இந்தியக் கலைச்செல்வம்/நன்றி

விக்கிமூலம் இலிருந்து
நன்றி

ன் தந்தையாரை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நான் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. வேங்கடம் முதல் குமரி வரையிலும், வேங்கடத்துக்கு அப்பாலும் உள்ள தமிழ் அன்பர்களுக்குத் தமது கலைக் கட்டுரைகள் மூலமாகவே நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் வானொலி மூலம் தமிழ் மக்களுக்கு அளித்த கலைக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை, கலைஞன் பதிப்பகத்தார் வெளியிட முன் வந்தது பொருத்தமாக அமைந்துவிட்டது.

நூலுக்கு அருமையான முன்னுரை தந்துதவியிருக்கும் சகோதரர், தொல்பொருள் துறை இயக்குநர் திரு. ஆர். நாகசாமி அவர்களுக்கு, என் வணக்கமும் நன்றியும் உரியன.

இந்நூலை வெளியிட என் தந்தையின் வாழ்நாளிலேயே அனுமதி வழங்கிய திருச்சி வானொலி நிலையத்தாருக்கும், குறைந்த கால அளவில் அழகாக அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி அவர்களுக்கும் என் நன்றி உரியது.

கலைஞன் பதிப்பகத்தாரால் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட, இந்தியக் கலைச் செல்வம் என்ற இந்த நூல், இப்போது இரண்டாவது பதிப்பாக வெளிவருகிறது. என் தந்தையார், திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், அவ்வப்போது, திருச்சி வானொலியில் ஆற்றிய உரைகளே, நூல் வடிவம் பெற்றிருக்கிறது. இந்தியக் கலைச் செல்வமான, சிற்பம், சித்திரம், அதற்கான உத்திகள், பரிமாணங்கள் இவற்றையெல்லாம் நுணுகி ஆராய்ந்து, அதைக் கலை அன்பர்களுக்குக் காணிக்கையாக்கியிருக்கிறார்கள். அருங்கலைச் செல்வர் திரு, நாகசாமி அவர்கள், இந்த நூலுக்கு அப்போதே அருமையானதொரு முகவுரை வழங்கியிருக்கிறார். அதனையே இந்தப் பதிப்பிலும் பயன்படுத்திக் கொள்வதில் பெருமை அடைகிறோம். இந்தக் கலைச் செல்வம், கலைஞர்களுக்கும் கலா ரசிகர்களுக்கும் என்றென்றும் இன்பம் தரக் கூடியது. இதனை மீண்டும் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டு உதவும் கலைஞன் பதிப்பகத் துக்கு நன்றி உரியது.

ராஜேஸ்வரி நடராஜன்


'பாஸ்கர நிலையம்'
10, 7ஆவது குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை - 20.