட்டப்பட்ட பகுதி.

display list : காட்சியகப் பட்டியல் : கணினி வரைகலையில், அளவுரு வரைகலை உருவமைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஒர் உருக்காட் சியை உருவாக்குகிற அளவுருக்களின் தொகுதி.

display list processor : காட்கியக பட்டியல் செய்முறைப்படுத்தி : கணினி வரைகலையில், கோடுகள், வட்டங்கள் போன்றவற்றை வரைதல் போன்ற வரைகலை வடிவ கணித உருவங்களை, ஒளிக்காட்சிப் பட்டியலிலிருந்து மையச் செயலகத்தை (CPU) உருவாக்குகிற ஒர் எந்திரம்.

display memory : காட்சி நினைவகம்.

display menu : காட்சி வகைப் பட்டியல் : செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைத் தொடரின் அடுத்த செயலை முடிவு செய்யப் பயனாளருக்கு வாய்ப்பு அளிக்கும் நிரல் தொடரில் உள்ள, திரையில் தெரியும் வாய்ப்புகள். காட்சித் திரையில் தெரிவதை அச்சிடு வது, வரைகலை காட்சியை வட்டில் சேமிப்பது போன்றவை வாய்ப்புகளில் சில.

display port : திரைக்காட்சித் துறை : கணினியிலுள்ள வெளியீட்டுத் துறை. காட்சித்திரை போன்ற வெளியீட்டுச் சாதனத்துக்குரிய சமிக்கைகளை இத்துறையின் வழியாகப் பெறலாம்.

Display PostScript (DPS) : காட்சிப் பின்குறிப்பு (டிபிஎஸ்) : ஆடோப் கழகம் தயாரித்துள்ள ஒரு காட்சியக மொழி. இது, ஒரு பயன்பாட்டுச் செயல் முறையிலுள்ள அடிப்படை நிரல்களை திரையில் வரைகலை உருவங் களாகவும், வாசகங்களாகவும் காட்டுகிறது. பின்குறிப்பு அச்சடிப்பு மொழி யின் திரை வடிவம்.

display postscript screen : காட்சியகப் பின்குறிப்புத் திரை : பின் குறிப்பு அச்சடிப்பி மொழியின் மறுபடிவம். இது, ஒரு பயன் பாட்டில் அடிப்படை நிரல்களை, திரையில் வரைகலை உருவங்களாகவும் வாசகங்களாகவும் மாற்றிக் காட்டுகிறது. இது, ஒரு செந்திறமான, சாதனச் சார்பிலாத காட்சி மொழியை அளிப்பதற்கு ஒரு செயற்பாட்டுப் பொறியமைவில் சேர்க்க வடிவமைக்கப்படுகிறது.

display processor : காட்சிச் செய்முறைப்படுத்தி : ஒரு கோப்பின் உள்ளடக்கங்களை கணினித்திரை (Monitor) போன்ற ஒரு சாதனத்தில் காட்சியாகக் காட்டுகிற செயற்பாட்டுக்கான ஒரு செய்முறைப்படுத்தி,

display screen : காட்சித் திரை : மனிதர் பார்ப்பதற்காக வாசகங் களையும், வரைகலை உருவங்களையும் காட்டுவதற்கான ஒரு பரப்பு. இது, எதிர் மின்கதிர்க் குழல் அல்லது பட்டைச் சேணத் தொழில்நுட்பத்தில் அமைந்திருப்பது.

display surface : காட்சி மேற்பரப்பு : புலனாகும் காட்சித் திரை, அச்சுக் காகிதம், பலகைக் காகிதம் அல்லது திரைப்படம் போன்ற தரவுகளைக் காட்டக்கூடிய சாதனம்.

display terminal : காட்சி முகப்பு;காட்சி முனையம் : வரைகலை தரவுகளைப் பார்க்கக்கூடிய வகையில் வெளியிடும் திறனுள்ள ஒரு வெளியீட்டுச் சாதனம்.

display tolerence : காட்சி சகிப்பு;காட்சிப் பொறுதி : எவ்வளவு வரைகலை தரவுகளை எவ்வளவு துல்லியமாக வெளியிட முடியும் என்பதன் அளவு.

display type : காட்சி வகை : எதிர் மின்வாய் (காத்தோட்) கதிர்க் குழாய் (சிஆர்டி), ஒளி உமிழும் டையோடு (எல். இ. டி), ஒளிப் படிகக் காட்சி (எல்சிடி) போன்ற காட்சித் தொழில் நுட்பம்.

display unit : காட்சி அலகு : தரவுகளைப் பார்க்கக்கூடிய வகையில் அளிக்கும் ஒரு சாதனம்.

display write : காட்சி எழுத்து : IBM காட்சி எழுத்துத் தொகுதியானது, அந்நிறுவனத்தின் சொல் பகுப்பி, காட்சி எழுது கருவியிலிருந்து உருவாக்கப் பட்டதாகும். பழைய முறை இப்போது வழக்கில் இல்லை.

dispose : முடித்துவை.

distortion : சிதறல்;திரிபு : அனுப்பும் சாதனம் உள்ளிட்ட மின்சுற்று களின் வழியாக அனுப்பப்படும் மின்சுற்றுகளின் அலை வடிவத்தில் ஏற் படும் விரும்பத்தகாத மாற்றம். ஒரு அளவுக்கு மேற்படாமல் சிதறல்களைக் கட்டுப்படுத்தி உள்ளிட்டு சமிக்கைகளை மாற்றுவதே மின்சுற்றுகளை வடி வமைப்பதில் உள்ள முக்கிய சிக்கல்.

distribute : பகிர்ந்தளி;பகிர்ந்தமை;ஒரு பிணையத்தில் பிணைக்கப் பட்டுள்ள கணினிகள் மற்றும் பிற சாதனங்களின் தொகுதியால் நிறை வேற்றப் படும் தரவு செயலாக்கம் போன்ற செயல்பாடுகளை, பல்வேறு கணினிகளுக்கிடையே பகிர்ந்தமைத்தல்.

distributed bulletin board : பகிர்ந்தமை;அறிக்கைப்பலகை : ஒரு விரி பரப்புப் பிணையத்திலுள்ள அனைத்துக் கணினிகளுக்கும் பகிர்ந்தளிக்கப் படுகின்ற செய்திக் குழுக்களின் தொகுதி.

distributed computing : பகிர்ந்தமை கணிப்பணி.

distributed computing environment : பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்; பகிர்மானக் கணிமைச் சூழல் : ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் செயல்படக் கூடிய பகிர்ந்தமை பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தர வரையறைத் தொகுப்பு. வெளிப்படை குழு என்ற குழுவினர் உருவாக்கியது. இக்குழு, முன்பு, வெளிப்படை மென்பொருள் அமைப்பு (Open Software Foundation) என்ற பெயரில் நிலவியது.

distributed database : பகிர்மான தரவுத் தளம் பரவிய தரவுத் தளம் : ஒரு கட்டமைப்பில் கணினி அமைப்புகளின் மூலமாக பரவ லாக்கப்பட்ட தரவுத் தளம்.

distributed database management system : பகிர்ந்தமை தரவுத் தள மேலாண்மை முறைமை : பகிர்ந்தமை தரவுத்தளங்களைக் கையாளும் திறன்பெற்ற ஒரு தரவுத்தள மேலாண்மை முறைமை.

distributed data processing : பகிர்மான தரவுச் செயலாக்கம் : கணினி அமைப்பில் இயக்கங்களைச் செய்யும் கொள்கைகளில் ஒன்று. அதன்படி மையச் செயலக அலகுகளும், முகப்புகளும் பல்வேறு இடங்களில் பிரிந் திருந்தாலும் அவை தரவுத் தொடர்பு கட்டமைப்புகளின் மூலம் செயல் பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.

distributed design : பகிர்மான வடிவமைப்பு;பரவிய வடிவமைப்பு : தனிப்பட்ட இயக்கும் அலகுகள் இருப்பதை அடையாளம காணுவதுடன. மைய ஒருங்கிணைப்பு மற்றும் கட்டுப்பாட்டின் பலன்களையும் ஏற்கும் தரவு அமைப்பு.

distributed file system : பகிர்மானக் கோப்பு முறை : பன்முக இணை யங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளின் தடம்பற்றிச் செல்லும் மென்பொருள். கோப்புகள், அமைவிடத்தைப் பொறுத்து அல்லாமல், அவற்றின் பெயரால் அடையாளங் காணப்படுகின்றன.

distributed function : பகிர்மானச் செயற்பணி : அமைவனம் முழு வதிலும் செய்முறைப்படுத்தும் பணிகளைச் செய்தல்.

distributed information processing system : பகிர்மான தரவு செயலாக்க அமைப்பு : பல்வேறு இடங்களில் அமைந்துள்ள தரவுத் தளங்கள் அல்லது எதிர்வினை ஆற்றும் கணினி அமைவுகளின் தொகுதி.

distributed intelligence : பகிர்மான அறிவுத் திறன் : முனையங் களிலும், பிற புறநிலைச் சாதனங்களிலும் செய்முறைப் படுத்தும் திறம்பாட்டினை அமைத்தல். திரை உருவமைவு, தரவுப் பதிவுச் செயல்மானம், பிற செய்முறைப்படுத்துதலுக்கு முந்திய நடவடிக்கைகளை அறிவுத் திறன் முனையங்கள் கையாள்கின்றன. வட்டு இயக்கிகள், பிற புறநிலைச் சாதனங்களில் அமைக்கப்படும் அறிவுத்திறன். மையக் கணினியை வாலாயப் பணிகளிலிருந்து விடுவிக்கிறது. distributed network : பகிர்மான இணையம்;பகிர்மான கட்டமைப்பு : இடைப்பட்ட முனைகளின் வழியாக நேரடியாகவோ அல்லது மிதமிஞ்சிய பாதைகளின் வழியாகவோ எல்லா முனை இணைகளும் இணைக்கப் பட்டுள்ள கட்டமைப்புத் தொகுதி.

distributed processing : பகிர்ந்தமை செயலாக்கம் : ஒரு தரவு தொடர்புப் பிணையத்தில் பிணைக்கப்பட்ட தனித்தனிக் கணினிகளால் நிறைவேற்றப் படும் தரவு செயலாக்கத்தின் ஒரு வடிவம். பகிர்ந்தமை செயலாக்கம் பொதுவாக இரண்டு வகைப்படும். 1. சாதாரண பகிர்ந்தமை செயலாக்கம். 2. உண்மையான தரவு செயலாக்கம். சாதாரணத் தரவு செயலாக்கத்தில், பணிச்சுமையானது, தமக்குள்ளே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடிகிற கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. உண்மையான பகிர்ந்தமை செயலாக்கத்தில், பல்வேறு பணிகள் ஒவ்வொரு கணினியும் ஒவ்வொரு பணியை நிறைவேற்றும் வகையில் பணிச்சுமை பகிர்ந்தளிக்கப் படுகிறது. பணிகளின் ஒட்டு மொத்தப் பங்களிப்பு ஒரு பெரும் குறியிலக்கை அடைய வழி வகுக்கும்.

distributed processing system : பகிர்ந்தமைத் தரவு செயலாக்க முறைமை.

distributed transaction processing : பகிர்ந்தமை பரிமாற்றச் செயலாக்கம் : ஒரு பிணையத்தின் வழியாக தரவு பரிமாற்றம் செய்துகொள்ளும் கணினிகள், பரிமாற்றச் செயலாக்கப் பணிகளை தமக்குள்ளே பகிர்ந்து கொள்ளும் முறை.

distribution list : பகிர்மானப் பட்டியல்;வினியோகப் பட்டியல் : ஒரு மின்னஞ்சல் குழு (mailing list) உறுப்பினர்களின் முகவரிப் பட்டியல். இது லிஸ்ட்செர்வ் (Listserv) போன்ற ஒரு அஞ்சல் குழு மென்பொருளாகவோ, ஒரு மின்னஞ்சலைப் பெறுகின்ற அனைவருடைய முகவரிகளுக்கும் சேர்த்த ஒரு மாற்றுப் பெயராகவோ இருக்கலாம்.

distributive nature : பகிர்வுத்தன்மை;பகிர்ந்தளிக்கும் இயல்பு.

distributive sort : பகிர்மானப் பிரிவு : ஒரு பட்டியலை பல பகுதிகளாகப் பிரித்து மீண்டும் வரிசையாக அடுக்குவதனால் உருவாக்கப்படும் பிரிப்புமுறை.

disturbance : தடங்கல் : ஒரு சமிக்கையை அனுப்பும்போது அறிவு பரிமாற்றலில் எப்போதாவது ஏற்படும் குறுக்கீடு. dithering : குழப்ப நிலை : 1. ஒரு புதிய நிறத்தை உருவாக்க பலநிறப் புள்ளிகளை ஒன்று கலத்தல். புள்ளிகள் சிறியதாகவும், குறைவான இடைவெளியுடனும் அமைந்து ஒன்றாக இருப்பதுபோல் கண்களைக் குழப்பும். 2. உருவம் மற்றும் சாதனத்தின் உருவாக்கல் திறன் ஒன்றாகும் போது காட்சியின் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் வரைகலை துட்பம்.

divergence : விலகல் : நேர் பாதையினின்று விலகிச் செல்லல். குறியிலக்கை விட்டு விலகிச் செல்லல். 1. கணினியின் வண்ணத் திரையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவற்றின் மின்னணுக் கற்றைகள் திரையின் ஒரு குறித்த இலக்கில் ஒருங்கிணைந்து குவியாதபோது இத்தகைய விலகல் ஏற்படுகிறது. 2. விரிதாள் பயன்பாடு போன்ற மென்பொருள்களில் ஒரு நிரலில் தவறான ஒரு வாய்பாட்டின் காரணமாக சுழல்தன்மை ஏற்பட்டு, கணக்கீடு, திரும்பத் திரும்ப செய்யப்படும் நிலை ஏற்படலாம். ஒவ்வொரு கணக்கீட்டின் போதும் கிடைக்கும் முடிவு, விடையை விட்டு விலகிவிலகிச் செல்லும்.

dividend : வகு எண்;ஆதாயப் பங்கு.

division : பிரிவு.

division by zero : சுழியால் வகுத்தல்; பூச்சியத்தால் வகுத்தல் : வகுத்தல் கணக்கீட்டில் ஒர் எண்ணை பூஜ்யத்தால் (0 சுழி) வகுக்க முயலும்போது ஏற்படும் பிழைதிலை. எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் எண்ணிலி (infinity) விடையாகும். கணித முறைப் படி கணிக்க முடியாத மதிப்பாகும் இது. அதாவது ஒரு வகுத்தல் கணக்கீட்டில் விகுதி (denominator) மிகச் சிறிதாகிக்கொண்டே போனால் கிடைக்கும் ஈவு பெரிதாகிக் கொண்டே போகும். விகுதி ஏறத்தாழ பூச்சியத்துக்குச் சமமான மிகச்சிறிய மதிப்பாக இருக்குமெனில், ஈவானது ஒரு கணினியால் கணிக்க முடியாத அளவுக்குப் பெரிய எண்ணாக இருக்கும். எனவே, பூச்சியத்தால் வகுக்கும் கணக்கீட்டை கணினி அனுமதிப்பதில்லை. எனவே, நிரலர் இது போன்ற சூழ்நிலை ஏற்படாதவாறு தம்முடைய நிரலில் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் நிரல் செயல்படாமல் பாதியில் நிற்கும். division check : வகுத்தல் சரி பார்ப்பு;பரிவு சோதனை : ஆரம்ப வகுத்தலுடன் சுழி (பூஜ்யம்) யை சமநிலைப்படுத்துவதைச் சோதிக்கும் பெருக்கல் சோதனை.

division, identification : இனங்காண் பிரிவு.கோபால் மொழி நிரலின் ஒரு பகுதி.

divisor : வகுப்பி;வகு எண்.

. dj : . டிஜே : இணையத்தில், ஒர் இணைய தளம் டிஜிபவுட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

. dk : . டிகே : இணையத்தில், ஒர் இணைய தளம் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

DLC : டிஎல்சி : தரவு தொடர்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Data Link Control என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பிணையத் தில் பருநிலையில் இணைக்கப்பட்ட இரண்டு கணுக் கணினிகளிடையே நடைபெறும் தரவு பரிமாற்றத்தில் ஏற்படும் பிழைகளைச் சரி செய்யும் நெறிமுறை. எஸ்என்ஏ (SNA-Systems Network Architecture) அமைப்பில் பயன் படுத்தப்படுகிறது.

. dll : . டிஎல்எல் : விண்டோஸ் இயக்கமுறையில் படுத்தப்படும் ஒரு வகைக் கோப்பின் வகைப்பெயர். இயங்குநிலை தொடுப்பு நூலகக் கோப்பு என்று பொருள்படும் Dynamic Link Library என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

DMA : டிஎம்ஏ : Direct Memory Access என்பதன் முதலெழுத்துக் குறும்பெயர். இதற்கு நேரடி நினைவக அணுகல் என்பது பொருளாகும்.

DML : டிஎம்எல் : Data Manipulation language என்பதன் குறும்பெயர். தரவு கையாளும் மொழி.

DΜΤF : டிஎம்டிஎஃப் : மேசைக் கணினி மேலாண்மைப் முனைப்புக் குழு என்று பொருள்படும் Desktop Management Task Force என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பயனாளர் மற்றும் தொழில் துறைத் தேவைகளுக் காக பீசி அடிப்படையிலான தன்னந்தனிக் கணினி மற்றும் பிணைய அமைப்புகளுக்கான தர வரையறைகளை உருவாக்குவதற்கென 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கூட்டமைப்பு.

DNC : டிஎன்சி : Direct Numerical Control என்பதன் குறும்பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/U&oldid=1085161" இலிருந்து மீள்விக்கப்பட்டது