38
புராண-மதங்கள்
நம்புவார்கள்" என்று நான் குறுக்கிட்டேன். ஓடிவரும் வெள்ளத்தைத் தடுக்க ஒரு ஜாண் கல்லை வைத்தால், வெள்ளம் நின்று விடுமா, வீரனா என் குறுக்குப் பாலத்துக்கு அடங்குபவன். குரலைச் சரிப்படுத்திக்கொண்டு கூறத் தொடங்கினான். கேட்பது தவிர வேறு எனக்கு வழியில்லை! எதற்கும் இன்னொருமுறை முயற்சிசெய்து பார்ப்போம் வீரனின் வாயை மூட! என்று எண்ணி, "வீரா! விஷயம் தெரியுமோ! ஜப்பானியர்கள் இம்பால் நகரருகே வந்துவிட்டனர். கோஹிமா என்ற ஊருக்கும் ஆபத்து. யுத்தம் நம்மை நெருங்கிவிட்டது" என்று ஆரம்பித்தேன். வீரனின் கவனத்தை பரமசிவன் பார்வதியின் பள்ளியறையிலிருந்து, போர்க்களத்துக்கு இழுத்துச் செல்வோமென்று. அவனோ, "அதே விஷயமாகத்தான் அவர்களும் பேசிக்கொண்டனர்" என்று என்னிடம் கூறினான்.
"விசித்திரமாகத்தான் இருக்கிறது. பரமசிவனும் பார்வதியும் இதைப் பற்றியும் பேசினார்களா? நான் அவர்கள் தங்கள் திருப் பார்வையை நாமிருக்கும் திக்குக்கே திருப்பக் காணோமே என்று வியாகுலப்பட்டேன்" என்று நான் பேசினேன், கேலியிலே வீரனுக்கு விருப்பமாயிற்றே என்பதற்காக. "பரதா! கேள் விஷயத்தை, கோபமாக இருந்த பார்வதியின் முகவாய்க் கட்டையை பிடித்தார் பரமசிவன். பிறகு ஏதோ செய்தார். கல கல வென அம்மையார் நகைத்திடவே, "அப்பா! சிரிப்பு வர இவ்வளவு நேரமாயிற்றா! கோபம் ஒழிந்ததா?" என்று கொஞ்சுமொழி பேசினார் புலித் தோலாடையார். பூவையரோ, மீண்டும் முகத்தைப் பழையபடி வைத்துக்கொண்டு, "பெண்கள் கோபித்துக்கொண்டால் ஏதாவது பேசி, எதையாவது செய்து, பெண்களுக்குச் சிரிப்பு மூட்டிவிடுவதும், காரியத்தைச் சாதித்துக்கொள்வதும் ஆண்களின் வழக்கந்தானே. அதற்கு நீர்தானே குரு!" என்று பரமசிவத்தைக் குத்தலாகக் கூறிவிட்டு, "என்ன கோபம்!