226 கமலாம்பாள் சரித்திரம் போய் சந்தியாவந்தனம் பண்ணி ஜெபம் பண்ணி விட்டு வா ; தைரியமாயிரு. பயப்படாதே!' என்று சொன்னார். முத்துஸ்வாமியய்யரும் அப்படியே எழுந்து மறுபடியும் நமஸ்கரித்து, ' திரும்பி வருவதற் குள் சுவாமிகள் எங்கே மறைந்துவிடுகிறாரோ, நாம் இன்னும் அவரைச் செவ்வையாய் அறியவில்லையே' என்ற சந்தேகத்தை மனதில் வைத்து சுவாமி களுடைய திவ்யமங்கள ஸ்வரூபத்தில் ஈடுபட்டவ ராய் அப்பரிசுத்தக் காட்சியினின்றும் கண்களைப் பறிக்கமாட்டாமல் மயங்கி நிற்க, சுவாமிகள் 'ஒன்றும் யோசிக்காதே, போ. போய் விட்டு சீக்கிரம் வா! வேறு எங்கேயும் தங்காதே!' என்று கட்டளையிட, முத்துஸ்வாமியய்யர் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு பொற்றாமரைக் குளத்தை அடைந்து ஜலத் தைப்பார்த்தார். அது வெகு தெளிவாயிருந்தது. அதில் நட்சத்திரங்கள் தெரிந்தது. ' தெளிவான மனதுக்கு சுவாமியும் இப்படித்தான் தெரியுமோ' என்று சொல்லி நிமிர, உலக விசாரங்கள் ஒன்றுமில்லாமல் நம்மைப் பார்த்தும் பரிதபிக்காது நமது அஞ்ஞானத்தைக் கண்டு புன்சிரிப்புச் செய்யும் மேதாவிகளாகிய நட்சத் திரங்களைக் கண்டார். கண்டு ' அடா , இழவே உங் கள் மௌனந்தான் என்ன மௌனம்! மனிதன் இங்கே கிடந்து சாகவும் மாட்டாமல், பிழைக்கவும் மாட்டாமல் திண்டாடுகிறான், என்ன நிர்விசாரம் உங் களுக்கு!' என்று சொல்லி 'சாகவுங்கூட நமக்கு சரிப் படவில்லையே, உயிரைவிட்டு ஓடிப்போய்விடுகிறேன் என்றால் அதற்குமா தடை! நமக்கு இன்னும் என்ன அனர்த்தங்கள் பாக்கி யிருக்கிறதோ! என்னவோ! இன்னும் பார்ப்போம். இந்த மகா புருஷர், அவர் யார் நாம் யார்? எப்படிக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. சுவாமி இல்லை யென்று சொல்லவும் கூடுமா! நாம் பாவம் பண்ணிக் கஷ்டப்பட்டால் அதற்கு கடவுளா பாத்தியம். பகல் முழுவதும் என்ன அக்கிரமமான