உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கமலாம்பாள் சரித்திரம்.djvu/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தீயிடையிட்ட பூங்கொடி போல 297 நிலைமையையும் குறித்து இரங்கும் இரத்தச் சிரிப் பாகவே இருக்குமன்றி சந்தோஷச் சிரிப்புக் கிடை யாது. புருஷனைக்கண்டது போலவும், காணாமல் தேடுவதுபோலவும், கனவுகள் கண்டு துயிலற்று வருந் தியதுமன்றி, நேரில் சில சமயங்களில் உருவெளித் தோற்றமாகக் கண்டு விரைந்தோடி ஆலிங்கனஞ் செய்யப்போய் வெறுவெளியைக் கண்டுவெட்கித் தாள். மலர்ந்த செந்தாமரைபோன்ற முகம் சதா வாடியேயிருந்தது. சரீரம் மாசுபடிந்து அங்கமெல் லாம் துரும்பாய் மெலிந்தது. கூந்தல் சடையாய்த் திரண்டது. கண் உருகிய செம்பாய் உருகியது. பவளவாய் ஒளி மழுங்கி உரையிழந்தது. கைகால் செயலற்றுச் சோர்ந்து கிடந்தன. கை வளைகள் நழுவி முழங்கை மட்டும் ஓடின. கழுத்தில் மாங்கல்யம் ஒன் நன்றி மற்ற நகை யாவும் கிடையாது. தாம்பூல புஷ்பம் சந்தனாதிகள் வாடையும் உதவாது. லட்சுமி உண்டென வுறையிற் கேட்டா ருயிருறு பாவமெல்லாங் கண்டினித் தெளிகவென்று காட்டுவாள் போலவாகி' தன் மனோவேதனையைச் சகிக்கமாட்டாது தீயிடை யிட்ட பூங்கொடிபோலச் சோம்பினாள்.