இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/9

விக்கிமூலம் இலிருந்து

கலீஃபாவாக இருந்த அலி (ரலி) நினைத்திருந்தால் அக் கிருஸ்தவரிடமிருந்து அக்கவசத்தை எளிதாகத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பறிமுதல் செய்து திரும்பப் பெற்றிருக்க முடியும். அவ்வாறு செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. யாராக இருந்தாலும் வழக்கு மன்றம் மூலம்தான் பெற வேண்டும் என்பதால், தனது இரும்புக் கவசம் கூஃபா கிருஸ்தவரிடம் இருப்பதாகவும் முறைப்படி நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்குத் தொடுத்தார் அலி (ரலி) அவர்கள்.

நீதிபதி ஷுரஹ் பின் ஹாரிஸ் என்பவர் வழக்கை விசாரித்தார். நாட்டின் நான்காவது கலீஃபாவான அலி (ரலி) அவர்கள் ஒரு சாதாரண குடிமகன் போல் வழக்கு மன்றம் வந்து, கிருஸ்தவரிடம் இருக்கும் கவசம் தன் உடைமை என்றும் அதனைப் பெற்றுத் தருமாறும் நீதிபதியை வேண்டினார். அந்தக் கவசம் தன்னுடையது தான் என்பதை நிரூபிக்க தன் மகனை சாட்சிக்கழைத்தார். தந்தை வழக்கில் தனயன் சாட்சி ஏற்கப்பட மாட்டாது எனக் கூறி வழக்கை முற்றாகத் தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி ஷுரஹ் பின் ஹாரிஸ்.

நாட்டின் தலைமைப் பொறுப்பில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கலீஃபாவே சாதாரண குடிமகனாக வழக்கு மன்றம் வந்து முறையிட்டதையும் மகன் சாட்சியம் செல்லாது என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையும் அறிந்த அக்கிருஸ்தவர் மிகவும் மனம் நெகிழ்ந்து போய் விட்டார். இஸ்லாமியராயினும் மாற்றுச் சமயத்தவராயினும் எல்லோரும் மனிதர்கள் என்ற நிலையில் சமநீதி வழங்கும் இஸ்லாமிய சட்டத்தின் தகைமை அவரது மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவே, அவராகவே முன் வந்து தன்னிடமிருக்கும் இரும்புக் கவசம் அலியாருடையதே என ஒப்புக் கொண்டார். கவசத்தையும் அலி (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார். இவ்வாறு இஸ்லாமியராக இருந்தாலும் அல்லது மாற்றுச் சமயத்தவர்களாக இருந்தாலும் நீதியின் முன் சமமாகவே நடத்தப் பட்டார்கள்.

அரசியேயாயினும் தண்டனையிலிருந்து
தப்பவே முடியாது

கலீஃபாக்களின் ஆட்சியில்தான் இந்நிலை என்பதில்லை. இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியின் போதும் இஸ்லாத்தின் இதே சமநீதி முறைதான் மிகுந்த கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட்டு, சமூக நீதி-சமநீதி நிலை நாட்டப்பட்டது என்பதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும்.

மன்னர் ஜஹாங்கீரின் ஆட்சிக்காலம். அவரது அன்பு மனைவி நூர்ஜஹான் அறிவுக் கூர்மை மிக்கவர்; நிர்வாகத்திறன் வாய்க்கப் பெற்றவர். இதனால், மன்னர் ஜஹாங்கீருக்கு நிர்வாகத்தில் பெருந்துணையாய் விளங்கி வந்தார்.

ஒருநாள் தன் தோட்டத்தின் ஒர் பகுதியில் அம்பெய்யும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தோட்டத்தின் வெளிப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த ஹிந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு சலவைத் தொழிலாளியின் உடலில் அம்பு பாயவே அவன் அப்போதே உயிரிழந்தான். இதையறிந்த அரசி நூர்ஜஹான் அவன் இறப்புக்கு தானே முழுப் பொறுப்பு எனக் கூறினார். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி சலவைத் தொழிலாளி சாவுக்குக் காரணமான நூர்ஜஹான் கொலைக் குற்றவாளி எனக் கூறி, அக்குற்றத்திற்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறினார். நாடாளும் மன்னரின் மனைவி, ஆட்சி அதிகாரத்தில் பெரும்பங்கு வகித்து வந்த பட்டத்து ராணி சிறையில் அடைக்கப்பட்டார்.

மன்னர் ஜஹாங்கீர் மரண தண்டனையிலிருந்து அரசியை விடுவிக்க இஸ்லாமியச் சட்டத்தில் ஏதேனும் வழி வகைகள் உண்டா என இஸ்லாமியச் சட்ட வல்லுநர்களைக் கேட்டுக் கொண்டார். ஆழ்ந்த ஆய்வுக்குப்பின் சட்டத்தில் ஒரு சலுகை இருப்பதைக் கண்டறிந்தார்கள். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள், யாருடைய வற்புறுத்தலோ கட்டாயமோ இல்லாது தானாக முன்வந்து மரணத்துக்கான ஈட்டுத் தொகை கேட்டுப் பெற்றுக் கொண்டால், குற்றவாளியை மன்னித்து விடுதலை செய்து விட முடியும் என்பதே அது. இதையறிந்த மன்னர் ஜஹாங்கீர், இறந்தவரின் வாரிசுகளின் ஒப்புதல் பெற எக்காரணம் கொண்டும் தன் செல்வாக்கையோ அதிகாரத்தையோ கடுகளவும் பயன்படுத்தக் கூடாது எனக் கடுமையாகக் கட்டளையிட்டார்.

பிறகு, குடிமக்களே ஹிந்து சலவைத் தொழிலாளியின் மனைவியிடம் சென்று ஈட்டுத் தொகை பெற்று குற்றவாளியை மன்னிக்கும் சட்ட முறையை எடுத்துக்கூறி வேண்டினர். அவளும் மனமிரங்கி ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டு கொலைக் குற்றவாளியை மன்னிப்பதாகக் கூறினாள். இதனால் நூர்ஜஹான் மரண தண்டனையிலிருந்து விடுதலை பெற முடிந்தது.

ஒரு சாதாரண சலவைத் தொழிலாளியாக, மாற்றுச் சமயத்தவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்ற நிலையில் சமநீதி வழங்க இஸ்லாமியச் சட்டமோ, அதன் வழி அரசு நடத்திய முஸ்லிம் மன்னர்களோ கிஞ்சிற்றும் தவறவில்லை என்பதற்கு இதுபோன்ற சான்றுகள் எண்ணற்றவை வரலாறு நெடுக உண்டு.

கிருஸ்தவர்களுடன் உடன்படிக்கை

பெருமானார் அவர்கள் அகழ்ப் போருக்கும் ஹுதைபியா உடன்படிக்கைக்கும் இடையே ஸீனா மலையில் இருந்த காதரின் மடத்திலிருந்த கிருஸ்தவ பாதிரிமார்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்த ஷரத்துகள் சமய நல்லிணக்க உணர்வுக்குக் கட்டியங் கூறுவனவாக அமைந்துள்ளன. அவைகளில் சில:

🌑 கிருஸ்தவ பாதிரிமார்களில் எவரேனும் பிரயாணம் செய்யும் பொழுது மலை மீதோ குன்றின்மீதோ, கிராமத் திலோ, மக்கள் வாழும் வேறு இடத்திலோ கடலிலோ, பாலைவனத்திலோ, சந்நியாசி மடத்திலோ, மாதா கோவிலிலோ, இறை வணக்கம் செய்யுமிடத்திலோ இருப்பாரானால், அவர்களையும் அவர்களுடைய பொருட்களையும் பாதுகாக்க நானும் என் எல்லா மக்களும் அவர்களுக்கு எல்லா உதவியையும் செய்வோம். ஏனென்றால், அவர்களெல்லாம் என்னுடைய மக்களில் ஒரு பகுதி ஆவர். மேலும், அவர்களால் எனக்குப் பெருமை உண்டு.

🌑 கிருஸ்தவர்களுடைய நீதிபதிகளையும் ஆளுநர்களையும் மாற்றவும் நீக்கவும் முஸ்லிம் உத்தியோகஸ்தர்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் அனைவரும் விலக்கப்படாமல் அந்தந்த உத்தியோகத்தில் இருப்பார்கள்.

🌑 அவர்களுடைய மாதா கோயில்கள், சந்நியாசி மடங்கள் அல்லது மதசம்பந்தமான வேறு விஷயங்களில் கிருஸ்தவர்களுக்கு உதவி தேவையாக இருந்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் உதவிசெய்ய வேண்டும்.

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் பகுதியில் சிறுபான்மையினரான கிருஸ்தவர்கள், யூதர்கள் எவ்வாறு சமத்துவமாகவும் தக்க பாதுகாப்போடும் வாழ பெரும்பான் மையினர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு பெருமானார் வழிமுறைகள் இலக்கணமாகவே அமைந்துள்ளதெனலாம்.

பிற சமயத்தவரின் அபகாரத்திற்கு
உபகாரம் செய்த பெருமானார்

சிலை வணக்கச் சமயத்தவர்களான மக்கா குறைஷிகள் அண்ணலாருக்கும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களுக்கும் செய்த அக்கிரமங்கள், அபகாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பிறந்த மண்ணை விட்டே விரட்டியடித்தனர். மதீனா சென்ற பிறகும் விடாமல் பெருமானாரோடு போரிட்டு அழிக்க முயன்றனர்.

இந்நிலையிலும் மக்கா குறைஷிகளுக்கு வேண்டிய மிக முக்கிய உணவுப் பொருளான கோதுமையை தவறாது அனுப்பிவந்தவர் எமாமா மாநிலத்தைச் சேர்ந்த துமாமா எனும் முஸ்லிமாவார். குறைஷிகளின் அக்கிரமப் போக்குகள் அதிகரித்தபோது மக்காவுக்கு அனுப்பிவந்த கோதுமையை தொடர்ந்து அனுப்பாது நிறுத்திவிட்டார். இதனால் மக்காவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட கடும் பஞ்சம் தலை தூக்கியது. குறைஷிகள் எவ்வளவோ முயன்றும், துமாமா கொடிய குறைஷிகளுக்குக் கோதுமை தரமறுத்துவிட்டார். பசியாலும் பட்டினியாலும் துவண்டு போன மக்கா குறைஷிகள் வேறு வழியில்லாமல் பெருமானாருக்குத் தூதனுப்பி துமாமாவைத் தொடர்ந்து கோதுமை அனுப்பி பஞ்சம் போக்குமாறு வேண்டினார்.

மாற்றுச் சமயத்தவர்களான குறைஷிகள் செய்த கொடுமைகளையெல்லாம் நாயகத் திருமேனி கொஞ்சமும் நினைவிற் கொள்ளாமல், பகைவர்க்கருளும் அன்பு உள்ளத்தோடு துமாமாவுக்கு ஆள் அனுப்பி வழக்கம்போல் மக்கா குறைஷிகளுக்குத் தொடர்ந்து கோதுமை அனுப்பியுதவு மாறு செய்தார். அதன்மூலம் மக்கா வாழ் குறைஷி களிடையே நிலவிய கொடிய உணவுப் பஞ்சமும் நீங்கிற்று.

அண்ணலார்ளா வாளாவிருந்திருந்தால் துமாமா எதிர்பார்த்தபடி பஞ்சத்தின் கொடுமை தாளாத குறைஷி மக்கள் திருந்தி முந்தைய சிலை வணக்கச் சமயத்தைவிட்டு விட்டு இஸ்லாத்தின்பால் வந்திருக்கவோ அல்லது முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த பகையுணர்வைக் குறைத்துக் கொள்ளவோ முடியும். அதற்கான வளமான வாய்ப்பு இருந்தும், அதை ஏற்க பெருமானார் சிறிதும் விரும்பவில்லை. இத்தகைய செயலும் ஒருவகையான மறைமுகக் கட்டாயமேயாகும் என எண்ணினார். “இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை” என இறைவனே திருமறையில் கூறியிருக்கும்போது நாயகத் திருமேனி அவ்வழியை எப்படி ஏற்பார்? மனிதாபிமான நிறைகுடமான நாயகத் திருமேனி முஸ்லிம்- முஸ்லிமல்லாதார் என்ற உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் எல்லோரையும் ஒன்றாகக் கருதி செயல்பட்டு இறைநெறிக்கு இலக்கணமாயமைந்தார்.

பாதிரியார்கள் பெற்ற பெருமதிப்பு

அண்ணலாரின் அடிச் சுவட்டைப் பின்பற்றி ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் பிற சமயத்தவர்களின் சமய, சமுதாய உரிமைகளைப் பேணிக் காப்பதில் எப்போதும் பெரும் கவனம் செலுத்தினர் என்பதற்கான சான்றுகளை வரலாறு நெடுகக் காண முடிகிறது.

கான்ஸ்டான்டிநோபிளை வெற்றி கொண்ட துருக்கிப் பேரரசர் இரண்டாம் முஹம்மது, தம்மை கிரேக்ககிருஸ்தவ சமுதாயத்தின் பாதுகாவலர் என அறிவித்தார். அதற்கிணங்க போப்பாண்டவரின் ஆதிக்கத்திற்குட்படாத கிருஸ்தவர்களுக்குத் துளியளவு தொல்லைகூட யாரும் தரக்கூடாது என கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஸ்தவத் தலைமைப் பாதிரியாருக்கும் அவரைத் தொடர்ந்து வரக்கூடிய பாதிரியார்களுக்கும் முன்பு இருந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நிலங்களுக்குரிய நிலவரி முதலான அனைத்து வரிகளையும் வசூலித்துக் கொள்ளும் முழு உரிமையும் வழங்கப்பட்டன.

துருக்கியின் வெற்றிக்குப் பின் முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஸ்தவ தலைமைப் பாதிரியார் ஜென்னாதியாஸுக்குரிய, அப்போது தலைமைப் பாதிரியாருக்கு ஆயிரம் பொற்காசுகளையும் ஏறிச் சவாரி செய்ய குதிரையையும் அன்பளிப்பாக வழங்கினார். அக்குதிரை மீதேறி நகரில் பரிவாரத்துடன் பவனிவந்தார். கான்ஸ்டான்டிநோபிள் வெற்றி கொள்வதற்குமுன் அங்கிருந்த கிருஸ்தவ தலைமைப் பாதிரியாருக்கு என்னென்ன உரிமைகளும் அதிகாரமும் இருந்ததோ அவை அனைத்தையும் மீண்டும் சுல்தான் அளித்தார். இன்னும் சொல்லப்போனால் முன்னர் இருந்ததைவிட அதிகமான உரிமைகளும் அதிகாரமும் அளிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிருஸ்தவர்களுக்கென தலைமைப் பாதிரியார் தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தங்கள் சமய அடிப்படையில் விசாரணை செய்து அபராதமும் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. கிருஸ்தவ சமயக் குற்றவாளிகளுக்கென தனிச் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டன. இந்நீதி மன்றங்கள் மரண தண்டனைவரை குற்றத் தண்டனை அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது, பாதிரியார்கள் வழங்கும் இத்தீர்ப்புகளை அமுல்படுத்தும் படி முஸ்லிம் அதிகாரிகளுக்கு சுல்தான் ஆணையிட்டிருந்தார். மற்றபடி கிருஸ்தவ மதத் தொடர்பான விஷயங்களிலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் முழு அதிகாரம் கிருஸ்தவ சபைகளுக்கே உண்டு என்பது சட்டப்படி உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. முஸ்லிம் அதிகாரிகள் மட்டுமல்ல, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த சுல்தானே தலையிடுவதில்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த ஆளுநராவது இதற்கு மாறுபாடாக நடக்க முயன்றால் அந்த விஷயத்தைச் சுல்தான் பார்வைக்குக் கொண்டு செல்லவும், இன்னலுக்கு ஆளான கிருஸ்தவர்களின் துயர் துடைக்கவும் தலைமைப் பாதிரியாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மாற்றுச் சமயமான கிருஸ்தவர்கள் எல்லா விதமான உரிமைகளையும் சலுகைகளை, அதிகாரங்களையும் பெற்று முஸ்லிம்களுக்கு இணையான நிலையில் எவ்விதக் குறையும் இல்லாது வாழ்ந்து வந்தனர் என்ற வரலாற்றுச் செய்திகள் இஸ்லாத்தின் பிற சமய நல்லிணக்கப் போக்கையும் பிற சமயக் கண்ணோட்டத்தையும் அதற்கு வழிகாட்டியாயமைந்த பெருமானார் வாழ்வையும் வாக்கையும் நமக்கு இன்றும் உணர்த்திக் கொண்டுள்ளன.

மதிப்பதும் ஏற்பதும் ஒன்றா?

ஒவ்வொரு முஸ்லிமும் இறுதித் தூதருக்கும் இறுதி வேதத்திற்கும் முன்னதாக அனுப்பப்பட்ட இறைதூதர்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறை வேதங்களையும் கோட்பாட்டளவில் ஒப்புக் கொள்கிறான். அதனால் அவற்றை மதிப்பதும் அவனுக்குரிய கடப்பாடாகிறது. ஆயினும், அவற்றை அவன் ஏற்றுச் செயல்படுத்த முனைவதில்லை. இறுதித் தூதரையும் இறுதி வேதத்தையும் முழுமையாக ஏற்று, வாழ்வில் முழுமையாகச் செயல்படுத்தி முழுமை முஸ்லிமாக ஆக முனைகிறான். இதன் மூலம் துணை இல்லாதவன்; அவனை யாரும் பெறவும் இல்லை; அவன் யாரையும் பெற்றெடுக்கவும் இல்லை என அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறது. மற்றொரு மதம் ‘இறைவன் ஒருவனல்ல; அவர்கள் பலர். அவர்கட்கு துணையும் உண்டு, பிள்ளைகளும் குடும்பமும் உறவு முறைகளும் உண்டு’ என்கிறது.

ஒரு சமயம் மனிதனுக்கு மறுபிறவி என்பதே இல்லை. இறந்த மனிதனின் ஆன்மா இறுதித் தீர்ப்பு நாள்வரை காத்திருக்க வேண்டும். அவ்வாத்மா இவ்வுலக வாழ்வில் செயல்பட்டதற்கேற்ப நரக வேதனையோ அல்லது சொர்க்கப் பெருவாழ்வோ பெறமுடியும் என்கிறது.

ஆனால், வேறொரு சமயமோ மனிதனுக்குப் பல பிறவிகள் உண்டு. அவன் செயற்பாடுகளுக்கேற்ப அவன் பிறவி எடுத்துக்கொண்டே இருப்பான் என்று கூறுகிறது. மனிதன் மட்டுமல்ல இறைவனும் மனிதர்களில் ஆணாகவும் பெண்ணாகவும், ஏன் சில சமயங்களில் விலங்கு வடிவாகவும் கூட (நரசிம்மவதாரம்) அவதாரம் எடுப்பதுண்டு எனக் கூறுகிறது. இவைகளையெல்லாம் எவ்வாறு ஒரு நிலையில் ஒரே படித்தரமாக வைத்து ஏற்க முடியும்? அப்படி ஏற்பது எவ்வாறு அறிவுக்குப் பொருத்தமுடையதாக ஆகும்? கறுப்பையும் வெண்மையையும் ஒரே மாதிரியான வண்ணமாக ஏற்பது எங்ங்னம்? என்றெல்லாம் எழுப்பப்படும் வினாக்களை எளிதாக ஒதுக்கிவிட முடியாது. அவை ஆழ்ந்த ஆய்வுக்குரியவைகளே ஆகும்.

உலக மதங்கள் அனைத்துமே ஒரே மூலாதார அடிப்படையுடையனவேயாகும் என்றாலும் காலப் போக்கில் அவைகளே வளர்த்துக் கொண்ட கடவுட் கொள்கைகளும் இறை வழிப்பாட்டுச் சமயச் சடங்கு, சம்பிரதாயக் கோட்பாடுகளும் வெவ்வேறு விதமாய், எதிரும் புதிருமாக மதிப்பது அல்லது ஒப்புக் கொள்வது என்பது வேறு; ஏற்பது அல்லது நடைமுறைப்படுத்துவது என்பது வேறு எனத் தெளிவாகிறது.

எம்மதமும் சம்மதம் எனும்
கருத்து ஏற்புடையதுதானா?

அண்மைக் காலமாக ஒரு கவர்ச்சிகரமான முழக்கம் நம்மிடையே முழங்கப்பட்டு வருகிறது. ‘எம்மதமும் சம்மதம்’ எனும் முழக்கமே அது. அனைத்துச் சமயங்களும் அவை புகட்டும் கொள்கை, கோட்பாடுகளும் சமமானவையே. அவை சத்தியத்தின்பாற்பட்டவையே. இறையருளைப் பெறவும் மேலுலகப் பெருவாழ்வு பெறவும் இவ்வுலக வாழ்வு வெற்றி காணவும் எந்த மதமாயினும் வேறுபாடின்றி அவற்றை ஏற்றுப் பின்பற்றலாம். குறிப்பிட்ட ஒரு மதத்தின் கொள்கை கோட்பாடுகளை மட்டும் ஏற்ப தென்பது ஏற்புடையதன்று; அஃது பிற்போக்குத் தனமானதும் கூட. அவ்வாறு கூறுவதும் செயல்படுவதும் சமய சகிப்புணர்வின்மையையே வெளிப்படுத்தும் ஒன்றா கும் என்ற உணர்வை ஊட்டுகின்ற முறையில் ‘எம்மதமும் சம்மதமே’ எனக்கூறித் தங்கள் பரந்த உள்ளத்தைப் பறைசாற்ற பலரும் முற்படுகின்றனர்.

இத்தகைய முழக்கங்கள் கேட்பதற்கு மிகவும் இதமான தாகவும் மனதுக்கு ஒருவகை மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆழ்ந்து நோக்கின் இஃது ஏற்புடைய முழக்கம்தானா என்ற எண்ணம் எழுந்து, நம்மை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டுகிறது.

எதிரெதிர் திசைகள் எவ்வாறு
ஒரே திசையாக முடியும்?

ஒரு மார்க்கம் ‘இறைவன் ஒருவனே. அவன் இணை. அமைந்துள்ளன. இவற்றுள் காணப்படும் ஒற்றுமைகளைக் காட்டிலும் வேற்றுமைகளே அதிகம். எனவே, வேற்றுமைகளுள் ஒற்றுமை காணும் தன்மைகளைத்தான் நாம் கைக்கொள்ள வேண்டுமே தவிர, ஒற்றுமை, சமயப் பொறை, சகிப்புத் தன்மை என்ற பெயரால் உண்மைக்கு மாறான முறையில் அனைத்துச் சமயப் போக்குகளையும் அப்படியே ஏற்றிப் போற்றி வணங்குவதாகப் பாசாங்கு செய்ய வேண்டிய அவசியமில்லை. இஃது ஒரு வகையான போலித்தனமான, உண்மைக்கு மாறான போக்கே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

அவரவர் சமயம் அவரவர்க்கு என்பதே சத்தியம்

உள்ளது உள்ளவாரே அவரவர் சமயத்தை அவரவர் பேணி வரும் வகையில் அவரவர்க்கு அவரவர் மதம் என்பதே சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க முடியும். மாறாக, எல்லா மதமும் எல்லோருக்கும் சம்மதம் என்பது முரண்பட்ட கோட்பாடே தவிர ஏற்புடைய கருத்தாக இருக்க முடியாது என்பதே தெளிந்த அறிவுடையோர் எண்ணம். இவ்வுணர்வின் வெளிப்பாடாக அமைந்திருப்பதே “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மதம்” என்ற திருமறையின் இறைவாக்கு.

எம்மதமும் சம்மதம் என்ற கருத்தை வலுவாகப் பரப்பி வருவோர் யார்? இவர்கள் எந்த ஒரு மதத்திலும் ஆழ்ந்த பற்றோ தெளிந்த சமய அறிவோ இல்லாதவர்களாகவே இருப்பதைக் காணலாம். இன்னும் சொல்லப்போனால் சமயச் சிந்தனையற்ற, நாத்திக உணர்வு கொண்டவர்களே இத்தகைய கருத்தையும் உணர்வையும் ஊட்டி வருகிறார்கள் எனலாம். இவர்கள் தங்களை முற்போக்குச் சிந்தனையாளர்களாக, சமயச் சீர்திருத்தவாதிகளாகக் காட்டிக் கொள்வதில் தனி மகிழ்ச்சி கொள்பவர்களுமாவர்.

எனவே, போதிய அடிப்படை ஏதும் இல்லாத, ‘எம்மதமும் சம்மதம்’ எனும் மேற்போக்கான முழக்கம் வெறும் குழப்பங்களுக்கு வழிகோளும் குழறுபடியான வாதமே தவிர வேறு அன்று. ஒவ்வொரு சமயத்தவர்களும் தங்கள் தங்கள் சமயம் உணர்த்தும் நெறிகளையும் சமயச் சம்பிரதாயங்களையும் பேணி வருவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால்,

‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்’, ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள், மெய் பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவர் வாய்மொழியை முற்றதாகப் புறக்கணித்து யார் கூறினும், எதைக் கூறினும் அஃது எனக்கேற்புடைத்தே என்ற முறையில் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற வகையில் செயல்படத் தூண்டும் இப்போக்கானது உண்மையைத் தேடியலையும் வேட்கையை மழுங்கச் செய்வதாகவும் ஆக்கிவிடுகிறது. உண்மை எது? உண்மையல்லாதது எது? என்ற பகுத்தறிவுப் பண்போ, உண்மையைக் கண்டறிந்து ஏற்கும் துணிவோ இல்லாத நிலை உருவாக வழிகோலும் ஒன்றே ‘எம்மதமும் சம்மதம்’ எனும் பொருளற்ற, உணர்ச்சித் தூண்டலான வெறும் முழக்கம்.

தடம்புரண்ட இறை வேதங்கள்

உலகிலுள்ள அனைத்துச் சமயங்களின் அடிப்படையும் ஒரே மாதிரியாகவே இறைவனால் இறைத் தூதர்கள் மூலம் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட போதிலும் அவற்றைக் காலப் போக்கில் மனிதர்கள் தங்கள் விருப்புவெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களைச் செய்து, அதன் தனித் தன்மைகளை மாற்றி விட்டனர் என்பதை முன்பே விரிவாகக் கண்டோம். முதல் மனிதரும் நபியுமான ஆதாம் (அலை) அவர்கள் தொட்டு இறுதி நபிவரை வழங்கப்பட்ட இறைச் செய்திகள் ஒரே மூலத்தையுடையனவே என்பதை திருமறை,

“(நபியே!) உமக்கு முன்வந்த இறை தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி (வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை)” (41:43)

எனக் கூறும் திருக்குர்ஆன் வாக்கும், தொடர்ந்து,

“அவர்கள் தங்கள் வேத வசனங்களை சரியான இடங்களி லிருந்து மாற்றுகிறார்கள்” (5:13)

என்ற இறை வசனமும் மூல இறை வேதங்கள் எவ்வாறு மாற்ற திருத்தங்களுக்கு உள்ளாகித் தங்கள் தனித் தன்மையை, சரியான இறைநெறி வழிகாட்டலை இழந்து நிற்கின்றன என்பதை தெளிவாக்குகின்றன. ஆயினும் அவ்வேதங்களை உண்மையாகக் கொண்டு ஒழுகும் அவ்வச் சமய மக்களை மதிக்க வேண்டியது ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடப்பாடு ஆகும்.

நம்பிக்கையே நன்மை தரும்

ஒருவர் தன் மதத்தைப்பற்றி, அதன் சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துக்கூறி விளக்குவது தவறாகாது. ஆனால், அம்மதக் கொள்கைகளை அவர்தம் விருப்பத்துக்கு மாறாக ஏற்கும்படி வலியுறுத்துவது-நிர்ப்பந்திப்பது-மத வெறியாகும். இத்தகைய போக்கை இஸ்லாம் மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. அவர்களாக அறிந்து உணர்ந்து, தெளிந்து, அதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு ஏற்றுச் செயல்படும் இயல்பான நிலையையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மீது, இறுதி இறைத்தூதர் மீது, அவர் மூலம் பெற்ற இறுதி இறைவேதமாகிய திருக்குர்ஆன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பது போன்று பிறசமயத்தவர்களும் அவர்கள் வணங்கும் இறைவன் மீதும் அவர்தம் வேதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவும் போற்றத்தக்கதேயாகும். இதைப் பற்றி இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன்,

“வேதத்தை உடையவர்களும் உங்களை (முஸ்லிம்களை)ப் போன்றே நம்பிக்கை கொண்டிருப்பின் அது அவர்களுக்கு நன்மையாகும்” (திருக்குர்ஆன் 3:110)

அசோகரின் சமய சகிப்புணர்வு

பெளத்த சமயத்தை இந்தியாவில் மட்டுமல்லாது கிழக்காசிய நாடுகளிளெல்லாம் முனைப்புடன் பிரச்சாரம் செய்தவர் அசோகச் சக்கரவர்த்தி. அவர்கூட, தன் மதத்தின் உயர்வைப் புலப்படுத்த பிற சமயக் கருத்துகளையும் கோட்பாடுகளையும் தாழ்த்திப் பேசுவதைத் தவறு என்கிறார். அவர் தனது கல்வெட்டுகளில் ஒன்றில், “ஒருவர் தம் மதத்தைக் கண்ணியப்படுத்துவதும், அளவு கடந்த பற்றுதல் காரணமாக மற்ற மதங்களைவிட தம் மதமே மேலானது என்று கூறுவதும் பிற மதங்களின் அந்தஸ்தைக் குறைப்பதாகும்.”

எனக் கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்க தாகும்.

விவேகானந்தர் நோக்கில் இஸ்லாம்

இஸ்லாமியத் தத்துவச் சிந்தனைகளும் கருத்துகளும் ஹிந்து சமய மறுமலர்ச்சிக்கு வித்தான விந்தையை பக்தி இயக்க வரலாறு தெளிவாக்கிக் கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி, சமூகக் கொடுமைகளால் எந்த அளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற இஸ்லாமும் முஸ்லிம் ஆட்சியும் எந்த அளவு துணை நின்றன என்பதையும் அழகாக எடுத்து விளக்குகிறார் விவேகானந்தர். ஹிந்து சமய மறுமலர்ச்சிக்கென புது இயக்கம் கண்ட விவேகானந்தர் தமது எதிர்கால இந்தியா எனும் நூலில்,

“ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லிம் ஆட்சி சுதந்திரம் அளித்தது. அதன் காரணமாகத் தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிம்களானார்கள். கத்தியும் நெருப்பும் கொண்டே இம்மத மாற்றம் அனைத்தும் நடந்தது என நினைப்பது பைத்தியக்காரத்தனம்.

மேலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்துவோரை நையாண்டியுணர்வோடு “நான் மலையாளத்தில் பார்த்ததை விட முட்டாள்தனமான விஷயம் உலகில் எங்கேயாவது உண்டா? தாழ்த்தப்பட்டவர்கள், மேல் சாதியினரின் தெருக்களில்கூட நடக்க அனுமதிக்கப்படவில்லை... தாழ்த்தப்பட்டவர்கள் நம் (ஹிந்து) குழந்தைகளாக இருக்கும்வரை பட்டினி போட்டுச் சாகடிக்கிறோம். அவர்கள் மதத்தை மாற்றிக் கொண்டவுடன், அவர்களுக்கு விருந்து போடுகிறோம் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு உண்டா? இந்த வெட்ககரமான சாதி வித்தியாசங்கள் அறவே ஒழிய வேண்டும்” எனத் தன் கால சமூக நிலையை ஆழ்ந்த வருத்தத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் விவேகானந்தர்.

ஏற்றத் தாழ்வுமிக்க இந்நிலையை மாற்ற பக்தி இயக்கப் பெரியார்கள் மேற்கொண்ட நிலையையும் அதற்கு இஸ்லாமிய நெறியில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் ஆட்சி எந்த அளவுக்கு உறுதுணை செய்தது என்பதையும் குறிப்பிடும்போது,

“சங்கரருக்குப் பிறகு இராமனுஜர் தோன்றினார். சங்கரருடைய புத்தி அதிநுட்பமானது; ஆனால், அவருடைய இருதயம் அவ்வளவு விசாலமானதாக இருக்கவில்லை.